Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆட்சியை பிடிக்க நினைத்த தே.மு.தி.க., ஆண்டு விழா பிசுபிசுப்பு!: 50 பேர் கூட இல்லாமல் கொடி ஏற்றினார் விஜயகாந்த்; நாளைய உண்ணாவிரதத்திற்கு ஆள் பிடிக்க உத்தரவு

Posted: 14 Sep 2016 08:48 AM PDT

தமிழகத்தில், ஆட்சியை பிடிக்க நினைத்த, தே.மு.தி.க.,வின், 12வது ஆண்டு விழா பிசுபிசுத் தது. கொடியேற்றும் விழாவுக்கு, 50 பேர் கூட வராததால், கட்சித் தலைவர் விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால், நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆட்களை திரட்டி வரும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.கடந்த, 2005 செப்., 14ல், மதுரையில், தே.மு.தி.க.,வை விஜயகாந்த் துவங்கியபோது, மிகுந்த எதிர்பார்ப்புடன், அவரது ரசிகர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், அவர் பின் அணிவகுத்தனர்.தொடர்ந்து, 2006ல் சட்டசபை, உள்ளாட்சி, சில தொகுதிகளின் ...

சமாஜ்வாதி கட்சியில் குடும்ப சண்டை வெடித்தது!: பதவி பறிப்புகளால் அலறும் பெருந்தலைகள்

Posted: 14 Sep 2016 09:12 AM PDT

லக்னோ:உத்தர பிரதேசத்தில், ஆளும் சமாஜ் வாதியில், குடும்பச் சண்டை வெடித்துள் ளது; இதன் எதிரொலியாக, தொடர்ந்து, பல் வேறு பதவிப் பறிப்பு நிகழ்ச்சிகள் அரங்கேறுவ தால், கட்சியின் பெருந்தலைகளும், அதிகாரி களும் கலக்கமடைந்து உள்ளனர்.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி உள்ள உ.பி.,யில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை துவக்கி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்,ஆளும் சமாஜ்வாதி யில், குடும்பச் சண்டை ஏற்பட்டு உள்ளது.
முக்கிய பங்கு
கட்சி தலைவராக, முன்னாள் முதல்வர் ...

பிரியங்காவை களமிறக்குவதா வேண்டாமா? மேலிடத்தை பயமுறுத்தும் 'திங்ரா' கமிஷன்

Posted: 14 Sep 2016 09:15 AM PDT

'தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, உ.பி., சட்ட சபைத் தேர்தல் களத்தில், அதிகாரபூர்வ மாக, பிரியங்காவை இறக்கி விடுவது' என, காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கும், உ.பி.,யில், அடுத் தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. கடைசி அஸ்திரம்தேசிய கட்சிகளான, பா.ஜ.,வும், - காங்கிரசும், உ.பி., சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற் காக, விதவிதமான யுக்திகளை கையாளுகின் றன. காங்கிரஸ், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளி லும், தொண்டர்களையும், நிர்வாகி களையும், சுறுசுறுப்புடன் களப் பணியாற்று வதற்காக, ...

அமித் ஷாவின் ஓணம் வாழ்த்து: கேரள முதல்வர் கண்டனம்

Posted: 14 Sep 2016 09:27 AM PDT

திருவனந்தபுரம்:கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்துக்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்த வாழ்த்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது; அவருக்கு, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் புகழ்பெற்ற அரசரான மகாபலியை நினைவுகூரும் வகையிலும், அவரை வரவேற்கும் வகையிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாபலியை வெல்ல, மகாவிஷ்ணு எடுத்த வாமன அவதாரத்தை குறிப்பிடும் வகையில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, தன் வாழ்த்து செய்தியில், 'வாமன ஜெயந்தி திருநாள் வாழ்த்துக் கள்' என, ...

கறுப்பு பண முதலைகள் பட்டியல் தயார் : அக்டோபரில் துவங்குது அதிரடி

Posted: 14 Sep 2016 09:46 AM PDT

தமிழகத்தில், வருமான வரி செலுத்தாத, 'கறுப்புப்பண முதலை'களின் பட்டியலை வருமான வரித்துறை தயாரித்துள்ளது. அடுத்த மாதம் முதல், அவர்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கணக்கில் வராத, கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, தாமாக முன்வந்து, விபரங்களை வெளியிடும் திட்டத்தை, ஜூனில், மத்திய அரசு அறிமுகம் செய்தது. கணக்கில் காட்டாத அசையும், அசையா சொத்துகள், ரொக்கப் பணத்தின் விபரத்தை, வருமான வரித்துறை யிடம் தெரிவித்தால், 45 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான கால அவகாசம் செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ...

சசிகலா புஷ்பா முன் ஜாமின் தள்ளுபடி:கையெழுத்து மோசடியை விசாரிக்க உத்தரவு

Posted: 14 Sep 2016 10:14 AM PDT

மதுரை:வேலைக்காரப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சசிகலா புஷ்பா எம்.பி., மற்றும் அவரது குடும்பத்தினரின் முன் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. ஜாமின் வக்காலத்து மனுவில் போலியாக,மோசடியாக கையெழுத் திட்டது பற்றி போலீசார் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ராஜ்யசபா தி.மு.க., -எம்.பி., திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா எம்.பி., இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அ.தி.மு.க.,விலி ருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். இதற்கி டையே சசிகலா புஷ்பா கணவர், மகன் மீது அவரது வீட்டில் வேலை செய்த பெண் துாத்துக்குடி புதுக்கோட்டை ...

கர்நாடகாவுக்கு சரக்கு புக்கிங் நிறுத்தம்; ரூ.650 கோடி பொருட்கள் தேக்கம்

Posted: 14 Sep 2016 10:20 AM PDT

காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையால், ஏழு நாட்களாக அம்மாநிலத்துக்கான சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. 650 கோடி ரூபாய் மதிப் புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

நாளை நடக்கும் 'ஸ்டிரைக்' காரணமாக, நேற்று முதல்,நாளை வரையிலான,மூன்று நாட்களுக் கும் சரக்கு புக்கிங் நிறுத்தப்படுவதால், மேலும் பல நுாறு கோடி ரூபாய் சரக்குகள் தேக்க மடையும்.காவிரியில் தண்ணீர் திறந்து விட, உச்சநீதிமன் றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகா வில் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், செப்., 5 முதல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அது ...

அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபட ஜெ., அழைப்பு

Posted: 14 Sep 2016 10:24 AM PDT

சென்னை:''அ.தி.மு.க.,வில் இணைந்துள்ள, மாற்று கட்சியினர் அனைவரும், உள்ளாட்சி தேர்தலில், கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

மாற்று கட்சியினர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, சென்னை, ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:தி.மு.க., - பா.ஜ., - காங்., - தே.மு.தி.க., - பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், த.மா.கா., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட, பல்வேறு கட்சிகளிலும், பிற அமைப்புகளிலும் பணிபுரிந்து வந்த, 91,308 பேர், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளீர்கள்; அனைவரையும் ...

நீதிபதிகள் நியமனத்தில் முட்டுக்கட்டையா?

Posted: 14 Sep 2016 10:24 AM PDT

புதுடில்லி: 'நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவற்றில், மத்திய அரசு எந்த முட்டுக்கட்டையும் போடவில்லை; மற்றவர்களையும் குறை கூற விரும்பவில்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது குறித்து தொடரப்பட்ட பொது நலன் வழக்கை, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
அறிக்கை தாக்கல்
கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 'நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றத்தில் முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது' என, அமர்வு கடுமையாக கூறியிருந்தது. அப்போது, ...

தமிழகத்தில் நாளை 'பந்த்' போராட்டம் விவசாயிகள் முயற்சிக்கு பெருகும் ஆதரவு

Posted: 14 Sep 2016 10:30 AM PDT

விவசாயிகள் நாளை அறிவித்துள்ள, 'பந்த்' போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், வணிகர் கள் என பல தரப்பிலும், ஆதரவு பெருகி வருகிறது.

காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, 'பந்த்' போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு அளித்துள் ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில் ...

ஆஸ்திரேலியாவின் பவளப்பாறை திட்டுகளை வான்வழியாக ஆராய நாசா திட்டம்!

Posted: 14 Sep 2016 12:30 PM PDT

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் பகுதியில் உள்ள கிரேட் பேரியர் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறை திட்டுக்களை வான்வழியாக ஆராய நாசா திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலயா கண்டத்திற்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் குயின்லேண்ட் அருகே கிரேட் பேரியர் ரீ்ப் என்றழைக்கப்படும் பவளப்பாறை திட்டுக்கள் அமைந்துள்ளன. உலகிலேயே உயிரினங்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய தனித் தொகுப்பாக விளங்கும் இதை விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.
இதன்படி பவளப்பாறைகளை புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து மனிதனின் செயல்பாடு, ...

ஆதிவாசிகளுக்கு சேவையாற்றும் ரகுராம் ராஜனின் ஐ.ஐ.டி., பேராசிரியர்

Posted: 14 Sep 2016 02:14 PM PDT

புதுடில்லி: ஐ.ஐ.டி., பேராசிரியர் என்ற கவுரவம், லட்சணக்கனக்கில் மாத சம்பளம் இவை அனைத்தையும் உதறிவிட்டு கடைகோடி மனிதர்களான ஆதிவாசிகளின் நன்மைக்காக 32 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வருகிறார் அலோக் சாகர்.
டில்லியில் பிறந்த அலோக் டில்லி ஐ.ஐ.டி.,யில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அதே கல்வி நிறுவனத்தில் முதுகலை முடித்தார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் பல்கலை பி.எச்.டி., பட்டம் பெற்றார். 64 வயதான அலோக் சாகரின் தந்தை ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தாய் டில்லி பல்கலையில் இயற்பியல் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™