Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷ் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

Posted:

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞர் தனுஷ். ‛தொடரி', ‛கொடி' படங்களை முடித்துவிட்டு தற்போது, ‛எனை நோக்கி பாயும் தோட்டா', ‛வட சென்னை' படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் நடித்து வந்தபோதும் அவ்வப்போது படங்களில் பாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் தனுஷ். சமீபத்தில் கூட தெலுங்கு படம் ஒன்றில் தமன் ...

புதிய லுக்கில் வடிவேலு : மனோதத்துவர் பூத்ரியாக அசத்த வருகிறார்

Posted:

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு, இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் தெனாலிராமன், எலி படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப்படங்கள் அவருக்கு வெற்றியை தரவில்லை. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலுவை எப்படியோ சம்மதிக்க வைத்து தனது ‛கத்திச்சண்டை' ...

ஆஸ்கருக்கு பிரிந்துரைக்கப்பட்ட “ருத்ரமாதேவி”

Posted:

அருந்ததி படத்திற்கு பின்னர் அனுஷ்கா, வாள் வீசி ராணியாக நடித்த திரைப்படம் ருத்ரமாதேவி. இப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு இந்தியன் பிலிம் பெடரேஷன் பரிந்துரைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் ருத்ரமாதேவி ஆஸ்கர் விருதிற்கான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. இதனை ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் தனது டுவிட்டர் ...

கண் தானம் செய்த ரெஜினா

Posted:

உடல் உறுப்பு தானம், கண் தானம் போன்றவற்றின் வாயிலாக இறந்த பின்னரும் பலரது வாழ்வில் ஒளியேற்றி உதவுக்கூடும். இதனை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக திரைப்பிரபலங்கள் பலரும் உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானம் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் நடிகை ரெஜினாவும் தற்போது சேர்ந்துள்ளார். நெல்லூரில் கண் ...

ஓய்வு தேவை - இயக்குனரிடம் அனுஷ்கா கோரிக்கை

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு முன்னால் ஆர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வந்தது. இப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய ...

ஜனதா கேரேஜ் பாடல்கள் வெளியீட்டிற்கு தயாரான ரசிகர்கள்

Posted:

ஜூனியர் என்.டி.ஆர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் திரைப்படமான ஜனதா கேரேஜ் படத்தினை இயக்குனர் கொரட்டாலா சிவா, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவாக்கி வருகின்றார். கேரளாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலிருக்கும் படக்குழுவினர் ஜனதா கேரேஜ் படத்தின் பாடல்கள் வெளியீட்டை இன்று(ஆகஸ்ட் 12) பிரம்மாண்டமாக ...

கணவரை பிரிந்தார் நடிகை திவ்யா உன்னி.?

Posted:

தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. தமிழில் பெரிதாக சோபிக்க முடியாத திவ்யா உன்னி, மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். திவ்யா உன்னி, கடந்த 2002-ம் ஆண்டு டாக்டர் சுதிர் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். ...

‛பஞ்சதந்திரம்-2' பேச்சுவார்த்தை ஆரம்பம்

Posted:

கமல்ஹாசனின் எவர்கிரீன் காமெடி படங்களில் ‛பஞ்சதந்திரம்' படமும் ஒன்று. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், சிம்ரன், ரம்யாகிருஷ்ணன், ஊர்வசி, சங்கவி, ஐஸ்வர்யா, நாகேஷ்.... என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் 2002-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. கமல், கிரேஸி மோகன் இணைந்து ...

சாதனை படைக்கும் ‛தோனி' பட டிலைர்

Posted:

இந்திய கிரிக்கெட் அணிக்கு மற்றுமொரு உலககோப்பை பெற்று தந்த கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாக உருவாகியுள்ளது. எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார், நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. தோனியும், ...

திரைத்துறையினருக்கு விருது - நடிகர் சங்கம் நன்றி!

Posted:

திரைப்பட கலைஞர்களுக்கு விரைவில் விருது வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பதற்கு நடிகர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நடிகர் சங்கம் கட்டடப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் திரைத்துறையை சார்ந்த கலைஞர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் விருதுகள் ...

வில்லனுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி

Posted:

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி, ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‛2.O' வில் நடித்து வருகிறார். ரஜினியுடன் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாரும் நடிக்கிறார். இப்படத்தில் இவர் தான் வில்லன். தற்போது படத்தின் படப்படிப்பு பாதி முடிவடைந்துள்ளது. அமெரிக்காவில் ஓய்வு எடுத்து திரும்பியிருக்கும் ரஜினி, ...

விரைவில் தமிழக அரசு திரைப்பட விருதுகள்: முதல்வர் அறிவிப்பு

Posted:

ஒவ்வொரு மாநிலத்திலும் திரைத்துறையை சார்ந்த கலைஞர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் விரைவில் தமிழக அரசு திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ...

யாருடன் திருமணம்? - விஷால் பரபரப்பு

Posted:

நடிகர் சங்க வளாகத்தில் நடைபெறும் முதல் திருமணம், என் திருமணம் தான் என, நடிகர் விஷால் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சங்க தேர்தலில், சரத்குமாரை எதிர்த்து வெற்றி பெற்ற விஷால், ஆடு பகை; குட்டி உறவு என்பது போல், சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் எடுத்த, செல்பி புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். சினிமா ...

ஹாலிவுட்டில் நடிப்பது எளிதானதல்ல - தீபிகா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தற்போது இவர் பாலிவுட்டையும் தாண்டியும் ஹாலிவுட்டில் நடிகர் வின் டீசல் உடன் ‛டிரிபிள் எக்ஸ் ஆப் எக்ஸேண்டர் கேஜ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனால் பாலிவுட் வாய்ப்புகளை சற்று தள்ளி வைத்திருக்கிறார். இந்நிலையில் தீபிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஹாலிவுட்டில் வேலை பார்ப்பது ...

யார் அந்த பெண்...? - திருமணத்திற்காக காத்திருக்கும் சுசாந்த் சிங்

Posted:

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‛எம்எஸ் தோனி. தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனிடையே தோனி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. ...

கை மாறியது 'கவலை வேண்டாம்'

Posted:

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள 'கவலை வேண்டாம்' படம் கை மாறிவிட்டது. இந்தப் படத்தை பல வெற்றிப் படங்களை வெளியிட்டுள்ள அபி அன்ட் அபி நிறுவனம் இந்திய தியேட்டர்களில் வெளியிடும் உரிமை அனைத்தையும் வாங்கியுள்ளது. 'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க ...

அமிதாப் - வருண் இணையும் புதியபடம்?

Posted:

ராணி முகர்ஜியை வைத்து ஆக்ஷ்ன், த்ரில்லர் படத்தை இயக்கியவர் பிரதீப் சர்கார். இப்படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார் பிரதீப். இப்படத்திற்கு ‛தபா குல்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், வருண் தவான் ...

முழு நேர பாடகியாகும் ரம்யா நம்பீசன்!

Posted:

பீட்சா படத்தின் வெற்றிக்கு பின், விஜயசேதுபதி முன்னணி நடிகராகி விட்டபோதும், அப்பட நாயகி ரம்யா நம்பீசனுக்கு சரியானபடி படங்கள் இல்லை. மீண்டும் விஜயசேதுபதியுடன் நடித்த, சேதுபதி படத்தின் ஹிட்டுக்கு பின், தாய்மொழியான மலையாள படங்களில் நடித்து வந்தவர், பாண்டிய நாடு படத்தில், பை... பை... பை... கலாச்சி பை... என்ற பாடலை பாடினார். இப்பாடல் ஹிட் ...

சிவாய் வில்லன் - ரகசியம் காக்கும் அஜய்

Posted:

பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛சிவாய்'. அஜய் தேவ்கனின் கனவுப்படம் என்று கூறப்படும் இப்படத்தை அவரே இயக்கியும் உள்ளார். படத்தில் அக்ஷ்ய், மலையேறும் வீரராக நடித்திருக்கிறார். சமீபத்தில் சிவாய் படத்தின் டிரைலர், ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாய் நடந்தது. டிரைலருக்கும் நல்ல வரவேற்பு ...

வில்லியாக நடிக்கும் நதியா!

Posted:

திருமணத்திற்கு பின், ஜெயம்ரவி நடித்த, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில், அம்மா வேடத்தில் ரீ - என்ட்ரி கொடுத்தவர், முன்னாள் கதாநாயகி நதியா. அதையடுத்து, சில படங்களில், அம்மாவாக நடித்தவர், தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில், ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும், வாஸ்கோடகாமா என்ற படத்தில், வில்லியாக நடிக்கிறார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™