Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விளம்பர ஏஜன்சிகளை நாடும் மத்திய அமைச்சர்கள்

Posted: 12 Sep 2016 09:30 AM PDT

புதுடில்லி: மத்திய அரசின் பல்வேறு முக்கிய திட்டங்களை, மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், பிரபல விளம்பர ஏஜன்சிகளின் உதவியை, மத்திய அமைச்சர்கள் நாடி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு மத்தியில் அமைந்த பின், பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை பிரபலப்படுத்துவதற்கான முயற்சியில், மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு திட்டங்களை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காக, பி.ஐ.பி., எனப்படும், பத்திரிகை தகவல் அமைப்பும், டி.ஏ.வி.பி.,
எனப்படும், விளம்பர அமைப்பும் உள்ளன. ...

தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம்: போக்குவரத்து அடியோடு துண்டிப்பு

Posted: 12 Sep 2016 09:49 AM PDT

ஓசூர்: கர்நாடக - தமிழக எல்லையில், நேற்று மீண்டும் பதற்றம் நிலவியதால், இரு மாநில போக்குவரத்தும் அடியோடு துண்டிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், செப்., 5 முதல், கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், 6ம் தேதி முதல், ஓசூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள், மாநில எல்லையான, ஓசூரின் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டன. நேற்று முன்தினம், கர்நாடகாவில் அமைதி திரும்பியதால், தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், காவிரி பிரச்னையில், தமிழகத்தின் நியாயம் குறித்து ...

நடிகர் சங்கத்தில் ரூ.1.65 கோடி முறைகேடு : சரத்குமார், ராதாரவி மீது நாசர் வழக்கு

Posted: 12 Sep 2016 10:01 AM PDT

சென்னை: நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் ஆகியோர் மீதான, 1.65 கோடி ரூபாய் முறைகேடு புகாரை, பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரான, நடிகர் நாசர் தாக்கல் செய்த மனு: தென்னிந்திய நடிகர் சங்கத்தால், நடிகர் சங்க அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. 2006 - 15ம் ஆண்டு கால கட்டத்தில், நடிகர் சங்க தலைவராக சரத்குமார், பொதுச்செயலராக ராதாரவி, பொருளாளராக வாகை சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர். சங்க நிர்வாகிகள், அறக்கட்டளையின் நிர்வாகிகளாக செயல்பட்டனர். அறக்கட்டளையின்நிதி மற்றும் ...

ஜி.எஸ்.டி., வரி விதிப்பை அமல்படுத்துவதில்... வேகம்! கவுன்சில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 12 Sep 2016 10:07 AM PDT

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை, அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. வரி விதிப்பை நிர்ணயம் செய்யும், ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

நாடு முழுவதும் தற்போது உள்ள பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்ற, ஒரே சீரான வரியை அமல்படுத்துவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கான மசோதாவுக்கு, பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில், அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன.இந்த மசோதா, ...

கர்நாடகா கோரிக்கை நிராகரிப்பு: கண்காணிப்பு குழு கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 12 Sep 2016 10:12 AM PDT

நிபுணர் குழுவை அனுப்ப வேண்டுமென்ற கர்நாடகாவின் கோரிக்கையை, காவிரி கண்காணிப்புக் குழு ஏற்கவில்லை; அதற்கு பதிலாக, காவிரி பாயும் மாநிலங்களின் புள்ளி விபரங்களை, வரும், 15ம் தேதிக்குள் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழு கூட்டம், 19க்கு, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று, டில்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சகத்தில் நடந்தது. இந்த துறையின் செயலரும், காவிரி கண்காணிப்புக் குழு தலைவருமான, சசி சேகர் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உயர் அதிகாரிகள் ...

கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் 'கலவரத்தை அடக்குவது மாநிலத்தின் பொறுப்பு'

Posted: 12 Sep 2016 10:21 AM PDT

'சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதால், கர்நாடகாவில் கலவரங்கள் நடப்பதாக, மாநில அரசே கூறுவதை ஏற்க முடியாது; கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டியது மாநிலத்தின் பொறுப்பு' என, கர்நாடகாவுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், 'காவிரியில் தமிழகத்துக்கு, 10 நாட்களுக்கு, வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது.
12 ஆயிரம் கன அடி நீர்
மேலும், ...

நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி வீடுகளில் 'ரெய்டு': கட்டுக்கட்டாக பணம், தங்கம், வைர நகைகள், ஆவணங்கள் பறிமுதல்

Posted: 12 Sep 2016 10:30 AM PDT

தேர்தல் நேரத்தில் பணம் பதுக்கியது தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மேயர் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றி ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று, வருமான வரி துறை சோதனை நடந்தது. சென்னையில், ஏழு இடங்கள் உட்பட தமிழகத்தின் எட்டு இடங்களில், இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

புகார்சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனின் பதவி பறிக்கப்பட்டது. அவர், கட்சித் தலைமைக்கு தெரியாமல் சொத்து ...

காவிரி விவகாரத்தால் கலவரம் நடக்கும் பெங்களூரில்...144! பஸ்கள், ஓட்டல்கள் எரிப்பு, தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையிலும் கன்னட வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு

Posted: 12 Sep 2016 10:33 AM PDT

பெங்களூரு:காவிரி விவகாரத்தால், கர்நாடக மாநிலம் கலவர பூமியானது. தமிழக பதிவெண் உடைய, 5௦க்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்களையும், தமிழர்கள் நடத்தும் உணவகங்களையும் கன்னட அமைப்பினர் தீ வைத்து எரித்தனர்; தமிழர்களையும் அடித்து நொறுக்கினர். கலவரத்தை கட்டுப்படுத்த, பெங்களூரு, மைசூரு நகரங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 'காவிரியிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் தீர்ப்பளித்தது; இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி ...

மக்கள் பிரச்னைகள்: சசிகலா புஷ்பா புது அவதாரம்

Posted: 12 Sep 2016 10:58 AM PDT

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலா புஷ்பா, எம்.பி., பல்வேறு மக்கள் நல பிரச்னைகளுக்காக, போராட திட்டமிட்டு உள்ளார்.

தி.மு.க., - எம்.பி., திருச்சி, சிவாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, எம்.பி., சசிகலா புஷ்பா, முதல்வர் ஜெயலலிதா, தன்னை அடித்து விட்டதாக, ராஜ்யசபாவில் முறையிட்டார். பின், டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, போலீஸ் பாதுகாப்பு பெற்றுள்ளார்.
எதிர்காலம்
தமிழகத்தில், அவர் மீது வழக்குகள் போடப்பட, அவர், ஜெயலலிதாவையும், அ.தி.மு.க.,வையும் கடுமையாக விமர்சித்தார்.இந்நிலையில், பல்வேறு ...

நாயை சுட்டு கொன்ற எஸ்.ஐ.,க்கு சிக்கல்

Posted: 12 Sep 2016 02:16 PM PDT

லக்னோ: உத்தர பிரதேசத்தில், நாயை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, எஸ்.ஐ., மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கும்படி, போலீஸ் உயர்
அதிகாரிக்கு, மத்திய அமைச்சர் மேனகா உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது; இங்குள்ள, பாராங்கி மாவட்டத்தைச் சேர்ந்த, எஸ்.ஐ., மஹேந்திர பிரதாப், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்; அப்போது, அவரை நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த அவர், தன் துப்பாக்கியால், நாயை சுட்டதாகவும், அந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™