Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மோடி, பிரணாப் புகழாரம்

Posted: 04 Sep 2016 01:23 PM PDT

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா புனிதர் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

Posted: 04 Sep 2016 01:20 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

2 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி?: எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

Posted: 04 Sep 2016 01:16 PM PDT

இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, மாதா மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க மீண்டும் அனுமதி ஆகியவற்றால், சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

செப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு

Posted: 04 Sep 2016 01:15 PM PDT

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 21-இல் தொடங்கும் என தேர்வுக் குழு அதிகாரிகள் கூறினர்.

புதுப்பொலிவு பெறுகிறது பிரதமர் அலுவலகம்

Posted: 04 Sep 2016 01:14 PM PDT

தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வில் முறைகேட்டை தடுக்க மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு: பிகார் அரசு முடிவு

Posted: 04 Sep 2016 01:12 PM PDT

தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பது, தேர்வு தொடர்பான ஆவணங்களை எளிதில் பெறுவது உள்ளிட்ட நோக்கத்துக்காக, மாணவர்களின் தேர்வு படிவங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க பிகார் அரசு முடிவு செய்துள்ளது.

விறுவிறுப்படையும் தனியார் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு

Posted: 04 Sep 2016 01:11 PM PDT

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்துள்ளது.

மேனகாவுக்கு இணையான அந்தஸ்து கோரும் இணையமைச்சர்!

Posted: 04 Sep 2016 01:10 PM PDT

மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு இணையான அந்தஸ்தை புதிதாக இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணா ராஜ் (49) கோருவதால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள் செப்.8-இல் விண்ணில் ஏவப்படும்

Posted: 04 Sep 2016 01:08 PM PDT

தகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிய இன்சாட்-3டிஆர் எனும் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 8-இல் (வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.

என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து ஆதரவு

Posted: 04 Sep 2016 01:06 PM PDT

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சேர்வதற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் உறுதியளித்தார்.

நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தால், நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும்?

Posted: 04 Sep 2016 01:03 PM PDT

உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருந்தால், பாதிப்புக்கு ஆளாகியுள்ளோருக்கு நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ண விழா

Posted: 04 Sep 2016 01:00 PM PDT

ராணிப்பேட்டை நவல்பூர் ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ண விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணியில் விழாக் குழுவினர்

Posted: 04 Sep 2016 01:00 PM PDT

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் பணியில் விழாக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, சிலைகள் தயாரிக்கும் இடத்திலிருந்து தங்கள் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிலைகளை எடுத்துச் சென்றனர்.

ஸ்கடர் நினைவு மருத்துவமனை 150-ஆவது ஆண்டு விழா

Posted: 04 Sep 2016 01:00 PM PDT

ராணிப்பேட்டை ஸ்கடர் நினைவு மருத்துவமனையின் 150-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஓராண்டாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நியாயவிலைக் கடை

Posted: 04 Sep 2016 12:59 PM PDT

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கட்டுமானப் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் திறப்பு விழா காணாத நியாயவிலைக் கடை கட்டடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஐடியில் விளை பொருள்கள் விற்பனை நிறுவனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Posted: 04 Sep 2016 12:59 PM PDT

விவசாயிகளின் விளை பொருள்களை விற்பனை செய்வதற்கான தொண்டை மண்டல உழவர் உற்பத்தி நிறுவனத்தை வேலூர் விஐடி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.எ.ராமன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

"தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச் சாவடி கட்டணம் செலுத்த மாட்டோம்

Posted: 04 Sep 2016 12:58 PM PDT

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி கட்டணத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செலுத்த மாட்டோம் என, அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

வி.சி.மோட்டூரில் ஒட்டு மொத்தத் துப்புரவுப் பணி

Posted: 04 Sep 2016 12:58 PM PDT

வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட வி.சி.மோட்டூரில் ஒட்டுமொத்தத் துப்புரவுப் பணி நடைபெற்றது.

அகரம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் திறப்பு

Posted: 04 Sep 2016 12:58 PM PDT

மாதனூர் அருகே அகரம் ஊராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

Posted: 04 Sep 2016 12:58 PM PDT

பல்லலகுப்பம் பள்ளித் தலைமை ஆசிரியர், மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும்: சிஎஸ்ஐ பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன்

Posted: 04 Sep 2016 12:55 PM PDT

அரக்கோணத்தில் தென்னிந்திய திருச்சபையின் சார்பில் விரைவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என, அதன் சென்னைப் பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களில் நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: கூடுதல் தலைமை பாதுகாப்பு ஆணையர் தகவல்

Posted: 04 Sep 2016 12:54 PM PDT

ரயில் நிலையங்களில் நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படை கூடுதல் தலைமை ஆணையர் அரோமா சிங் தக்கூர் கூறினார்.

விநாயகர் விசர்ஜன ஊர்வலப் பாதை:மாவட்ட எஸ்.பி. ஆய்வு

Posted: 04 Sep 2016 12:54 PM PDT

வாணியம்பாடியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் செல்லும் பாதை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் ஏரியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாட்டின் வளர்ச்சி தரமான கல்வியைச் சார்ந்துள்ளது: அமைச்சர் நீலோபர் கபீல்

Posted: 04 Sep 2016 12:54 PM PDT

ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் தரமான கல்வியைச் சார்ந்துள்ளது என்று தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபீல் பேசினார்.

சாலை விபத்தில் எஸ்.ஐ. சாவு

Posted: 04 Sep 2016 12:53 PM PDT

ஆற்காடு நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

ரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 04 Sep 2016 12:53 PM PDT

ரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை ஆம்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

வீடு புகுந்து 13 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

Posted: 04 Sep 2016 12:53 PM PDT

திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியில் மர்ம நபர்கள் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விளை நிலம் அருகில் முதியவர் சடலம் மீட்பு

Posted: 04 Sep 2016 12:53 PM PDT

ஆம்பூரில் விவசாய நிலம் அருகே முதியவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

தில்லி வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஜேட்லி வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

Posted: 04 Sep 2016 12:52 PM PDT

தில்லி வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைதிரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற "ராஜ்தானி பக்டி க்ராய்தார் சங்கதன்' அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.

பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அரசு முடிவு

Posted: 04 Sep 2016 12:51 PM PDT

ஊமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.25,000 கோடி கூடுதல் மூலதனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

குடிநீரில் கழிவு நீர் கலப்பு: சுற்றுச்சூழல் துறை செயலர் ஆஜராக என்ஜிடி அழைப்பாணை

Posted: 04 Sep 2016 12:51 PM PDT

குடிநீர் தரத்தின் நிலவர அறிக்கையை வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறைச் செயலருக்கு அழைப்பாணை அனுப்ப தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

கேஜரிவால் அமைச்சரவையின் சமோசா செலவு ரூ.1 கோடி

Posted: 04 Sep 2016 12:51 PM PDT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவையானது, தேநீர், சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களுக்காக கடந்த 18 மாதங்களில் சுமார் ரூ.1 கோடியை செலவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சந்தீப் குமார் விவகாரம்: கேஜரிவால் பதவி விலக ஷீலா தீட்சித் வலியுறுத்தல்

Posted: 04 Sep 2016 12:51 PM PDT

பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜரிவால் விலக வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்ற அனுமதி எதிரொலி: டீசல் கார்கள் பதிவுக்கு தில்லி அரசு உத்தரவு

Posted: 04 Sep 2016 12:50 PM PDT

சுற்றுச்சூழல் வரி செலுத்தி டீசல் சொகுசு கார்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதியைத் தொடர்ந்து, தலைநகரில் புதிய டீசல் கார்களை பதிவு செய்யுமாறு நகர போக்குவரத்துத் துறைக்கு தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலி விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு சிஏஐடி ஆதரவு

Posted: 04 Sep 2016 12:50 PM PDT

மக்களை ஏமாற்றும் வகையில் வெளியிடப்படும் விளம்பரங்களில் நடிக்கும் திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க உத்தேசித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு அகில இந்திய வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) ஆதரவு தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் இயற்கை ரப்பர் பயன்பாடு

Posted: 04 Sep 2016 12:50 PM PDT

நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜூலை மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து 52,000 டன்னாக இருந்தது. அதன் பயன்பாடு 4.3 சதவீதம் உயர்ந்து 87,000 டன்னாக காணப்பட்டது.

60 என்டிஎம்சி பள்ளிகளில் தூய்மை இயக்கம் அமல்

Posted: 04 Sep 2016 12:50 PM PDT

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வரம்புக்கு உள்பட்ட 60 பள்ளிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இரு வேறு சம்பவங்களில் ரூ.1 கோடி ஹெராயின் பறிமுதல்: மூவர் கைது

Posted: 04 Sep 2016 12:49 PM PDT

தில்லியில் இரு வேறு இடங்களில் மொத்தம் ரூ.1 கோடி ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூவரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

தில்லி புத்தக கண்காட்சி நிறைவு!

Posted: 04 Sep 2016 12:48 PM PDT

தில்லியில் கடந்த 9 நாள்களாக நடைபெற்று வந்த 22-ஆவது புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

பேரவைத் தேர்தலுக்கு தயாராகிறது காங்கிரஸ்: பஞ்சாபில் 117 தொகுதிகளிலும் சைக்கிள் பேரணி

Posted: 04 Sep 2016 12:48 PM PDT

பஞ்சாபில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அந்த மாநிலத்திலுள்ள 117 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் சைக்கிள் பேரணி நடத்தவுள்ளது.

பெண்களை கேலி செய்த 121 இளைஞர்கள் கைது

Posted: 04 Sep 2016 12:48 PM PDT

குர்கானில் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், பெண்களை கேலி, கிண்டல் செய்த 121 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேம்பாலத்தில் கார் கவிழ்ந்ததில் இளைஞர் சாவு

Posted: 04 Sep 2016 12:47 PM PDT

தெற்கு தில்லியில் லோதி மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்ததில் அதை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

ஆம் ஆத்மியிலிருந்து ஆசுதோஷை நீக்க வேண்டும்: காங்கிரஸ், பாஜக வலியுறுத்தல்

Posted: 04 Sep 2016 12:47 PM PDT

மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் நேரு, வாஜ்பாய் ஆகியோர் பற்றி தவறாகக் கருத்து வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆசுதோஷை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

4ஜி புரட்சி: ஜியோ ஜாலம்!

Posted: 04 Sep 2016 12:47 PM PDT

தொலைத் தொடர்பு சேவைத் துறையில் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி புரட்சி ஆரம்பமாகிறது.

டிடிஇஏ ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம்

Posted: 04 Sep 2016 12:47 PM PDT

ஆசிரியர் தினத்தையொட்டி தில்லி தமிழ்க் கல்விக் கழகம் (டிடிஇஏ) சார்பில் அதன் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோஷ்டி மோதல்: இளைஞர் சாவு

Posted: 04 Sep 2016 12:46 PM PDT

மத்திய தில்லியில் ஆரம்பாக் பகுதியில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் பலத்த காயமடைந்தனர்.

டெங்கு, சிக்குன்குனியா சிகிச்சைக்கு 12 நடமாடும் மருத்துவ வாகனங்கள்

Posted: 04 Sep 2016 12:46 PM PDT

தில்லியில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா சிகிச்சைக்காக 12 நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கூறியுள்ளது.

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது

Posted: 04 Sep 2016 12:46 PM PDT

கருத்து வேறுபாடு காரணமாக தன்னை விட்டுப் பிரிந்து வாழும் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது செய்யப்பட்டார்.

நெருக்கடியில் காகிதக் கூம்பு ஆலைகள்

Posted: 04 Sep 2016 12:45 PM PDT

நூல் விலை ஏற்ற, இறக்கத்தைக் கொண்டுள்ளதால், தமிழகத்தில் காகிதக் கூம்பு ஆலைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

வருமான வரியைக் குறைக்க 9 சேமிப்புத் திட்டங்கள்

Posted: 04 Sep 2016 12:34 PM PDT

வருமான வரியை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துக் கொள்ளலாமே என்றுதான் நாம் அனைவருமே நினைக்கிறோம்.

05.09.1997 அன்னை தெரசா நினவு தினம்

Posted: 04 Sep 2016 12:30 PM PDT

அன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார்.

வேலைவாய்ப்பு முகாமில் 1,786 பேருக்கு பணி ஆணை

Posted: 04 Sep 2016 12:27 PM PDT

திருநின்றவூரில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1,786 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இன்று விநாயகர் சதுர்த்தி: பூஜை பொருள்கள் விற்பனை அமோகம்

Posted: 04 Sep 2016 12:27 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள், படையலுக்குத் தேவையான பூஜை பொருள்களின் விற்பனை திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

கைதிகளுக்கு கஞ்சா விநியோகம்: சிறைக் காவலர் பணியிடை நீக்கம்

Posted: 04 Sep 2016 12:27 PM PDT

புழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை விநியோகம் செய்ததாக சிறைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

Posted: 04 Sep 2016 12:26 PM PDT

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அதன் தலைவர் எஸ்.சீனிவாசன் வெளியிட்டார்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி போட்டி

Posted: 04 Sep 2016 12:26 PM PDT

செங்குன்றத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஏடிஎம் அட்டை பண மோசடி குறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

Posted: 04 Sep 2016 12:26 PM PDT

வங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டை விவரங்களை சேகரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

லாரி கவிழ்ந்ததில் கிளீனர் சாவு

Posted: 04 Sep 2016 12:25 PM PDT

ஊத்துக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிளீனர் உயிரிழந்தார்.

வாகனங்கள் தொடர் மோதல்: 8 பேர் காயம்

Posted: 04 Sep 2016 12:25 PM PDT

அச்சிறுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் 8 பேர் காயமடைந்தனர்.

வெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

Posted: 04 Sep 2016 12:25 PM PDT

தாமரைக்குப்பம் அருகே வெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் வாழை நடும் போராட்டம்

Posted: 04 Sep 2016 12:24 PM PDT

நாகர்கோவில் நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, வாழை நடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

8 பேருக்கு ஆசிரியர் திலகம் விருது அளிப்பு

Posted: 04 Sep 2016 12:24 PM PDT

குமரி அறிவியல் பேரவை சார்பில் 8 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் திலகம் விருது வழங்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடக்கம்

Posted: 04 Sep 2016 12:24 PM PDT

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி காங்கிரஸ் கட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

வழக்கை திரும்பப் பெறாததால் இளைஞரை கொல்ல முயற்சி: 2 பேர் கைது

Posted: 04 Sep 2016 12:23 PM PDT

வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளைஞரை கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பங்குப் பேரவை நிர்வாகிகளுக்கு மிரட்டல்: 3 பேர் மீது கிராம மக்கள் போலீஸில் புகார்

Posted: 04 Sep 2016 12:23 PM PDT

இரயுமன்துறை மீனவக் கிராமத்தில், பங்குப் பேரவை நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்த மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, அப்பகுதி மக்கள் நித்திரவிளை காவல் நிலைத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரண்டு வந்து மனு அளித்தனர்.

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சாவு

Posted: 04 Sep 2016 12:23 PM PDT

அருமனை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் கிறிஸ்தவ தேவாலயங்களில் நன்றி திருப்பலி

Posted: 04 Sep 2016 12:22 PM PDT

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நன்றி திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பஞ்சாபிலிருந்து பாப்லார் மரங்களை இறக்கிய கேரள பிளைவுட் ஆலைகள்: குமரி ரப்பர் மர வணிகர்கள் அதிர்ச்சி

Posted: 04 Sep 2016 12:22 PM PDT

கேரள மாநிலம் பெரும்பாவூர் ரப்பர் மரச் சந்தையை மையமாகக் கொண்ட பிளைவுட் ஆலைகள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாப்லார் மரங்களை இறக்குமதி செய்துள்ளதால் கேரள மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் மர வணிகர்கள் மற்றும் ரப்பர் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி, ஆசிரியர் தினம்: மத்திய அமைச்சர் வாழ்த்து

Posted: 04 Sep 2016 12:22 PM PDT

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆசிரியர் தின வாழ்த்துகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறும்பனையில் மீனவர் ஓய்வறை திறப்பு

Posted: 04 Sep 2016 12:21 PM PDT

குறும்பனையில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மீனவர் ஓய்வறை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

சென்னை - குமரி சைக்கிள் பயணக் குழுவினருக்கு வரவேற்பு

Posted: 04 Sep 2016 12:21 PM PDT

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளவர்களுக்கு இராமன்துறையில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் விவிலியத் திருவிழா தொடக்கம்

Posted: 04 Sep 2016 12:20 PM PDT

கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் ஒரு மாதம் நடைபெறும் விவிலியத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

7இல் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி

Posted: 04 Sep 2016 12:20 PM PDT

தூத்துக்குடியில் புதன்கிழமை (செப். 7) நடைபெறும் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ பூமாதேவி ஆலய வருஷாபிஷேகம்

Posted: 04 Sep 2016 12:20 PM PDT

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு துளசிங்க நகர் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய வருஷாபிஷேகம் நடைபெற்றது.

கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

Posted: 04 Sep 2016 12:19 PM PDT

கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என எம்பவர் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ. சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்து மகாசபை நிர்வாகிகள் கூட்டம்

Posted: 04 Sep 2016 12:19 PM PDT

அகில் பாரத இந்து மகாசபை தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.

மாநில யோகா போட்டி: ஆத்தூர் பள்ளி சாம்பியன்

Posted: 04 Sep 2016 12:19 PM PDT

ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில், ஆத்தூர் சி.சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.

வீரபாண்டியன்பட்டணத்தில் புனித அன்னை தெரஸா கெபி திறப்பு

Posted: 04 Sep 2016 12:19 PM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் புதியதாக அன்னை தெரஸா கெபி திறக்கப்பட்டது.

27இல் தூத்துக்குடியில் செஸ் போட்டி தொடக்கம்

Posted: 04 Sep 2016 12:18 PM PDT

தூத்துக்குடியில் ஸ்பிக் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி செப். 27ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நாளிதழ்களை வீடுகளுக்கு விநியோகிப்போருக்கு பாராட்டு

Posted: 04 Sep 2016 12:18 PM PDT

நாளிதழ்களை வீடுகள் மற்றும் கடைகளுக்கு விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.

நல்லான்விளை வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு: 16இல் தொடக்கம்

Posted: 04 Sep 2016 12:18 PM PDT

நாசரேத் அருகே உள்ள நல்லான்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா செப். 16ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

Posted: 04 Sep 2016 12:17 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் வைப்பது மற்றும் கடலில் கரைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பைக் மோதி கட்டடத் தொழிலாளி சாவு

Posted: 04 Sep 2016 12:17 PM PDT

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் அருகே நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மீது பைக் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உடன்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

Posted: 04 Sep 2016 12:17 PM PDT

உடன்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் சந்தன மரக்கிளைகள் வெட்டிக் கடத்தல்

Posted: 04 Sep 2016 12:15 PM PDT

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் உள்ள சந்தன மரக்கிளைகளை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போடி, தேவாரத்தில் 78 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

Posted: 04 Sep 2016 12:15 PM PDT

போடி, தேவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை 78 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

உள்ளாட்சி அலுவலகங்களில் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

Posted: 04 Sep 2016 12:15 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

பாடப் புத்தகங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பம்!

Posted: 04 Sep 2016 12:14 PM PDT

தமிழகக் கல்வித் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி (மொபைல் ஆப்) மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்த்து கற்கலாம். மேலும், விடியோ காட்சிகள் மூலமும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மனைவி மீது சந்தேகம்: கத்தியால் குத்திய கணவர் கைது

Posted: 04 Sep 2016 12:14 PM PDT

பெரியகுளத்தில் சந்தேகம் காரணமாக, மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அறிவியல் விநாடி-வினா போட்டி: சத்யா வித்யாலயா மாணவர்கள் வெற்றி

Posted: 04 Sep 2016 12:14 PM PDT

தமிழ்நாடு அறிவியல் அமைப்பு நடத்திய விநாடி வினா போட்டியில் பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா பன்னாட்டு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

சிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 04 Sep 2016 12:13 PM PDT

விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குசேகரிக்கும் முகாம் மற்றும் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்த ஆலோசனை முகாம் சனிக்கிழமை சிவகாசியில் நடைபெற்றது.

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

Posted: 04 Sep 2016 12:13 PM PDT

ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சுகாதாரமற்ற உணவகங்களை ஆய்வு செய்யக் கோரிக்கை

Posted: 04 Sep 2016 12:13 PM PDT

சாத்தூரின் முக்கிய பகுதிகளில் பல உணவகங்கள் சுகாதாரமின்றி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்

Posted: 04 Sep 2016 12:12 PM PDT

ராஜபாளையம் நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 230 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

Posted: 04 Sep 2016 12:12 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 230 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.

குயவன்குடி ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் செப்.14-இல் கும்பாபிஷேகம்

Posted: 04 Sep 2016 12:12 PM PDT

ராமநாதபுரம் அருகேயுள்ள குயவன்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி எனப்படும் ஸ்ரீசுப்பையா சாது சுவாமி ஆலய மகாகும்பாபிஷேகம் இம்மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.

மானாமதுரையில் 20 இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு

Posted: 04 Sep 2016 12:11 PM PDT

சதுர்த்தி விழாவை முன்னிட்டு மானாமதுரை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவை

மானாமதுரை பேரூராட்சியை கைப்பற்ற அதிமுக, திமுக தேர்தல் வியூகம்

Posted: 04 Sep 2016 12:11 PM PDT

மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை கைப்பற்ற ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக நிர்வாகிகள் தேர்தல் வியூகம் அமைத்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்

Posted: 04 Sep 2016 12:11 PM PDT

தமிழகத்தில் குற்றங்களின் நிறமும், தன்மையும் மாறி வருகிறது. இதேபோல, குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

போடியில் அனுமதியின்றி நிறுவப்பட்ட வ.உ.சி.யின் வெண்கலச் சிலை அகற்றம்: சாலை மறியல், தடியடி

Posted: 04 Sep 2016 12:11 PM PDT

போடியில் சனிக்கிழமை இரவு அனுமதியின்றி நிறுவப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் வெண்கலச் சிலையை போலீஸார் அகற்றினர். இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, லேசான தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™