Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல

Posted: 03 Sep 2016 01:31 PM PDT

சபரிமலையில் உள்ள ஐயப்பன் நிரந்தர பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்தான்; அதற்காக அவர் பெண்களை வெறுப்பவர் என்று அர்த்தம் இல்லை என கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார்: தாணே சிறை அதிகாரி இடைநீக்கம்

Posted: 03 Sep 2016 01:30 PM PDT

பெண் காவலர் ஒருவரை மானபங்கம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஹீராலால் ஜாதவ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பஞ்சாபில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: ஆம் ஆத்மி எம்.பி. மீது வழக்குப் பதிவு

Posted: 03 Sep 2016 01:30 PM PDT

பஞ்சாபில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் சங்ரூர் தொகுதி எம்.பி. பகவத் மான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளம்: முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Posted: 03 Sep 2016 01:30 PM PDT

கேரளத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநில முன்னாள் சுங்கவரித் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கே.பாபு மற்றும் அவரது இரண்டு மகள்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

ஹைதராபாத் விடுதலை தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட நடவடிக்கை

Posted: 03 Sep 2016 01:29 PM PDT

நிஜாமிடம் இருந்து ஹைதராபாத் விடுவிக்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட தினத்தை ஹைதராபாத் விடுதலை தினமாக அதிகாரப்பூர்வமாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சிக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஓபன்: 4-ஆவது சுற்றில் ஜோகோவிச், நடால்

Posted: 03 Sep 2016 01:26 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்டோர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சீன ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதியில் கோஷல், ஜோஷ்னா தோல்வி

Posted: 03 Sep 2016 01:23 PM PDT

சீன ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வி கண்டனர்.

ஏஐடிஏ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு

Posted: 03 Sep 2016 01:23 PM PDT

அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (ஏஐடிஏ) கெளரவ வாழ்நாள் தலைவராக அனில் கன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: லயோனல் மெஸ்ஸி விலகல்

Posted: 03 Sep 2016 01:19 PM PDT

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவும், வெனிசூலாவும் மோதவுள்ளன.

ரூபி வாரியர் காஞ்சி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Posted: 03 Sep 2016 01:18 PM PDT

தமிழ்நாடு பிரீமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்க ரூபி வாரியர்ஸ் காஞ்சி அணியை வீழ்த்தியது

முருகப்பா கோப்பை ஹாக்கி: ஓ.என்.ஜி.சி., பஞ்சாப், பிபிசிஎல் அணிகள் வெற்றி

Posted: 03 Sep 2016 01:17 PM PDT

90-ஆவது முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 3-ஆவது நாளில் ஓ.என்.ஜி.சி., பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பிபிசிஎல் அணிகள் வெற்றி கண்டன.

டிஎன்பிஎல்: காரைக்குடி அணி வெற்றி

Posted: 03 Sep 2016 01:17 PM PDT

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியைத் தோற்கடித்தது.

சிபிஎஸ்இ பள்ளிகள் இடையிலான கோ-கோ: சென்னை, திருச்சி அணிகள் சாம்பியன்

Posted: 03 Sep 2016 01:16 PM PDT

காரைக்குடி அருகே மானகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான கிளஸ்டர் 4 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை பள்ளியும், மகளிர் பிரிவில் திருச்சி பள்ளியும் வெற்றி பெற்றன.

பிலிப்பின்ஸ் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி

Posted: 03 Sep 2016 01:11 PM PDT

பிலிப்பின்ஸ் அதிபரின் சொந்த ஊரான டாவோ நகரில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

அல்-காய்தா கைதிகளை விடுவிக்க பாக். ராணுவ முன்னாள் தளபதி மகன் கடத்தல்

Posted: 03 Sep 2016 01:08 PM PDT

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல் - காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரியின் மகள்களை விடுவிப்பதற்காக அந்நாட்டு முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானியின் மகனைக் கடத்தி பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உஸ்பெகிஸ்தான் அதிபர் மரணம்

Posted: 03 Sep 2016 01:08 PM PDT

உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரீமோவ் (78) வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

"ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும்'

Posted: 03 Sep 2016 01:04 PM PDT

உலக நாடுகள் ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலூசிஸ்தான் பிரச்னைக்கு இந்தியாவே காரணம்

Posted: 03 Sep 2016 01:01 PM PDT

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் பதற்றமான நிலைக்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

பயங்கரவாதிகளுடனான மோதலில் 10 வீரர்கள் பலி

Posted: 03 Sep 2016 01:01 PM PDT

துருக்கியில் குர்து பயங்கரவாதிகளுடனான மோதல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாபம் ரூ.361 கோடி

Posted: 03 Sep 2016 01:00 PM PDT

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சென்ற நிதி ஆண்டில் ரூ.361 கோடி லாபம் ஈட்டியது.

பங்கு வர்த்தகத்தில் எழுச்சி மிக்க வாரம்

Posted: 03 Sep 2016 12:59 PM PDT

பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் எழுச்சி மிக்க நிலை காணப்பட்டது.

ரூ.249-இல் வரம்பற்ற இணைய சேவை: பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்

Posted: 03 Sep 2016 12:59 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம், ரூ.249-க்கு வரம்பற்ற பிராட்பேண்ட் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

விடைபெற்றார் ஆளுநர் ரோசய்யா

Posted: 03 Sep 2016 12:44 PM PDT

பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆளுநராக இருந்த கே.ரோசய்யா தனது சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டார்.

வாய்க்காலில் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 22 பேர் காயம்

Posted: 03 Sep 2016 12:41 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்தனர்.

1,933 விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி

Posted: 03 Sep 2016 12:41 PM PDT

வேலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 1,933 விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

மேம்பாலச் சுவர் மீது இரு சக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவர்கள் இருவர் சாவு

Posted: 03 Sep 2016 12:41 PM PDT

வாணியம்பாடி அருகே மேம்பாலத்தில் சாலைப் பகுப்பான் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 03 Sep 2016 12:41 PM PDT

சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

ரூ. 10 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 03 Sep 2016 12:40 PM PDT

வேலூரில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

Posted: 03 Sep 2016 12:40 PM PDT

பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

"இரவு நேரத்தில் கடைகளில் அதிக நகைகளை வைக்கக் கூடாது'

Posted: 03 Sep 2016 12:40 PM PDT

நகைக் கடைகளில் இரவு நேரங்களில் அதிகளவில் தங்க நகை, பணம் வைக்க வேண்டாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் அறிவுறுத்தினார்.

3,607 ஏக்கரில் மானியத்துடன் நுண்ணீர் பாசனத் திட்டம்

Posted: 03 Sep 2016 12:40 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 3,607 ஏக்கர் பரப்பளவில் அரசு மானியத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

Posted: 03 Sep 2016 12:39 PM PDT

ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இளைஞர்களிடம் நல்ல விஷயங்களை விதைக்க வேண்டும்: திரைத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

Posted: 03 Sep 2016 12:39 PM PDT

இளைஞர்களின் மனதில் நல்ல விஷயங்களை விதைக்கும் பொறுப்பை உணர்ந்து, திரையுலகத்தினர் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவுள்ளது.

ராணுவ ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு...

Posted: 03 Sep 2016 12:39 PM PDT

ஏழாவது ஊதியக் குழுவின்படி புதிய ஓய்வூதியம், நிலுவைத் தொகை வழங்கப்பட இருப்பதால் ராணுவ ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் உடனடியாக ஆதார் எண் நகலை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

7-இல் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டிகள்

Posted: 03 Sep 2016 12:39 PM PDT

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வரும் செப். 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆம்பூரில் அரசு கல்லூரி அமைக்கக் கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு

Posted: 03 Sep 2016 12:38 PM PDT

ஆம்பூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரி தமிழக முதல்வரிடம் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வியாழக்கிழமை மனு அளித்தார்.

அரசு மருத்துவமனை கழிப்பறையில் சுகாதாரச் சீர்கேடு: கோட்டாட்சியரிடம் பெண் நோயாளிகள் புகார்

Posted: 03 Sep 2016 12:38 PM PDT

ஆற்காடு அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிப்பறையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் பெண் நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.

போலி மதுபானம் தயாரிப்பு: இளைஞரிடம் விசாரணை

Posted: 03 Sep 2016 12:38 PM PDT

ஆற்காடு அருகே எரிசாராயம் மூலம் போலி மதுபானம் தயாரித்தது தொடர்பாக இளைஞரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இருதய சிகிச்சை முகாம்

Posted: 03 Sep 2016 12:38 PM PDT

குடியாத்தம் ரோட்டரி சங்கம், சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நல்லம்மை ராமநாதன் ரோட்டரி மருத்துவமனை ஆகியன இணைந்து சனிக்கிழமை நடத்திய இலவச இருதய நோய் சிகிச்சை முகாமில் 107 பேர் சிகிச்சை பெற்றனர்.

கூடங்குளம் விஞ்ஞானிக்கு சிறப்பு அந்தஸ்து

Posted: 03 Sep 2016 12:37 PM PDT

கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தருக்கு, "தலைசிறந்த விஞ்ஞானி' என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1,500 லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது

Posted: 03 Sep 2016 12:37 PM PDT

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே அம்மா சிமென்ட் வழங்க ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மண்டல விளையாட்டுப் போட்டி: வனத் துறையினர் பங்கேற்பு

Posted: 03 Sep 2016 12:37 PM PDT

வனத் துறையினருக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றன.

ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல், தர்னா

Posted: 03 Sep 2016 12:36 PM PDT

மன்னார்குடி அருகே மேலப்பனையூர் ஊராட்சியில் எண்ணெய் எடுப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கிராம மக்களும் இணைந்து தர்னா மற்றும் மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

"சிடி' விவகாரம்: ஆம் ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட சந்தீப் குமார் போலீஸில் சரண்

Posted: 03 Sep 2016 12:36 PM PDT

சர்ச்சைக்குரிய "சிடி' (குறுந்தகடு) விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் போலீஸில் சனிக்கிழமை சரணடைந்தார்.

சந்தீப் குமார், ஆசுதோஷுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் போராட்டம்

Posted: 03 Sep 2016 12:36 PM PDT

பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார், மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆசுதோஷ் ஆகியோருக்கு எதிராக தில்லி பாஜகவினர் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

ரூ.10 ஆயிரம் கோடியில் 17 புதிய மென்பொருள் நிறுவனங்கள்

Posted: 03 Sep 2016 12:36 PM PDT

தமிழகத்தில் ரூ. 10,985 கோடி முதலீட்டில் 17 புதிய மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார்.

அவதூறு வழக்கில் செப்.17-இல் ஆஜராக கேஜரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 03 Sep 2016 12:35 PM PDT

பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தொடுத்த அவதூறு வழக்கில் வரும் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

"டேனிக்ஸ்' அதிகாரிகள் 25 பேர் பணியிடமாற்றம், பணி நியமனம்

Posted: 03 Sep 2016 12:35 PM PDT

"டேனிக்ஸ்' அதிகாரிகள் 18 பேருக்கு பணி நியமனம் வழங்கியும், 7 பேரை பணியிடமாற்றம் செய்தும் தில்லி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஒரு நாள் ஆசிரியராக பிரணாப்!

Posted: 03 Sep 2016 12:35 PM PDT

ஆசிரியர் தினத்தன்று (செப்.5) குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாடம் நடத்த உள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

அருணாசல் ஆளுநர் பதவி விலக மத்திய அரசு வலியுறுத்தல்?

Posted: 03 Sep 2016 12:34 PM PDT

வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அந்த மாநில ஆளுநரான ஜோதி பிரகாஷ் ராஜ்கோவாவை பதவியிலிருந்து விலகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய தகவல் தொழில்நுட்ப விருது: தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு

Posted: 03 Sep 2016 12:34 PM PDT

மத்திய அரசின் 2015-ஆம் ஆண்டுக்கான "தேசியத் தகவல் தொழில்நுட்ப விருது' (ஐசிடி) பெற தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டிடிஇஏ பள்ளியில் சூரிய ஒளி மின்சக்தி அமைப்பு

Posted: 03 Sep 2016 12:33 PM PDT

ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில், இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான கோபால் சுப்பிரமணியம் பங்கேற்று, சூரிய சக்தி மின் தகடுகள் பொருத்தப்பட்ட அமைப்பை தொடங்கிவைத்துப் பேசினார்.

சென்னை - மதுரை இடையே மாலை நேர விமான சேவை

Posted: 03 Sep 2016 12:33 PM PDT

சென்னை-மதுரை இடையே மாலை நேர விமான சேவைகளைத் தொடங்கி உள்ளதாக ஏர் கார்னிவல் நிறுவனம் தெரிவித்தது.

மொஹல்லா கிளினிக்கை இடிக்க வடக்கு தில்லி மாநகராட்சி திட்டம்: அமைச்சர் குற்றச்சாட்டு

Posted: 03 Sep 2016 12:33 PM PDT

மொஹல்லா கிளினிக்குகளை இடிக்க வடக்கு தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிகரெட்டால் சூடு வைத்த இளைஞர் கைது

Posted: 03 Sep 2016 12:33 PM PDT

தெற்கு தில்லியில் உள்ள கோவிந்தபுரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிகரெட்டால் சூடு வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படை வாசிப்பு திறன் நவம்பர் 14-க்குள் உறுதிப்படுத்தப்படும்

Posted: 03 Sep 2016 12:32 PM PDT

தில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் நவம்பர் 14-ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும் என்று துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறினார்.

தவறுகளை அரசு திருத்தி கொள்ள வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted: 03 Sep 2016 12:32 PM PDT

தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள தமிழக அரசு முயற்சிக்க வேண்டு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்மா' அமலுக்கு சிஐடியு கடும் கண்டனம்

Posted: 03 Sep 2016 12:32 PM PDT

 தில்லியில் செவிலியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், தில்லி அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா)

டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்க தீவிர நடவடிக்கை: மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 03 Sep 2016 12:32 PM PDT

தில்லியில் டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மூன்று மாநகராட்சிகளுக்கும், தில்லி அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் வித்யாசாகருக்கு கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து

Posted: 03 Sep 2016 12:32 PM PDT

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சனிக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

உ.பி.யில் வாகனங்கள் மோதல்: தில்லியைச் சேர்ந்த 8 பேர் காயம்

Posted: 03 Sep 2016 12:32 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தில்லியைச் சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர்.

காஜியாபாதில் பால் வியாபாரி சுட்டுக் கொலை

Posted: 03 Sep 2016 12:31 PM PDT

 காஜியாபாதில் பால் வியாபாரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செவிலியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Posted: 03 Sep 2016 12:31 PM PDT

நாடு முழுவதும் மத்திய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது.

நாளை ஆசிரியர் தினம்: கருணாநிதி வாழ்த்து

Posted: 03 Sep 2016 12:30 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-இல் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம்: ஆட்சியர் திறந்து வைத்தார்

Posted: 03 Sep 2016 12:30 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி நேரடிக்கடனுதவி, ஆவின் பாலகம் திறந்து வைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அண்மையில் தொடங்கி வைத்தார்.

"கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 03 Sep 2016 12:29 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

"அம்மா' திட்ட முகாமில் 97 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Posted: 03 Sep 2016 12:29 PM PDT

மதுராந்தகம் வருவாய்த்துறை சார்பில், சிறுநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட முதுகரை கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"பட்டுச்சேலை விற்பனையில் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்'

Posted: 03 Sep 2016 12:29 PM PDT

காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை நேரடி விற்பனைக்கு பெரிதும் இடையூறாக உள்ள இடைத்தரகர்களை ஒழிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி நெசவாளர் அணி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேடாக கழிவுநீர் கால்வாய்

Posted: 03 Sep 2016 12:28 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சுகாதார சீர்கேடாக செல்லும் கழிவு நீர் கால்வாயால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு கடித்து இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதியுதவி

Posted: 03 Sep 2016 12:28 PM PDT

படப்பை பகுதியில் பாம்பு கடித்து இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

நாளை விநாயகர் சதுர்த்தி விழாசெங்கல்பட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தாத காவல் துறை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

Posted: 03 Sep 2016 12:28 PM PDT

விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுவரை இவ்விழா குறித்து செங்கல்பட்டு பகுதியில் சதுர்த்தி விழா அமைப்பாளர்கள், நகர முக்கியப் பிரமுகர்களை அழைத்து காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தாதது குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய குழாய்கள் திருட்டு: போலீஸில் புகார்

Posted: 03 Sep 2016 12:28 PM PDT

மாமல்லபுரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களில், குடிநீர் விநியோகிக்கும் விலை உயர்ந்த 8 குழாய்கள் திருடப்பட்டது குறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி போலீஸில் புகார் அளித்துள்ளார். மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வார்டில் கிழக்கு ராஜவீதி, 11-ஆவது வார்டு

தேனி மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது

Posted: 03 Sep 2016 12:27 PM PDT

தேனி மாவட்டத்துக்குள்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Posted: 03 Sep 2016 12:26 PM PDT

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

வத்தலகுண்டுவில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 65 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை

Posted: 03 Sep 2016 12:26 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது

Posted: 03 Sep 2016 12:26 PM PDT

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரேஷன் கடைகளில் ஆதார் அட்டையை பதியாதவர்களுக்கு பொருள்கள்வழங்க மறுப்பு: பொதுமக்கள் அவதி

Posted: 03 Sep 2016 12:25 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டைகளை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

பெண் வருவாய் ஆய்வாளரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

Posted: 03 Sep 2016 12:25 PM PDT

 விருதுநகர் அருகே பெண் வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய 2 பேர் மீது சனிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

சிவகாசி நகர்மன்றக் கூட்டம்

Posted: 03 Sep 2016 12:24 PM PDT

சிவகாசி நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்: மாநில மகளிரணிச் செயலர் பேச்சு

Posted: 03 Sep 2016 12:24 PM PDT

அதிமுக அரசின் நலத்திட்டங்களால் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக எளிதில் வெற்றி பெறும் என அதிமுக மாநில மகளிரணிச் செயலாளர் விஜிலா சத்யானந்த் பேசினார்.

ஏர்வாடி அருகே விசாரணைக் கைதி மர்மச்சாவு: சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவு

Posted: 03 Sep 2016 12:23 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே விசாரணைக் கைதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது

Posted: 03 Sep 2016 12:23 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆசிரியர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி அமெரிக்கன் கல்லூரி ஓட்டுமொத்த சாம்பியன்

Posted: 03 Sep 2016 12:22 PM PDT

மதுரை நீச்சல் கழகம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அமெரிக்கன் கல்லூரியும், ஜெயின் வித்யாலயா பள்ளியும் பெற்றன.

சந்தனக்கூடு விழா நிறைவு

Posted: 03 Sep 2016 12:22 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது.

தென்கரை பேரூராட்சி உரக்கிடங்கில்: எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Posted: 03 Sep 2016 12:22 PM PDT

தென்கரை பேரூராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ள உரக்கிடங்கில் எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

செவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 03 Sep 2016 12:21 PM PDT

செவிலியர் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள் செப். 6 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தே.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டுநர்கள் மிதவேகத்துடன் செல்ல வேண்டும்: ஆட்சியர் அறிவுரை

Posted: 03 Sep 2016 12:21 PM PDT

வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை கடைபிடித்து மிதமான வேகத்துடன் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நா.வெங்கடாசலம் தெரிவித்தார்.

மாணவர் நுகர்வோர் மன்றக் கூட்டம்

Posted: 03 Sep 2016 12:21 PM PDT

போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர் நுகர்வோர் மன்றக் கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் என்.குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத் தேவைக்கு 1,350 டன் காம்ப்ளக்ஸ் உரம்

Posted: 03 Sep 2016 12:20 PM PDT

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ரயில் மூலம், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக 1,350 டன் காம்ப்ளக்ஸ் உரம் வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.

ரயில்வே பாதுகாப்பு காவல்துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 03 Sep 2016 12:20 PM PDT

பழனி ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பக்தர்களிடம், கடைக்காரர்கள், மற்றும் சுமை தூக்குவோர் அணுகுமுறை குறித்த விழிப்புணர்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கு இடுபொருள்கள், மண்வளப் பாதுகாப்பு அட்டை வழங்கும் விழா

Posted: 03 Sep 2016 12:19 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மத்திய அரசு உதவிபெறும் மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் மற்றும் மண்வளப் பாதுகாப்பு அட்டை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிறைகளில் இரு மாதங்களில் 23 செல்லிடப்பேசிகள், 15 சிம்கார்டுகள் பறிமுதல்

Posted: 03 Sep 2016 12:19 PM PDT

தமிழக சிறைகளில் கடந்த இரு மாதங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 23 செல்லிடப்பேசிகள், 15 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறைந்த கட்டணத்தில் வலைதளம், தரைவழி சேவை: பிஎஸ்என்எல் பொது மேலாளர் தகவல்

Posted: 03 Sep 2016 12:19 PM PDT

பிஎஸ்என்எல் நிறுவனம் வலைதள சேவையில் மாதக் கட்டணம் ரூ.249-க்கு அளவு குறிப்பிடப்படாத சேவை வழங்க உள்ளது. அதேபோல், தரைவழி தொலைபேசிக்கு மாதம் ரூ. 49 என குறைந்த கட்டணத்தில் சேவை அறிமுகப்படுத்தியுள்ளதாக, விருதுநகர் மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் (பொறுப்பு) ராஜம் சனிக்கிழமை தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை கல்லூரியில் பட்டமளிப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

Posted: 03 Sep 2016 12:19 PM PDT

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் அளித்தார்.

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு முன்ஜாமீன்

Posted: 03 Sep 2016 12:19 PM PDT

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் முன் துப்பாக்கியை எடுத்துக் காட்டிய புகாரில் முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தனுக்கு தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

மண்டல அளவில் ஹாக்கி போட்டி: சிவகாசி கல்லூரி அணி வெற்றி

Posted: 03 Sep 2016 12:19 PM PDT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக டி-மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

Posted: 03 Sep 2016 12:18 PM PDT

ராஜபாளையம் புதுப்பாளையத்திலுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

காவல் துறை அமைச்சுப் பணியில் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க கோரிக்கை

Posted: 03 Sep 2016 12:18 PM PDT

காவல் துறையில் பணிபுரிந்தோரின் வாரிசுதாரர்களுக்கு அமைச்சுப் பணி வழங்கிட, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சங்க மாநிலச் செயலர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

முழுமையான மது விலக்கு: மதிமுக மகளிரணி வலியுறுத்தல்

Posted: 03 Sep 2016 12:17 PM PDT

தமிழகத்தில் அமைதி நிலவச் செய்யவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் முழுமையான மது விலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தென் மண்டல மதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது

Posted: 03 Sep 2016 12:17 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் 11ஆசிரியர்கள், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™