Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


புத்தகம் தேவை

Posted: 05 Aug 2016 01:09 PM PDT

ஒரு பளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
புத்தகம் தேவை தளத்தில் இருக்கும் தமிழ்நேசன் இணைப்பு வேலை செய்யவில்லை... நன்றி

தாய்-மகள்

Posted: 05 Aug 2016 07:25 AM PDT

தாய்மை எனும் சிறப்பை தந்த என் அன்பு மகளே கண் திறந்து பார் அம்மா உன் சுற்றம் உன்னை சூழ்ந்து நிற்க அச்சம் ஏன் கண்ணே இருட்டறையில் உன்னை பத்து மாதம் பூட்டி வைத்தேன் என்று கோபமா என் செல்லமே என தாய் கேட்க குழந்தையும் கண் திறந்து சிரித்தது இந்த உலகுக்கு எனை ஈந்த என் அன்பு அன்னையே ஏன் கண் மூடி இருக்கிறாய் உன் அருமை குழந்தைகள் உன் அருகே நின்று கதறி அழ நீ கண் திறக்க மறுக்கிறாயே அன்று நீ கேட்டதும் நான் கண் திறந்தேனே இன்று நான் கெஞ்சுகிறேன் நீ அமைதியாக இருக்கிறாயே ...

செய்யும் தொழிலே தெய்வம்!

Posted: 05 Aug 2016 07:20 AM PDT

ஒரு பணக்காரன் பூந்தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்தைப் பராமரிக்க இரு வேலையாட்கள் இருந்தனர். ஒருவன் சோம்பேறி. வேலையே செய்யமாட்டான். பகலெல்லாம் தோட்டத்தில் தூங்குவான். ஆனால், முதலாளியின் தலையைக் கண்டதும் ஓடிச் சென்று தலைக்கு மேல் கும்பிடு போட்டு நிற்பான். அவர் உடுத்தியிருக்கும் ஆடை, ஆபரணத்தைப் புகழ்ந்து பேசி நடிப்பான். இன்னொரு வேலையாளோ தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். அவன் எண்ணம் எல்லாம் தோட்டத்தை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும். பூச்செடிக்கு தண்ணீர்விடுவது, பாத்தி அமைப்பது என்று நாள் முழுவதும் ...

ஈச்சங்குலை...!!

Posted: 05 Aug 2016 07:19 AM PDT

சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (172)

Posted: 05 Aug 2016 07:15 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

இருசக்கர ஆம்புலன்ஸ் வாகன சேவையும் 10 தகவல்களும்

Posted: 05 Aug 2016 07:04 AM PDT

சென்னையில் '108' அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட தகவல்களின் 10 முக்கிய அம்சங்கள்: * '108' அவசரகால சேவையை மேம்படுத்தும் வகையில், அவசரகால முதலுதவிக்காக ரூ.70 லட்சம் மதிப்பில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். * இந்த 41 இருசக்கர வாகனங்களில் 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் உள்ளன. * ஆண்கள் மட்டுமின்றி ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(434)

Posted: 05 Aug 2016 06:50 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மின் பகிர்மான கழகத்தில் 76 பணி: 16க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 05 Aug 2016 03:45 AM PDT

வதோதராவில் உள்ள மின் பகிர்மான (Power Grid) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: WR-II/2016/01 மொத்த காலியிடங்கள்: 76 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: பணி: Diploma Trainee (Electrical) - 60 பணி: Diploma Trainee (Electronics & Communication) -10 பணி: Jr. Officer Trainee (HR) - 04 தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு ...

காலை நேர கனவு

Posted: 05 Aug 2016 12:08 AM PDT

சுகமான நித்திரை இனிய கனவு லக லக லகனு ஒரு சப்தம் பதறி அடித்து எழுந்த நான் கண்களில் மிரட்சியுடன் சுற்றிலும் நோக்க ஒன்றும் தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை மீண்டும் சப்தம் மீண்டும் பயம் எழுந்து வெளியே பார்த்தால் பலா மரத்தில் ஒரு பறவை என்னை பயத்துடன் பார்த்தது அதை கண்டு நான் அஞ்ச எனை கண்டு அது மிரள இது என்ன கொடுமை என் கனவை கலைத்த கண்மணியே நீ நீடூழி வாழ்க என வாழ்த்தி விட்டு மீண்டும் கண் அயர்ந்தேன் மறுபடியும் ஒரு கூக்குரல் இடைவெளி விட்டு விட்டு கூ கூ என கூவியது மாமரத்துப் ...

கோலாகலமாகத் தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா

Posted: 04 Aug 2016 11:45 PM PDT

- ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை ஒத்திகை நிகழ்ச்சி. -------------------------------------- - உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 31-ஆவது ஒலிம்பிக் போட்டி இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்குகிறது. - பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறுவதால் இந்தப் போட்டி ரியோ ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டி 21-ஆம் தேதி நிறைவடைகிறது. ...

மரியாதையா கேட்கணும்…!!

Posted: 04 Aug 2016 06:56 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™