Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் முழு கடையடைப்பு இன்று... நடக்குமா?: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திடீர் திருப்பம்

Posted: 15 Sep 2016 08:30 AM PDT

'காவிரி நதிநீர் பங்கீடு குறித்து, கர்நாடகா மற்றும் தமிழகத்தில், போராட்டங்கள், கடையடைப்பு கள் நடத்தக் கூடாது; அமைதி மற்றும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று தீர்ப்பு அளித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தமிழகத்தில், இன்று முழு கடையடைப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.'காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட தைத் தொடர்ந்து, கர்நாடகாவில் பெரும் அளவில் போராட்டங்களும், கலவரங்களும் நடந்தன. தமிழகத்திலும் போராட்டங்களும், ...

பொது - ரயில்வே பட்ஜெட் இணைப்பு பணிகள்...விறுவிறு!: முன்னதாகவே தாக்கல் செய்யவும் முடிவு

Posted: 15 Sep 2016 09:30 AM PDT

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து, நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளி லும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையி லான, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு மிக தீவிரமாக உள்ளது.

அதன்படி, பொது பட்ஜெட் - ரயில்வே பட்ஜெட் களை இணைப்பது; பட்ஜெட்டை முன்னதா கவே தாக்கல் செய்வது போன்ற நடவடிக்கை கள், விறுவிறுப்பாக நடக்கின்றன.பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு அமைந்த பின், 'சிறிய அரசு, அதிக நிர்வாகம்' என்ற கோஷத்துக்கு ஏற்ப, நிர்வாக ரீதியிலும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.அதன்படி, நிடி ஆயோக் அமைப்பு நடத்திய ஆய்வுகளை தொடர்ந்து, ...

போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் : விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

Posted: 15 Sep 2016 09:46 AM PDT

புதுடில்லி: பிரேசில் நாட்டைச் சேர்ந்த, 'எம்ப்ரார்' நிறுவனத்திடமிருந்து, போர் விமானங்கள் வாங்கியதில், ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த, எம்ப்ரார் நிறுவனத் திடமிருந்து, மூன்று போர் விமானங்களை வாங்குவது குறித்த ஒப்பந்தம், 2008ல்,
அப்போதைய காங்., அரசால் போடப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர். டி.ஓ.,வுக்கும், எம்ப்ரார் நிறுவனத்திற்கும் இடையே, ஒப்பந்தம்கையெழுத்தானது. எம்ப்ரார் நிறுவனம், பல்வேறு நாடுகளுடன் செய்த ...

உபரி நிலங்கள் எவ்வளவு? : தொகுக்க மத்திய அரசு திட்டம்

Posted: 15 Sep 2016 09:47 AM PDT

உட்கட்டமைப்பு வசதிகள், புதிய தொழிற்சாலை கள் அமைக்க தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலை தவிர்க்க, நாடு முழுவதும் உள்ள உபரி நிலங் கள் குறித்த விபரங்களை தொகுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகளுக்கு, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இதற்கு அதிக அளவில் நிலம் தேவைப்படு கிறது. அதே போல், 'மேக் இன் இந்தியா' உள் ளிட்ட திட்டங்களின்படி, புதிய தொழிற்சாலை களை அமைக்க முன்வந்துள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலம் தேவைப்படுகிறது. புதிய வேலைவாய்ப்புகளை ...

உ.பி.,யில் தனித்து போட்டி: ராகுல் திட்டவட்டம்

Posted: 15 Sep 2016 09:58 AM PDT

லக்னோ: ''பீஹாரை போல, உ.பி., சட்டசபை தேர்தலில், 'மெகா' கூட்டணி அமைக்கும் திட்டம் எதுவுமில்லை. காங்கிரஸ் தனித்து போட்டியிடும்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது; அங்கு, 2017ம் ஆண்டு ,சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.இதில், முக்கிய கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பா.ஜ., - காங்., ஆகியவைதனித்து களமிறங்க தயாராகி வருகின்றன; அக்கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
எனினும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்., கூட்டணி அமைக்கக் கூடும் என, தகவல்கள் வெளியாகின. ...

ஒன்பது நாளில் 26 டி.எம்.சி., காலி! * புது கணக்கு காட்டுகிறது கர்நாடகா

Posted: 15 Sep 2016 10:31 AM PDT

நான்கு அணைகளில் இருந்து, ஒன்பது நாளில், 26 டி.எம்.சி., நீர் காலியாகி உள்ளதாக, கர்நாடகா கணக்கு காட்டியுள்ளது, காவிரி விவகாரத்தில், புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர், தமிழகத்தி ற்கு வருகிறது.இந்த நான்கு அணைகளின் மொத்த கொள்ள ளவு, 104 டி.எம்.சி., ஆகும். காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை திறக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு.அதன்படி, ஜூன் முதல், இம்மாத இறுதிக்குள், 134 டி.எம்.சி., நீரை, கர்நாடகா ...

பர்கூர் என்றால் ஜெ.,வுக்கு பயம்: விஜயகாந்த்

Posted: 15 Sep 2016 10:36 AM PDT

கிருஷ்ணகிரி:''ஜெயலலிதாவுக்கு, பர்கூர் தொகுதியை நினைத்தால் பயம் வந்துவிடும்,'' என, விஜயகாந்த் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நடந்த, தே.மு.தி.க., நிர்வாகி திருமண நிகழ்ச்சியில், அக் கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: தே.மு.தி.க., பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், இக்கட்சியை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாது. அரசு தரப்பில் எத்தனை மிரட்டல்கள், அச்சுறுத்தல் கள் வந்தாலும், தே.மு.தி.க,., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள். தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதாவுக்கு, பர்கூர் தொகுதியை நினைத்தால் பயம் ...

'ஆனந்திபென் படேல் எல்லாம் வரமாட்டார்' தமிழகத்துக்கு தனி ரூட் போடும் பா.ஜ., மேலிடம்

Posted: 15 Sep 2016 10:43 AM PDT

தமிழகத்துக்கு முழு நேர கவர்னராக, குஜராத் முன்னாள் முதல்வர், ஆனந்திபென் படேல் உட்பட யாரையும், உடனடியாக நியமிக்கும் எண்ணம், பா.ஜ.,வுக்கு இல்லை என, தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, டில்லியில், தகவலறிந்த உயர் வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தின் கவர்னராக இருந்த ரோசய்யா வின் பதவிக்காலம் முடிவடையும் தறுவாயில், அவரை, அதே பதவியில் தொடர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள், சில ரூபங் களில் டில்லிக்கு வந்ததெல்லாம், உண்மை தான். அதற்கு, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் எண்ணங்கள், சற்றும் ஒத்துப்போகவில்லை.காங்கிரஸ்காரரான ...

அ.தி.மு.க.,வில் மாற்று கட்சியினர் கொந்தளிக்கும் விவசாயிகள்

Posted: 15 Sep 2016 10:44 AM PDT

'காவிரி விவகாரம், இரு மாநிலங்களுக்கு இடையே கொழுந்து விட்டு எரியும் நிலையில், அ.தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கையை, திருவிழா போல நடத்தியது தேவையில்லாதது' என, விவசாயிகள் கொதிக்கின்றனர்.

காவிரியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, கர்நாடகத்தில் கலவரம் துாண்டப்பட்டு உள்ளது.இந்த பிரச்னை தொடர்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வருக்கு கடிதம் மட்டும்எழுதி உள்ளார். அதேநேரம், உள்ளாட்சி தேர்தலில் தான், அவர் அதிக கவனம் செலுத்துகிறார்.'கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் ...

ரோபோ மயமாகும் அமெரிக்கா: 2021க்குள் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாயம்

Posted: 15 Sep 2016 01:33 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது எல்லா துறைகளிலும் ரோபோக்கள் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. இதனால் பெரும்பாலான அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க வாழ் வௌிநாட்டினர் வேலை வாய்ப்பினை இழக்கும் அபாயம் உள்ளதாக ஒரு புள்ளிவிவர கணக்கு கூறுகிறது.

தற்சமயம் அமெரிக்காவில் சுமார் 14 கோடி பேர் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் நவீன விஞ்ஞான வளர்ச்சி மற்றும் தேவைப்பாடு போன்ற காரணங்களால் பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ரோபோக்களின் வருகையால் பல்வேறு நிறுவனங்களில் உறபத்தி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™