Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உ.பி.,யில் 38 சதவீத மருத்துவமனைகள் பூட்டி கிடக்கிறது அவலம்!: மருத்துவ வசதி பற்றாக்குறையால் மக்கள் அவதி

Posted: 10 Sep 2016 07:00 AM PDT

நாட்டிலேயே, அதிக லோக்சபா தொகுதிகள் அடங்கிய, பெரிய மாநிலமான உத்தர பிரதேசத் தில், 2.5 லட்சம் பேருக்கு, ஒரு மருத்துவமனை மட்டுமே உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப, போதிய மருத்துவ வசதி இல்லாததாலும், 38 சதவீத அரசு மருத்துவமனைகள் பூட்டிக் கிடப்ப தாலும், அம்மாநில மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

உ.பி.,யில், சமாஜ்வாதியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. நாட்டிலேயே மிக அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகளை உடைய மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ள உ.பி., சுகாதார வசதியில் மிகவும் பின்தங்கி உள்ளது.இம்மாநில மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி ...

சட்டசபை குழுக்கள் அமைக்க தயக்கம் ஏன்?

Posted: 10 Sep 2016 07:45 AM PDT

சட்டசபை குழுக்களில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளதால், குழுக் களை அமைப்பதில், அரசு தாமதம் செய்து வருகிறது.

அரசு பணிகளை கண்காணிக்க, சட்டசபை சார்பில், பல்வேறு தலைப்புகளின் கீழ், உறுப்பி னர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுவில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெறுவர்.
மதிப்பீட்டு குழு : அரசின் நிதி மதிப்பீடுகளை ஆராய, மதிப்பீட்டுக் குழு அமைக்கப்படும். சட்டசபை குழுவிற்கு அனுப்பி வைக்கும் மதிப்பீடுகளை, இக்குழு ஆய்வு செய்யும். சிக்கனம், நிர்வாக அமைப்பில் மேம்பாடு அல்லது நிர்வாக ...

தனித்து போட்டி அறிவிப்பு : களத்தில் தடுமாறும் கட்சிகள்

Posted: 10 Sep 2016 07:48 AM PDT

உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.,வும், பா.ம.க.,வும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை தேடும் பணியில் இறங்கி உள்ளன;சரியான வேட்பாளர்கள் கிடைக்காமல், இரு கட்சிகளும் தடுமாறுவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஊராட்சி துவங்கி மாநகராட்சி வரை, 19,961 பதவிகளுக்கு, கட்சி சின்னங்களில் போட்டியிட முடியும். இதை வைத்து பார்க்கும்போது, தனித்து போட்டியிடும் கட்சிகள், தங்கள் சார்பில், தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட, 20 ஆயிரம் வேட்பாளர்களை தயார் செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில், தி.மு.க., ...

மா.செ.,க்கள் மீது நடவடிக்கை எப்போது? : தி.மு.க.,வில் மீண்டும் கொந்தளிப்பு

Posted: 10 Sep 2016 07:49 AM PDT

உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்ட செயலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷம், மீண்டும் ஒலிக்க துவங்கி உள்ளது.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடும் என, அக்கட்சியின் பிரபலங்கள் அனைவரும் நம்பினர்; ஆனால், 89 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவானது. இதற்கு,கட்சிக்குள் நடந்த உள்குத்து தான் காரணம் என கண்டறியப்பட்டு, நாகை, நாமக்கல், நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட, சில மாவட்ட செயலர்கள் மீது மட்டும் நடவடிக்கை ...

ஜெ., வழக்கு தீர்ப்புக்கு பின் தமிழக காங்., தலைவர் நியமனம்?

Posted: 10 Sep 2016 07:51 AM PDT

'தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம் தள்ளிப் போவதற்கான காரணம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு தான்' என, டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறாததைத் தொடர்ந்து, தமிழக காங்., தலைவர் இளங்கோவன், பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தமிழகத்தின் கோஷ்டி தலைவர்கள் அனைவரையும், டில்லிக்கு வரவழைத்து, துணைத் தலைவர் ராகுல் பேசினார்; அதில், முன்னாள் மத்திய அமைச்சர்ஒருவரை, தமிழக காங்கிரஸ் தலைவராக்க முடிவெடுத்தார். இது தொடர்பாக ராகுல் ...

ஒவ்வொரு அமைச்சரும் தலா 2 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போகணும்: சுஷ்மா சுவராஜ்

Posted: 10 Sep 2016 09:46 AM PDT

புதுடில்லி: ''ஒவ்வொரு மத்திய அமைச்சரும், இந்த ஆண்டு இறுதிக்குள், குறைந்த பட்சம், இரண்டு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, அந்நாட்டுடனான சமூக, பொருளாதார உறவு களை மேம்படுத்த வேண்டும்,'' என, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, வெளியுறவு அமைச்சகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், உலக நாடுகளுடனான இந்திய உறவை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பிரதமர்
நரேந்திர மோடி, பல நாடுகளுக்கு ...

வங்கிகளின் வாராக்கடன் உயர்வு கவலை தருகிறது : கரூர் வைஸ்யா வங்கி விழாவில் ஜனாதிபதி பேச்சு

Posted: 10 Sep 2016 09:58 AM PDT

சென்னை: ''உலகின் மற்ற பகுதிகளில், வங்கிகள் செயல்பாடு பாதிக்கப்பட்டாலும், இந்திய வங்கி துறை சீராக செயல்பட்டு வருகிறது; எனினும், பெருகி வரும் வாராக்கடன் கவலை தரும் அம்சமாக உள்ளது,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

கரூர் வைஸ்யா வங்கியின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபத்தில், நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
ஒரு தனிப்பட்ட மனிதர் அல்லது நிறுவனம், நுாறு ஆண்டுகளை கடப்பது பெரிய விஷயம். அந்த மைல்கல்லை, கரூர் வைஸ்யா வங்கி கடந்துள்ளது பாராட்டுக்குரியது. கடந்த, 1969ல் வங்கிகளை, ...

மாரியப்பன் வாங்கினார்...தங்கம்!:பாராலிம்பிக்கில் சாதனை;இந்தியா, தமிழகத்துக்கு பெருமை

Posted: 10 Sep 2016 10:38 AM PDT

ஒலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரு தங்கம் கூட பெறாத நிலையில்,'பாராலிம்பிக்' எனப் படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில்,தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கம் வென்று, அபார சாதனை படைத்துள்ளார்; இதன் மூலம், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் மட்டும் கிடைத்தது. ஒரு தங்கப்பதக்கம் கூட பெற முடியாமல், வீரர்கள் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்பினர்.இது, நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது; ...

இளம் ராணுவத்தினருக்கு ஜனாதிபதி பிரணாப்... அழைப்பு!:சவால்களை சந்திக்க தயாராகும்படி அறிவுரை

Posted: 10 Sep 2016 10:47 AM PDT

சென்னை:''பாதுகாப்புத் துறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, தயாராக இருக்க வேண்டும்,'' என, இளம் ராணுவ அதிகாரி களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவுரை கூறினார்.

சென்னை, பரங்கிமலையில் உள்ள, ராணுவ அதிகாரிகள் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் அதிகாரிகள், ராணுவத்தில் சேரும் நிகழ்ச்சி, நடந்தது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு, பதக்கங்கள் வழங்கி, அவர் பேசியதாவது:உலகின் மிக சிறந்த ராணுவப் படையாக திகழும், நம் ராணுவத்தில், ...

"இந்தியாவின் பிரதான சேவகன்" என்பதை நிரூபித்த பிரதமர் மோடி

Posted: 10 Sep 2016 12:14 PM PDT

புதுடில்லி: "நான் இந்தியாவின் பிரதமர் கிடையாது. இந்திய மக்களின் பிரதான சேவகன்" என தான் சொன்ன வார்த்தை மெய்யாக்கி காட்டியிருக்கார் பிரதமர் நரேந்திர மோடி.

அரசு முறை சுற்றுப்பயணத்தில் இருந்த காரணத்தால், தனது சொந்த தம்பி மகளின் இறுதிசடங்கில் கூட அவர் கலந்துகொள்ள மறுத்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
நநேரந்திர மோடியின் இளைய சகோதர் பிரகலாத் மோடி. அவரின் மகள் நிகுஞ்பென். நீண்ட நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிகுஞ்பென் கடந்த வாரம் இறந்துவிட்டார்.
அவருடைய உடல்நிலை மிகவும் கவலை கிடமாக இருக்கும் போது பிரதமர் மோடிக்கு ...

கடலூர், விழுப்புரம், பெரம்பலூரில் லேசான நில நடுக்கம்

Posted: 10 Sep 2016 12:57 PM PDT

பெரம்பலுார்: கடலுார், விழுப்புரம், பெரம்பலுாரில் மாவட்டங்களின் பல பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் குறிப்பாக திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதேபோன்று பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. சரியாக நள்ளிரவு 1.05 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™