Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'

Posted: 15 Sep 2016 09:40 AM PDT

* பக்தர்: ஆண்டவனே... என் கோரிக்கைகள் உன் காதில் விழவில்லையா? ஆண்டவன்: நாட் ரீச்சபிள்... தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன். எஸ்.மோகன், கோவில்பட்டி. * "உங்களுக்கு ஙந.ர்ச்ச்ண்ஸ்ரீங் தெரியுமா?'' "நீங்கள் அட்ரûஸ சரியாகச் சொன்னால் நான் கண்டுபிடிச்சுடுவேன் சார்!'' அ.ப.ஜெயபால், ஆணைக்காரன் சத்திரம். * "டாக்டர்! என் நோயைக் குணமாக்கின உங்களுக்கு கோயில் கட்டலாம்!'' "முதல்ல ஹாஸ்பிட்டல் பில்லைக் கட்டுங்க!'' அ.ப.ஜெ.சுவாமிநாதன், திருமயிலாடி. * "பிரம்மசாரிக்கும், சம்சாரிக்கும் என்னடா வித்தியாசம்?'' "எல்லா ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(441)

Posted: 15 Sep 2016 09:36 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

குட்டி கதை =புத்தாண்டுப் பரிசு

Posted: 15 Sep 2016 08:03 AM PDT

malar manickam செப்டம்பர் 12, 2016 05:45 முப புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் ஜெனி தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள். இருவரும் உணவு உண்டபிறகு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரம், ""அப்பா... அப்பா... இந்தப் புது வருடத்துக்கு எனக்கு ஏதும் பரிசு இல்லையா?'' என்று கேட்டாள் ஜெனி. ""ம்ம்...ம்... கண்டிப்பா உண்டுடா செல்லம், உனக்கு என்ன வேணும் சொல்லு?'' கேட்டார் அப்பா. ...

சாதம் குழைஞ்சு போச்சு. சாம்பார்ல உப்பே இல்லை

Posted: 15 Sep 2016 07:10 AM PDT

கண்டது •(மதுரையில் போக்குவரத்து சிக்னல் ஒன்றின் அருகே) உம்மைத் தண்டிப்பதோ. கண்டிப்பதோ எமது நோக்கமல்ல. நீர் உயிர் வாழ வேண்டும். ந.இரகுநாதன், தஞ்சாவூர். • (வேலூர் - ஆரணி சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்) அக்கா ஓட்டல் கே.பழநி, சத்துவாச்சாரி, வேலூர். • (மதுரை கே.கே.நகர் கிழக்கு 9 வது தெருவில் நின்ற ஒரு வேனில்) அளவுக்கு அதிகமானால்... மனிதனை... பணம் பாழாக்கிவிடும். பாசம் பயப்பட வைக்கும். எம்.ரெங்கராஜன், மதுரை-20. கேட்டது • (துறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருவர்) "ஏய்... ...

Padithathil pidithathu

Posted: 15 Sep 2016 07:04 AM PDT

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு

விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Posted: 15 Sep 2016 06:46 AM PDT

விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?

தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 15 Sep 2016 06:20 AM PDT

தமிழர்கள் சமயோஜிதமாக செயல்பட்டு கன்னடர்களை சிக்கலில் மாட்டிவிட்டனர் என்று கூறியுள்ளார் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி. பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட அமைப்பினர் அடித்து உதைத்த காட்சி சோஷியல் மீடியாக்களில் கடந்த வாரம் சனிக்கிழமை வெளியானது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதற்கு பதிலடி தருகிறேன் என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் கன்னட வேன் டிரைவரை தமிழ் அமைப்பினர் ...

மைக்ரோ கதை

Posted: 15 Sep 2016 04:58 AM PDT

தேர்வு எழுதிவிட்டு ஜோசியரிடம் வந்த மூன்று பேர், "சார் நாங்க இப்பதான் பரீட்சை எழுதியிருக்கோம். நாங்க 3 பேரும் பாஸாயிடுவோமான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று கேட்டனர். உடனே ஜோசியர் எதுவுமே பேசாமல் ஒரு விரலை மட்டும் காட்டினார். வந்த மூவரும் திரும்பிப் போய்விட்டார்கள். தேர்வு முடிவு வெளியானது. மீண்டும் ஜோசியரைப் பார்க்க மூவரும் வந்தனர். "எங்களில் ஒருவர் மட்டுமே பாஸானோம். சரியாகச் சொன்னீர்கள்'' என்று ஜோசியரைப் பாராட்டிவிட்டுச் சென்றனர். அப்போது ஜோசியரின் அருகில் இருந்தவர், "நீங்க குத்துமதிப்பா ...

இது உங்கள் இடம்

Posted: 15 Sep 2016 04:13 AM PDT

பரந்த மனப்பான்மையை வளர்ப்போமே! பெரும் பணக்காரரான என் உறவினரின் மகளுக்கு வரன் தேடுவதாக அறிந்ததும், மருத்துவர், இன்ஜினியர், வெளிநாட்டில் பணிபுரிபவர் மற்றும் தொழிலதிபர்கள் என, உறவினர்கள் பலர், பெண் எடுக்க போட்டி போட்டனர். இந்நிலையில், நகரில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் தூரத்து உறவினர் மகனுக்கு, அவரது மகளை நிச்சயம் செய்யப் போவதாக அறிந்து, அதிர்ந்து போனோம். என் பெற்றோர் நேரில் சென்று விசாரித்த போது, பெண்ணின் தந்தை, என் அம்மாவிடம், 'அந்த பையன, ரொம்ப நாளா பாத்திட்டு வர்றேன். கடையை கண்ணும், ...

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Posted: 15 Sep 2016 04:11 AM PDT

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)  "தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி"                                       ஆத்திச்சூடி                            (ஔவையார் அருளியது) 01. அறஞ் செய விரும்பு. பதவுரை: அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை. செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ் காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல். விரும்புதல் ...

அமித் ஷாவின் ஓணம் வாழ்த்து கேரள முதல்வர் கண்டனம்

Posted: 15 Sep 2016 02:23 AM PDT

திருவனந்தபுரம்:கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்துக்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்த வாழ்த்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது; அவருக்கு, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவின் புகழ்பெற்ற அரசரான மகாபலியை நினைவுகூரும் வகையிலும், அவரை வரவேற்கும் வகையிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாபலியை வெல்ல, மகாவிஷ்ணு எடுத்த வாமன அவதாரத்தை குறிப்பிடும் வகையில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, தன் வாழ்த்து ...

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 14 Sep 2016 08:55 PM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

29 லட்சம் என்.ஜி.ஓ.,க்களா?; மிரண்டது சுப்ரீம் கோர்ட்

Posted: 14 Sep 2016 08:38 PM PDT

புதுடில்லி : 'நாடு முழுவதும், 29 லட்சம், என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகள் உள்ளனவா; இவற்றின் உண்மையான செயல்பாடு தான் என்ன; இவற்றை கட்டுப்படுத்த போதிய சட்டப் பிரிவுகள் உள்ளனவா' என, சுப்ரீம் கோர்ட், சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. 'என்.ஜி.ஓ.,க்களுக்கு கிடைக்கும் நிதி, நன்கொடைகளை கட்டுப் படுத்தவும், அவற்றை முறையாக பயன்படுத்தவும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் தலைமையிலான ...

ஜியோவுக்கு போட்டி: இணைகின்றன ரிலையன்ஸ் - ஏர்செல் நிறுவனங்கள்

Posted: 14 Sep 2016 08:34 PM PDT

- புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணையபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முகேஷ் அம்பானி அறிவித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ திட்டம் தொலை தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இது வோடோபோன், ஏர்டெல், ஏர்செல் உள்ளிட்ட பிற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைய போவதாக ...

பாரதி பாடலை நாளும் படி..! ({சிறுவர் பாடல்)

Posted: 14 Sep 2016 06:55 PM PDT

- பாரதி பாடலை நாளும்படி - தம்பி பாடம் போலத் தேடிப்படி சீரெனும் நீதிகள் கூறும்படி - நம் சிந்தை வளர்த்திடும் நாளும்படி! - இதந்தரும் ஒற்றுமை ஆகும்படி - சகோதர இணக்கம் நமக்குள் சேரும்படி சுதந்திர எண்ணம் தூண்டும்படி - நமக்குள் தேச பக்தி பூக்கும்படி! - நாட்டு மொழியைக் கற்கும்படி - நமக்கு நல்லதோர் அறிவை ஊட்டும்படி வீட்டினை நாட்டினைக் காக்கும்படி - நம்மை வெற்றிப் படியில் ஏற்றும்படி! - பாரதி பாடலை நாளும்படி - தம்பி பாடம் போலத் தேடிப்படி சீரெனும் நீதிகள் கூறும்படி - நம் சிந்தை வளர்த்திடும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™