Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலுக்கு வந்தால் பழைய தங்க நகைகள் விற்போருக்கு இழப்பு

Posted: 04 Aug 2016 09:47 AM PDT

மும்பை: சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தால், நகை கடைகளில் பழைய நகைகளை விற்போர், தேய்மானம், சேதாரம் உள்ளிட்டவற்றுக்கான பிடித்தத்துடன், வரிக்கு நிகரான தொகையை யும் இழக்க நேரிடும்.

மத்திய அரசு, பல்வேறு வரிகளை, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரியின் கீழ் கொண்டு வர உள்ளது. இதனால், நாடு முழுவதும், பொருட்களின் விலை சீராக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.சில சட்ட நடைமுறைகளுக்கு பின், அடுத்தாண்டு ஏப்ரல் முதல், இந்த சட்டம் அமலுக்கு வரும் என தெரிகிறது. அப்படி அமலுக்கு வந்தால், பெட்ரோல், மது உள்ளிட்ட சில பொருட்களை தவிர,

கவர்னருக்கே அதிகாரம் : டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

Posted: 04 Aug 2016 09:56 AM PDT

புதுடில்லி: டில்லியில், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பலத்த அடி கொடுக்கும் வகையில், 'துணை நிலை ஆளுனரே டில்லியின் நிர்வாகத் தலைவர்' என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு பொறுப்பேற்றது முதல், அங்கு நிர்வாகம் தொடர்பாக, துணை நிலை ஆளுனர் நஜிம் ஜங்குடன், மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும், மத்திய அரசுடனும், கெஜ்ரிவால் அரசுக்கு சுமூகமான உறவு இல்லை. இந்நிலையில், டில்லி நிர்வாகம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகளை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு, டில்லி ஐகோர்ட்டில் பல்வேறு ...

பாலம் இடிந்து விழுந்தது குறித்து நீதி விசாரணை நடத்த முடிவு

Posted: 04 Aug 2016 10:04 AM PDT

ராய்கட்: ''மஹாராஷ்டிராவில், மஹத் அருகே, ஆற்று வெள்ளத்தில், பாலம் அடித்துச் செல்லப் பட்டது குறித்து, நீதி விசாரணை நடத்தப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, சமீப காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ராய்கட் மாவட்டத்தில்,சாவித்ரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு, மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலை யில் பிரிட்டிஷ் ஆட்சி ...

பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக அமைச்சர் ராஜ்நாத் விளாசல்! இந்தியாவை குறை கூறியதால் 'சார்க்' மாநாட்டில் கொந்தளிப்பு

Posted: 04 Aug 2016 10:41 AM PDT

இஸ்லாமாபாத்:பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அரசை, அந்த நாட்டிற்கே சென்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கண்டித்து உள்ளார்.

இந்தியாவை குறை கூறிய, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபை கண்டிக்கும் வகையில், ''பயங்கரவாதிகளை, தியாகிகளாக சித்தரிப்பதை ஏற்க முடியாது,'' என விளாசினார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன்களில் ஒருவனான, பர்ஹான் வானி, சமீபத்தில் கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து, காஷ்மீரில் பெரும் கலவரம் மூண்டது. பாகிஸ்தானிலும், இந்தியாவிற்கு ...

ஜி.எஸ்.டி., வரி விதிப்பை தமிழகமும் செயல்படுத்தும் என நம்பிக்கை:பொறுப்பான மாநிலம் என்றும் அருண் ஜெட்லி பாராட்டு

Posted: 04 Aug 2016 11:04 AM PDT

*''ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடு முழுவதும் நடைமுறைக்குவரும் போது, தமிழக அரசும், அதை கண்டிப்பாக செயல்படுத்தும்,'' என, மத்திய நிதியமைச் சரும்,பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், அறிமுகம் செய் யப்பட்ட, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. துவக்கம் முதலே இந்த வரி விதிப்பு முறைக்கு, எதிர்ப்பு தெரிவித்து வந்த அ.தி.மு.க., ராஜ்ய சபாவிலும் தன் எதிர்ப்பை வலுவாக தெரிவித்தது. ...

பாதிக்கப்பட்டவர்களை தூண்டி விடும் எதிர்கட்சிகள்: அகிலேஷ் யாதவ்

Posted: 04 Aug 2016 12:03 PM PDT

லக்னோ : உ.பி.,யில் நடக்கும் குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களை பா.ஜ.,வும் மற்ற எதிர்க்கட்சிகளும் துாண்டி விடுகின்றன என உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார்.
லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உ.பி.,யில், ஆங்காங்கே நடக்கும் குற்ற சம்பவங்களை, எதிர்க்கட்சியினர் மிகைப்படுத்தி கூறி வருகின்றனர். எந்த குற்றமாக இருந்தாலும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.,வும் மற்ற எதிர்க்கட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களை துாண்டி விடுகின்றன. ...

கருணாநிதி மீது கடும் புகார்: தி.மு.க., வெளிநடப்பு மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் ஜெ., ஆவேசம்

Posted: 04 Aug 2016 12:27 PM PDT

சென்னை:மதுவிலக்கு தொடர்பான முதல்வர் பேச்சுக்கு பதிலளிக்க, சபாநாயகர் வாய்ப்பு தராததை கண்டித்து, தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில், நடந்த விவாதம்:அமைச்சர் தங்கமணி: தமிழகத்தில், 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை, 1971ல் ரத்து செய்தவர் கருணாநிதி. அன்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்கள் பேசியபோது, 'இந்தியா முழுவதும் கடைகளை மூட ஒப்புக்கொண்டால், தமிழகத்தில் மூட ஏற்பாடு செய்கிறேன்' எனக்கூறியவர் கருணாநிதி.மதுவிலக்கு குறித்து என்னென்ன செய்தீர்கள்; என்னென்ன பேசினீர்கள் என்பது, உங்களுக்கும் தெரியும்; ...

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு: சபையில் அமளி

Posted: 04 Aug 2016 01:11 PM PDT

சென்னை:அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சுக்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதை சபைக் குறிப்பில் இருந்து நீக்க மறுத்த, சபாநாயகரை கண்டித்து கோஷம் எழுப்பியதால், சபையில் சிறிது நேரம் அமளி நிலவியது.

சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரசேகரன் பேசும் போது, ''எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நேற்று சபையை நடத்த விடாமல் செய்தனர்,'' என்றார். அதற்கு, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்து நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது ...

இழுபறிக்கு யார் காரணம்?:இளங்கோவன் புது தகவல்

Posted: 04 Aug 2016 01:25 PM PDT

''தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம் செய்யப்படாததற்கு, மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தான் காரணம்,'' என, முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.

ஐம்பது நாட்களுக்கு முன், தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து, இளங்கோவன் விலகினார். அதன்பின் சென்னை, சத்திய மூர்த்தி பவன், தொண்டர்கள் வருகையில்லா மல் வெறிச்சோடிக் கிடந்தது. ஆலோசனை:இந்நிலையில், நேற்று காலை, இளங்கோவன், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அது தெரிந்ததும், நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்தனர். அவர்களுடன், கட்சி நிலைமை குறித்துஆலோசித்தார்.பின், அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு ...

ரூ.60 கோடியில் சூரிய மின்சக்தி நிலையம்

Posted: 04 Aug 2016 01:37 PM PDT

சென்னை:''துாத்துக்குடி மாவட்டம், கயத்தார் காற்றாலை மின் நிலைய வளாகத்தில், 60 கோடி ரூபாய் செலவில், சூரியசக்தி மின் நிலையம் நிறுவப்படும்,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

சட்டசபையில், மின்துறை மானிய கோரிக்கை க்கு பதிலளித்து, அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள்:* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், மின்தடை பழுதுநீக்கும் சேவை மையங்கள், 28 வட்டங்களில், 1.50 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்* கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தென்சென்னை - 2 மின் பகிர்மான வட்டங்களில் ஏற்கனவே உள்ள குழுக்களுடன் கூடுதலாக, முன்னாள் ராணுவத்தினரை ...

இந்தியாவின் உருக்கு இறக்குமதி; சீனாவை விஞ்சிய தென்கொரியா

Posted: 04 Aug 2016 02:30 PM PDT

புதுடில்லி : இந்தியாவிற்கு, உருக்கு ஏற்றுமதி செய்வதில், தென் கொரியாவின் பங்கு அதிகம் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, ராஜ்யசபாவில், மத்திய உருக்கு துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய் கூறியதாவது:கடந்த, 2015 - 16ம் நிதி ஆண்டில், இந்தியாவிற்கு, சீனா, 41.25 லட்சம் டன் உருக்கு ஏற்றுமதி செய்தது. இதை தொடர்ந்து, கொரியா, 30.07 லட்சம் டன்; ஜப்பான், 21.60 லட்சம் டன்; ரஷ்யா, 3.64 லட்சம் டன் என்றளவில் உள்ளன.
இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின், முதல் காலாண்டில், இந்தியாவிற்கு உருக்கு ஏற்றுமதி செய்ததில் சீனாவை, தென் கொரியா பின்னுக்கு தள்ளி, ...

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வலைதளத்தில் குறை தீர்ப்பு பிரிவு

Posted: 04 Aug 2016 03:31 PM PDT

புதுடில்லி : சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கென பிரத்யேக வலைதள பிரிவை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய வர்த்தக துறை கூடுதல் செயலர் அலோக் வி.சதுர்வேதி கூறியதாவது: சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள நிறுவனங்கள், சில பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, குறைந்தபட்ச மாற்று வரி, டிவிடெண்டு வினியோக வரி ஆகியவற்றை நீக்குமாறு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான குறைகளை தெரிவிக்கவும், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™