Tamil News | Online Tamil News |
- 'விருந்து சாப்பிட செல்லவில்லை!'உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்
- ரூ.570 கோடி யாருக்கு சொந்தம்?சி.பி.ஐ.,யிடம் தி.மு.க., நேரில் மனு
- கிரிமினல் வழக்குகளுடன் 34 சதவீத அமைச்சர்கள்!
- குஜராத் மாநில புதிய முதல்வராக விஜய் ரூபானி தேர்வு: திருப்பம்: பெரிதும் எதிர்பார்த்த நிதின் படேல் துணை முதல்வரானார்
- ஐ.எஸ்., இயக்கத்திற்கு எதிராக தெலுங்கானாவில் பிரசாரம்
- விழாக்களில் பாட 'ரயில் கீதம்' : அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகம்
- கொடூரம்:ஏ.கே., - 47 துப்பாக்கிகளால் பிரிவினைவாதிகள் தாக்குதல்:அசாம் மாநில மார்க்கெட்டில் 14 அப்பாவிகள் பலி
- ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி: ரயில்வே துறை
- 'வீராணம் ஒன்று போதும்; தி.மு.க., ஆட்சிக்கு சாட்சி!'
- யார் ஆட்சியில் நிறைய பாலங்கள் கட்டப்பட்டன? சட்டசபையில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்
- அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா?
- ஆகஸ்ட் இறுதிக்குள் மீனவர்கள் பேச்சுவார்த்தை: சுஷ்மா
- கோலாகலமாக துவங்கியது ரியோ ஒலிம்பிக் திருவிழா
| 'விருந்து சாப்பிட செல்லவில்லை!'உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம் Posted: 05 Aug 2016 09:22 AM PDT டில்லி:''பாகிஸ்தானில், இந்தியா வின் மரியாதையை காப்பாற்றும் பொருட்டே, 'சார்க்' மாநாட்டில் அளிக்கப்பட்ட விருந்தை புறக்கணித்தேன்,'' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன்களில் ஒருவனான, பர்ஹான் வானி, சமீபத்தில் கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து, காஷ்மீரில் பெரும் கலவரம் மூண்டது; பாகிஸ்தானிலும், போராட்டங்கள் நடந்தன. தியாகியாக சித்தரிக்காதீர்: பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், 'பர்ஹான் வானியை தியாகி' என, புகழ்ந்தார். இதனால், இருநாட்டு உறவு மோசமடைந்தது. ... |
| ரூ.570 கோடி யாருக்கு சொந்தம்?சி.பி.ஐ.,யிடம் தி.மு.க., நேரில் மனு Posted: 05 Aug 2016 09:34 AM PDT தமிழக சட்டசபை தேர்தலின் போது, கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் பணம் குறித்து, மேலும் சில சந்தேகங்களை எழுப்பி, அதுகுறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிடும்படி, சி.பி.ஐ., இயக்குனரிடம், தி.மு.க., நேரில் மனு அளித்துள்ளது. தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களான டி.கே. எஸ்.இளங்கோவனும், ஆர்.எஸ். பாரதியும், நேற்று டில்லியில், சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வந்தனர். சி.பி.ஐ., இயக்குனர் அனில்குமார் சின்காவை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.பரபரப்பு கேள்விகள்அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது, திருப்பூர் அருகே ... |
| கிரிமினல் வழக்குகளுடன் 34 சதவீத அமைச்சர்கள்! Posted: 05 Aug 2016 09:40 AM PDT புதுடில்லி:அனைத்து மாநிலங்களிலும் உள்ள, 609 மாநில அமைச்சர்களில், 34 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. டில்லியைச் சேர்ந்த, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அமைப்பு, தேர்தல் குறித்த ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:* நாடு முழுவதும் உள்ள, 29 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின், 620 அமைச்சர்களில், 609 பேர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது* இதில், 34 சதவீத அமைச்சர்கள், அதாவது, 210 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன* இதில், 113 பேர் மீது கொலை, கொலை ... |
| Posted: 05 Aug 2016 10:51 AM PDT ஆமதாபாத்:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும், குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வில், எதிர்பாராத திருப்பமாக, விஜய் ரூபானி, 61, முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முதல்வராவார் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிதின் படேல், துணை முதல்வராகியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநில மான குஜராத்தில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2014ல் மோடி பிரதமரானதும், குஜராத்தின் முதல் பெண் முதல்வராக, ஆனந்திபென் படேல் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பின், இரண்டு ஆண்டுகளாக, குஜராத்தில் பா.ஜ.,வின் செல்வாக்கு சரிந்து வந்தது.மேலும், படேல் சமூகத்தினர், ... |
| ஐ.எஸ்., இயக்கத்திற்கு எதிராக தெலுங்கானாவில் பிரசாரம் Posted: 05 Aug 2016 11:11 AM PDT ஐதராபாத்:தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குறித்து, இளைஞர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த, சிறுபான்மையினர் நல ஆணையம் முடிவு செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தொடர்பு குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், தெலுங்கானா மற்றும்ஆந்திர மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு கூட்டம், நேற்றுஐதராபாத்தில் நடைபெற்றது.இதில், இரு மாநிலங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட இமாம்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து, அதன் ... |
| விழாக்களில் பாட 'ரயில் கீதம்' : அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகம் Posted: 05 Aug 2016 11:11 AM PDT புதுடில்லி: ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய 'ரயில் கீதம்' இயற்றப்பட்டுள்ளது. இந்த கீதத்தை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார். நாட்டு மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் ரயில்வே துறை ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ரயில் கீதத்தை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டது. இதன் படி, பிரபல இசையமைப்பாளர் ஷ்ரவன் இசையில், பாடகர்கள் உதித் நாராயண் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடிய ரயில் கீதம், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டுள்ள ... |
| Posted: 05 Aug 2016 12:30 PM PDT கோக்ரஜார்:வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதியில், பிரிவினைவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 14 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பிரிவினைவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்; தப்பியோடிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள அசாமல், கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில், நேற்று பகலில் மக்கள் அதிக அளவு கூடியிருந்தனர்.அப்போது ஒரு காரில் வந்த மூன்று ... |
| ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி: ரயில்வே துறை Posted: 05 Aug 2016 12:45 PM PDT
புது டில்லி:ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.அதன்படி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட உள்ளன.ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரயில்வே துறையைச் சேர்ந்த 35 விளையாட்டு வீரர்கள் ... |
| 'வீராணம் ஒன்று போதும்; தி.மு.க., ஆட்சிக்கு சாட்சி!' Posted: 05 Aug 2016 12:54 PM PDT சென்னை:''தி.மு.க., ஆட்சியில், திட்டத்தை துவங்கி, அதை முடித்து வைக்கும் திறனுக்கு, வீராணம் திட்டம் ஒன்றே தகுந்தசான்றாகும்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - மா.சுப்பிரமணியன்: 2006 ஜூலை, 31ல், மோனோ ரயில் திட்டம் தான் நல்லது. மெட்ரோ ரயில் திட்டத்தால் பலன் இல்லை. மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, கிலோ மீட்டருக்கு, 50 கோடி ரூபாய் செலவாகும். ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 250 கோடி ரூபாய் செலவாகும். பூகம்பம் ஏற்படக்கூடிய பகுதியில் சென்னை உள்ளது. மெட்ரோ ரயிலுக்காக, சுரங்கப்பாதை தோண்டும் போது, புராதன ... |
| யார் ஆட்சியில் நிறைய பாலங்கள் கட்டப்பட்டன? சட்டசபையில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல் Posted: 05 Aug 2016 01:07 PM PDT சென்னை:'யார் ஆட்சியில், அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டன' என்பதில், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே, சட்டசபையில் விவாதம் நடந்தது. சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - மா.சுப்பிரமணியன்: தமிழக மக்கள் தொகையில், 48.45 சதவீதம் பேர், நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். இது, 2030ம் ஆண்டில், 67 சதவீதமாக உயரும் என, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிராம மக்கள், நகரங்களை நோக்கி குடியேற துவங்கி உள்ளனர். எனவே, நகரங்களில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டது. சென்னை ... |
| அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா? Posted: 05 Aug 2016 01:34 PM PDT அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளி களில், சிறப்பு வகுப்புகளில் மாணவர் களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில், சிற்றுண்டி வழங்கப்படுவது இல்லை.மேலும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்கள், வீட்டிலிருந்து, 7:00 மணிக்கே புறப்பட வேண்டும். மாலையில், சிறப்பு வகுப்பு முடித்து, 6:00மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. ... |
| ஆகஸ்ட் இறுதிக்குள் மீனவர்கள் பேச்சுவார்த்தை: சுஷ்மா Posted: 05 Aug 2016 01:59 PM PDT
புதுடில்லி:இந்தியா - இலங்கை அமைச்சர்கள், மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை இம்மாத(ஆகஸ்ட்) இறுதிக்குள் டில்லியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார். நீடித்து வரும் இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக கடந்த வாரம் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றில் உள்ள 13 மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினர். அப்போது, இரு நாடுகளின் மீன் வளத் துறை அமைச்சர்கள், ... |
| கோலாகலமாக துவங்கியது ரியோ ஒலிம்பிக் திருவிழா Posted: 05 Aug 2016 03:50 PM PDT ரியோ டி ஜெனீரோ: 31-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் தொடங்கியது. தொடக்க விழா கால்பந்து மைதானமான மரகானாவில் நடைபெறுகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 28 வகையான விளையாட்டுகளில் 306 போட்டிகளில் பதக்கத்தை வெல்ல விளையாட்டு வீரர்கள் தயாராகி உள்ளனர்.பிரேசில் நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டது.40 நாடுகளின் தலைவர்கள் ஒலிம்பிக் துவக்கவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு பணியில் 85 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளார்கள்.தென் அமெரிக்கா நாடுகளில் முதன் முதலாக பிரேசில் நாடு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 06,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |