Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒலிம்பிக் பதக்கமும் கல்விமுறையும் !

Posted: 01 Sep 2016 08:34 AM PDT

ஒலிம்பிக் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டாலும் உலக நாட்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் கவுரவம் மிக்க போட்டித் தொடராக இருக்கிறது. உலக நாடுகள் தங்களது வேற்றுமையை மறந்து ஒன்றாக போட்டிகளில் பங்கு பெறுகின்றன. பதக்கங்கள் வெல்வது மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவதே பெரும் கவுரவமாக இருக்கிறது. போட்டிகளை ஏற்று நடத்துவதில் கிடைக்கும கவுரவத்திற்காக உலக நாட்கள் போட்டி போடுகின்றன. பலத்த போட்டிகளுக்குப் பிறகே ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்தும் நகரம் (நாடு ) தேர்வாகிறது. ஒலிம்பிக் ...

ராசி – ஒரு பக்க கதை

Posted: 01 Sep 2016 08:14 AM PDT

- தணிகைவாசன் குழந்தை பிறந்த அன்றே சொல்லி விட்டார் மகனிடமும், மருமகளிடமும், ''என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்! கஷ்டமே வாழ்க்கையாகக் கொண்ட என் அம்மா பெயரை மட்டும் வைத்துவிட வேண்டாம்!'' என்று. அய்யர் வந்து சம்பிரதாய பூஜைகளைச் செய்து, குழந்தையின் பெயரைச் சொல்லச் சொன்னார். தணிகைவாசன் தன் மகன் வாயிலிருந்து வந்த அந்த பெயரைக் கேட்டதும் கண்கலங்கி, தன் மனைவியைப் பார்த்தார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. விசேஷம் முடிந்து, சாப்பாடு நடந்தது. அமைதியாக தணிகைவாசன் பக்கம் வந்தான் ...

உண்மையான அன்பை உதாசீனம் செய்யாதீர்

Posted: 01 Sep 2016 07:55 AM PDT

பெருமை வாய்ந்த பிள்ளையார்!

Posted: 01 Sep 2016 07:47 AM PDT

- கணபதி தாளைக் கருத்திடை வைப்பீர்! குணம் அதிற் பலவாம்! கூறக் கேளீர்! உட்செவி திறக்கும்! அகக் கண் ஒளிதரும்! திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்!' என்று மகாகவி பாரதியார் அற்புதமாகப் பாடி மகிழ்கிறார். புதுச்சேரி மணக்குள விநாயகரை வழிபட்டு "விநாயகர் நான்மணி' மாலை இயற்றினார் தேசிய கவி பாரதி. விநாயகர் சதுர்த்தியில் அவரைக் களி மண்ணில்தானே காட்சிப்படுத்துகிறோம். எனவே "பூமியே சாமி' என்பதை அவர் நமக்குப் புலப்படுத்துகிறார். விசர்ஜனத்திலும் கடலில் கரைந்து மீண்டும் பூமியோடு ...

பிள்ளையார் பெருமை

Posted: 01 Sep 2016 07:43 AM PDT

- 1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார். 2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். 3. புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம்செழிக்கும். 4. வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். 5. உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை ...

வழியெல்லாம் வரும் நினைவுகள்

Posted: 01 Sep 2016 06:04 AM PDT

வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டேரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….  சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே ...

உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்க…!

Posted: 01 Sep 2016 04:57 AM PDT

@arattaigirl 'ஒரு எழவுக்கு போயிட்டு வந்தேன்' என்பதுதான் நம் பற்றிய கடைசி உரையாடலாய் இருக்கும்! – ————————————- – @vigneshvicky341 அந்தக் கடைசி ஷாட்ட லெஃப்ட்ல திருப்பி லைட்டா ரைட்ல தட்டிருந்தா தங்கம் கெடச்சிருக்கும்னு கோளாறு சொல்லலாம்னு பாத்தா, அந்த வௌாட்டு பேரு மறந்து போச்சு! – —————————————— – @pshiva475 எல்லா சந்துலயும் பசங்க மூணு குச்சிய நட்டு கிரிக்கெட் விளையாடினாங்க. இனிமேல் ரெண்டு குச்சிய நட்டு, நெட்ட கட்டி ஆர்வமா பேட்மின்டன் விளையாடுவாங்க! – —————————————— @jaga_twits05 உலகத்தில் ...

ஆசையை விட்டொழிக்க ஏழையா இருந்தாலே போதும்! –

Posted: 01 Sep 2016 04:56 AM PDT

– மதுரையில் ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் சென்ற கன்டெய்னர் லாரிகள் பழுது: செய்தி – # அதுல ஒரு ரெண்டு கட்டை எடுத்து புது லாரி வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே! இதெல்லாம் நியூஸ்னு போட்டுட்டு இருக்காங்கே… – – திப்பு சுல்தான் கே – ——————————————- கமல் பேசுனது நமக்கு புரிஞ்சதோ இல்லையோ… பிரான்ஸ்காரனுக்கு புரிஞ்சிருக்கு! – – பூபதி முருகேஷ் – —————————————— விளையாட்டின்மீது மக்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் கவனத்தைப் பயன்படுத்தி நம்மூர் தனியார் பள்ளியினர் 'அதைச் சொல்லித் தருகிறோம், ...

விழி நீர் !

Posted: 01 Sep 2016 04:48 AM PDT

விழி நீர் !

என் இரு விழிகளின் இரு அடி இமைகள்
என் விழி நீரை ஏந்தி கொண்டிருந்தன
என்னவளின் வார்த்தைக்காக
நான் விழியோடு விழியாய் உரையா வா!
இல்லை விழிவிட்டு வெளியே இரையவா  என்று ....

வள்ளல் – ஒரு பக்க கதை

Posted: 01 Sep 2016 04:43 AM PDT

– - சென்னை – ஐதராபாத் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். என் இருக்கைக்கு எதிரே இருந்த பெரியவர், பணக்காரத் தோரணை உள்ளவர், சட்டென எழுந்து, கம்பார்ட்மென்ட் முழுமைக்கும் கேட்கும்படி பேசினார். ''அஞ்சு வருஷம் முன்னாடி, இதே ரயில், இதே நாள்ல விபத்தாகி என் மகன் இறந்துட்டான். அவன் நினைவா இன்னைக்கு உங்க எல்லோரோட உணவுக்கும் நான் பணம் தர்றேன். கூச்சப்படாம ரயில்வே கேன்டீன்ல வேண்டியதை வாங்கிச் சாப்பிடுங்க!'' – என்றவர், ஒரு கத்தை நோட்டை எடுத்து கேட்டரிங் சர்வர் கையில் திணித்தார். அனைவரும் ...

சிவன் பாடல் ...!

Posted: 01 Sep 2016 04:31 AM PDT

முக்கண் வேந்தனே மூவுலகத்தின் தலை மகனே எக்கண் உன்னை   துதித்தாலும் இரங்கியருள் புரியும் சிவனே போற்றி நந்திக்கு முதல்வனே நடனத்தின் கலை மகனே சிலையாக உன்னை பாவிப்போருக்கும் சித்தம் தெளியவைக்கும் சிவனே போற்றி சக்தியின் துணைவனே சரித்திரத்தில் சிறந்தவனே முக்தி வேண்டுமென்று கேட்போருக்கு சக்தியளித்திடும் சிவனே போற்றி அனைத்துயிரிலும் சிறந்தவனே யானை  முகத்தின் அப்பனே அரும் பசியாற்றுவோர் நெஞ்சில் அமர்ந்திருக்கும் சிவனே போற்றி மயானத்தின் மாயவனே மந்திரத்தின் மூலவனே ...

’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!

Posted: 01 Sep 2016 04:24 AM PDT

ஆதிதிராவிட நலத் துறை அமைச்சரான ராஜலெட்சுமி தனது பேச்சை அவையில் இருந்து கேட்ட ஜெயலிலதாவையும் உருக வைத்து ஸ்கோர் செய்தார். ஆதிதிராவிடநலத் துறையின் மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேச எழுந்த அமைச்சர் ராஜலெட்சுமி "காலனியில் பிறந்த என்னை.. காலணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. இன்று என்வீட்டிற்கே இரண்டு காவலர்களை காவலுக்கு நிறுத்தியவர்.. எங்கள் புரட்சித் தலைவி அம்மா" என்று சொல்லி தழுதழுத்தார். இவரின் இந்த பேச்சை கேட்டு முதல்வர் ராஜலெட்சுமியை உருக்கமாக பார்க்க, தொடர்ந்து பேசமுடியாமல், ...

காதலில் நனைந்தேன் கவிதையில் குளிர் காய்கிறேன்

Posted: 01 Sep 2016 04:13 AM PDT

இதயம் மட்டுமல்லஇதய துடிப்பின் இடைவெளியும்உன் நினைவுகளைசுமக்கும்…  வண்ணம் தீட்டாதகுட்டி வானவில்அவள் புருவம்…பால்மிதக்கும்கறுப்பு நிலா அவள் கண்கள்….  நீ போகும் வழியில்பூக்கள் உதிரும்மிதித்து விட்டு போ,,அவையெல்லாம் உன் பாதம் பட காத்திருந்து உதிர்ந்த பூக்கள்…  நினைத்தவுடன் இன்பம் தருவதுஉன் நினைவுகள்மட்டுமே….  வானம் பார்த்த பூமியாய்காத்துருக்குறேன்உன் வருகைக்காக…..  சாரல் நீசலிக்காத பாடல் நீவானம் நீஎன் வாழ்வின் வசந்தம் நீ  நான் யாரென்று தேடினால்நீயே கிடைப்பாய்எனக்குள்…  உன்னோடு தொடங்கும்போதுதான் ...

மங்கையர் மலர் வாசகிகளின் கவிதைகள்

Posted: 01 Sep 2016 04:11 AM PDT

நேற்று இன்று நாளை – - - கண்ணே…கண்மணியே கொஞ்சினான் நேற்று அவள் கணவன் காணவில்லை அவள் கம்மல் இன்று செல்லக்கிளியே – செல்லக்குட்டி என்றதுமே கவலையுற்றாள் நங்கையவள்… தாலியும் போய் விடுமோ மதுக்கடைக்கு நாளை! அழுகின்றாள் மாது! – ——————— சு.சுவாதி படம் - இணையம்

பூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்!

Posted: 01 Sep 2016 04:01 AM PDT

கோவை: கோவையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மருந்து தெளிப்பானில் பெரிய அளவிலான ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள், "ஸ்டிக்கர் ஒட்டாம எதையும் கொடுக்க மாட்டீங்களா..?" என கோபமாக கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தானிய சேமிப்பு குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் ...

ஆயிரமாயிரம்...

Posted: 01 Sep 2016 03:53 AM PDT

நஞ்சுண்டு செத்த வெள்ளெலியின் உடலில் புகுகிறேன் கனவிலிருந்து விழித்தெழுவது போல திடுக்கிட்டுச் சுற்றி இருக்கும் பரந்த வெளியைப் பயத்துடன் பார்க்கிறது தறி கெட்டோடிய பெருங்கரையொன்றின் அடியில் பதற்றத்தோடு வளை பறித்துச் செல்கிறது - மண்ணை வெளித்தள்ளும் போதில் காற்றும் வெளிச்சமும் படக் கூசிச் சிலிர்த்துக் கணத்தில் வளைக்குள் ஏகுகிறது ஆயிரமாயிரம் வழிகள் ஆயிரமாயிரம் அடைப்புகள் யாராலும் கண்டறிய இயலாத ஏதோ ஓர் அடைப்புக்குள் இப்போது எங்கே இருக்கிறேன் நான்? - -------------------------- பெருமாள் ...

ரஜினிக்கு வந்து சேருமா தேசிய அங்கீகாரம்…?

Posted: 01 Sep 2016 03:42 AM PDT

--- "1975 ஆகஸ்ட் 18... "அபூர்வ ராகங்கள்' படத்துக்காக முதன் முறையாக கேஸ்ரீரா முன் நின்ற ரஜினி, 41 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்து விட்டார். 178 படங்கள், விதவிதமான வேடங்கள், இந்திய நடிகர்கள் யாரும் தொட முடியாத வசூல் என ரஜினி கடந்து வந்த பாதை அவருக்கு மட்டுமே சாத்தியம். 41 ஆண்டுகளை சினிமாவில் பூர்த்தி செய்துள்ள ரஜினிக்கு இந்த முறை தேசிய அங்கீகாரம் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது." தமிழில் 105, கன்னடத்தில் 10, தெலுங்கில் 17, ஹிந்தியில் 23, மலையாளத்தில் ...

நேர்மைக் கடைப்பிடி

Posted: 01 Sep 2016 01:20 AM PDT

பெயர்:  யோகரத்னா . ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம். சொந்த ஊர்: புதுச்சேரி - இந்தியா ஆண்/பெண்: ஆண். ஈகரையை அறிந்த விதம்: வலைத்தளத் தேடலின்போது. பொழுதுபோக்கு:   1. யாவருக்கும் இராஜயோகப் பயிற்சி அளித்தல்; 2. தமிழ் நெறிநூல்களுக்குச்சரியான பொருள் விளக்கம் தந்து தெளிவுரை   கூறுதல்; 3. வேதங்களில் ஞான காண்டம் விரும்பிப் படித்தல், படிப்பித்தல். தொழில்: இந்திய அஞ்சல்துறையில்  அரசுப்பணியாற்றி ஓய்வு. மேலும் என்னைப் பற்றி: 1. எண்ணம், சொல், செயல் - இவை மூன்றும் நேர்பட ஒழுகல் - அவற்றைப் பின்பற்ற ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Posted: 01 Sep 2016 01:07 AM PDT

ஆகஸ்ட் 31 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.38 காசும் டீசல் விலை லிட்டருக்கு 2.67 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தியும் குறைத்தும் அறிவித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. அதன் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.38 காசும் ...

மாதவன் செய்த மாயம்!

Posted: 01 Sep 2016 01:03 AM PDT

- பகவான் கிருஷ்ணன் செய்த திருவிளையாடல்களால்தான் மகாபாரதப்போர் நிகழ்ந்தது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் என்பது உறுதி செய்யப்பட்டபின், துரியோதனன், "எந்த நாளில் போர் தொடங்கினால் வெற்றி கிட்டும்?' என்பதை அறிய சகாதேவனின் வீட்டிற்குச் சென்றான். வந்திருப்பவன் தங்களது எதிரி என்பதை யோசிக்காமல் ஜோதிடப்படி ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, "அடுத்து வரப்போகும் அமாவாசை திதியில் யுத்தம் தொடங்கினால் வெற்றி உறுதி' என்று சொன்னான். சகாதேவனிடம் நாள் குறித்துக்கொண்டு வெற்றி உறுதி என்ற மனப்பான்மையில் மகிழ்வுடன் ...

தெரிந்து கொள்ளலாம் வாங்க-இஸ்லாம்-முஸ்லீம்-

Posted: 01 Sep 2016 12:55 AM PDT

இஸ்லாம் - முஸ்லீம் என இரு வார்த்தைகள். இதன் பொருள் என்ன? இஸ்லாம் என்பது ஒரு மதத்தைக் குறிக்கிறது. முஸ்லீம் என்பது இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுபவரைக் குறிக்கிறது. இஸ்லாம் - அரபு மொழி வேர்ச்சொல் istaslama என்ற வினைச்சொல்லில் இருந்து உருவானது. Sīn-lām-mīm -Shin-Lamedh-Mem - ஸ்-ல்-ம் - s-l-m -என்ற மூன்று அரபு மொழி வேர்ச்சொல். அஸ்லாம-aslama- இல் இருந்து உருவான வினைப்பெயர் (வினையாகவும் பெயராகவும்) ஆகிறது. இஸ்லாம் என்ற பெயர்ச்சொல்லின் நேரடிப் பொருள் islām – ஒப்படைத்தல் என்பதாகும்.இதன் பொருள் ...

அடுத்த ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்: அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை

Posted: 01 Sep 2016 12:43 AM PDT

- அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் 24 பேர் பங்கேற்று, 20 பதக்கங்களை வெல்வார்கள் என பள்ளிக்கல்வி-விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார். சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் புதன்கிழமை பேசினார். அப்போது, விளையாட்டு நகரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் கே.பாண்டியராஜன் அளித்த விளக்கம்: விளையாட்டு ...

மனைவி கத்த ஆரம்பிச்சதும்....!!

Posted: 01 Sep 2016 12:33 AM PDT

மனைவி கத்த ஆரம்பிச்சதும் கதவு, ஜன்னலை மூடுறவன் மனுஷன்; டி.வி வால்யூமை கூட்டுறவன் பெரிய மனுஷன்; சட்டையை போட்டுக்கிட்டு வெளில போறவன் ஞானி; காதுல எதுவுமே விழாத மாதிரி உட்கார்ந்து இருக்கறவன்தான் 'வாழும் கடவுள்'! – ———————————————— மனைவி வழக்கத்தைவிட தாமதமாக வீட்டிற்கு வந்தாள். நேராக தனது படுக்கை அறைக்குச் சென்றாள். அங்கே போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிரிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும் அலறல் சத்தமும் தீரும் வரை அடித்தாள். அடித்துவிட்டு தோட்டத்துப் ...

வானமழை நீ யெனக்கு: தாமோதரன் கபாலி

Posted: 31 Aug 2016 11:33 PM PDT

வானமழை நீயெ னக்கு! வனமழகே நீயெ னக்கு! கனமழை நீயெ னக்கு! கவியழகே நீயெ னக்கு! தானமழை நீயெ னக்கு! தனமழகே நீயெ னக்கு! ஞானமழை நீயெ னக்கு! நாநவிலும் நீயெ னக்கே! வானமழை வளமே வாழி! வழங்கிட்ட வாழ்வே வாழி! கானமழை இசையே வாழி! களிப்பூட்டும் கவியே வாழி! ஞானமழை அருளே வாழி! ஞாலத்தின் புகழே வாழி! மோனநிலை மகிழ்வே வாழி! முகிழ்ந்திட்ட அறிவே வாழி! அருளாகும் வான்ம ழையே அறிவாக ஒளிர்வாய் நீயே! மருளாகும் மயக்கத் தையே வழக்கொழியக் காப்பாய் நீயே! உருவாகும் உயிர்மை நீயே!உலகாளச் செய்வாய் நீயே! திருவாகும் தெய்வம் ...

வான மழை நீ யெனக்கு: ஜெய்

Posted: 31 Aug 2016 11:32 PM PDT

வான் மழை ஒன்றே விவசாயின் வாழ்வாதாரம் … வான் மட்டுமா பொய்த்து போகிறது… வானோடு சேர்ந்து விவசாயின் நம்பிக்கை அன்றோ பொய்த்து போகிறது… – மண்வெட்டி தோளில் தூங்குது… மடைதிறக்க வாய்காலில் நீரில்லாமல்… சுமந்த மண்வெட்டியொரு சுமை என்றால் குடும்பம் பெருஞ்சுமையன்றோ… – சுமை தீரும் காலம் விவசாயிக்குண்டோ ??? சுகம் காணும் நேரம் வருவதுண்டோ ??? கனவுகள் ஒன்றே நிரந்தரம் காலச்சுழல் அதில் பம்பரமாய் சுழலும்… – —————————— கவிதைமணி

குறள் 920

Posted: 31 Aug 2016 09:54 PM PDT

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... குறள் 920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. உரை: இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும். Translation: Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er, Are those on whom the light of Fortune shines no more. Explanation: Treacherous ...

சோதனைகளை வென்றெடுப்போம்

Posted: 31 Aug 2016 06:55 PM PDT

புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன், மின்சார பல்பை கண்டுபிடித்தவர். டங்ஸ்டன் என்னும் மெல்லிய இழையை பயன்படுத்தி மின்சார பல்பை ஒளிரச்செய்ய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய அறிவியல் அறிஞர் இவர்தான். மின்சார பல்பை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஏராளமான பரிசோதனைகளை செய்தார் எடிசன். முதலில், கம்பிகளை இணைப்பதற்கு டங்ஸ்டனுக்குப் பதில் சின்னசின்ன கம்பிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். வேறு உலோகங்களாலான இழைகளையும் பயன்படுத்தினார். சுமார் 1000 முறை பல்வேறு சோதனைகள் செய்தபின்பும், அவரால் வெற்றிகாண ...

இயேசு நம்முடன் இருக்க…

Posted: 31 Aug 2016 06:54 PM PDT

- இயேசு நம்முடன் இருக்கும்போது எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுக்கலாம். பரிசுத்த வேதாகமத்தில் பரிசுத்த பவுல் ""உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1கொரிந்தியர் 10:13) என்பதாக கூறியுள்ளார். நாமும் சோதனையை சாதனையாக மாற்ற இறைமகன் இயேசு நம்முடன் இருக்க வேண்டும். அவ்வாறு இயேசு நம்முடன் இருக்க நாம் செய்யவேண்டியது அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, ...

ஆண்கள், தங்கம், வெள்ளி, பித்தளைன்னு எதுக்கும் ஆசைப்படமாட்டாங்க…

Posted: 31 Aug 2016 05:54 PM PDT

''சீச்சீ… அவ எனக்கு தங்கச்சி மாதிரிடா'' என்ற பிறகே சிலபல காதல்கள் துளிர்க்க ஆரம்பிக்கின்றன! – ப்ரீதா – ——————————————– மனைவியை எம்.எல்.ஏ ஆக்குவதற்காக வீடு புகுந்து கொள்ளையடித்ததாக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கைது – செய்தி # எம்.எல்.ஏ.வான பிறகுதானே கொள்ளையடிப்பீங்க! ஆகறதுக்கேவா… இது அநியாயமில்லையா? – கவிதா பாரதி – ———————————————- – பார்வையற்றவன் 1 ரூபா 2 ரூபா காயின்களை தடுமாறாம கண்டுபிடிச்சிடுறான்… ஆனா பார்வையுள்ள நாம்தான் அது 1 ரூபாயா 2 ரூபாயான்னு தடவிக்கிட்டு இருக்கிறோம்… – – ...

சிந்துவுக்கு ஆடச் சொல்லிக் குடுத்ததே…!!

Posted: 31 Aug 2016 05:53 PM PDT

– சிந்துவுக்கு ஆடச் சொல்லிக் குடுத்ததே எங்க அம்மாதான்னு எவனாவது கெளப்பிவிடப் போறத நெனச்சாதான்… – சீவரம் கார்த்திக் – ————————————————— பசங்க எல்லாம் வீடியோ கேம்ஸ் விளையாடியே ஒலிம்பிக்ல பதக்கம் வாங்கலாம்னு ட்ரை பண்ணிட்டு இருக்காங்க! – – ஷர்மிளா ராஜசேகர் – ——————————————— – சந்தோஷங்களின் அளவு நாம் அதைக் கொண்டாடு வதில்தான் உள்ளடங்கியுள்ளது! – – தமிழ் அரசி – ———————————————

ஆறுமுக விநாயகர்

Posted: 31 Aug 2016 05:43 PM PDT

- ஆனைமுகக் கடவுள் ஆறுமுகங்களுடன் அருள்பாலிக்கும் அரிய தலம், பழநி அருகேயுள்ள சண்முகாநதி. இங்கு விநாயகப் பெருமான் அற்புதக் கோலம் கொண்டிருப்பது எதனால்? சூரனை வீழ்த்தியதும், உக்கிரகம் தணியாமல் இருந்தாராம் முருகக் கடவுள். தம்பியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக அவர் முன் ஆறுமுகங்களைக் காட்டியபடி நின்றாராம் விநாயகர். தன்னைப்போல் அண்ணன் இருப்பதைக் கண்டு சிரித்ததில் கந்தப் பெருமானின் கடும் கோபம் காணாமல் போனதாம். அதன் அடிப்படையில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சண்முகா நதிக்கரையில் ...

கடல் நுரையால் அமைந்த கணபதி

Posted: 31 Aug 2016 05:42 PM PDT

- கல்லால் அமைந்த விநாயகர், மரத்தால் அமைந்த விநாயகர், சுதையால், உலோகத்தால் அமைக்கப்பட்ட விநாயகரை பார்த்திருப்போம். கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் திருவுருவை எங்கேனும் கண்டதுண்டா? அப்படி ஒரு விநாயகர் இருக்கிறாரா? இருக்கிறார்! இருக்கிறார்! திருவலஞ்சுழி திருத்தலத்தில் தந்தையின் நிழலில் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார். கபர்தீஸ்வரர் எனும் பெயரில் இங்கே ஈசன் இருக்க, அவருக்கு முன்புறமாக பெரிய பிராகாரத்தினுள் தனிக்கோயில் கொண்டு, தந்தையை முந்திக் கொண்டு இந்தத் தனயன் பக்தர்களை ...

ஸ்வேத விநாயகர் என்னும் வௌ்ளை வாரணப் பிள்ளையார்- தல புராணம் –

Posted: 31 Aug 2016 05:41 PM PDT

இந்திரன் பாற்கடலில் அமிர்தம் கடைய முனைந்தபோது விநாயகரை வணங்காமல் தொடங்கியதால் நஞ்சு வந்தது. பின்னர், வௌ்ளை கடல் நுரையால் ஸ்வேத விநாயகர் என்னும் வௌ்ளை வாரணப் பிள்ளையாரை உருவாக்கி வழிபட்டார். அதனால் பணி இனிதே முடிந்தது. ஒருசமயம் அகலிகை சாபத்திற்கு ஆளான இந்திரன், சிவவழிபாடு செய்து சாபவிமோசனம் பெற விரும்பி, ஸ்வேத விநாயகரை எடுத்துக் கொண்டு பூலோகம் வந்தான். ஒவ்வொரு தலமாக வழிபாடு செய்துவிட்டு திருவலஞ்சுழி வந்தான். அந்தத் தலத்தில் நிரந்தரமாக தங்குவதற்கு விருப்பம் கொண்ட ஸ்வேத விநாயகர், ...

திருவலஞ்சுழி – கோயில்

Posted: 31 Aug 2016 05:40 PM PDT

கோயில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று திருச்சுற்றுகள், ஐந்து மண்டபங்கள், மூன்று விமானங்கள் கொண்டு கோயில், நுழைந்ததும், உள்ள மிக விஸ்தாரமான பிராகாரம், அதில் ஒரு திருக்குளம். குளத்தின் மேல் கரையில் 'ஜடா தீர்த்த விநாயகர்' சிறிய சன்னதி ஒன்றில் குடிகொண்டுள்ளார். இரண்டாவது வாயிலில் பஞ்சமூர்த்தி சுதை வடிவங்கள். இது கட்டை கோபுரம் கொண்டுள்ளது. இதைக் கடந்து இரண்டாவது பெரிய பிராகாரத்தில், மூலவரின் கோபுரத்திற்கு முன்பாக ஸ்வேத விநாயகருக்கென்று தனிக் கோயில். இக்கோயிலுக்கென கொடி ...

இழைகளாலான இணையம் – இறையன்பு

Posted: 31 Aug 2016 05:39 PM PDT

"சங்குத் துவாரத்திற்குள் உள்ள தண்ணீரில் முழுவானமும் தெரிந்தது" – பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பிரபஞ்சத்தை உள்ளடக்கியதுதான். ஒரு புல்லின் நுனியிலும், பூவின் இதழிலும், பறவையின் சிறகிலும் பிரபஞ்சம் முழுமையாகப் பிரதிபலிக்கிறது. இவை அனைத்தையும் அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால் பிரபஞ்சமும் இவை அனைத்திலும் அடங்கியிருக்க வேண்டும். – ஒரு புல்லின் நுனி கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியும் காயப்படுகிறது. – ஒரு பறவையின் சிறகு சேதப்படும்போது பிரபஞ்சத்தின் காதுகளில் சீழ் ...

பிள்ளையார் எறும்பு என்ற பெயர் பிறந்த கர்ண பரம்பரைக் கதை ! ! !

Posted: 31 Aug 2016 05:36 PM PDT

- முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி ஆனாலும் அவளுக்கு, 'இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?' என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். – சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். 'இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!' என்பது அவளது எண்ணம். – மறு நாள், "ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?" ...

உடல் எழுத்து – வைரமுத்து

Posted: 31 Aug 2016 05:34 PM PDT

உடல் எழுத்து – > *அ*திகாலை எழு > *ஆ*காயம் தொழு > *இ*ருதயம் துடிக்கவிடு > *ஈ*றழுந்தப் பல் தேய் > *உ*டல்வியர்வை கழி > *ஊ*ளைச்சதை ஒழி > *எ*ருது போல் உழை > *ஏ*ழைபோல் உண் > *ஐ*ம்புலன் புதுக்கு > *ஒ*ழித்துவிடு புகை மதுவை > *ஓ*ட்டம் போல் நட > *ஓள*டதம் பசி > அ*ஃ*தாற்றின் எஃகாவாய் -வைரமுத்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™