Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தலுக்கு தயாராகும் உ.பி.,யில் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு

Posted: 01 Sep 2016 09:28 AM PDT

லக்னோ: அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்ட சபை தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத் தில், எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம் மற்றும் முன்னாள், எம்.எல்.ஏ.,க்களுக்கான ஓய்வூ தியத்தை உயர்த்தும் மசோதா, ஒரு மனதாக நிறைவேறியது.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ள உத்தர பிரதேசத் தில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம்
மற்றும் முன்னாள், எம்.எல்.ஏ.,க்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது; அந்த மசோதா ஒருமனதாக, நேற்று நிறைவேறியது. ...

கறுப்பு பண வாக்குறுதி என்னாச்சு? : பிரதமருக்கு விவசாயி கேள்வி

Posted: 01 Sep 2016 09:29 AM PDT

புதுடில்லி: 'கறுப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு ஏழையின் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று, பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி எப்போது நிறைவேறும்' என, ராஜஸ்தானை சேர்ந்த விவசாயி, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு, பிரதமர் அலுவலகம் விரைவில் பதிலளிக்க உள்ளது.

லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தல்
பிரசாரத்தின் போது, 'கறுப்புப் பணத்தை முழுமையாக மீட்போம்; ஒவ்வொரு ஏழையின் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாயை செலுத்துவோம்' என, பிரதமர் மோடிபேசினார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜலவார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ...

சிங்கப்பூரில் பரவுகிறது 'ஜிகா' வைரஸ் பீதி!:இந்திய தொழிலாளர்களுக்கும் பாதிப்பு;சுற்றுப் பயணத்தை ரத்து செய்தார் சுஷ்மா

Posted: 01 Sep 2016 09:30 AM PDT

சிங்கப்பூர்:தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், 13 இந்தியர்கள் உட்பட, 115 பேர், 'ஜிகா' வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பாதிப்பு அதிகமாக இருப்பதால், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டார்.

'ஜிகா' வைரஸ் தாக்குதல் மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக விளங்குகிறது. 'ஏடெஸ் எகிப்தி' என்ற கொசுவால் பரவும் இந்த வினோத காய்ச்சலுக்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.தென் அமெரிக்க நாடுகளில், 2015ல், பெரிய அளவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில், வைரஸ் பரவலால் பெரும் பீதி ...

'அவதூறு வழக்கை சந்திக்க தயார்' : ராகுல்

Posted: 01 Sep 2016 09:33 AM PDT

''மஹாத்மா காந்தி கொல்லப்பட்டது தொடர் பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக, நான் கூறிய வார்த்தைகளில் உறுதியாக இருக்கி றேன்; இது தொடர்பான அவதுாறு வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்,'' என, சுப்ரீம் கோர்ட்டில், காங்., துணைத் தலைவர் ராகுல் தெரிவித்தார்.

ஐகோர்ட் தள்ளுபடி : லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மஹாராஷ்டிர மாநிலம், பிவண்டி யில், காங்., துணைத் தலைவர் ராகுல் பேசினார். அப்போது, 'ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்றனர்' என, பேசி உள்ளார். அதை தொடர்ந்து, பிவண்டி கோர்ட்டில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவர், ராகுல் மீது அவதுாறு ...

போக்குவரத்து ஊழியர்கள் இன்று கட்டாயம் பணிக்கு வர உத்தரவு!:'ஸ்டிரைக்'கில் ஈடுபடக் கூடாது என மறைமுக வலியுறுத்தல்

Posted: 01 Sep 2016 09:45 AM PDT

தொழிற்சங்கங்கள், இன்று, 'பந்த்' நடத்தும் நிலையில், பஸ்களை தடையின்றி இயக்க வசதியாக, 'விடுப்பு எடுக்காமல், கட்டாயம் பணிக்கு வர வேண்டும்' என ஊழியர்களுக்கு, அரசு போக்குவரத்து கழகங்கள் உத்தரவிட்டுள் ளன; 'ஸ்டிரைக்'கில் ஈடுபடக் கூடாது என, மறைமுகமாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது; புதிய பென்ஷன் திட்டத் தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்கள், இன்று, நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. ஆளுங்கட்சி ...

சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு தமிழகத்தில் முதல் முறை அமல்

Posted: 01 Sep 2016 10:16 AM PDT

தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல் கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 5,004 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,006 கி.மீ., சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 43 இடங்களில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, தனியாரும் கட்டணம் வசூலிக்கின்றன.சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில், தனியாருக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பு உரிமை தரப்பட்டுள்ளது. சாலை விரி வாக்க பணிக்கு செலவிட்ட பணத்தை பெறும் வரை, ...

'இறந்தவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை' தி.மு.க., மீது அமைச்சர் புகார்; சபையில் அமளி

Posted: 01 Sep 2016 10:23 AM PDT

சென்னை:தி.மு.க.,ஆட்சியில்,வெளிநாட்டில் இருந்தவர்களுக்கு கூட,முதியோர் உதவித் தொகை வழங்கியதாக, அமைச்சர் புகார் கூறியதால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

சட்டசபையில், நேற்று வருவாய் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:அமைச்சர் உதயகுமார்: தி.மு.க., ஆட்சியில், வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் தொகுதியில், சமூக பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை, இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள், அரசு பணியில் இருப்பவர்கள் என தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, தி.மு.க., ஆட்சியில், 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; அ.தி.மு.க., ...

'அரசியல் உள்நோக்கமின்றி 'ஸ்மார்ட் சிட்டி' தேர்வு: 40 நகரங்கள் விரைவில் அறிவிப்பு'

Posted: 01 Sep 2016 10:31 AM PDT

''மத்திய அரசின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், அரசியல் உள்நோக்கமின்றி நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன,'' என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர், வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

சென்னை, ஐ.ஐ.டி., மற்றும் இந்திய தேசிய இன்ஜினியரிங் அகாடமி இணைந்து நடத்தும் இன்ஜினியர்களுக்கான மாநாடு, சென்னை, ஐ.ஐ.டி.,யில் துவங்கியது. மாநாட்டை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:இந்தியாவில், அதிக எண்ணிக்கையில், இன்ஜி., கல்லுாரிகளுக்கு அனுமதி அளித்ததால், சாதாரண தொழிலாளர்களின் குழந்தைகளும், ...

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Posted: 01 Sep 2016 10:35 AM PDT

வெலிங்டன் : நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான யு.ஜி.எஸ். வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியான ஜிஸ்போர்ன் என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 30 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது . ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. எனினும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இவ்வாறு ...

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

Posted: 01 Sep 2016 10:35 AM PDT

சென்னை:சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, சட்ட சபை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தாக்கல் செய்த மனு:தமிழக சட்டசபையில், 'நமக்கு நாமே' பயணம் குறித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பேசியதை தொடர்ந்து, அதற்கு நான் பதிலளித்தேன். என் பதிலை, சபை குறிப்பில் இருந்து நீக்கி விட்ட னர்; இதற்கு, தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, சபை நடவடிக்கைகளுக்கு இடை யூறு செய்வதாக ...

'பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம் உடலை தைக்கும் முள்'

Posted: 01 Sep 2016 12:08 PM PDT

புதுடில்லி: ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்று வரையிலும், நம் சதையை தைத்துள்ள முள்ளாக இருந்து வருகிறது,'' என, விமானப்படை தளபதி, அரூப் ராஹா கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு, போராட்டங்கள் நடக்கின்றன; இதன் பின்னணியில் பாகிஸ்தான் செயல்படுகிறது. இதற்கு பதிலடியாக, பிரதமர் நரேந்திர மோடியும், சுதந்திர தின உரையில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.
இந்நிலையில், இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா கூறியதாவது: நாடு சுதந்திரமடைந்த போது, 1947ல், ஜம்மு - காஷ்மீரை ...

குழந்தைகளுக்கு அடிக்கடி ஆன்டிபயாடிக் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்

Posted: 01 Sep 2016 01:09 PM PDT

கொலம்பஸ்: குழந்தைகளுக்கு அடிக்கடி ஆன்டிபயாடிக் கொடுப்பதால் அது உடல் பருமனை உண்டாக்கும் என அமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலையின் பேராசிரியர் இதவ்மா ஏனெலி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உடல் பருமனுக்கான காரணங்கள் பல உள்ளன. ஜீன்கள், சுகாதரமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டாலும். குழந்தைப்பருவத்தில் அடிக்கடி கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் முக்கிய காரணமாக அமைவதாக அமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலையின் பேராசிரியர் இதவ்மா ஏனெலி தெரிவித்துள்ளார்.
அடிக்கடி ஆன்டிபயாடிக் ...

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம்: ரவி சங்கர் பிரசாத்

Posted: 01 Sep 2016 02:16 PM PDT

சென்னை: ‛டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் கம்ப்யூட்டர் மயமாக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது' என, மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி, மிகச் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்; அதனால், அனைத்து தரப்பு மக்களும் நன்மை அடைந்துள்ளனர். குறிப்பாக, தொழில் தகவல் ஒளிபரப்புத் துறைகள் மிகப்பெரிய வளர்ச்சி அடைத்துள்ளன. பிரதமரின், 70வது சுதந்திர தின உரை, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™