Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட உள்ள கனேடிய நுளைவிசைவு அலுவலகங்கங்கள்

Posted: 12 Aug 2016 06:53 AM PDT

7h

7hசீனாவில் உள்ள கனேடிய நுளைவிசைவு அலுவலகங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.

கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் ஜோன் மக்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சீனாவின் உயர் அதிகாரிகளுடன் இந்த விடயம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனடாவுக்கான நுளைவிசைவு விண்ணப்ப அலுவலகங்கள் ஐந்து சீனாவில் உள்ள நிலையில், அதனை இரட்டிப்பாக்கும் வகையில் செங்டு, நின்ஜிங், வூஹான், ஷென்யாங் ஆகிய இடங்களிலும் அலுவலங்களை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனாவில் உள்ள கனேடிய நுளைவிசைவு அலுவலகங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகமான சீன மக்கள் அதி திறன் வாய்ந்த வேலை வாய்ப்புக்களை கனடாவில் பெற்றுக் கொள்ளவும், மேலும் பல அனைத்துலக மாணவர்களை சீனாவில் இருந்து கனடா பெற்றுக் கொள்ளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.7h

இந்த மாத இறுதியில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ சீனாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ள நிலையிலேயே, குடிவரவுத் துறை அமைச்சர் தற்போது சீனாவிற்கான பயணத்ததை மேற்கொண்டுள்ளார்.

சீனாவில் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே கனேடியப் பிரதமர் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட உள்ள கனேடிய நுளைவிசைவு அலுவலகங்கங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™