Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நான் இரசித்த பழைய பாடல்- அன்றும் இன்றும்

Posted: 17 Sep 2016 12:22 PM PDT

கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் மன அமைத்திக்கும், மனத்தை ஒரு நிலைப்படுத்தவும் ஒரு வழி, பழைய பாடல்கள் எனலாம்.என்.எஸ்.கே.தயாரிப்பில் உருவான மணமகள் படத்தில் அன்று எம்.எல்.வசந்தகுமாரியும், பி.லீலாவும் பாடிய,உடுமலை நாராயணகவியின்  எல்லாம் இன்பமயம்......என்ற பாடல், சிம்மேந்திரமத்திமம் ,மோகனம், கிண்டோளம்,தர்பார் ஆகிய இராகங்களை(என  எண்ணுகிறேன்,சரியாகத் தெரியவில்லை) அடிப்படையாகக் வைத்து பாடப்பட்டுள்ளது. நடிப்பு லலிதா, பத்மினி. இதே பாடலை நித்தியசிறி மகாதேவனும் லாவண்யா சுந்தரராமனும் (DK.பட்டம்மாளின் ...

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்

Posted: 17 Sep 2016 10:20 AM PDT

கண் டாக்டரிடம் சென்றால் , ஒவ்வொரு லென்ஸாக மாற்றிப்போட்டு , " இப்போ நல்லா தெரியுதா ? " என்று நம்மிடம் கேட்பார். எந்த லென்ஸில் நம்முடைய பார்வை நன்றாகத் தெரிறதோ , அந்த லென்ஸை வைத்து நமக்குக் கண்ணாடி செய்து கொடுப்பார்கள் . எந்த லென்ஸ் போட்டாலும் , பொருந்துகிற கண் யாருக்கும் இருக்காது . ஆனால் அய்யன் வள்ளுவர் , எந்த வார்த்தை போட்டாலும் , பொருந்தி வருவதுபோல சில குறட்பாக்களை எழுதியிருக்கார் . அவற்றைப் பார்க்கலாமா ? வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் . ( குற்றங்கடிதல் ...

என்னைப்பற்றி---ரா சிவக்குமார்

Posted: 17 Sep 2016 09:17 AM PDT

பெயர்: ரா சிவக்குமார் சொந்த ஊர்: ஈரோடு ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கணினி வாயிலாக பொழுதுபோக்கு: மஹாபாரதம் படிப்பது, முகநூல் பார்ப்பது, வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வது.......! தொழில்: நகலகம் மேலும் என்னைப் பற்றி: நான் ஒரு மகாபாரதப் பிரியன். அதிக நேரம் முகநூலில் இருப்பேன். வரலாற்று செய்திகளை சேகரித்து, முகநூல் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஆசை. மேலும் மகாபாரதம் முழுமையாக நமது தமிழ் மக்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. முழுமையான மகாபாரதத்தை மக்களிடம் எளிமையாகவும், இலவசமாகவும் ...

குறுக்குக் கேள்வியில்தான் நகைச்சுவை இருக்கிறது !

Posted: 17 Sep 2016 05:55 AM PDT

குறுக்குக் கேள்வியில்தான் நகைச்சுவை இருக்கிறது !

கீரைக்காரி - இந்த அம்மாவுக்கு மறதி ஜாஸ்தியாம் ! அதனால தினமும் என் கிட்ட வல்லாரை வாங்குது !

கேட்டவர் - அது சரி ! வாங்கும் வல்லாரையை ஞாபகமாக எடுத்துட்டுப் போகுதா?
கீரைக்காரி - ?! ?! ?!

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் - இணையப்பாதுகாப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!

Posted: 17 Sep 2016 05:49 AM PDT

உலாவி மூலம் நாம் இணையப் பக்கங்களுக்கு பயணிக்கும் போது சில தகவல்களை பல இணையப் பக்கங்கள்,உலாவிகள் எடுத்துக் கொள்கின்றன. நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஒரு படம், எங்கு பதிவேற்றம் செய்திருந்தாலும் சுலபமாக களவாடி விடலாம். Google + - எனது தனிப்பட்ட பக்கம் யாரும் உள்ளே வர முடியாது படங்களை திருட முடியாது என எண்ணிக் கொண்டால்,அது உங்கள் தவறாகும். **உலாவியில் URL Address இருக்கும் இடத்தின் அருகே ஒரு பூட்டு(Padlock icon) -சிறிய பச்சை ஐகன் , i – அல்லது சிவப்பு நிறத்தில் இருப்பதை அவதானிக்கவும். பச்சை ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(442)

Posted: 17 Sep 2016 05:42 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

தியானம் என்றால் என்ன?

Posted: 17 Sep 2016 02:34 AM PDT

தியானம் என்றால் என்ன? ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை. ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். தியானம் என்றால் என்ன? சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் ...

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Posted: 17 Sep 2016 02:10 AM PDT

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! எனக்கு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது .............கடந்த 15 நாட்களாக படிப்பது கொஞ்சம் கலங்கலாக தெரிகிறது என்று இன்று check up காக சென்றோம் ......டாக்டர் check up செய்து, வரும் ஞாயிறு காலை ஆபரேஷன் செய்வதாக சொல்லிவிட்டார்.............. எப்படியும் குறைந்தது 15 -20 நாட்கள் கழித்து தான் என்னால் இங்கு வர இயலும் என்று தோன்றுகிறது. அன்புடன், கிருஷ்ணாம்மா

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 17 Sep 2016 12:54 AM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

ஔவையின் அகவலில் யோக நெறி

Posted: 16 Sep 2016 07:31 PM PDT

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)   தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி (ஔவையார் அருளிய விநாயகர் அகவல்) ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, "வித்தக விநாயக! விரைகழல் சரணே"  என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், 'வித்தக விநாயக' என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும். நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™