Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'மல்டி பிராண்டு' சில்லரை விற்பனையில் எப்.டி.ஐ.,யை அனுமதிப்பது சாத்தியம் இல்லை! :மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

Posted: 07 Sep 2016 09:21 AM PDT

புதுடில்லி: ''மல்டி பிராண்டு சில்லரை விற்பனையில் எப்.டி.ஐ., எனப்படும், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை; சிறு வியாபாரிகள், சந்தை போட்டியை சமாளிக்கும் வகையில் வளர்ச்சி பெறும் வரை, இப்பிரிவில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது சாத்திய மில்லை,'' என, மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டில்லியில் நடந்த, இந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:'மல்டி பிராண்டு' சில்லரை விற்பனையில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது பற்றி, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ...

44 பொது துறை நிறுவனங்களில் அரசு பங்குகளை குறைக்க பரிந்துரை

Posted: 07 Sep 2016 09:51 AM PDT

புதுடில்லி: 'லாபம் ஈட்டும் அல்லது நஷ்டத்தில் இயங்கும், 44 பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் பங்குகளை குறைத்துக் கொள்ள லாம்' என, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்து வது, நிதி ஆதாரத்தை திரட்டுவது உள்ளிட்ட வற்றில், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி வந்த, மத்திய திட்டக்குழுவுக்கு பதிலாக, 'நிடி ஆயோக்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆலோசனை : பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும், அதில் மத்திய அரசின் பங்குகளை விற்பது குறித்தும் ஆலோசனை வழங்கும்படி, 'நிடி ...

சட்டசபையில் 110 விதியில் ஜெ., அறிவித்த ரூ.16 ஆயிரம் கோடி திட்டங்கள் நிறைவேறுமா? முந்தைய பல அறிவிப்புகளே முடங்கியுள்ளதால் செயல்படுத்துவதில் சிக்கல்?

Posted: 07 Sep 2016 09:51 AM PDT

தமிழகத்தில் நடப்பாண்டு, 16 ஆயிரத்து, 192 கோடி ரூபாய்க்கு, பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, சட்டசபையில், 110 விதியில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவரது முந்தைய பல அறிவிப்புகளே முடங்கி உள்ள நிலையில், புதிய திட்டங்கள் உடனடியாக செயலுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சட்டசபையில், 2016 - 17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை, ஜூலை 21ம் தேதி, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்; பட்ஜெட் மீதான விவாதம், ஐந்து நாட்கள் நடந்தது.ஆக., 1 முதல், செப்., 2 வரை, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது; 22 நாட்கள் நடந்த விவாதத்தில், 118 ...

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் 'துட்டு' கொடுத்தால் ஓ.கே.!'நிழல்' அதிகாரிகளாக வலம் வரும் 'புரோக்கர்கள்': அமைச்சருக்கு தெரியுமா?

Posted: 07 Sep 2016 10:20 AM PDT

தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 'துட்டு' கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற அவல நிலை நீடிக்கிறது. கலெக்டர்கள் பெயரை சொல்லி புரோக்கர்கள் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் பணம் பார்க்கின்றனர்.

கண்டுகொள்ளாமல் இருக்க அதிகாரிகளை சரிகட்டுகின்றனர். சில ஆம்னி பஸ்களில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பதும், தட்டிக் கேட்கும் பயணிகளை குண்டர்கள் தாக்குவதும், நாளும் நடக்கும் அடாவடிகளில் ஒன்றாகி விட்டது.வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இதை பயன்படுத்தும் புரோக்கர்கள், புற்றீசல் போல், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் ...

பருவமழைக்கு காத்திருக்கும் அதிகாரிகள்:மேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது?

Posted: 07 Sep 2016 10:28 AM PDT

மேட்டூர்:மேட்டூர் அணை நீர் இருப்பு குறைவாக இருப்பதால், சம்பா சாகுபடிக்கு நீர் திறக்க, வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

மேட்டூர் அணை நீர் இருப்பு குறைவாக இருந்ததால், நடப்பாண்டு ஜூன், 12ம் தேதி சாகுபடிக்கு நீர் திறக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில், இரண்டு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதித்தது.இந்நிலையில், 13.10 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடியை துவங்க, மேட்டூர் அணையில் நீர் திறக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம், 76 அடியாகவும், நீர் இருப்பு, 38 ...

தமிழகத்துக்கு தண்ணீர் கர்நாடகா 'நாடகம்'

Posted: 07 Sep 2016 10:34 AM PDT

பெங்களூரு:'கர்நாடகாவில் உள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத நிலையிலும், வேறு வழியில்லாமல், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, கர்நாடகா கூறியுள்ளது.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, 'தமிழகத்துக்கு, 10 நாட்களுக்கு, வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி வீதம் காவிரி நீரை திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலானகாங்கிரஸ் அரசு நடக்கும் ...

பெண்கள் வார்டு பிரிப்பு ஆளும் கட்சியினர் கொதிப்பு

Posted: 07 Sep 2016 10:38 AM PDT

தமிழக உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக, பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப் பட உள்ளது. இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், பெண்களுக்கான வார்டுகளை, தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்காதவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, பேரூராட்சி, நகராட்சி தலைவரா கலாம்; மாநகராட்சி மேயராகலாம் என நினைத்திருந்தனர்.தற்போது, பெண்களுக்கு பாதி பதவிகள் ஒதுக்கப்படுகின்றன; அவர்களுக்கான வார்டுகளை பிரிக்கும் போது. தாங்கள்
வசிக்கும்

கன்னட அமைப்புகள் போராட்டம்: எல்லையில் தொடரும் தொல்லை

Posted: 07 Sep 2016 10:59 AM PDT

ஓசூர்:கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில், கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டதால், தமிழக அரசு பஸ்கள் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.கர்நாடக மாநில எல்லை யான அத்திப்பள்ளியில், நேற்று முன்தினம், ஜெய் கர்நாடகா மற்றும் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று பகல், 11:30 மணிக்கு கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர், 200க்கும் மேற்பட்டோர்,

'பேச்சு நடத்த அரசு தயார்!'

Posted: 07 Sep 2016 11:02 AM PDT

புதுடில்லி:காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த, அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக, மத்திய அரசு உறுதியளித்தது.

காஷ்மீரில், கடந்த, 60 நாட்களுக்கும் மேலாக வன்முறைகள் நடந்து வருவதால், அமைதி யற்ற நிலை காணப்படுகிறது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் நோக் கில், 20 கட்சி களை சேர்ந்த, 26 எம்.பி.,க்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை யில், காஷ்மீருக்கு சமீபத்தில் சென்றது. ஆனால், இந்த குழுவை சந்திக்க, ஹூரியத் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள் மறுத்துவிட்டன. இந்த நிலையில், காஷ்மீருக்கு சென்ற அனைத்து கட்சி எம்.பி.,க்க ளின் ...

மஹாராஷ்டிராவில் எஸ்.ஐ.,யை குளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இளைஞர்களுக்கு வலை

Posted: 07 Sep 2016 01:09 PM PDT

தானே: மஹாராஷ்டிரா மாநிலத்தில், விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தில் கரைக்க ஏற்பாடு :
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி உள்ளது. இம்மாநிலத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தானே மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ...

சிறுகோள்கள் பற்றி ஆராய விண்கலம் அனுப்புகிறது நாசா!

Posted: 07 Sep 2016 01:59 PM PDT

வாஷிங்டன்: சிறுகோள்கள் பற்றி ஆராய அமெரிக்க விண்வௌி ஆராய்ச்சி மையமான நாசா விண்கலம் ஒன்றை இன்று(செப்.,8) விண்ணில் ஏவுகிறது.

சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கும் இடையே ஆயிரக்கணக்கில் சிறுகோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவை பொதுவாக சில மீ்ட்டர்களிலிருந்து பல கி.மீ., வரை விட்டம் கொண்டுள்ளதாக இருக்கும்.
இந்த சிறுகோள்களை பற்றி ஆராய நாசா தற்போது திட்டமிட்டுள்ளது.
இதற்காக தனி விண்கலம் ஒன்றை பூமியிலிருந்து அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த விண்கலம் பூமியிலிருந்து இன்று ...

புத்தகங்களை படிக்க 15 ஆண்டுகள் போதாது: பிரணாப் முகர்ஜி

Posted: 07 Sep 2016 02:50 PM PDT

புதுடில்லி : ஜனாதிபதி மாளிகையிலுள்ள புத்தகங்களை படிக்க 15 ஆண்டுகள் போதாது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஜனாதிபதி ஆவதற்கு முன் ஜனாதிபதி மாளிகை எப்படி இருக்கும் எனத் தெரியாது. இப்பதவியேற்பதற்கு 2 நாட்களுக்கு முன் ஜனாதிபதி மாளிகை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிய என் மகள் சர்மிஸ்தாவை அனுப்பி தகவல் சேகரித்தேன்.
ஜனாதிபதி மாளிகையில், அக்., 2ம் தேதி முதல், செயல்பாட்டிற்கு வரும் அருங்காட்சியகத்தில், அற்புதமான பல கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™