Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'நான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல' 'கெத்து' காட்டிய ஜனாதிபதி

Posted: 31 Aug 2016 08:43 AM PDT

புதுடில்லி:மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்காமல், ஒப்புதலுக்காக தனக்கு அனுப்பப்பட்ட அவசர சட்டம் குறித்து, ஜனாதி பதி பிரணாப் முகர்ஜி அதிருப்தி தெரிவித்து உள்ளார். 'இனி இப்படி செய்யக் கூடாது' என, அந்த கோப்பில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

எதிரி சொத்து சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, லோக்சபாவில் கடந்த ஆண்டு நிறை வேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப் பால், இந்த மசோதா, ராஜ்யசபாவில் நிலுவை யில் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசு, அவசர சட்டத்தை இயற்றியது.கடந்த மேமாதம்,இந்த அவசர ...

கடந்த ஆண்டில், ரூ.8,210 கோடி சொத்துக்கள் திருட்டு!: மீட்க முடியாமல் மாநில போலீசார் திணறல்

Posted: 31 Aug 2016 09:26 AM PDT

புதுடில்லி:நாட்டில், கடந்த ஆண்டில் மட்டும், 8,210 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயுள்ளன; இதில், 1,350 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டுள் ளன. குற்றவாளிகளைப் பிடிப்பது அதிகரித்தா லும், பொருட்களை மீட்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களை, என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 1953ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது; அதன்படி, 2015ம் ஆண்டுக்கான அறிக்கையை சமீபத்தில், உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.பெரு நகரங்கள் வாரியாகநாடு முழுவதும் உள்ள, 36 ...

தொடர்கிறது ரேஷன் பருப்பு தட்டுப்பாடு : ரூ.250 கோடிக்கு கொள்முதல்

Posted: 31 Aug 2016 09:32 AM PDT

ரேஷனில் வழங்க, 250 கோடி ரூபாய்க்கு பருப்பு வகைகளை வாங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

ரேஷன் கடைகளில், ஒரு கிலோ கனடா மஞ்சள் பருப்பு, உளுத்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங் களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது. தற்போது, ரேஷன் கடைகளில், பருப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'ரேஷன் கடைகளில், அரிசி மட்டுமே முறையாக வழங்கப் படுகிறது; எப்போது போனாலும், 'பருப்பு வர வில்லை' என, ...

முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை, சலுகைகள் அளிக்கப்படும்

Posted: 31 Aug 2016 09:48 AM PDT

புதுடில்லி: சிங்கப்பூரில் உள்ளது போல், இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்ட வருக்கு, இந்தியக் குடியுரிமை உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அன்னிய முதலீட்டை ஈர்த்து வரும் அதே நேரத்தில், இந்தியாவில் முதலீடு செய்யும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அளித்து வருகிறது.
அதன்படி, இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு இந்திய குடியுரிமை உள்ளிட்ட சலுகைகள் அளிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை ...

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் நாளை ஸ்தம்பிக்கும்? தொழிற்சங்கங்கள் பங்கேற்பதால் பஸ்கள் ஓடாது?

Posted: 31 Aug 2016 10:15 AM PDT

அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிற்சங்கள் பங்கேற்ப தால், பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மய மாக்கக் கூடாது; புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.என்.டி.யூ.சி., - எச்.எம்.எஸ்., - சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, பல தொழிற்சங்கங்கள் இணைந்து, நாளை, நாடு தழுவிய வேலை நிறுத்தம் ...

விசாரணை அறிக்கை தாக்கல் சிக்கலில் ராபர்ட் வாத்ரா

Posted: 31 Aug 2016 10:21 AM PDT

சண்டிகர்:காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு சொந்தமான நிறுவனம் மீதான நிலமோசடி குறித்து விசாரித்த நீதிபதி திங்க்ரா, ''நில பேரத்தில் மோசடி நடந்துள்ளது; சம்பந்தபட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்,'' என, கூறியுள்ளார்; இது, வாத்ராவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி உள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, 2008ல் குர்கான் பகுதியில் நிலம் வாங்கியதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.குர்கான் பகுதியில், 3.5 ஏக்கர் நிலத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ...

விடைபெற்றார் ரோசய்யா மஹா., கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

Posted: 31 Aug 2016 10:24 AM PDT

புதுடில்லி:தமிழக கவர்னராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்த, ரோசய்யா, 83, பதவிக் காலம், நேற்று முன்தினம் முடிந்தது. அதை தொடர்ந்து, 'மஹாராஷ்டிர கவர்னர் வித்யா சாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்., மூத்த தலைவரும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ரோசய்யா, 2011ல், தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று பேசப்பட்டது. அதேநேரத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த, மூத்த பா.ஜ., தலைவர்சங்கரமூர்த்தி, புதிய ...

ஆவணப்பதிவு இனி கணினிமயம் சட்டசபையில் ஜெ., அறிவிப்பு

Posted: 31 Aug 2016 10:27 AM PDT

சென்னை:''பதிவுத் துறையில், ஆவணப்பதிவு நடைமுறைகள் அனைத்தும், கணினி மயமாக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில், 110வது விதியில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:* அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த படி, வணிகர் நல வாரியத்தின் தொகுப்பு நிதி, ஐந்து கோடி ரூபாயில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
* வணிகர்கள், தங்களுடைய மாதாந்திர ரிட்டன் தாக்கலை, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய உதவியாக, 228 வணிக வரி அலுவலகங்களில்,
உதவி மையம் ஏற்படுத்தப்படும்; இச்சேவைக்கு வணிகர்களிடம் இருந்து, எவ்வித கட்டணமும் ...

ஸ்டாலின் குடும்பத்தினரின் பக்தி அமைச்சர் பேச்சால் அமளி

Posted: 31 Aug 2016 10:35 AM PDT

சென்னை:''எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர், கோவில் கோவிலாக போவது ஏன்?'' என, அமைச்சர் செல்லுார் ராஜு கூறியதற்கு, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில், அமளி ஏற்பட்டது.

சட்டசபையில், இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:தி.மு.க., - ராதாமணி: 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்; எதனைக் கண்டான், கடவுளைப் படைத்தான்' என பாடிய கண்ணதாசன், பின்னாளில், 'ஆட்டுவித்தால் ஆடாதவர் யாரோ' என பாடினார். பக்தி, பங்குச்சந்தை போல் ஏறியும், இறங்கியும் வருகிறது.அமைச்சர், செல்லுார் ராஜு: எதிர்க்கட்சித் தலைவரின் ...

7 நகரங்களில் வாகன சோதனை மையங்கள்

Posted: 31 Aug 2016 11:45 AM PDT

புதுடில்லி : இந்தியாவில், ஏழு முக்கிய நகரங்களில், வாகன சோதனை மையங்களை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனங்களை தயாரிக்குமாறு, மத்திய அரசு, மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வாகனங்களில் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, வாகன சோதனை மையங்கள் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மானேசர், பெங்களூரு, ரேபரேலி, சில்சார், இந்துார், புனே, சென்னை ஆகிய ஏழு நகரங்களில், 3,700 கோடி ரூபாய் செலவில், வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
...

புதிய ரயில்களுக்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கா 200 கோடி டாலர்கள் ஒப்பந்தம்

Posted: 31 Aug 2016 12:10 PM PDT

வாஷிங்டன்: அமெரிக்க ரயில் போக்குவரத்து நிறுவனம் ஆம்டிராக் தனது புதிய 28 புதிய அதிநவீன ரயி்ல்களுக்காக பிரான்ஸ் நாட்டின் பிரபல பன்னாட்டு ரயில் தயாரிப்பு நிறுவனமான ஆல்ஸ்டாமுக்கு 200 கோடி டாலர் வழங்கியுள்ளது.இந்த புதிய ரயில்கள் வாஷங்டன், நியூயார்க் மற்றும் பாஸ்டன் நகர்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்கள் அனைத்தும் நியூயார்க் அருகே உள்ள பிரான்ஸ் நாட்டின் ஹோர்னெல்
ஆல்ஸ்டாம் யூனிட்டில் வடிவமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் சுமார் 400 பேர் வரை பயணம் செய்ய இயலும். மணிக்கு சுமார் 300 கி.மீ வரை ஓடக்கூடியவை. தற்போது அமெரிக்காவில் ஓடக் கூடிய ...

பார்லி.யில் கண்டன தீர்மானம்: பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் பதவி பறிப்பு

Posted: 31 Aug 2016 01:23 PM PDT

பிரேசிலியா: முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் மீது பார்லி.யில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவரது அதிபர் பதவி பறிக்கப்பட்டது.தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலின் அதிபராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தில்மா ரூசெப்,68 உள்ளார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேசிய நிதி நிலை அறிக்கையை திருத்தி முறைகேடு செய்து நாட்டிற்கு பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் பார்லி. சென்ட் சபை, தில்மா ரூசெப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு ...

50 ஆண்டுக்கு பின் அமெரிக்கா-கியூபா இடையே முதன் முறையாக விமான சேவை

Posted: 31 Aug 2016 03:29 PM PDT

சான்டா கிளாரா: 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா -கியூபா இடையே முதன்முறையாக வர்த்தக ரீதியான விமான போக்குவரத்து துவங்கியது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானம் கியூபா சென்றடைந்தது.

அமெரிக்கா-கியூபா நாடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பகைமை கொண்டிருந்தன. தற்போது இருநாடுகளும் பகைமை மறந்து நட்பு நாடுகளாயின. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா , கியூபா சென்று அந்நாட்டுஅதிபர் ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. பின்னர் இரு நாடுகளிடையே தூதரகங்கள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதன்முறையாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™