Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்

Posted: 10 Sep 2016 10:13 AM PDT

புதுடில்லி: - ''அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணு முறையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். - டில்லியில் நடந்த, தேசிய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது: - நாடு முழுவதும், டிஜிட்டல் மயமாக வேண்டும் என்பதற்காக, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கினார். அடுத்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிகிரி' சான்றிதழ்கள் உட்பட, அனைத்து சான்றிதழ்களும், ...

மனக்கவலை: - ஒரு பக்க கதை

Posted: 10 Sep 2016 10:12 AM PDT

மனக்கவலை: - ஒரு பக்க கதை ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. "ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா ...

கண்ணுக்கு தெரியாத இறைவனை எப்படி நம்புவது ?

Posted: 10 Sep 2016 10:11 AM PDT

கண்ணுக்கு தெரியாத இறைவனை எப்படி நம்புவது ? நாள் முழுவதும் பயன்படுத்தும் மின்சாரம் கண்களுக்கு தெரியவில்லை நாள் முழுவதும் சுவாசிக்கும் காற்று கண்களுக்கு தெரிவதில்லை நாள் முழுவதும் பயன்படுத்தும் மொபைலின் மின்காந்த அலைகள் கண்ணுக்கு தெரிவதில்லை நாள் முழுவதும் இந்த உடலை இயக்கிக்கொண்டிருக்கும் உயிர் நம் கண்களுக்கு தெரிவதில்லை கண்களால் காண முடிந்தது காண முடியாதது என இரண்டு உண்டு. காண முடியாததை அறிந்து கொள்வது, புரிந்து கொள்வது மற்றும் அதனை செயல்வடிவத்தில் அனுபவித்துக்காட்டுவது. இதன் பெயர் ...

*சிற்றின்பமும் - பேரின்பமும்*

Posted: 10 Sep 2016 10:09 AM PDT

*சிற்றின்பமும் - பேரின்பமும்* ~~~~~~~~~~~~~~~~~~ படைப்பினால் ஈர்க்கப் பட்டால் *சிற்றின்பம்.* படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் *பேரின்பம்.* படைப்புகளை அனுபவித்தால் *சிற்றின்பம்.* படைப்புகளை ஆராதித்தால் *பேரின்பம்.* படைப்புகளை படைப்புகளாய் கண்டால் *சிற்றின்பம்.* படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் *பேரின்பம்.* என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் *சிற்றின்பம்.* இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் *பேரின்பம்.* நான் இந்த உடல் என எண்ணினால் *சிற்றின்பம்.* நான் இந்த உயிர் என எண்ணினால் *பேரின்பம்.* அமைதி ...

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Posted: 10 Sep 2016 08:56 AM PDT

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

தீய குணங்களை அதாவது...

❌  காமம்
❌  கோபம்
❌  பொறாமை
❌  வெறுப்பு
❌  பிடிவாதம்
❌  ஞானச்செறுக்கு
❌  பற்று
❌  தேக அபிமானம்

இப்படி சொன்னால் உப்பு, காரம், புளி இல்லாத, ருசியே இல்லாத உணவைப் போல் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.  சரி இப்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்.. 

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?

தமிழுக்கும் அமுதென்று பெயர்

Posted: 10 Sep 2016 07:47 AM PDT

தமிழுக்கும் அமுதென்று பெயர் வெள்ளை மாளிகையில் நடந்த மாணவர்களுக்கான தேசிய கவிதைப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாணவி சலாமே, மாணவர் ஜோயே ரெய்ஸ்பெர்க், மிஷேல் ஒபாமா, மாணவர் கோபால் ராமன், மாணவிகள் மாயா ஈஸ்வரன் மற்றும் ஸ்டெல்லா | படம்: ஏஎப்பி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ...

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு- ஜெ. அறிவிப்பு!!

Posted: 10 Sep 2016 06:18 AM PDT

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு- ஜெ. அறிவிப்பு!! பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். சென்னை: பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தலைவர்கள் வாழ்த்து மாரியப்பனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ...

குழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

Posted: 10 Sep 2016 01:17 AM PDT

- சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பாட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. - நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டையைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் தன் 15 வயது பேத்தியை, மது என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பார்வதி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். - இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. - அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "குழந்தை ...

பத்ம விருது யாருக்கு வழங்கலாம்?- மக்களிடம் பொறுப்பு ஒப்படைப்பு

Posted: 10 Sep 2016 12:45 AM PDT

பத்ம விருது யாருக்கு வழங்கலாம்?- மக்களிடம் பொறுப்பு ஒப்படைப்பு கலை, அறிவியில், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறை களில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார் பில் பத்ம விருதுகள் வழங்கி கவுர விக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவ தாக சர்ச்சைகள் எழுந்து வருகின் றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக் கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தெரிவு ...

அக்.,2 முதல் சுற்றுலாத் தலங்களில் பாலித்தீன் பைகளுக்குத் தடை

Posted: 09 Sep 2016 08:17 PM PDT

புதுடில்லி : - நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் பாலித்தீன் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது. இந்நடைமுறை அக்., 2ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. - இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய நினைவுச் சின்னங்கள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் முழுமையாக பாலித்தீன் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காந்தி ஜெயந்தியன்று(அக்.,2ம் தேதி) இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. - சுற்றுலாத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™