Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்..!

Posted: 14 Sep 2016 03:46 PM PDT

- அழகான பெண் ஒருவள் துணிக்கடைக்கு வந்தாள். கடையின் உரிமையாளரிடம் ஒரு குறிப்பிட்ட துணியைக் காட்டி ''அது என்ன விலை?'' என்று கேட்டாள். குறும்புக்கார உரிமையாளர், ''ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம்'' என்றார். அந்தப் பெண் கோபப்படாமல், ''அப்படியா? பத்து மீட்டர் துணி கொடுங்க'' என்று வாங்கிக் கொண்டாள். கடைக்காரருக்கு செம குஷி. எதிர்பார்ப்போடு அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க… அந்தப் பெண் சொன்னாள், ''துணிக்கான விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா தருவார்!'' – ——————————————- டீச்சர்: ...

welcome today

Posted: 14 Sep 2016 03:39 PM PDT

:வணக்கம்:இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்

பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி

Posted: 14 Sep 2016 03:37 PM PDT

By என்.எஸ். நாராயணசாமி | – ———————————- – சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலமான திருபாண்டிக்கொடுமுடி ஒரு தலைசிறந்த பரிகாரத் தலம். – முக்கியமாகப் பிதுர் தோஷம், பிதுர் சாபம் நீக்கி அருளும் பரிகாரத் தலமாகக் கொடுமுடி விளங்குகிறது. ஜோதிடத்தில் ஜாதகக் கட்டங்களில் அமைந்துள்ள சில கிரக அமைப்புகளை வைத்து பிதுர் தோஷம் உள்ளவர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. – மேலும், தந்தை சொல் கேளாதவர், தந்தையை துன்புறுத்துவர்கள் பிதுர் தோஷத்துக்கு ஆளாகிறார்கள். பிதுர் தோஷம் நம்மை மட்டுமின்றி, ...

ரூட்டை மாத்து – ஒரு பக்க கதை

Posted: 14 Sep 2016 03:34 PM PDT

- ''நானும் பத்து நாளா நீ செய்யறதை எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். கிராமத்திலிருந்து வந்த என் அம்மாவுக்கு சாப்பாட்டு விஷயத்துல உபசரணை பண்றியோ இல்லையோ… முன் கதை சுருக்கமெல்லாம் சொல்லி, 'அந்த சீரியலைப் பாருங்க'… 'இந்த சீரியலையும் பாருங்க'ன்னு ஆர்வத்தைக் கிளப்பி விடறே! செலவைப் பத்தி கவலைப்படாம அவங்களுக்கு தனியா ஒரு டி.வியும் வாங்கிக் கொடுத்து உட்கார வச்சுட்டியே..!'' – மனைவி தங்கத்திடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் செல்வம். ''அதுக்குக் காரணம் இருக்குங்க!'' – மர்மப் புன்னகையோடு விளக்கினாள் ...

எத்தன் – ஒரு பக்க கதை

Posted: 14 Sep 2016 03:05 PM PDT

- ''மிஸ்டர் குமாரசாமி… நீங்க எப்படியாவது முப்பது லட்சத்தை ரெடி பண்ணிக் கொண்டு வாங்க. கபாலிகிட்ட பணத்தைக் குடுக்கும்போது, ஒளிஞ்சிருக்கிற நாங்க அவனைப் பிடிச்சிடுறோம்'' என்றார் இன்ஸ்பெக்டர். ' 'வெறும் பேப்பர உள்ள வச்சு மேல சில ரூபாய்களை வைக்கட்டுமா சார்?'' – குமாரசாமி கேட்டார். ''நோ… நோ… உண்மையான ரூபாய்தான் வைக்கணும். அவன் செக் பண்ணும்போது தெரிஞ்சுட்டா, உங்க பொண்ணுக்குத்தான் ஆபத்து… புரிஞ்சுதா?'' மறுநாள்… கபாலி சொன்ன இடத்துக்கு பணத்துடன் வந்தார் குமாரசாமி. பணத்தைக் கொடுத்தவுடன், ...

பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!

Posted: 14 Sep 2016 09:04 AM PDT

– வாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு… செல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்! – – இன்பா வினோத் – ————————————— – @kanagu_v ஒரு காலத்துல ஸ்கூல்ல 'ஆஃப் டே' கட்டடிச்சுட்டு படிச்சாலும் வேலை கிடைச்சுது. இப்பல்லாம் படிச்சு 'கட் ஆஃப்' எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை. – ——————————————- @aruntwitz லவ் பண்றவனோட சேர்ந்து, குழந்தைக்குப் பேர் வைச்சா அது லவ் மேரேஜ். லவ் பண்றவனோட பேரை குழந்தைக்கு வைச்சா, அது அரேஞ்சுடு மேரேஜ். – ——————————————– – மீளவே முடியாது என்று நினைத்திருந்த ...

தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்

Posted: 14 Sep 2016 09:03 AM PDT

புதுடில்லி: தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்., தலைவராக இருந்த இளங்கோவன், சட்டசபை தேர்தலில் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், தலைமை இல்லாமல், 4 மாதங்களாக கட்சி செயல்பட்டு வந்தது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர். புதிய தலைவர் ...

தைவானை மிரட்டும் பயங்கர புயல்

Posted: 14 Sep 2016 09:00 AM PDT

தைபேய்: மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும் 'மெரான்ட்டி' புயல் மணிக்கு சுமார் 216 கிலோமீட்டர் வேகத்தில் தைவான் கடலோரப் பகுதிகளை பதம்பார்த்தபடி சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் ஆபத்தான ஐந்தாம் எண் புயலாக அறிவிக்கப்பட்டுள்ள 'மெரான்ட்டி'யின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்களும், மின்சார கம்பங்களும் விழுந்து கிடப்பதால் கிழக்கு தைவானில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. கவோசியுங் உள்பட சில முக்கிய நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ...

ஏ.டி.எம் மெஷின் என நினைத்து …!

Posted: 14 Sep 2016 08:54 AM PDT

– ஏ.டி.எம் மெஷின் என நினைத்து பாஸ்புக் என்ட்ரி மெஷினை திருடினர் – செய்தி # டிரெயினிங் குடுத்தவன் சரியில்ல, இந்த மாதிரி இருந்தா இந்தியா எப்படிய்யா ஒலிம்பிக்குல தங்கம் வாங்கும்? – வேக வேல் – —————————————– – ஏ.டி.எம்.கிட்டே போகும்போதுதான் கேஷ்லோடு வேன் வந்து நிக்கறதும்… டாஸ்மாக்கை நெருங்கும்போதுதான் அன்லோடுக்காக சரக்கு லாரி வந்து நிக்கறதும்… குஷி மூடோட மல்லிகைப் பூவும் அல்வாவும் வாங்கும்போது ''என்னங்க, கேர்ஃபிரீ பாக்கெட் வாங்கிட்டு வாங்க''ன்னு வீட்லருந்து போன் வர்றதும்… ஒரு மனுஷனுக்கு ...

கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்?

Posted: 14 Sep 2016 08:51 AM PDT

இது லேட்டஸ்ட்!

'வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிமை யானவையே.
உங்களால்தான் அவை சிக்கலாகிவிடுகின்றன' என்கிறார்
ஓஷோ.

இந்த பொன்மொழியை வழிமொழிவதுபோல, கொலஸ்ட்ராலுக்கு
ஆதரவாக வெளிவந்திருக்கும் சமீபத்திய அமெரிக்க ஆய்வு பலத்த
விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
-

இதுதான் வாழ்தலின் தத்துவம்…!

Posted: 14 Sep 2016 08:10 AM PDT

தவறுதலாக கடந்த ஆண்டின் தேதி எழுதுவதை மாற்றி, இயல்பாக இந்தாண்டின் தேதியை நீங்கள் எழுதத் தொடங்கும்போது ஆகஸ்ட் மாதம் கடந்திருக்கும் என்பதை உணர்க. இதுதான் வாழ்தலின் தத்துவம் என்றும் அறிக… – – புதிய பரிதி – ————————————————- – ''பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்குக் கவலை இல்லை…'' ''நிஜமாவா?'' ''ஆமா. செக்கிங் ஏறினால்தான் கவலை!'' – ——————————————– – காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு? காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி வந்து ...

உலகில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியம் , ஆனாலும் உண்மை.

Posted: 14 Sep 2016 08:00 AM PDT

இந்த அழகான பெண் யார்? இவள் உண்மையல்ல. Telyuka என தங்களை அழைத்துக் கொள்ளும் Freelancer களான Yuka - Teruyuki Ishikawa  என்ற சப்பானிய தம்பதிகள் சாயா என்ற பெயரில், பள்ளி மாணவியாக உருவாக்கிய அவர்களின் குழந்தை.படம் மட்டும் தான்.இப்படி ஒருவர் உலகில் கிடையாது. நன்றி.telyuka சிங்கம் - 2 படத்தில் சூரியா ஒரு மாணவனைப் பார்த்து சொல்வது போல், சீனாவில் பள்ளி மாணவ மாணவிகள் சினிமாவைப் பார்த்தும் மேற்கத்திய பாணியிலும் தலை முடியை வளர்த்து வருவதைப் பார்த்ததன் விளைவு, பள்ளிகளுக்கு வெளியே முடி வெட்ட ...

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு .

Posted: 14 Sep 2016 07:50 AM PDT

அஞ்சலி சிறப்பு கவிஞர் Kirikaasan அவர்களுக்கு . அவர் ஒரு சிறந்த மரபு கவிஞர் . ஈகரை கவிதை போட்டி 4 இல் பரிசு பெற்றவர் . பரிசு பெற்ற   கவிதையை மறுபதிவு செய்வதில் ,பெருமை படுகிறோம் . ==================================================================== காதல் இவள் கொள்ள பகையாகும் குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும் என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும் வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும் கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் ...

மஞ்சள் வெயில் தெளிவான மின்னூல்

Posted: 14 Sep 2016 06:27 AM PDT

மஞ்சள் வெயில் தெளிவான மின்னூல் 

ஈகரை உறவுகளுக்காக 


http://www.mediafire.com/download/43p3iv9ee8zl99b/manjal+veil.pdf

"சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை'

Posted: 14 Sep 2016 06:18 AM PDT

- சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் படிப்புத்துறை இயக்குனர் ஆர்.வேல்ராஜ் கூறினார். சென்னை வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் ஸ்ரீராமானுஜர் பொறியியல் கல்லூரியின் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: நாட்டில் தற்போது மின் உற்பத்திக்கென செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பங்களில் மாசற்ற, வலுவான, நிலையான தொழில்நுட்பமாகத் திகழ்ந்து வரும் சூரிய மின்சக்தி தொழில் நுட்பத்தைப் ...

சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்

Posted: 14 Sep 2016 06:17 AM PDT

சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார் . ஈகரையின் சிறப்பு கவிஞர் , திரு kirikaasan அமரர் ஆனார் என்ற செய்தி மனதிற்கு ,ஆற்றொணா துயரை தருகிறது . அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம் .அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈகரைக்கு இது ஓர் பேரிழப்பு . . ரமணியன்

வாழ்த்துவோம் ayyasami ram அவர்களை

Posted: 14 Sep 2016 06:15 AM PDT

வாழ்த்துவோம் ayyasami ram அவர்களை

மதிப்பீடுகள் 6000 அடைந்த ayyasami ram அவர்களுக்கு வாழ்த்துகள்


ரமணியன்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (179)

Posted: 14 Sep 2016 06:11 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…

Posted: 14 Sep 2016 03:44 AM PDT

படம் : மௌனம் சம்மதம் இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ் – ஆண் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா நீதானே வான் நிலா என்னோடு வா நிலா தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா – கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா – ஆண் : தென்பாண்டி கூடலா தேன் சிந்தும் கூடலா – பெண் : என் அன்பு காதலா எந்நாளும் கூடலா பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா – ஆண் : பார்ப்போமே ஆவலா வா வா நிலா…………. – பெண் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா – ஆண் ...

காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Posted: 14 Sep 2016 01:12 AM PDT

காவிரி பிரச்னையை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் யிலான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட மக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பதிலடியாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகளும், விடியோ பதிவுகளும், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய காட்சிகள், பார்ப்பவர்களின் மனதில் விரோத மனப்பான்மையை ...

வீட்டுக்கு கண்ணீர் இல்லம்னு பேர் வெச்சிருக்காங்களே, ஏன்?

Posted: 14 Sep 2016 01:07 AM PDT

– ஐயா! பழனிமலைக்கு நடந்தே போகப்போறேன், லோன் கொடுங்க சாமி! – என்னது லோனா? இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க…? – கால்நடைக்கு லோன் தருகிறோம்னு சொன்னதே நீங்கதானே ஐயா..! – தாமஸ் மனோகரன் – —————————————- – நீங்கள் சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்கப் படுகிறீர்கள் என்ற போர்டை பார்த்துட்டு ஏண்டி அலறி அடிச்சு ஓடி வர்றே? – ட்ரையல் ரூம்ல, அப்படி வச்சிருக்காண்டி…!! – பர்வின் யூனூஸ் – ———————————– – மாப்பிள்ளையோட அப்பா சர்வரா? – ஆமாம்! எப்படி கண்டு பிடிச்சீங்க? – பந்தியிலே ...

அறிமுகம் தமிழ் வேந்தன்

Posted: 13 Sep 2016 11:51 PM PDT

அறிமுகம் தமிழ் வேந்தன்

பெயர்:தமிழ்வேந்தன் 
சொந்த ஊர்:வேப்பூர் 
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:கணினி வலைதளம் 
பொழுதுபோக்கு:சேவை 
தொழில்:படிப்பு 
மேலும் என்னைப் பற்றி:

பொண்ணியின் செல்வன்-ஒலி புத்தகம் (சுருக்கபட்ட கோப்புகள்)

Posted: 13 Sep 2016 10:52 PM PDT

வணக்கம் உறவுகளே தமிழ்நேசன் அளித்த பொண்ணியின் செல்வன் ஒலி புத்தகம் Google drive இல் கோர்க்க படாமல் இருப்பதால் பதிவிறக்கம் செய்ய சிரமமாக இருக்கிறது. அதனால் இந்த சுருக்கபட்ட media fire  zip   கோப்பை உங்களிடம் பகிர்கிறேன்.....   பதிவிறக்க இணைப்பு

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Posted: 13 Sep 2016 10:01 PM PDT

- ரசிகர்களுக்காக வாயைக் கட்டும் தமன்னா! - – 'என் உடல் எடையை, 55 கிலோவுக்குள் வைத்துள்ளேன்…' என்று கூறும் தமன்னா, 'என் விருப்ப உணவுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டேன்; சில சமயம், மற்றவர்கள் ஐஸ்கிரீம் உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடும் போது, அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால், அப்போது, என் மனக்கண்ணில் ரசிகர்களின் முகம் வரும். நான் இப்படி, 'ஸ்லிம்'மாக, அழகாக இருப்பதால் தானே, அவர்கள் என்னை ரசிக்கின்றனர். நான், 'வெயிட்' போட்டு விட்டால் ரசிக்க மாட்டார்கள் என்பதை நினைத்துக் கொள்வேன். ரசிகர்களா, ...

காதல் கடவுளின் வரம் ...!

Posted: 13 Sep 2016 09:45 PM PDT

நிஜமாகவே உன்
நிழல் படத்திற்கு கூட
முத்தமிட்டதில்லை
அவ்வளவு பௌத்திரமான
அன்பை பிரித்து வைத்த
சாதி வெறிக்கு தெரியாது
காதல் கடவுளின் வரமென்று ....!

பத்துக்கு பத்து ...!

Posted: 13 Sep 2016 09:40 PM PDT

நொடிக்கு நொடி
உன்னை
பின்தொடர்ந்த
நேரத்தைக் கொண்டு
வரைபடம் வரைந்து
வாட்ஸப் அளவு.
பேஸ்புக் அளவென
வறைமுறை வகுத்துள்ள
எனக்கு
பத்துக்கு பத்து மார்க்கு
போட்டு பாஸாக்கிவிடு ....!

தமிழுக்கும் அமுதென்று பெயர்

Posted: 13 Sep 2016 09:34 PM PDT

தமிழுக்கும் அமுதென்று பெயர் வெள்ளை மாளிகையில் நடந்த மாணவர்களுக்கான தேசிய கவிதைப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாணவி சலாமே, மாணவர் ஜோயே ரெய்ஸ்பெர்க், மிஷேல் ஒபாமா, மாணவர் கோபால் ராமன், மாணவிகள் மாயா ஈஸ்வரன் மற்றும் ஸ்டெல்லா | படம்: ஏஎப்பி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ...

ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Posted: 13 Sep 2016 06:54 PM PDT

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)                                           ஔவைக்குறள்                                    (ஔவையார் அருளியது)                                     வீட்டு நெறிப்பால்                                 1.பிறப்பின் நிலைமை. 4.            தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்                உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™