Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாட்ஸ் அப் புதிய வசதியும்,ஐபோன் கணினி செய்திகளும்

Posted: 04 Aug 2016 10:54 AM PDT

**நாம் ios கருவிகளில் எடுக்கும் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவின் மூலம் காமிராவைப் பயன்படுத்தி அழகான புகைப்படமாக எடுக்கவும் உருவாக்கி கொள்ளவும் வந்திருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Microsoft Pix செயலி, கலர், போக்கஸ் போன்றவைகளை சரியான அளவில் தானாகவே மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது .இந்த செயலியை தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். **ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கவுள்ளனர். வாட்ஸ் அப்பில் பாடல்களை கேட்கவும், ...

வெற்றிகரமாக வெள்ளோட்டத்தை முடித்துக் கொண்ட சீனாவின் பிரமாண்ட பேருந்து.

Posted: 04 Aug 2016 10:50 AM PDT

வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட சீனாவின் பிரமாண்ட பேரூந்து. 60 கிமீ.வேகம்,300 பயணிகள், சூரிய சக்தியில் செயல்பாடு,பேரூந்தின் கீழேயே சாலையில் மற்ற வாகனங்கள் பயணிக்கும் வசதி.

திருந்தவே மாட்டார்களா?

Posted: 04 Aug 2016 10:45 AM PDT

இது இணைய  செய்தி................. நபரின் பெயர் குரு தீனதயாளன்(27) என்பதும், அவர் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள நொச்சிப்பாளையம் அவரின் சொந்த ஊர் என்பதும் தெரியவந்தது. படித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லமாமல் இருந்த குரு, பொழுது போக்கிறகாக் பேஸ்புக்கில் நேரம் கழித்துள்ளார். அதன்மூலம், அவருக்கு அறிமுகமன பிரியதர்சினி (25) என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன்பின் உல்லாச வாழ்க்கைக்கும் , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் ஆசைப்பட்ட அவர் பேஸ்புக் மூலம் இளம் ...

அப்படியா!!

Posted: 04 Aug 2016 10:31 AM PDT

♦ கிரிக்கெட் மட்டை வில்லோ மரத்தால் தயாரிக்கப்படுகிறது. ♦ நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன. ♦ போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு நீயூசிலாந்து. ♦ சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் பிட்மேன். ♦ இந்தியாவின் தேசிய காலண்டர் சக வருட காலண்டர் ♦ கபடி விளையாட்டு தோன்றிய இடம் இந்தியா. ♦ ஆக்டோபஸுக்கு மூன்று இதயங்கள் உள்ளன. ♦ உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் டாக்டர் இராதாகிருஷ்ணன். ♦ தக்காளியின் பிறப்பிடம் அயர்லாந்து. ♦ ...

உன் தாரம்

Posted: 04 Aug 2016 07:11 AM PDT

எடை போட்டு 
காதல் செய்ய
நான் 
ஒன்றும் தராசல்ல
உன் தாரம்

படிக்கல்லாக்கி பார்
நம் இதயத்தை 
முட்களை தாண்டியும்
சமநிலையாகும் 
நம் வாழ்க்கை ...!

முற்று புள்ளி ...!

Posted: 04 Aug 2016 06:50 AM PDT

விடிந்தால் நினைவு தொல்லை
அடைந்தால் கனவு தொல்லை
இடைபட்ட காலத்தில் 
இதயத் துடிப்பு தொல்லை

அய்யோ ....
என்ன செய்வேன்
ஓரு பக்கம்
அத்தனைக்கும் ஆசைப்படு 
என்கிறது ஓரு கூட்டம்
ஆசையே அழிவுக்கு காரணம்
என்கிறது இன்னொரு கூட்டம்

இரண்டில் இருந்து
தப்பிக்க 
இதய மாற்றம் புரிகிறேன்
இவளோடு சேர்த்து எத்தனையோ 
அத்தனைக்கும் 
முற்று புள்ளி வைக்க ...!

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு

Posted: 04 Aug 2016 03:58 AM PDT

- ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு ரியோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. - ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. - இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். - ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். - ------------------------------

அமைப்பு

Posted: 04 Aug 2016 03:48 AM PDT

– நிதியுதவி கேட்டு எழுதியே கழிகிறது காலம் – நன்கொடையாளர்களுக்கு நன்றி சொல்லி தீரவில்லை இன்னும் – குறுக்குத்துறை வெள்ளம் கொண்டு போயிருக்கக் கூடாதா ஆதிநாளிலேயே – காட்டுத்தீ கடலலை கன்றுக்குட்டி – புட்டார்த்தி அம்மன் பேச்சை பொழுதுக்கும் கேட்டு வளர்ந்த பிள்ளை – ஜெயிக்க வேண்டும் சிம்மாசனம் வேண்டும் ஜிலு ஜிலுவென்று காற்று வீச வேண்டும் – ஜிகில் ஜிகில் ஜிகில் ஜிகில் ஜிகில் ஜிகில் – எந்த நந்தியும் சிவன் சொல்படிதான் – —————————- -விக்ரமாதித்யன் பாதி இருட்டு பாதி வெளிச்சம் ...

அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து

Posted: 04 Aug 2016 03:46 AM PDT

- அமெரிக்காவில் பல டேலண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அது போல அமெரிக்காவின் பிரபலமான அமெரிக்க காட் டேலண்ட் (America's Got Talent) என்ற பிரபல லைவ் ஷோ தனியார் தொலைகாட்சி ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை ஒளிபரப்பபட்டது. இதில் தங்களது திறமையை நிரூபிக்க, ஸ்டண்ட் நடிகர் ரியான்ஸ்டாக் மற்றும் அவருடன் இணைந்து ஆம்பர்லின் பல சாகசங்களை செய்து காட்டினர். இதில் ஒரு பகுதியாக ரியான்ஸ்டாக் ஒரு நீண்ட கம்பியை எடுத்து தனது வாயில் உள்ளே திணித்தார், அதன் முடிவு பகுதியை தன் வாயில் வைத்து, அதை பார்த்து ...

பதஞ்சலி பாதங்களில் மிதிபடுகிறார்...!!

Posted: 04 Aug 2016 03:43 AM PDT

* பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகள் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற கட்சிகளாகும். தியானம் யோகம், வழிபாடு போன்றவற்றை முதன்மைப்படுத்தி செயல்படுகின்ற கட்சிகளாகும். இவர்கள் ஆன்மீகக் குருமார்களை மிகவும் போற்றி வணங்குகின்றவர்கள். சமீப காலமாக, வடஇந்தியாவின் மகாகுரு என்று போற்றப்படுகின்ற யோகி பாபா ராம்தேவ், அவர்கள் நடத்தி வரும் நிறுவனம் உற்பத்தி செய்கி்ற ஆயுர்வேத மருத்துவம் மற்றும் உணவுப் பொருள்கள் "பதஞ்சலி" என்ற பெயரை இணைத்துக் கொண்டு பல பொருட்கள் வெளிவருகின்றன. அவைகள் வடஇந்தியாவில் மிகப் பெரிய ...

3 கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் வைத்திருந்தும் சாலை ஓரத்தில் உணவு கடை நடத்தும் ஆசிரியை

Posted: 04 Aug 2016 03:36 AM PDT

- குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலை ஓரத்தில் ஆசிரியை ஒருவர் சென்னா மசாலா, ரொட்டி, பானி பூரி போன்ற சிற்றுண்டிகளை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று கோடி மதிப்புடைய வீடும், எஸ்யூவி கார்களும் உள்ளன. ஆனாலும் குடும்பத்தின் பொருளாதாரா சூழ்நிலைக்காக இந்த வியாபாரத்தை செய்து வருகிறார். இவரது கணவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் இடிப்பு பகுதி அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரால் இனிமேல் எழுந்து நடக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ...

நான் யார் என்னை பற்றி

Posted: 04 Aug 2016 01:45 AM PDT

பெயர்: ஹா.இக்தித்தார் அஹம்மது சொந்த ஊர்: தேரிழந்தூர்( கம்பர் பிறந்த ஊர் ) ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கல்வியை பற்றிய முக்கியத்துவ பதிப்பை தேடும்பொழுது ஈகரை பற்றி அறிந்தேன் பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது , கவிதை எழுதுவது , உடற்பயிற்சி , தற்காப்புக்கலை, தொழில்: இப்போதைக்கு பொது சேவகன் மற்றும் விவசாயம் பிற்காலத்தில் மக்களின் ஊழியன் (upsc) மேலும் என்னைப் பற்றி: அதிகமாக அதை பற்றி தான் ஓவ்வெருநாளும் அறிந்துகொன்டே இருக்கிரேன் தெரிந்ததும் கூறுகிறேன்

துபாய் விமான தீ விபத்தில் 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் வீரமரணம்!

Posted: 04 Aug 2016 01:43 AM PDT

திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் ஈ.கே.521 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. சுமார் 4 மணி நேர பயணத்தில் அமீரக நேரப்படி மதியம் 12.50 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 2.20 மணி) துபாயில் தரை இறங்க திட்டமிடப்பட்டு ...

bluray -tamil movies தரம்மிக்க திரைப்டங்கள் பார்க்க...

Posted: 04 Aug 2016 01:41 AM PDT

bluray இல்  தமிழ் படங்கள் பார்க்க தமிழ் யோகி எனும் வெப் சைட் உதவுகிறது தமிழ்யோகி டொட்  மீ

(yogi )  எனும் பக்கம் சென்றுபார்க்கலாம்( .me )

காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி

Posted: 04 Aug 2016 01:12 AM PDT

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் காந்த தத்துவம் மின் நூல்.... பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

உன் மௌனம் ...!

Posted: 03 Aug 2016 11:56 PM PDT

சில நேரங்களில் 
உன் மௌனம் 
மரியாதையாக இருந்தாலும்
பல நேரங்களில் 
ஏங்கும் ஏக்கம் 
அவஸ்தையாக உள்ளது ...!

அதிக மகிழ்ச்சியாக இருப்பது நீயா, நானா…?!

Posted: 03 Aug 2016 07:27 PM PDT

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? – கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான்தான்!!! மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே…. – கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்.. – (மறுநாள் இரவு) கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண? மனைவி: அதிகாலை பனித்துளியோடு ...

புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Posted: 03 Aug 2016 06:56 PM PDT

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபரை துணை ஆய்வாளர் தன் கால்களுக்கு மசாஜ் செய்ய வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதனை அடுத்து துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் மோகன்லால்கஞ்ச் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றிய ராம் யக்ய யாதவினை மூத்த போலீஸ் சூப்பிரெண்டு மஞ்சில் சைனி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகம் ஒன்றில் வெளியான வீடியோவில், காவல் நிலையத்திற்குள் வைத்து துணை ஆய்வாளர் ராமிற்கு ஒரு ...

4,600 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதை

Posted: 03 Aug 2016 06:49 PM PDT

- சீனாவில் உள்ள டியான்மென் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 4,600 அடி உயரத்தில் கண்னாடி நடைபாதை அமைப்பட்டுள்ளது. இந்த நடைபாதை கடந்த திங்கட்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் பயணம் இருக்கும். மேலும் அந்த மலை பகுதியின் இயற்கையை மக்கள் ரசிப்பதற்காக இந்த கண்ணாடி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. – தமிழ் வெப்துனியா

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே”- ஒரு நீச்சல் வீராங்கனையின் நிஜ சாகசம்!

Posted: 03 Aug 2016 06:48 PM PDT

- சிரியத் தலைநகர் டமாஸ்கசில் இருந்து படகு ஒன்று துருக்கி நோக்கி நம்பிக்கையுடன் புறப்படுகிறது. படகில் 20 பேர் இருக்கின்றனர். தாய்நாட்டைப் பிரிந்து செல்லும் சோகம் அவர்கள் முகத்தில் அப்பிக் கிடக்கிறது. – சிரியாவில் தொடர்ந்து வசித்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வாழ்வியல் ஆதாரமும் கிடையாது. படகில் ஏறுவதும் மரணத்தை தழுவிக் கொள்வதற்கு சமம்தான். ஆயினும் துணிந்து கிளம்பி விட்டனர். – மத்திய தரைக்கடலின் ஆழமான பகுதிகளை, ஓங்கி எழுந்த அலைகளையெல்லாம் சமாளித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது படகு. – இரவு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™