Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சென்னை: சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் மூடப்பட்டது

Posted: 16 Sep 2016 11:04 AM PDT

சென்னை: சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பாலம் ரயில் நிலையம் இடையே இரண்டு புதிய ரயில் பாதை அமைக்கப்படுவதையொட்டி சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் மூடப்பட்டது.

பேசின்பிரிட்ஜ் பாதை அமைக்கும் பணி காரணமாக, செப்., 17, 18 ஆகிய இரு நாட்களுக்கு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. இதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, திருவள்ளூருக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ...

'சமாஜ்வாதி கட்சியில் பிளவு இல்லை!'சொல்கிறார் முலாயம் சிங் யாதவ்

Posted: 16 Sep 2016 08:19 AM PDT

லக்னோ:''சமாஜ்வாதி ஒரு குடும்பம்; குடும்பத் தில் சில பிரச்னைகள் வரும்; ஆனால், நான் இருக்கும் வரை, எந்தப் பிளவும் ஏற்படாது,'' என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.

உ.பி.,யில், சமாஜ்வாதியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் சகோதரரும், மூத்த அமைச்சருமான, சிவபால் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் இடையே, கடந்த சில நாட்களாக, கடும் கருத்து மோதல் நடந்து வருகிறது.இதன் காரணமாக, பல்வேறு பதவி பறிப்புகள், பதவி நீக்கம், பதவி விலகல் போன்ற சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், மாநில அமைச்சர் பதவி மற்றும் மாநில ...

மக்களை கண்டு கொள்ளாத அரசு; கெஜ்ரிவால் மீது காங்., தாக்கு

Posted: 16 Sep 2016 08:22 AM PDT

புதுடில்லி:டில்லியில், சிக் குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சலால், பொதுமக்கள் அவதிப் படும் நிலையில், நோயாளிகள் மீது அக்கறை செலுத்தாத,மத்திய,மாநில அரசுகளை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆட்சி உள்ளது. டில்லியின் பல்வேறு பகுதிகளிலும், மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதேபோல், டெங்கு, சிக்குன் குனியா நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ள, ஆயிரக்கணக் கானோர், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நோயாளிகளுக்கு ...

ரஜினிக்கு உப்பு கொடுத்து போராட்டம்

Posted: 16 Sep 2016 08:33 AM PDT

கோவை:காவிரி பிரச்னையை, நடிகர் ரஜினியும், கர்நாடக முதல்வர் சித்தராமையா வும் உணர வேண்டி,அவர்களுக்கு, உப்பு அனுப்பும் நுாதன போராட்டம், கோவையில் நடந்தது.

காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில், தமிழர் கள் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து, தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில், தமிழ் நடிகர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர். ஆனால், நடிகர் ரஜினி, தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை; அமைதி காக்கிறார். அதேபோல,தமிழர்களுக்கு எதிராக, கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசி வருகிறார்.இருவரின் நிலைப்பாட்டையும் கண்டித்து, ...

'ஜன்தன்' திட்டத்தில் நடந்தது என்ன? விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

Posted: 16 Sep 2016 08:51 AM PDT

புதுடில்லி:'ஜன்தன்' எனப்படும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு வழங்கும் திட்டத்தில், துவங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில், பணம் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து விசாரிக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் முக்கிய பொருளாதார
திட்டங்களில் ஒன்று, 'ஜன்தன்' எனப்படும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டமாகும்.
இவ்வாறு துவங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில்,
பணம் இல்லாத கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, வங்கி அதிகாரிகளே, அந்த கணக்குகளில், ஒரு ரூபாய் வீதம் செலுத்தியுள்ள தாக, ...

மானிய விலை அரிசி கிடைக்காதென மத்திய அரசு எச்சரிக்கை!:உணவு சட்டத்தை அமல்படுத்தாத தமிழகத்துக்கு 'கிடுக்கி'

Posted: 16 Sep 2016 09:53 AM PDT

புதுடில்லி:தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தாத தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு, மானிய விலையில் அரிசி வழங்குவதை நிறுத்தப் போவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யவும், உணவு வழங்குவதை அடிப்படை உரிமையாக வரையறை செய்யவும், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றப் பட்டது. இதன்படி, ஒவ்வொருவருக்கும், 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, கிலோ, 1 ரூபாய் முதல், 3 ரூபாய் விலையில் வழங்கப்படும். இந்த சட்டம், 2013ல் நிறைவேற்றப்பட்ட போதி ...

மறியல் போராட்டம் நடத்திய ஸ்டாலின், கனிமொழி கைது

Posted: 16 Sep 2016 09:55 AM PDT

தமிழகத்தில், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உட்பட, 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர்; வணிகர் மற்றும் விவசாய சங்கங் களின் கூட்டமைப்பினர், கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, எழும்பூரியில், நேற்று காலை, 8:45க்கு, ரயில் மறியலில் ஈடுபட முயன்ற, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சேகர்பாபு எம்.எல்.ஏ., உட்பட, 1,500 பேர் கைது செய்யப்பட்டு, புதுப் பேட்டையில் உள்ள சமூக ...

பயங்கரவாதம் பாதித்த நாடுகளில் இந்தியாவுக்கு 4வது இடம்

Posted: 16 Sep 2016 09:56 AM PDT

புதுடில்லி:உலகம் முழுவதும், 2015ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகளின் பட்டியலில், நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

உலகெங்கும் நடக்கும் பயங்கரவாத தாக்குதல் கள் தொடர்பாக ஆய்வு செய்து வரும், பயங்கர வாத ஆய்வு மையம், 2015ல் நடந்த தாக்குதல் கள் குறித்த புள்ளி விபரங்களை, அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவல் அடிப்படை யில் வெளியிட்டுள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் விபரம்:
பல நாடுகளில், தலிபான், ஐ.எஸ்., போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ...

அருணாச்சலில் காங்., ஆட்சி மீண்டும் கவிழ்ந்தது: 45 எம்.எல்.ஏ.,க்களில் 43 பேர் கட்சி மாறினார்; முதல்வரும் அணி மாறியதால் படுகுழியில் காங்.,

Posted: 16 Sep 2016 10:44 AM PDT

இட்டாநகர்: அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் அருணாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு உட்பட, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 43 பேர் கட்சியில் இருந்து விலகினர்; அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர். இதனால், அம்மாநிலத்தில், காங்., மீண்டும் ஒருமுறை ஆட்சியை, 'அம்போ'வென பறிகொடுத்து, படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அருணாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் நபாம் துகி தலைமையில், காங்., ஆட்சி நடந்து வந்தது. சட்டசபையில் மொத்தமுள்ள, 60 பேரில், காங்கிரசுக்கு, 45 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.முதல்வர் நபாம் துகிக்கு ...

முழுமையான காவிரி தண்ணீர்: தமிழக விவசாயிகள் கோரிக்கை

Posted: 16 Sep 2016 10:55 AM PDT

திருச்சி:'நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத் துக்கு முழுமையாக தண்ணீர் வழங்கப்பட்டால் தான், டெல்டா மாவட்டங் களில் சம்பா சாகுபடி செய்ய முடியும்' என்று தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால், தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. தற்போது, அணையில், 85 அடி நீர்மட்டம் உள்ளது.இந்நிலையில், வரும்,20ம் தேதி முதல், மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு ...

'சஹாபுதீனுக்கு ஜாமினை ரத்து செய்யணும்!' சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Posted: 16 Sep 2016 12:01 PM PDT

புதுடில்லி: கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், முன்னாள் எம்.பி., சஹாபுதீன், ஜாமினில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு, பீஹாரில் அமைந்துள்ளது. பல்வேறு கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், முன்னாள் எம்.பி., சஹாபுதீனுக்கு, பாட்னா ஐகோர்ட், கடந்த வாரம் ஜாமின் அளித்தது.
சாட்சி சொல்ல வர ...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு ரூ 500 கோடி ஒதுக்கீடு

Posted: 16 Sep 2016 01:38 PM PDT

டில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பிரதமரின் ஸ்வதேஷ் தர்சன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ 500 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ. அரசு சம்பத்தில் ஸ்வதேஷ் தர்ஸன் திட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதன் படி நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் கூட்டப்பட்டு சுற்றுலாத்துறை திறம்பட செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஸ்வதேஷ் தர்ஸன் ...

ஜி.எஸ்.டி., கவுன்சில் அரசாணை வெளியீடு

Posted: 16 Sep 2016 03:12 PM PDT

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பான சட்டங்களை உருவாக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைப்பதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பு இருக்கும் வகையில், ஜி.எஸ்.டி.,யை, அடுத்த ஆண்டு ஏப்ரல், 1 முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிப்பது; ஜி.எஸ்.டி., சட்டம் உள்ளிட்டவற்றை வரையறுக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைப்பதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™