Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'தே.மு.தி.க.,வை பலவீனப்படுத்த வேண்டாம்' நிர்வாகிகளுக்கு கருணாநிதி திடீர் உத்தரவு

Posted: 11 Sep 2016 07:36 AM PDT

'தே.மு.தி.க.,வை பலவீனப்படுத்தும் செயல் களில் ஈடுபட வேண்டாம்' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கட்சி நிர்வாகிகளுக்கு ரகசியமாக உத்தரவிட்டிருப்பது, அவரின் சாதுர்யம் என, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த 2006ல்,தே.மு.தி.க., உதயமானது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி யிட்டு, 10 சதவீத ஓட்டுகளை பெற்றது. பின், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 8 சதவீத ஓட்டுகளை பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கும் உயர்ந்தது.கடந்த, 2014-ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்று, 5 சதவீத ...

நிதிஷை சாடும் லாலு கட்சியினர் பீஹார் அரசியல் களத்தில் சலசலப்பு

Posted: 11 Sep 2016 09:45 AM PDT

பாட்னா:ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி முன்னாள் எம்.பி., முகம்மது சஹாபுதீன், ''சந்தர்ப்பவசத்தால், நிதிஷ் குமார், பீஹார் முதல்வராகி உள்ளார்,'' எனக் கூறியதை தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத், ''லாலு பிரசாத் யாதவே எங்கள் தலைவர்,'' எனக் கூறியது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசில், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான, ஆர்.ஜே.டி., இடம் பெற்றுள் ளது. ஆர்.ஜே.டி.,யைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., முகம்மது சஹாபுதீன், 11 ஆண்டு சிறைவாசத் துக்கு ...

களையிழக்கிறதா தே.மு.தி.க., ஆண்டு விழா? 35 இடங்களில் மட்டும் கொண்டாட்டம்

Posted: 11 Sep 2016 09:53 AM PDT

சட்டசபை தோல்வியால் பெரும் பின்னடை வை சந்தித்துள்ள, தே.மு.தி.க.,வின் ஆண்டு விழா கொண்டாட்டமும், இந்தாண்டு களை யிழந்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தே.மு.தி.க.,வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி விட்டனர். எஞ்சியுள்ளவர்களும், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதனால், கட்சி நிகழ்ச்சிகளில், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆக., 25ல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை,பல மாவட்ட செயலர்கள் ஆடம்பரமாக கொண்டாடவில்லை. இந்நிலையில், வரும், 14ல், ...

ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்காக நிர்வாக அமைப்புகளிலும் மாற்றம்

Posted: 11 Sep 2016 10:03 AM PDT

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை, அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1ம் தேதி தேதி முதல் அமல்படுத்த, தீவிர முயற்சி நடக்கும் நிலையில், அதற்கேற்ப நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் பணிகளும் நடக்கின்றன.

தீவிர முயற்சி:நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை கொண்டு வரும் வகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையைக் அமல்படுத்துவதற்கான முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பான மசோதா, பார்லிமென்ட்டில்
நிறைவேறியது; தொடர்ந்து, பல்வேறு மாநில சட்டசபைகளிலும் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து, இந்த ...

பள்ளிக்கு இனி 'கட்' அடிக்க முடியாது; பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., பறக்கும்

Posted: 11 Sep 2016 10:16 AM PDT

புதுடில்லி : நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை
அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இணையதளம் துவக்கம்
டில்லியில் நேற்று, உயரதிகாரிகள் கூறியதாவது:கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிலர், ஏதாவதொரு காரணத்துக்காக, பள்ளிக்கு வராமல், 'கட்' அடிப்பதாக புகார்கள் வருகின்றன. பல சந்தர்ப்பங்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி, பெற்றோருக்கு எதுவும் தெரியாமல் போகிறது. ஆசிரியர்களுடன் நேரடியாக பேசும்போது மட்டுமே, ...

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் எவ்வளவு?:டில்லியில் இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Posted: 11 Sep 2016 10:21 AM PDT

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டம், டில்லியில் இன்று நடக்க உள்ளது; இந்தக் கூட்டத்தில், தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது குறித்து, முக்கிய முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, 'காவிரி யிலிருந்து, தமிழகத்துக்கு, 10 நாட்களுக்கு, வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி வீதம், தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், காவிரி கண்காணிப்பு குழுவில் தமிழக அரசு முறையிடலாம் என்றும்,10நாட்களுக்குள், ...

ரூ1,500 கோடி சீன பட்டாசுகள் இந்தியாவுக்கு கடத்தல்!: துறைமுகங்கள் வழியாக அரங்கேறும் அவலம்

Posted: 11 Sep 2016 10:29 AM PDT

புதுடில்லி:சீன பட்டாசுகளை விற்க, மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையிலும், பல்வேறு துறைமுகங்கள் வழியாக, 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் கடத்தி வரப்படுவதாக, வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மக்கள், தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடு வது வழக்கமாக உள்ளது. தமிழகத்தின் சிவகாசி உள்ளிட்ட நகரங்களில் தயாராகும் பட்டாசுகள் தான், அதிக அளவில் விற்பனையாகி வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்கப்படுகின்றன.
அரசு தடை
இந்த பட்டாசுகளில் போதிய பாதுகாப்பு ...

மல்லையாவுக்கு தொடரும் நெருக்கடி; வெளிநாட்டு சொத்தை முடக்க முடிவு

Posted: 11 Sep 2016 10:33 AM PDT

புதுடில்லி:வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாதது உட்பட பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், வெளிநாடுகளில் உள்ள அவருடைய சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாதது உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே, லண்டனுக்கு தப்பி சென்றுள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டு வருவதற் கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் மல்லையா ...

பெங்களூரு வீடுகளில் கரை புரண்டோடும் காவிரி நீர்

Posted: 11 Sep 2016 10:40 AM PDT

பெங்களூரு:'காவிரி நீர் எங்களுக்கே போத வில்லை; குடி தண்ணீருக்கே பஞ்சம் உள்ளது' என, முதல்வர் சித்தராமையா தொடங்கி, கர்நாடக மக்கள் அனைவரும் ஒரே பல்லவியை பாடி வருகின்றனர். ஆனால், அந்த காவிரிநீரை, கர்நாடக கவர்னர் மாளிகையில், ஒரு மாதத்திற்கு, 62.42 லட்சம் லிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். இதை, 52 ஆயிரம் குடும்பங்கள் பயன்படுத்தலாம்.இதுகுறித்து, பெங்களூரு நகர குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள விபரம்: * கவர்னர் மாளிகையில், 92 ஏக்கர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களுக்கு நீர் பாய்ச்ச, காவிரி நீர் தான் பயன்படுத்தப்படுகிறது* மாநில தகவல் ...

கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை:குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்

Posted: 11 Sep 2016 10:43 AM PDT

'ஆன்லைன்' வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில், கணினி ஆசிரியர்களை நியமிக்கா மலும், கணினி அறிவியல் பட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காமலும் பள்ளிக் கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், 1992 முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப் படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப் படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்பு முடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி., பிறகு பி.எட்., படிப்புகள் ...

போர் விமான ஊழல் விசாரணை; ராணுவ அமைச்சர் பரீக்கர் தகவல்

Posted: 11 Sep 2016 12:48 PM PDT

வதோதரா : ''பிரேசில் நாட்டைச் சேர்ந்த, 'எம்ப்ரார்' நிறுவனத்திடம் இருந்து, போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரில், தேவைப்படால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்படும்,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் தெரிவித்தார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த எம்ப்ரார் நிறுவனத்திடம் இருந்து, மூன்று போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம், 2008ம் ஆண்டில், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கையெழுத்தானது. அதன்படி, மூன்று விமானங்களும் இந்தியாவுக்கு வந்துள்ளன. இதில், உள்நாட்டு தொழில் நுட்பத்திலான, 'ரேடார்'களை பொருத்தும் பணியை, ...

'டால்கோ' ரயில் சோதனை வெற்றி

Posted: 11 Sep 2016 01:36 PM PDT

மும்பை: டில்லி - மும்பை இடையே இயக்கப்பட்ட, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, 'டால்கோ' நிறுவனத்தின் அதிவேக ரயிலின் கடைசி சோதனை ஓட்டம், வெற்றிகரமாக அமைந்தது; 12 மணி நேரத்துக்குள், இந்த தொலைவைக் கடந்தது டால்கோ ரயில்.1,400 கி.மீ., துாரம்

ரயில் பாதைகளை மாற்றாமலேயே, ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டால்கோ நிறுவனத்தின் ரயில்கள், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இயக்கி சோதனை செய்யப்பட்டன.
உத்தர பிரதேசத்தின், பரேலி - மொராதாபாத்; வடக்கு - மத்திய ரயில்வேயின் பால்வால் - மதுரா ஆகிய மார்க்கங்களில், ...

பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்

Posted: 11 Sep 2016 02:38 PM PDT

புதுடில்லி : பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.
நாடு முழுவதும், நான்கு கோடி பேர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதியில் சேர்க்கப்படும் தொகைக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இதற்கான வட்டி விகிதங்களை, பி.எப்., அமைப்பின், மத்திய அறங்காவலர் குழு நிர்ணயிக்கும்; அதற்கு, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 8.8 சதவீத வட்டி வழங்க, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™