Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வன்முறையால் கர்நாடகாவுக்கு இழப்பு... ரூ.25 ஆயிரம் கோடி! ஐ.டி., 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் பீதி

Posted: 13 Sep 2016 09:45 AM PDT

பெங்களூரு,: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, கர்நாடகாவில் நடந்து வரும் போராட்டம் மற்றும் வன்முறையால், கர்நாடகாவுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

'காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.கர்நாடகாவின் மற்ற பகுதி களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், தலைநகர் பெங்களூரில் ...

வன்முறை சம்பவங்களால் பிரதமர் மோடி கவலை: பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண வலியுறுத்தல்

Posted: 13 Sep 2016 09:47 AM PDT

புதுடில்லி:''காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, தமிழகம், கர்நாடகா மாநிலங்களில், இரு நாட்களாக நடக்கும் வன்முறைச் சம்பவங்களால், ஆழ்ந்த துயரம் அடைந்து உள்ளேன்; இரு மாநில மக்கள், நாட்டு நலனில் அக்கறையுடன், சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்; பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தமிழகத்திற்கு, காவிரியில் இருந்து, வினாடிக்கு, 15,000 கன அடி வீதம், ௧௦ நாட்களுக்கு தண்ணீர் விடவேண்டுமென, கடந்த வாரம், கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கர்நாடகா முழுவதும் கலவரம் ...

* கர்நாடகா முழுவதும் வன்முறை... நீடிப்பு! * தமிழர்கள் வீடுகளுக்குள் முடக்கம் * துணை ராணுவப் படை குவிப்பு

Posted: 13 Sep 2016 10:02 AM PDT

பெங்களூரு: காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகா முழுவதும் நேற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடந்ததால், பெரும்பாலான தமிழர்கள், வீடுகளுக்குள்ளேயே பீதியுடன் முடங்கி கிடக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த, டில்லியிலிருந்து கர்நாடகாவுக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.'காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என்ற, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து, கர்நாடகா முழுவதும், நேற்று முன்தினம் பெரும் கலவரம் வெடித்தது; தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், ...

டில்லியில் பரவுகிறது சிக் குன் குனியா: முதல்வர், அமைச்சர்கள் ஓட்டம்

Posted: 13 Sep 2016 10:10 AM PDT

புதுடில்லி,: டில்லியில், சிக் குன் குனியா, மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம், சிக் குன் குனியாவால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் பலியாகினர். முதல்வர், கவர்னர், அமைச்சர்கள் வெளியூர் சென்றுள்ளதால், நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது; பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது. டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் பெய்த கனமழையால், டில்லி யில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது; இதனால், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஏராளமானோர் அனுமதிடில்லியில் வசிக்கும் பலரும், ...

'நத்தம்' தூக்கம் நேற்றும் தொலைந்தது: 2வது நாளாக வருமான வரி விசாரணை

Posted: 13 Sep 2016 10:20 AM PDT

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி ஆகியோரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், இரண்டாவது நாளாக நேற்று விசாரணை நடத்தினர்.

கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்தவர், நத்தம் விஸ்வநாதன். சென்னை மேயராக இருப்பவர், சைதை துரைசாமி; அவரது மகன் வெற்றி.இம்மூவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், நேற்று முன்தினம், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையை துவங்கினர்;
2-வது நாளாக சோதனை
இரண்டாவது நாளாக நேற்றும், சோதனை தொடர்ந்தது.திண்டுக்கல் மாவட்டம், ...

காவிரி போராட்டம்: 18ல் கருணாநிதி முடிவு

Posted: 13 Sep 2016 10:35 AM PDT

காவிரி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கிறது.

காவிரி பிரச்னை தொடர்பாக தே.மு.தி.க., சார்பில் சென்னையில் 16ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. அதேபோல், தி.மு.க., சார்பிலும், மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும் என, கட்சி தலைமையிடம், மாநில நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, 16ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.18ம் தேதி காலைஇந்நிலையில் காவிரி ...

உள்ளாட்சி தேர்தல்: 16 முதல் விண்ணப்பம் அ.தி.மு.க. பெற ஏற்பாடு:

Posted: 13 Sep 2016 10:40 AM PDT

சென்னை, : 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், அ.தி.மு.க.,வினரிடம் இருந்து, வரும், 16 முதல், 22 வரை, விண்ணப்பங்கள் பெறப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, வரும், 16ம் தேதி காலை, 8:30 மணி முதல், விண்ணப்பங்கள் பெறப்படும்; விருப்பம் உள்ளவர்கள், 22ம் தேதி இரவு, 8:00 மணி வரை, பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை வழங்கலாம். மற்ற நாட்களில் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, உரிய கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.சென்னை மாநகராட்சி ...

உள்ளாட்சி தேர்தலில் போட்டி விஜயகாந்த் முடிவால் பீதி

Posted: 13 Sep 2016 10:44 AM PDT

உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதால், கட்சியின் மாவட்ட செயலர்கள் பீதியடைந்து உள்ளனர்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தல்; 2016 சட்டசபை தேர்தல் என, வரிசையாக தோல்வியை சந்தித்ததால், தே.மு.தி.க., நிர்வாகிகள் பலர் ஓடிவிட்டனர்; மீதம் இருப்பவர்களும், கடனில் சிக்கித் தவிக்கின்றனர்.அதனால், 'உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்' என, அவர்கள், கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதை ஏற்காத விஜயகாந்த், 'உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடும்' என, நேற்று அறிவித்து உள்ளார்.ஒற்றுமையோடு ...

ஆடு விற்று கழிப்பறை கட்டிய மூதாட்டிக்கு சுவச் பாரத் அபியான் விருது

Posted: 13 Sep 2016 10:46 AM PDT

புதுடில்லி: தனது ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய மூதாட்டிக்கு மத்திய அரசு சுவச் பாரத் அபியான் விருதை அறிவித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 105 வயது மூதாட்டி குன்வர் பாய். இவர் தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டினார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிராமங்கள் தோறும் கழிப்பறை கட்ட மானியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் குன்வர் பாய் தனது 105 வயதில் கழிப்பறை கட்டி நாட்டிற்கு முன்னுதாரண மானார். அவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சுவச் பாரத் அபியான் விருதை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 17 ம் ...

சி.பி.ஐ., விசாரணைக்கு கிடுக்கி மத்திய அரசு ஆலோசனை

Posted: 13 Sep 2016 11:05 AM PDT

புதுடில்லி,: மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராக, சி.பி.ஐ., விசாரணை நடத்தும் முன், சம்பந்தப்பட்ட அரசுகளின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தாங்கள் எடுக்கும் சரியான முடிவுகள் தொடர்பாக, சி.பி.ஐ., உள்ளிட்ட எஜன்சிகளின் விசாரணைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி கோரி வருகின்றனர். தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் ஷ்யாமல் கோஷ், நிலக்கரித்துறை முன்னாள் செயலர்கள், பி.சி.பரேக், எச்.சி.குப்தா உள்ளிட்ட அதிகாரிகள், வழக்குகளில் சிக்கியுள்ளதை, உதாரணமாக ...

பிறந்த நாளையொட்டி மீண்டும் குஜராத் வருகிறார் மோடி

Posted: 13 Sep 2016 01:35 PM PDT

ஆமதாபாத்: தனது பிறந்த நாளை சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து மீண்டும் குஜராத் மாநிலம் வருகிறார் பிரதமர் மோடி. இது குறித்து குஜராத் மாநில பா.ஜ. செய்தி தொடர்பாளர் பாரத் பாண்டே செய்தியாளர்களிடம் கூறியது, தனது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி குஜராத்தின் காந்திநகரில் வசித்து வரும் தனது தாயார் ஹிராபாயை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர் தாகூ மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி சந்திக்கிறார். அவர்களுடன் தனது பிறந்த நாளை ...

உ.பி., சமாஜ்வாடிகட்சி தலைவராக சிவ்பால்சிங்யாதவ் நியமனம்

Posted: 13 Sep 2016 02:52 PM PDT

லக்னோ: உ.பி.,மாநிலத்தின் அதிரடி அரசியல் திருப்பமாக சமாஜ்வாடி கட்சி தலைவராக சிவ்பால்சிங்யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: உ.பி., மாநிலத்தின் முதல்வராக இருந்து வரும் அகிலேஷ்யாதவ் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தற்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை தீர்க்கவும், அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என நோக்கத்தில் உறவினரான சிவ்பால்சிங்யாதவ்வை கட்சியின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™