Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திரு சாண்டில்யன் அவர்களின் நிலமங்கை தெளிவான மின்னூல்

Posted: 07 Sep 2016 01:57 PM PDT

திரு சாண்டில்யன் அவர்களின் நிலமங்கை தெளிவான மின்னூல் 


http://www.mediafire.com/download/v7f9c93q0xw9n2a/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.பிடிஎ


ஈகரை உறவுகளுக்காக 

நன்றி

அக்டோபர் ஒன்றில் கையளிக்கப்பட இருக்கும் இணையம். -Obama’s Internet giveaway -

Posted: 07 Sep 2016 12:00 PM PDT

அக்டோபர் ஒன்றில் கையளிக்கப்பட இருக்கும் இணையம். -Obama's Internet giveaway - செப்டெம்பர் 30 உடன் முடியப் போகும் 18 வருட சகாப்தம். இணையத்தை-Internet- கையளிக்கப் போகும் அதிபர் ஒபாமா. தொடங்கிய கவுண்டவுண்  நிறுத்தப்படுமா?  அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா,தடுக்குமா?  பொறுத்திருந்து பார்க்கலாம்.   அமெரிக்கர்கள் பயம் கொள்வதேன்? தன்மானமா அல்லது தற்காப்பா?

உண்மை இருக்குமிடத்தில்..

Posted: 07 Sep 2016 11:04 AM PDT

- * பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. விளைவைப் பற்றி சிந்திக்காமல் துணிவுடன் கடமையாற்றுங்கள். – * உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு அடிப்படையானவை. – * பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. – * பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால் மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும். – * மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து காப்பாற்றும். * ...

காதலும் கடந்து போகும்…!!

Posted: 07 Sep 2016 11:03 AM PDT

""நான் சொல்றபடி நடந்தா ஐ.ஏ.எஸ். பாஸ் பண் ஆண்: என்னை காதலிப்பதாகச் சொன்னாய்… இப்போ அவனைக் காதலிக்கிறாயே… காதலும் கடந்து போகும். எஸ்.மோகன், – ——————————- எங்க வீட்டுல திடீர்னு காஸ் ஆயிடுத்து. எங்க வீட்டுல ஃபுல் சிலிண்டர் இல்லையே… பரவாயில்லை இன்னிக்கு எங்க வீட்டுல எல்லாரும் உங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடறோம். வி.சாரதி டேச்சு, – ———————————– • (திண்டுக்கல் – பழனி சாலையில் உள்ள ஒரு கடையில் கடைக்காரரும் – வாடிக்கையாளரும்…!) "யோவ்… இங்க வா… ஏன் சைக்கிளை இங்க படுக்க வச்சிட்டுப் ...

குறுங்கவிதைகள் - தொடர் பதிவு

Posted: 07 Sep 2016 10:52 AM PDT


-
மொழிப்பயிற்சி

அம்மா…
அப்பா… என்று
அழைக்கச் சொல்லிக் கொண்டிருந்த
தாய் நகர்ந்ததும்,
ங்… ங்கா… நீ… ந்தா… என்று
அழைத்தது, பசுங்கன்றுவைப்
பார்த்து… குழந்தை…!


—————————-
-சு.ரா.ஏ.முரளி, கள்ளக்குறிச்சி.

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை...

Posted: 07 Sep 2016 10:23 AM PDT

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை.... நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா? உஷார்... உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்..... நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது... ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது..... அடுத்து.... உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்.... எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் ...

ஊடகங்களின் பொறுப்பின்மை !

Posted: 07 Sep 2016 10:16 AM PDT

உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லாதபோதும் பல செய்தி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். இதன் பிறகு பொதுவெளியில் பலர் முன்னிலையில் கொலை செய்யும் துணிச்சல் அதிகரித்துள்ளது. எதை காட்டணும் ? எதை காட்டக்கூடாது ? என்ற விவஸ்தை காட்சி ஊடகங்களுக்கு சுத்தமாக இல்லை. காதல் என்பது இயல்பான ஒன்று. நம் வாழ்வில் வரலாம் ; வராமலும் போகலாம். தவறில்லை. ஆனால் தமிழ் திரையுலகம் காதல் இல்லாமல் படமே எடுப்பதில்லை. இளைஞர்கள் என்றால் காதலித்தே ஆக வேண்டும் , மது குடித்தே ஆக வேண்டும் ...

மிக்க தமிழ் சிறிதே ஆங்கிலம் .

Posted: 07 Sep 2016 10:06 AM PDT

மிக்க  தமிழ் சிறிதே  ஆங்கிலம் . 1.சுயநலமிக்க ஓரெழுத்துச் சொல் .........................................I . தவிர்க்கவும் 2. மனதை குளிர  வைக்கும் ஈரெழுத்துச் சொல் ..................WE . அடிக்கடி உபயோகிக்கவும் . 3.மிக விஷமிக்க மூன்றெழுத்து சொல்...............................EGO .  மரிக்கவிடு 4.அதிகம் உபயோகத்தில் உள்ள நாலெழுத்து சொல் ..........LOVE . மதித்து போற்றிடு 5.சந்தோஷப்பட வைக்கும் ஐந்தெழுத்து சொல் .................SMILE . உனக்கு சொந்த படுத்திக் கொள் 6. வேகமாக பரவும் ஆறெழுத்து ...

130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்

Posted: 07 Sep 2016 06:17 AM PDT

- ராகவா லாரன்ஸ் இருதய அறுவை சிகிச்சை உதவியை பெறும் நபர்களின் எண்ணிக்கை 130-ஐ தொட்டுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.. - நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதையும் தாண்டி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். ஆதரவற்ற மாற்று திறனாளிகளுக்கு இல்லம் நடத்தி வரும் ராகவா லாரன்ஸ், அனாதை குழந்தைகளை தத்து எடுத்தும் வளர்த்து வருகிறார். அதேநேரத்தில், இவர் வணங்கும் ராகவேந்திரர் சுவாமிக்கு கோவில் கட்டி வரும் லாரன்ஸ், தன்னுடைய உயிருக்கும் மேலாக போற்றி வரும் தனது அம்மாவுக்காகவும் ...

இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு.

Posted: 07 Sep 2016 06:13 AM PDT

குருதி வகைகளில் A,B,AB,O எனவும் Rh+ Rh- (செவ்வாய் தோசம் ) எனவும் தெரிந்திருக்கிறோம். கற்றது கையளவு என்பதை நிரூபிக்கும் வகையில் நான் கேள்விப்படாத வேரு குருதி வகையும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2012 அள்வில் Langereis -Lan +/- , Junior -Jr +/- எனவும் (அதில் பாசிட்டிவ்,நெகடிவ் எனவும்) இருப்பதாக சொல்லப்படுகிறது.2013 இல் Vel என்ற பிரிவும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவப்பு அணுக்களில் இரண்டு ப்ரொட்டீன் கள் கூடுதலாக இருப்பதாகவும்,அதற்கு ABCB6 , ABCG2 எனவும் குருதி ஏற்றுவதில் (transfusion ...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சாயிஷா சைகல்…

Posted: 07 Sep 2016 06:05 AM PDT

- இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'தேவி' படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சாயிஷா சைகலிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இறுதியாக, அவரைத்தான் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்வார்கள் என்று ...

கிரிக்கெட்டை விட கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் – பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்கெய்ல் அறிவுரை

Posted: 07 Sep 2016 06:02 AM PDT

- உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கிறிஸ்கெய்ல். வெஸ்ட்இண்டீசை சேர்ந்த இவர் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அந்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கிறிஸ் கெய்ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.18 லட்சம் ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவ-மாணவிகள் மத்தியில் கிறிஸ் கெய்ல் பேசியதாவது:- வாழ்க்கையில் வெற்றி பெற மாணவ-மாணவிகள் கடினமாக உழைக்க வேண்டும். இதில் ...

இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ்ப் படம்!

Posted: 07 Sep 2016 06:00 AM PDT

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப், கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையத் தளங்களில் நேரடியாக காணும் சுட்டியை ட்விட்டரில் வெளியிடுகிறார். – ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் 'கர்மா' – கிரியேட்டிவ் கிரிமினல் சார்பில் ஆர். அரவிந்த் இயக்கித்தில் உருவாகியுள்ள 'கர்மா' திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் ஆன்லைனில் காணலாம். iTunes, Google Play, Amazon Video உட்பட பல இணையத்தளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. – தமிழ்த் ...

கடந்து சென்றவன் கண்ணில்லாதவன்

Posted: 07 Sep 2016 05:57 AM PDT

- – மனிதர்கள் மிகைப்படுத்திப் பேசப்படுகிறார்கள் மரணத்தில் – ————————- – அலைபாய்ந்த மனது அமைதியானது ஆலயமணி ஓசை – ———————- – யாருக்குமே அடங்காதவனுக்கு சொல்லித்தரும் சவப்பெட்டி அடக்கம் – ———————— – நம்பிக்கை பிறந்தது கடந்து சென்றவன் கண்ணில்லாதவன் – ————————- – காதல் கோழைகளின் அடைக்கலம் மரணம் – ————————– – விஜயன்

பிரிந்தவர்கள் கூடினார்கள்…

Posted: 07 Sep 2016 05:52 AM PDT

- – பிரிந்தவர்கள் கூடினார்கள் இறந்த பிறகு – ——————- – யார் அனுதாப்படுகிறார்கள் பட்டுப்பூச்சியின்மரணம் – ——————— – சுள்ளி பொறுக்கியவன் நன்றி சொன்னான் தொட்டிலாற்றிய காற்றுக்கு – ———————– – குடிசையில் நிசப்தம் சலசலத்தன கூரை ஓலைகள் – ————————- – அதே மலர் அதே வானம் சேரிச்செடியில் – ————————- விஜயன்

மறைந்து 10 ஆண்டுகள் ஆனது; முதலை வீரனை மறக்க முடியுமா? #SteveIrwin

Posted: 07 Sep 2016 05:44 AM PDT

- யானையின் லத்தியில் இருந்து தண்ணீர் குடிக்கும் பியர் கிரில்சுக்கெல்லாம் முன்னோடி ஸ்டீவ் இர்வின். 'மேன் VS வைல்டு' அலற வைக்கும் ரகம் என்றால் 'குரோக்கடைல் ஹன்டர் 'நாடி நரம்புகளை முறுக்கேற்றி புல்லரிக்க வைத்துவிடும். கையறு நிலையில், வனத்தை எதிர்கொள்வது எப்படி என பியர் கிரில்ஸ் பாடம் எடுக்கிறார் என்றால், கையில் எதுவும் இல்லாமல் வன விலங்குகளை எதிர்கொண்டவர் ஸ்டீவ். – சுற்றுச் சூழலுக்கும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் மதிப்பேயில்லாமல் போன காலக்கட்டத்தில், அவற்றுக்காகத் தங்கள் உயிரை ...

எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும்

Posted: 07 Sep 2016 05:30 AM PDT

- - எல்லோருக்கும் சுதந்திரம் வந்து விட்டதென்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று தெரியவில்லை. நாங்களும் இந்நாட்டு மக்கள்தான். எங்களுக்கும் ஓட்டுரிமை இருக்கிறது. நாங்களும் ஓட்டுப் போடுகிறோம். ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பட்சபாதம்? எங்கு சென்று சற்று இளைப்பாறினாலும் எங்களை போலீசும் பொது மக்களும் விரட்டுகிறார்கள். ஏன் நாங்கள் மட்டும் இவ்வாறு கஷ்டப்படவேண்டும்? எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். இதற்காக நாங்கள் எங்கள் உயிரையும் விடத்தயார். இப்படிக் ...

ஈச்சங்குலை...!!

Posted: 07 Sep 2016 05:02 AM PDT

சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *.

எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்

Posted: 07 Sep 2016 04:14 AM PDT

புதுடில்லி: 'அரசையோ அல்லது அதன் கொள்கையையோ விமர்சித்து பேசுவதை காரணம் காட்டி, ஒருவர் மீது தேச விரோத வழக்கை தொடரக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. தேச விரோத சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து, 'காமன் காஸ்' என்ற அரசு சாரா அமைப்பு, பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இந்த சட்டப் பிரிவு குறித்து அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது: பீஹார் அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங் வழக்கில், கடந்த, ...

மரம் வளர்த்தால், மனித குலம் தழைக்கும்.

Posted: 06 Sep 2016 08:25 PM PDT

- "தெள்ளிய ஆலின் சிறுபழத் தொரு விதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு மன்னக் கிருக்க நிழலாகும்மே" –(வெற்றிவேர்க்கை) பொருள்: சிறிய மீனின் முட்டையை விடச் சிறியதான ஆல மர விதையானது நாற்பெரும் படையொடு வரும் மன்னரும் தங்க நிழல் தரும். அதுபோல மிகச் சிறிய செல்வமுடைய மேன் மக்கள் பிறருக்குப் பெரிதும் பயன்பட வாழ்வார்கள்.. அத்தி, ஆல் அரசு ஆகிய மரங்கள் எல்லாவற்றிலும் பூக்கள் வெளியே தெரியாமலே காய்கள் உருவாவதால் பூவாது காக்கும் ...

பூக்களின் புலம்பல்! -

Posted: 06 Sep 2016 07:55 PM PDT

- மாமியார் திட்டினாள் மருமகளும் திட்டினாள் எதிர்வீட்டுக் காரியை! - -------------------------- - வண்டுகளால் தீராத நோவு தென்றலே நீவந்து நீவு பூக்களின் புலம்பல்! - ----------------------- - ஆயிரம் கார்கள் அணிவகுப்பு முதல்வர் வந்தார் முன்னோடியாய் வறுமை ஒழிப்பு மாநாடு! - --------------------------

வீட்டிலும் சைட் அடிக்கிறான்...!!!

Posted: 06 Sep 2016 07:53 PM PDT

- ரோட்டிலே சைட் அடித்தான் வீட்டிலே சைட் அடிக்கிறான் வெப் சைட்டில்! - ------------------------------ - பெருக்கிய போதும் கூட்டிய போதும் எல்லாமே கழிந்தது கணக்கு நோட்டு - ----------------------------- - பல் டாக்டர் அவர் பல்லைக்காட்டினார் அவளிடம் விழுந்தது அறை! - ------------------------

அமெரிக்க ஓபன்: காலிறுதியில் சானியா ஜோடி!

Posted: 06 Sep 2016 05:53 PM PDT

- அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா (செக் குடியரசு) ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா ஜோடி, தங்களது 3-வது சுற்றில், தரவரிசையில் இடம்பெறாத அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸ் - நா ஹிபினோ (ஜப்பான்) ஜோடியை 6-4 7-5 என்ற நேர் செட்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - கேப்ரிலா டாப்ரோஸ்கி ஜோடி, தங்களது காலிறுதி சுற்றில் ராபர்ட் ஃபாரா (கொலம்பியா) ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™