Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"ஊடகங்களுக்கு சுயக் கட்டுப்பாடு தேவை'

Posted: 01 Sep 2016 01:22 PM PDT

சமூக வலைதளங்கள் உள்பட அனைத்து வகை ஊடகங்களுக்கும் சுயக் கட்டுப்பாடு மிகவும் தேவை என மத்திய செய்தி, ஒலிபரப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

திமுக எம்எல்ஏக்கள் இடை நீக்கத்தை எதிர்த்து வழக்கு: 4 வாரத்தில் பதிலளிக்க பேரவைச் செயலருக்கு உத்தரவு

Posted: 01 Sep 2016 01:20 PM PDT

சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 திமுக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது தொடர்பாக, சட்டப்பேரவை செயலர் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

"மின்யுக இந்தியா திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம்'

Posted: 01 Sep 2016 01:19 PM PDT

மின்யுக இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் கணினிமயமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

செப். 15-இல் 2-ஆம் கட்ட கால்நடை மருத்துவக் கலந்தாய்வு

Posted: 01 Sep 2016 01:18 PM PDT

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Posted: 01 Sep 2016 01:18 PM PDT

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுவாணியில் அணை கட்டும் பணியைத் தொடங்கியது கேரளம்?

Posted: 01 Sep 2016 01:18 PM PDT

சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 01 Sep 2016 01:12 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் கணிதத் துறை சார்பில், வியாழக்கிழமை சி.எஸ்.ஐ.ஆர். பிரிலிம்ஸ் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம்

Posted: 01 Sep 2016 01:11 PM PDT

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 01 Sep 2016 01:10 PM PDT

ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், வியாழக்கிழமை தொடங்கிய 29 ஆவது ஆண்டு விநாயகர் சதுர்த்தி  விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: விருதுநகர் மாவட்டத்தில் 15.41 லட்சம் வாக்காளர்கள்

Posted: 01 Sep 2016 01:10 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்டார்.

சாத்தூர் வைப்பாற்றில் கருவேல் மரங்களை அகற்றக் கோரிக்கை

Posted: 01 Sep 2016 01:09 PM PDT

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும்  வைப்பாற்றில் அதிக அளவில் வளர்ந்துள்ள கருவேல் மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனைவியை தாக்கிய கணவர் உள்பட மூவர் மீது வழக்கு

Posted: 01 Sep 2016 01:09 PM PDT

சிவகாசி திருத்தங்கலில் புதன்கிழமை மனைவியை தாக்கிய கணவர் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மனைவி மீது தாக்குதல்: கணவர் கைது

Posted: 01 Sep 2016 01:09 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த பயணிகள் கோரிக்கை

Posted: 01 Sep 2016 01:08 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இவற்றை வரைமுறைப்படுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

Posted: 01 Sep 2016 01:08 PM PDT

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிவகாசியை சேர்ந்த இளைஞரை வியாழக்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் செப்.1 முதல் 21 வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Posted: 01 Sep 2016 01:07 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் செப்டம்பர் 1 (வியாழக்கிழமை) முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

வழிப்பறி செய்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 01 Sep 2016 01:07 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் நாகராஜ் (31). பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர், நத்தம் பகுதியில் வழிப்பறி செய்த போது போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சாலை விபத்தில் கயிறு வியாபாரி சாவு

Posted: 01 Sep 2016 01:06 PM PDT

பழனி அருகே வியாழக்கிழமை சாலை விபத்தில் கயிறு வியாபாரி உயிரிழந்தார்.

பெரியகுளம் அருகே பாலிடெக்னிக் மாணவர் மீது தாக்குதல்: 2 மாணவர்கள் கைது

Posted: 01 Sep 2016 01:06 PM PDT

பெரியகுளம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை தாக்கிய 2 மாணவர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கம்பம் அருகே பதுக்கப்பட்ட கள்ளச் சாராயம், கஞ்சா பறிமுதல்

Posted: 01 Sep 2016 01:05 PM PDT

கம்பம் அருகே வியாழக்கிழமை அதிகாலை பேரல்களில் பதுக்கி வைத்திருந்த கள்ளச் சாராயம், கஞ்சா செடிகளை போலீஸார் கைப்பற்றி அழித்தனர்.

ஆண்டிபட்டியில் தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது

Posted: 01 Sep 2016 01:05 PM PDT

ஆண்டிபட்டியில் தனியார் வங்கியில் போலி நகையை வியாழக்கிழமை அடகு வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

இன்று வேலை நிறுத்தம் எதிரொலி: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடியது

Posted: 01 Sep 2016 01:04 PM PDT

அகில இந்திய அளவில் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

திண்டுக்கல்லில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 17.13 லட்சம் வாக்காளர்கள்

Posted: 01 Sep 2016 01:04 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டதில் மொத்தம் 17.13 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கொடைக்கானலில் பலத்த மழை: கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 01 Sep 2016 01:03 PM PDT

கொடைக்கானலில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக வியாழக்கிழமை கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அரசுப் பேருந்து- கார் மோதல்: 6 பேர் பலத்த காயம்

Posted: 01 Sep 2016 01:03 PM PDT

பழனி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தும், கேரளாவை சேர்ந்த காரும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 01 Sep 2016 01:02 PM PDT

பழனி அருகே நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டது.

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கு: தாய் கைது

Posted: 01 Sep 2016 01:02 PM PDT

தேனி அல்லிநகரத்தில் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் புதன்கிழமை அவர்களின் தாய் கைது செய்யப்பட்டார்.

சிவன் கோயில்களில் அமாவாசை வழிபாடு

Posted: 01 Sep 2016 01:01 PM PDT

பழனியில் உள்ள சிவன் கோயில்களில் அமாவாசையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

கண்டமனூரில் செப்டம்ப்ர் 2 மின்தடை

Posted: 01 Sep 2016 01:01 PM PDT

கண்டமனூர் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறகிறது.

தேனியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 10,31,892 வாக்காளர்கள்

Posted: 01 Sep 2016 01:00 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வியாழக்கிழமை மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பயிற்சி முடித்த காவலர்களுக்கு வழியனுப்பு விழா

Posted: 01 Sep 2016 01:00 PM PDT

தூத்துக்குடி அருகே பயிற்சி முடித்த 662 காவலர்களுக்கு வழியனுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

"தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த கல்விக் கடன் முகாம் ஒத்திவைப்பு'

Posted: 01 Sep 2016 01:00 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வட்டங்களிலும் சனிக்கிழமை (செப்.3) நடைபெற இருந்த கல்விக் கடன் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராஜகாளீஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா

Posted: 01 Sep 2016 12:59 PM PDT

ஆறுமுகனேரி பெரியான்விளை ஸ்ரீராஜகாளீஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.

இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

Posted: 01 Sep 2016 12:59 PM PDT

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1008 இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது என மாவட்ட பொதுச் செயலர் பெ. சக்திவேலன் தெரிவித்துள்ளார்.

ஆயுள் காப்பீட்டுக் கழக வைர விழா

Posted: 01 Sep 2016 12:58 PM PDT

கோவில்பட்டி ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகத்தில் காப்பீட்டுக் கழகத்தின் வைர விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தூத்துக்குடி மாவட்டத்தில் 13,79,697 வாக்காளர்கள்

Posted: 01 Sep 2016 12:58 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 6 லட்சத்து 80 ஆயிரத்து 425 ஆண்கள், 6 லட்சத்து 99 ஆயிரத்து 203 பெண்கள், 69 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 79 ஆயிரத்து 697 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கோவில்பட்டியில் செப்டம்பர் 3 மின் தடை

Posted: 01 Sep 2016 12:53 PM PDT

கோவில்பட்டியில் சனிக்கிழமை (செப்.3) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாலூட்டும் அறை திறப்பு

Posted: 01 Sep 2016 12:53 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திறக்கப்பட்டது.

தூத்துக்குடியில் நாளை வனத்துறை சார்பில் பேச்சு, ஓவியப் போட்டிகள்

Posted: 01 Sep 2016 12:52 PM PDT

வனஉயிரின வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் சனிக்கிழமை (செப்.3) பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.

சீராக குடிநீர் வழங்கக் கோரி தூத்துக்குடியில் பெண்கள் மறியல்

Posted: 01 Sep 2016 12:51 PM PDT

தூத்துக்குடியில் சீரான குடிநீர் வியோகம் கோரி பெண்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

Posted: 01 Sep 2016 12:51 PM PDT

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தண்ணீர் உயிர் ஆதாரம் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

மாநில செஸ் போட்டி: அருணாச்சலா பள்ளி மாணவி சிறப்பிடம்

Posted: 01 Sep 2016 12:50 PM PDT

நாகர்கோவிலில் மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில், வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஆன்கேட்ஷி 2ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார்.

மேல்புறம் ஒன்றிய சத்துணவுத் திட்ட பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Posted: 01 Sep 2016 12:49 PM PDT

மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உள்பட்ட சத்துணவுத் திட்ட பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

நாகர்கோவிலிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்: பயணிகள் சங்கம் நன்றி

Posted: 01 Sep 2016 12:48 PM PDT

நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக, பெங்களூரு நகரில் உள்ள கிருஷ்ணராஜபுரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் கவனக்குறைவால் பெண் சாவு: ரூ.28.37 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 01 Sep 2016 12:48 PM PDT

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 28.37 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திற்பரப்பு படகு குழாமில் 7 புதிய படகுகள் இயக்கம்

Posted: 01 Sep 2016 12:47 PM PDT

திற்பரப்பு அருவியருகே உள்ள  படகு குழாமில் 7 படகுகள் புதிதாக  வியாழக்கிழமை இயக்கப்பட்டன.

முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா இன்று தொடக்கம்: 10 நாள்கள் நடைபெறுகிறது

Posted: 01 Sep 2016 12:47 PM PDT

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 2) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

குண்டர் சட்டத்தில் பெண் கைது

Posted: 01 Sep 2016 12:44 PM PDT

கன்னியாகுமரி அருகே குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா ஆச்சார்ய உத்ஸவம்

Posted: 01 Sep 2016 12:43 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவில் காப்புகட்டிய சிவாச்சாரியாருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செலுத்தும் ஆச்சார்ய உத்ஸவ நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏடிஎம் ரகசிய எண் பெற்று இளம்பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் மோசடி

Posted: 01 Sep 2016 12:42 PM PDT

நாகர்கோவிலில் இளம்பெண்ணிடம் வங்கி ஏடிஎம் ரகசிய எண்ணை பெற்று அவரது கணக்கிலிருந்து ரூ. 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

69,800 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: ஆட்சியர்

Posted: 01 Sep 2016 12:42 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 69,800 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படும் என ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்தார்.

ஒப்பந்தமும் நிர்பந்தமும்!

Posted: 01 Sep 2016 12:35 PM PDT

இந்தியாவும் அமெரிக்காவும், அவசரக் காலங்களில் இரு தரப்பு ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், போர்க் கப்பல்கள், ராணுவ விமானங்களுக்கான எரிபொருள், உணவுப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளவும் வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

முதுமையும் இனிமையாகும்!

Posted: 01 Sep 2016 12:34 PM PDT

மனித வாழ்வில் முதுமை பருவம் தவிர்க்க முடியாத ஒன்று. சமீப காலங்களில் ஏற்பட்ட விஞ்ஞானம் மற்றும் மருத்துவ முன்னேற்றங்களால், மனித வாழ்வின் சராசரி வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு, அதற்கேற்றார்போல் முதுமை பருவமும் நீள்கிறது. 55 வயதை தொட்டபிறகுதான், முதுமையை நோக்கி, தளர் நடை போடுவதை ஒவ்வொருவரும் உணர துவங்குகின்றனர்.

கம்புதான் நல்லது

Posted: 01 Sep 2016 12:33 PM PDT

உலக அளவில் பல வகையான உணவு தானியங்கள் இருந்தாலும், அவற்றில் நம் உடலுக்குத் தேவையான அதிகபட்ச கலோரியை தரவல்லது மில்லட் எனப்படும் கம்பு மட்டுமே (100 கிராமில் 378 கலோரி). மிகக் குறைவான கலோரியைக் கொண்டது அரிசி (130 கலோரி). கோதுமையில் உள்ளது 339 கலோரி.

அமைச்சர்களோட சமோசா, டீ செலவு ரூ. 9 கோடி..!

Posted: 01 Sep 2016 12:33 PM PDT

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.1000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

Posted: 01 Sep 2016 12:23 PM PDT

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.1,035.67 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்பு

Posted: 01 Sep 2016 12:22 PM PDT

நில ஆவணங்களுடன் ஆதார் எண் ஒருங்கிணைக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார்.

"சென்னையில் மேலும் 100 சிற்றுந்துகள்'

Posted: 01 Sep 2016 12:21 PM PDT

சென்னை நகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் ("ஸ்மால் பஸ்') இயக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டித் தரப்படுமா? மு.க.ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு கேள்வி

Posted: 01 Sep 2016 12:20 PM PDT

கொளத்தூர், துறைமுகம் தொகுதிகளில் பழுதடைந்துள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படுமா என்று சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர்.

ரூ.533 கோடியில் சுற்றுலா பெருந்திட்டம் அறிவிப்பு: அழகன்குளத்தில் தொல்லியல் அகழாய்வு

Posted: 01 Sep 2016 12:19 PM PDT

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் ரூ.533 கோடியில் சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பெண் ஊழியருக்கு பேறுகால விடுப்பு: காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு

Posted: 01 Sep 2016 12:18 PM PDT

அரசு பெண் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 9 மாத பேறுகால விடுப்பினை அவர்களின் தேவைக்கேற்ப பிரித்து எடுத்துக் கொள்ளவும் வழிசெய்திட வேண்டுமென காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விஜயதரணி (விளவங்கோடு) கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா நிராகரித்தார்.

வீடுகளை காலி செய்யக் கோரும் ஆணையை ரத்து செய்ய ஆட்சியரிடம் மனு

Posted: 01 Sep 2016 12:13 PM PDT

திருவள்ளூர் அருகே 30 வருடங்களாக மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளை காலி செய்ய வருவாய்த் துறையினர் வழங்கிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பேரவையில் திமுக - காங்கிரஸ் வெளிநடப்பு

Posted: 01 Sep 2016 12:13 PM PDT

சட்டப் பேரவையில் இருந்து திமுக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாதுகாப்பு வழங்கக் கோரி காதல் தம்பதி எஸ்.பி.யிடம் மனு

Posted: 01 Sep 2016 12:13 PM PDT

பெற்றோரால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக்கூறி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காதல் தம்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

34 நடமாடும் மருத்துவ வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted: 01 Sep 2016 12:12 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கொசு ஒழிப்பு வாகனங்களையும், நடமாடும் மருத்துவ வாகனங்களையும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு

Posted: 01 Sep 2016 12:12 PM PDT

ஊத்துக்கோட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழந்தார்.

மாவட்ட மருத்துவமனைகளில் ரூ.122 கோடியில் உயர் சிகிச்சைக்கு நவீன கருவிகள்: முதல்வர் ஜெயலலிதா

Posted: 01 Sep 2016 12:12 PM PDT

மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் உயர் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில் ரூ.122.19 கோடிக்கு நவீன கருவிகள் நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரிக்கை

Posted: 01 Sep 2016 12:11 PM PDT

கும்மிடிப்பூண்டி அருகே பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட குழு கோரிக்கை விடுத்தது.

டெங்கு விழிப்புணர்வு பேரணி

Posted: 01 Sep 2016 12:11 PM PDT

திருவள்ளூரில் இயங்கி வரும் ஸ்ரீநிகேதன் பள்ளி சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்: தொற்று  நோய்கள் பரவும் அபாயம்

Posted: 01 Sep 2016 12:11 PM PDT

குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், அவற்றை சீரமைத்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

Posted: 01 Sep 2016 12:11 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவரும், அத்தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

நகராட்சி வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்

Posted: 01 Sep 2016 12:10 PM PDT

திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில் குப்பைகளைக் கொட்ட வந்த நகராட்சி வாகனத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் ரூ.10 லட்சம் காப்பீடு திட்டம் அமல்

Posted: 01 Sep 2016 12:10 PM PDT

ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் ரூ.10 லட்சம் காப்பீடு அளிக்கும் திட்டம் வியாழக்கிழமை முதல் இணையதள முன்பதிவில் அமலுக்கு வந்தது.

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.வுக்கு நவாஸ் மீண்டும் கடிதம்

Posted: 01 Sep 2016 12:09 PM PDT

ஜம்மு - காஷ்மீருக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted: 01 Sep 2016 12:09 PM PDT

திருவள்ளூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை (2016) ஆட்சியர் எ.சுந்தரவல்லி  வியாழக்கிழமை வெளியிட்டார்.

காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவத் தீர்வு கண்டிருக்க வேண்டும்: விமானப் படை தலைமைத் தளபதி

Posted: 01 Sep 2016 12:09 PM PDT

காஷ்மீர் பிரச்னைக்கு அமைதித் தீர்வு காண முயற்சித்து இருக்காமல், ராணுவத் தீர்வு கண்டிருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதி தற்போது இந்தியாவிடம் இருந்திருக்கும் என்று விமானப் படை தலைமைத் தளபதி அரூப் ராஹா தெரிவித்தார்.

விஜயவாடா மருத்துவமனையிலிருந்து ஆசிரமத்திற்கு திரும்பினார் ஸ்ரீ ஜயேந்திரர்

Posted: 01 Sep 2016 12:08 PM PDT

சுவாசக் கோளாறு காரணமாக, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (81), புதன்கிழமை காலை அங்குள்ள ஆசிரமத்திற்கு திரும்பினார்.

உ.பி.: நடிகைகள் தீபிகா, சோனாக்ஷி, ராணி முகர்ஜி பெயரில் குடும்ப அட்டைகள்: விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

Posted: 01 Sep 2016 12:07 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா, ராணி முகர்ஜி மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயரில் போலியாக குடும்ப அட்டைகள் இருப்பது குறித்து அந்த மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் காப்பீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு: அருண் ஜேட்லி நம்பிக்கை

Posted: 01 Sep 2016 12:06 PM PDT

பொருளாதார வளர்ச்சியின் விளைவாக நாட்டு மக்கள் அனைவருக்கும் காப்பீட்டு வசதி கிடைக்கும் நிலை ஏற்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.

50% மாநிலங்கள் ஏற்பு: குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு செல்கிறது ஜிஎஸ்டி மசோதா

Posted: 01 Sep 2016 12:06 PM PDT

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை ஒடிஸா மாநில சட்டப்பேரவை வியாழக்கிழமை ஏற்றது.

அமெரிக்க ஓபன்: ரயோனிச், முகுருஸா அதிர்ச்சித் தோல்வி

Posted: 01 Sep 2016 12:05 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான முகுருஸா, 5-ஆம் நிலை வீரரான மிலோஸ் ரயோனிச் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

ஃபார்முலா 1: விடை பெறுகிறார் மாஸா

Posted: 01 Sep 2016 12:04 PM PDT

பிரேசிலைச் சேர்ந்த ஃபார்முலா 1 கார் பந்தய வீரரான ஃபெலிப் மாஸா, இந்த சீசனோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நின்ற லாரி மீது மினிவேன் மோதல்: 3 பேர் சாவு

Posted: 01 Sep 2016 12:04 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நின்ற சரக்கு லாரி மீது மினிவேன் மோதியது. இதில், மினிவேன் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் ராஜகோபுர கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடக்கம்

Posted: 01 Sep 2016 12:03 PM PDT

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜகோபுர கட்டுமானப் பணிகள் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கின.

ஊக்கமருந்து: கியூபா வீராங்கனையின் வெள்ளிப் பதக்கம் பறிப்பு

Posted: 01 Sep 2016 12:03 PM PDT

ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானதைத் தொடர்ந்து கியூபா வட்டு எறிதல் வீராங்கனையின் ஒலிம்பிக் பதக்கத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி).

பாஜக சார்பில் சாதனை விளக்கப் பிரசாரம்

Posted: 01 Sep 2016 12:03 PM PDT

ஆம்பூர் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரியா விடை பெற்றார் ஸ்வெய்ன்ஸ்டீகர்

Posted: 01 Sep 2016 12:02 PM PDT

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியான் ஸ்வெய்ன்ஸ்டீகர் (32), ஃபின்லாந்துக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தோடு பிரியா விடை பெற்றார்.

தாய், மகளை தாக்கி 12 பவுன் நகை, பணம் கொள்ளை

Posted: 01 Sep 2016 12:02 PM PDT

வாணியம்பாடியில் வீட்டில் தனியே இருந்த தாய், மகளை சரமாரியாக தாக்கி, 12 பவுன் நகை, ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

வங்கதேச பந்துவீச்சு பயிற்சியாளராக வால்ஷ் நியமனம்

Posted: 01 Sep 2016 12:01 PM PDT

வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் கேப்டன் கோர்ட்னி வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயில் அருகே கேட்பாரற்று நின்ற கார்

Posted: 01 Sep 2016 12:00 PM PDT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பெரியகடை தெரு பெருமாள் கோயில் முன் 4 நாள்களாக கேட்பாரற்று நின்ற காரை போலீஸார் வியாழக்கிழமை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

தொடரை வென்றது ஆஸி.

Posted: 01 Sep 2016 12:00 PM PDT

இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

"எல்ஐசி வேலூர் கோட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,400 கோடிக்கு வணிகம்'

Posted: 01 Sep 2016 12:00 PM PDT

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வேலூர் கோட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 1,400 கோடிக்கு வணிகம் நடைபெறுவதாக முதுநிலை கோட்ட மேலாளர் ஒய்.வெங்கடேஸ்வரலு தெரிவித்தார்.

முருகப்பா கோப்பை ஹாக்கி: தமிழகம்-ஏர் இந்தியா ஆட்டம் டிரா

Posted: 01 Sep 2016 12:00 PM PDT

தொன்னூறாவது முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் தமிழகம்-ஏர் இந்தியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

டிஎன்பிஎல்: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

Posted: 01 Sep 2016 11:59 AM PDT

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியைத் தோற்கடித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.

பேச்சுவார்த்தைக்கு மத்திய அமைச்சர் உடன்பாடு: "பெல்' மேற்பார்வையாளர்கள் உண்ணாவிரதம் வாபஸ்

Posted: 01 Sep 2016 11:59 AM PDT

"பெல்' நிறுவன மேற்பார்வையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ அறிவித்ததைத் தொடர்ந்து, 4 நாள்களாக நடைபெற்று வந்த தொடர் உண்ணாவிரதம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மணல் அள்ளுவதை தடுக்கக் கோரி சாலை மறியல்

Posted: 01 Sep 2016 11:58 AM PDT

பாலாற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்கக் கோரி ஆற்காட்டை அடுத்த எசையனூர் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

Posted: 01 Sep 2016 11:58 AM PDT

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய்த் துறை, காவல் துறை, விழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.

பிரேசில் அதிபராக மிஷெல் டெமர் பதவியேற்பு

Posted: 01 Sep 2016 11:58 AM PDT

அதிபர் பதவியிலிருந்து டில்மா ரூùஸஃப் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் புதிய அதிபராக மிஷெல் டெமர் (75) புதன்கிழமை பதவியேற்றார்.

"முதல் தலைமுறை மாணவர்கள் முன்னேற கல்வி ஒன்றே மூலதனம்'

Posted: 01 Sep 2016 11:57 AM PDT

கல்வியறிவு இல்லாத குடும்பத்திலிருந்து படிக்க வரும் முதல் தலைமுறை மாணவர்கள் முன்னேற கல்வி ஒன்றே மூலதனம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் காசிவிஸ்வநாதன் தெரிவித்தார்.  

செப்டம்பர் 3 மின் தடை

Posted: 01 Sep 2016 11:57 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™