Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


காவிரி விவகாரம் : போராட்டங்கள் தேவையற்றது - நாசர்

Posted:

காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் தேவையற்றது என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கூறினார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு வன்முறை உருவாகியிருக்கிறது. மேலும் இருமாநிலத்தின் திரையுலக பிரபலங்களும் போராட்ட ...

இசையமைப்பாளரை பொறாமைப்பட வைத்த குஞ்சாக்கோ போபன்..!

Posted:

கடந்த வெள்ளியன்று ஓணம் பண்டிகை ரிலீஸாக குஞ்சாக்கோ போபன் நடித்த 'கொச்சவ்வா பவுலோ அய்யப்பா கோயில்ஹோ' என்கிற படம் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஓம் சாந்தி ஒசானா, ஒரு வடக்கன் செல்பி, ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ...

“மோகன்லால் டூப் போட்டாரா..?” - ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் டென்ஷன்..!.

Posted:

இதுநாள் வரை மலையாள சினிமாவில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது மோகன்லால் நடிக்கும் 'புலி முருகன்'. வைசாக் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மற்ற படங்களைப்போல இல்லாமல் பெண்டு நிமிர்த்தும் ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன... ஆனாலும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒகே சொன்ன மோகன்லால் இந்தப்படத்தின் ...

நிவின்பாலி ஜோடியாக நடிக்கும் ஆஹானா கிருஷ்ணா..!

Posted:

தமிழில் தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் நிவின்பாலி, இன்னொரு பக்கம் மலையாளத்தில் தனது நண்பர் சித்தார்த் சிவா இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.. இந்த இரண்டு படங்களும் முடிவடையும் நிலையில் இருப்பதால், அடுத்ததாக அல்தாப் என்பவர் இயக்கத்தில் ஏற்கனவே அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படத்தின் ...

பிருத்விராஜை இயக்குகிறார் மோகன்லாலின் வில்லன்..!

Posted:

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிகளை குவித்து, அதன்பின் பல மொழிகளிலும் ரீமேக்கான படம் 'த்ரிஷ்யம்'. இந்தப்படத்தை பொறுத்தவரை அதில் மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் மோகன்லாலை மட்டுமல்ல நம்மையும் சேர்ந்து மிரட்டுவார்கள். ஒன்று அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருந்த ஆஷா சரத். இன்னொருவர் எஸ்.ஐ ஆக நடித்த கலாபவன் சாஜன். ...

மீண்டும் அதே கண்கள்

Posted:

ரவிச்சந்திரன், காஞ்சனா அறிமுகமான படம் அதே கண்கள். இந்தப் படம் 1967ம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடியது. இப்போது அதே கண்கள் என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கிறார்கள். இது அதே கண்கள் படத்தின் இரண்டாம் பாகமோ, அதன் தொடர்ச்சியோ அல்ல முற்றிலும் வேறுபட்ட கதை.

இதில் கலையரசன் நாயகனாகவும், நெடுஞ்சாலை ஷிவதா நாயகியாகவும் ...

ரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Posted:

காவிரி விவகாரத்தால் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த், பிரபுதேவா, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட நடிகர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மோதல் சம்பவங்கள் உருவாகியுள்ளது. கர்நாடகாவில், தமிழக வாகனங்கள், கடைகள், தமிழர்கள் மீதும் தாக்குதல் ...

எனது அடுத்தப்படம், அது ரகசியம்... நடிகை கார்த்திகா நாயர்

Posted:

தமிழ் சினிமாவை கலக்கிய ராதாவின் செல்லமகள். தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் கோ வில் பத்திரிகையாளராக, அன்னக்கொடியும் கொடி வீரனில் கொடியிடையாளாக, புறம் போக்கு என்கிற பொதுவுடமையில் தீரம் மிகுந்த பெண்ணாக, குயில் போன்ற குரல் கொண்ட குயிலியாக, நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கண்ணழகி கார்த்திகா நாயர் கொஞ்சும் தமிழில் பேசிய முத்து ...

ஜெயம் ரவிக்கு மகன் தந்த விலையுர்ந்த பரிசு

Posted:

நடிகர் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் பரிசாக விலையுர்ந்த பைக்கை ஒன்றை வழங்கியுள்ளார் அவரது மகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. தனி ஒருவன் படத்திற்கு பிறகு டாப் நடிகராக உயர்ந்துவிட்ட ரவி, தற்போது போகன், டிக் டிக் டிக், தனி ஒருவன் 2... என அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார்.

சிலதினங்களுக்கு ...

சுதந்திரப்போராட்ட வீரராக நடிக்கும் சிரஞ்சீவி

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சுதந்திரப்போராட்ட வீரராக தனது 151வது படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு விரும்பிய சிரஞ்சீவி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்தார். அதன்படி தனது 150வது படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்ட சிரஞ்சீவிக்கு ஒரு கதையும் திரும்பிதிகரமாக ...

உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தும் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

ராம் சரணின் ‛துருவா' படத்திலும், மகேஷ் பாபுவின் வாஸ்கோடகாமா படத்திலும் பிசியாக நடித்து வரும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது, சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக நடிக்கின்றார். இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் ஓட்டப்பந்தய வீராங்கனையாக ...

பிவி சிந்துவிற்கு ஜனதா கேரேஜ் சிறப்பு திரையிடல்

Posted:

ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கியுள்ளார். செப்டம்பர் 1ல் திரைக்கு வந்த இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் லாபம் ஈட்டி வருகின்றது. மைதிரி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன், உன்னி முகுந்தன், ...

அங்கிதாவுடன் எந்த தொடர்பும் இல்லை : சுஷாந்த் சிங்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் சுஷாந்த் சிங்கும் ஒருவர். தற்போது "எம் எஸ் தோனி" படத்தில் தோனியாக நடித்து உள்ளார். இவரும், டிவி நடிகை அங்கிதாவும் நெருக்கமாக இருந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன் சுஷாந்த் சிங் மற்றும் அங்கிதா லோகாண்டே இடையே பிரிவு எற்பட்டது. சமீபத்தில் அங்கிதா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, ...

ஏ தில் ஹே முஷ்கிலுடன் டியர் ஜிந்தகி டிரைலர் ரிலீஸ்

Posted:

பாலிவுட்டில் பிரபல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் கரண் ஜோஹர். தற்போது இவர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்' .சில தினங்களுக்கு முன் ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ...

தோனி படத்தில் அக்ஷய் நடிக்காதது ஏன்? - நீரஜ் விளக்கம்

Posted:

பாலிவுட்டில் தனித்துவமான படங்கள் எடுப்பத்தில் முன்னணியில் இருப்பவர் இயக்குநர் நீரஜ் பாண்டே ஒருவர். தற்போத இவர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் "எம் எஸ் தோனி". இப்படம் கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம் எஸ் தோனியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. சில தினங்களுக்கு முன் ...

மார்ச் முதல் வீரா தி ஷாதி' யில் கரீனா நடிப்பார்- சோனம் கபூர்

Posted:

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் சோனம் கபூரும் ஒருவர். தற்போது வீரா தி வெட்டிங்' படத்தில் சோனம் கபூர், கரீனா கபூர் மற்றும் ஸ்வர பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். சமீபத்தில் சோனம் டில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனமிடம் பத்திரிக்கையாளர்கள் வீரா தி வெட்டிங்' ...

தமிழில் வெளிவருகிறது எம்.எஸ் தோனியின் கதை

Posted:

பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரிப்பில் பிரபல இந்தி இயக்குனர் நீரஜ் பாண்டே, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை கதையை எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் இயக்கி உள்ளார். இதில் சுசாந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடித்துள்ளார். கியாரா அத்வானி, அனுபம் கேர், பூமிகா சாவ்லா, ராஜேஷ் சர்மா உள்ளபட பலர் ...

தமிழில் டப்பிங் பேசிய பிரான்ஸ் நடிகை

Posted:

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வெள்ளைக்கார பெண் வேடத்தில் நடித்து வந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை ஆண்ட்ரியன். இவரது உறவினர்கள் பாண்டிச்சேரியில் உள்ளனர். அதனால் அடிக்கடி பிரான்சுக்கும், பாண்டிச்சேரிக்கும் பறந்து கொண்டிருப்பார். பிரான்சில் தொலைக்காட்சி தொடர் மற்றும் நாடகங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியன். ...

சுரபி இமேஜை மாற்றுவாரா ஜி.வி.பிரகாஷ்

Posted:

விக்ரம் பிரபு நடித்த இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் சுரபி. நல்ல அழகும், திறமையும் வாய்ந்த நடிகைதான் ஆனால் தமிழில் அவருக்கு ராசியில்லாத நடிகை என்ற இமேஜ்தான் உள்ளது. இவன் வேற மாதிரிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி படத்திலும், ஜீவா படத்திலுல் சிறிய கேரக்டரில் நடித்தார். ஹீரோயினாக நடித்த புகழ் படமும் பெரிதாக ...

ஹீரோயின் ஆனார் காயத்ரி

Posted:

கேரளாவைச் சேர்ந்தவர் காயத்ரி. சென்னையில் பிறந்து வளர்ந்ததால் சரளமாக தமிழ் பேசுவார். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விஸ்காம் முடித்து விட்டு நடிப்பு வாய்ப்பு தேடியவருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது ஒறுத்தல் என்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™