Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காரைக்குடியில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

Posted: 31 Aug 2016 01:31 PM PDT

காரைக்குடியில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காரைக்குடி நகராட்சி பள்ளியில் மூலிகை உணவுத் திருவிழா

Posted: 31 Aug 2016 01:31 PM PDT

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உணவுத்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் தயாராகும் விநாயகர் சிலைகள்

Posted: 31 Aug 2016 01:30 PM PDT

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூரில் தயாரான விநாயகர் சிலைகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீனவச் சிறுவன் மயங்கி விழுந்து சாவு

Posted: 31 Aug 2016 01:29 PM PDT

தனுஷ்கோடி கடலில் சங்கு குளிக்கச் சென்ற மீனவச் சிறுவன் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  

மீண்டும் தலைவர் படமாம்..!

Posted: 31 Aug 2016 01:27 PM PDT

மீண்டும் தலைவர் படமாம்..!

இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பார்சல் பறிமுதல்

Posted: 31 Aug 2016 01:24 PM PDT

தனுஷ்கோடி கடல் பகுதியில் அமைந்துள்ள நான்காம் மணல்தீடையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா பார்சலை கடலோரக் காவல் படையினர் மீட்டு ராமேசுவரம் சுங்கத்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

கல்லூரியில் வேலை வாய்ப்புக் கருத்தரங்கம்

Posted: 31 Aug 2016 01:24 PM PDT

திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் புதன்கிழமை வேலை வாய்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 31 Aug 2016 01:23 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த ஜூலை மாதம் பள்ளி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்று போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் புதன்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மானாமதுரை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகள் காளீஸ்வரி(12). மேலநெட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த அம் மாணவியை பக்கத்து வீட்டில் வசிக்கும் சுப்ரமணியன் மகன் கார்த்திக்(25) கடந்த ஜூலை 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வரும்போது பைக்கில் கடத்திச் சென்றார். காட்டுக்குள் அவரைக் கொண்டுசென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்த கார்த்திக் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

முதுகுளத்தூர் பேரூராட்சி கடைகள் மாத வாடகை ரூ.70 ஆயிரத்துக்கு ஏலம் எடுப்பு

Posted: 31 Aug 2016 01:23 PM PDT

முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான 5 கடைகள் புதன்கிழமை ஏலம் விடப்பட்டன. அதில் ஒரு கடை மாத வாடகை ரூ.70 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்

Posted: 31 Aug 2016 01:22 PM PDT

இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவது என புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண் கைது

Posted: 31 Aug 2016 01:21 PM PDT

ராஜபாளையத்தில் ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீஸார் செவ்வாய்கிழமை  கைது செய்து நகையை மீட்டனர்.

சாத்தூரில் நகர்மன்ற இறுதிக் கூட்டம்

Posted: 31 Aug 2016 01:21 PM PDT

பதவிக்காலம் முடிவடைவதால் சாத்தூரில் நகர்மன்ற இறுதிக் கூட்டம் தலைவர் டெய்சிராணி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையாளர் நாகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

அருப்புக்கோட்டையில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 31 Aug 2016 01:19 PM PDT

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வுப் பேரணி சென்றனர்.

திருத்தங்கல் நகர் மன்றக் கூட்டம்

Posted: 31 Aug 2016 01:17 PM PDT

திருத்தங்கல் நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் லட்சுமி கணேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பொன்சக்திவேல் முன்னிலை வகித்தார்.

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: சிவகாசி மாணவருக்கு தங்கப் பதக்கம்

Posted: 31 Aug 2016 01:14 PM PDT

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சிவகாசி ஏ.ஏ.ஏ.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் பாரி  தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என அக்கல்லூரி முதல்வர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

மழை இல்லாததால் விவசாயப் பணிகள் பாதிப்பு

Posted: 31 Aug 2016 01:13 PM PDT

தமிழகத்தில் பல இடங்களில் பரவலலாக மழை பெய்தும் ராஐபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சிலவாரங்களாக கடும் வெயில் வாட்டி எடுத்துவருகிறது.

பேருந்து மோதி பள்ளி மாணவர் சாவு

Posted: 31 Aug 2016 01:09 PM PDT

விருதுநகர் அருகே உள்ள கருப்பம்பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன்கள் மாரிமுத்து(16), நாகராஜ்(14). மாரிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறார். நாகராஜ் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை காலை மாரிமுத்து ஓட்டப் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவரை பின் தொடர்ந்து நாகராஜ் சைக்கிளில் வந்துள்ளார். விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையின் அருகே உள்ள அணுகு சாலையில் மாரிமுத்து ஓடியுள்ளார். பின்பு, நான்கு வழிச்சாலையைக் கடந்து எம்.ஜி.ஆர் சாலைக்குச் சென்றுள்ளாராம்.

வேலைநிறுத்த விளக்க பிரசார கூட்டம்

Posted: 31 Aug 2016 01:07 PM PDT

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 2-இல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த விளக்க பிரசார கூட்டம் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை சேத்தூரில்  நடைபெற்றது.

கல்வித் தரம் ஆய்வு: தலைமை ஆசிரியர் கூட்டம்

Posted: 31 Aug 2016 01:07 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளிகளின் கல்வித் தரத்தை ஆய்வு செய்வதற்கான தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்கள் போராட்டம்

Posted: 31 Aug 2016 01:07 PM PDT

ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தனர்.

உத்தமபாளையத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்

Posted: 31 Aug 2016 01:06 PM PDT

உத்தமபாளையத்தில் புதன்கிழமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூய்மையை கடைபிடிக்கும் பள்ளிகளுக்கு மாதந்தோறும் பரிசு வழங்கப்படும்: ஆட்சியர்

Posted: 31 Aug 2016 01:03 PM PDT

பள்ளி வளாகத்தை தூய்மையாக வைப்பதோடு, கழிப்பறை பயன்பாடு குறித்து சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளிகள் வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

தேனி பாரஸ்ட் சாலையில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

Posted: 31 Aug 2016 01:02 PM PDT

தேனி, பாரஸ்ட் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் உள்ள சாலையோர மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட எல்லையில் விவசாயிகள் சாலை மறியல்

Posted: 31 Aug 2016 01:02 PM PDT

பழனியை அடுத்துள்ள குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போடியில் விநாயகர் சிலைகள் அமைக்கும் இடங்களை தனிப்பிரிவு போலீஸார் ஆய்வு

Posted: 31 Aug 2016 01:01 PM PDT

போடியில் விநாயகர் சிலைகள் அமைக்கும் இடங்களில் தனிப்பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Posted: 31 Aug 2016 01:01 PM PDT

உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Posted: 31 Aug 2016 01:00 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கோயில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.

குழந்தைக்கு சூடு வைத்த பெண் கைது

Posted: 31 Aug 2016 01:00 PM PDT

தேனி அருகே செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் முதுகில் சூடு வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு

Posted: 31 Aug 2016 12:59 PM PDT

கடமலைக்குண்டை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவரும், இவரது நண்பர் கண்ணனும், கடந்த வெள்ளிக்கிழமை வருசநாட்டில் இருந்து கடமலைக்குண்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த மழை: குடிநீர்த் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்வு

Posted: 31 Aug 2016 12:59 PM PDT

கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குடிநீர்த் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரியை தாக்க முயற்சி: ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸில் புகார்

Posted: 31 Aug 2016 12:59 PM PDT

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அப்புறப்படுத்த முயன்ற அதிகாரியை தாக்க முயன்றவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் முன்னாள் எம்எல்ஏ: மாவட்ட நிர்வாகத்துக்கு 30 நாள் கெடு

Posted: 31 Aug 2016 12:58 PM PDT

திண்டுக்கல் அருகே புதன்கிழமை குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டிவிஎஸ் ஸ்ரீசக்ரா- சாஸ்த்ரா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 31 Aug 2016 12:57 PM PDT

தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனம்- சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பழனியில் நகராட்சி உறுப்பினர் உண்ணாவிரதம்

Posted: 31 Aug 2016 12:57 PM PDT

பழனியில் எம்பி. நிதியில் தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்கக் கோரி புதன்கிழமை நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடியில் தேவாலயத்துக்குள் புகுந்து: ஆசிரியையை வெட்டிக் கொன்று இளைஞர் தற்கொலை

Posted: 31 Aug 2016 12:55 PM PDT

தூத்துக்குடியில் புதன்கிழமை, தேவாலயத்துக்குள் புகுந்து ஆசிரியையை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கொடைக்கானல் அருகே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

Posted: 31 Aug 2016 12:55 PM PDT

கொடைக்கானல் அருகே புதன்கிழமை வாழைத் தோட்டத்துக்குள் மீண்டும் காட்டுயானை புகுந்து சேதப்படுத்தியது.

கணவாய்பட்டியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 31 Aug 2016 12:55 PM PDT

வத்தலகுண்டு ஒன்றியம் கணவாய்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகாசி அருகே கல்லூரிப் பேருந்து - ஆட்டோ மோதல்: 4 பேர் சாவு

Posted: 31 Aug 2016 12:55 PM PDT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை மாலை கல்லூரிப் பேருந்தும் ஆட்டோவும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

எல்லைப் போராட்டத் தியாகிகள் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தக் கோரிக்கை

Posted: 31 Aug 2016 12:54 PM PDT

தமிழக எல்லை மீட்பு தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.10ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் மொழி வளர்ச்சி தமிழக எல்லைக் காவலர் தியாகிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்தலகுண்டுவில் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கும் விழா

Posted: 31 Aug 2016 12:54 PM PDT

வத்தலகுண்டு நகரில் பொருத்துவதற்காக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வழங்கும் விழா அங்குள்ள தனியார் மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொது வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவு: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

Posted: 31 Aug 2016 12:54 PM PDT

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (செப்.2) நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, ஆளும் கட்சி உள்பட அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

வத்தலகுண்டுவில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரம்

Posted: 31 Aug 2016 12:53 PM PDT

வத்தலகுண்டு, வேடசந்தூர், பழனி ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி கடந்த சில நாள்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேனியில் கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 31 Aug 2016 12:53 PM PDT

தேனியில் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில் புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசிய கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நத்தம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 31 Aug 2016 12:53 PM PDT

நத்தம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தரமணியில் உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி மையம்

Posted: 31 Aug 2016 12:53 PM PDT

சென்னை தரமணியில் ரூ.20 கோடி செலவில், உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி மையம் நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

100 நாள்களில் 47 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதிய உத்தரவுகள்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Posted: 31 Aug 2016 12:52 PM PDT

கடந்த 100 நாள்களில் மட்டும் 47 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.2.5 கோடி மதிப்பில் 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Posted: 31 Aug 2016 12:50 PM PDT

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூரில் தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்புள்ள 10 டன் செம்மரக் கட்டைகளை ஆந்திர மாநில போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். திருப்பதியை அடுத்த சதுரகிரி பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு செம்மரம் கடத்தல் வழக்கில் கைது

தங்கம் பவுனுக்கு ரூ.104 குறைவு

Posted: 31 Aug 2016 12:50 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.23,504-க்கு விற்பனையானது.

மம்தா எழுப்பும் உரிமைக் குரல்!

Posted: 31 Aug 2016 12:49 PM PDT

இந்திய அரசமைப்புச் சட்டம் "கூட்டாட்சி' என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லையே தவிர, அதை உருவாக்கியவர்கள், இந்தியாவுக்குக் கூட்டாட்சி அடிப்படையிலான நிர்வாக அமைப்பைத் தருவதைத்தான் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். சுதந்திரம் அடைந்த முதல் 20 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்ததால் கூட்டாட்சி பற்றியோ, மாநில உரிமைகள் குறித்தோ சர்ச்சைகள் எழவில்லை.

தலையாட்டி பொம்மைகள்!

Posted: 31 Aug 2016 12:47 PM PDT

அலுவலகங்களில் சிலர், தமது வேலையினை திருத்தமாகச் செய்வர். தானுண்டு - தம் வேலையுண்டு என்றிருப்பர். பிறர் பற்றி பேசாது - குறை கூறாது இருப்பர். குறிப்பாக, அவர்களது மேலாளருக்கு கூழைக் கும்பிடு போடமாட்டார். அதனால், அவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது.

தலைக்கவசம் உயிர்க்கவசம்

Posted: 31 Aug 2016 12:44 PM PDT

"தலைக்கவசம் உயிர்க்கவசம்', "இருக்கை பெல்ட்டை கட்டாயம் அணிய வேண்டும்', "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது' போன்ற வாசகங்கள் மூலம் வாகன விபத்து உயிரிழப்புகளை தவிர்க்கும்விதமாக போக்குவரத்துத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதிமுக ஆட்சியின் நூறு நாள்கள்: பேரவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

Posted: 31 Aug 2016 12:39 PM PDT

அதிமுக ஆட்சியின் நூறு நாள்களை ஒட்டி, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பேரவை மண்டபம் முழுவதும் மல்லிகை, ரோஜா மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வணிகர் நல வாரியத்தின் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்வு

Posted: 31 Aug 2016 12:37 PM PDT

வணிகர் நல வாரியத்தின் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவையில் 110-ஆவது விதியின் கீழ், முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பேரவையில் இன்று...

Posted: 31 Aug 2016 12:36 PM PDT

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (செப்.1) கேள்வி நேரத்துக்குப் பிறகு, வருவாய், இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்புத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

4 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் எஸ்.வளர்மதி

Posted: 31 Aug 2016 12:35 PM PDT

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 4 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி அறிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மானியக்

டெங்கு காய்ச்சல்: மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted: 31 Aug 2016 12:35 PM PDT

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

Posted: 31 Aug 2016 12:34 PM PDT

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவித்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை

Posted: 31 Aug 2016 12:34 PM PDT

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

110-ஆவது விதியின் கீழ் அறிக்கை: திமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு

Posted: 31 Aug 2016 12:33 PM PDT

சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டபோது, திமுக உறுப்பினர்கள் அவையைப் புறக்கணிப்பு செய்தனர்.

சூரிய சக்தி மோட்டார் பம்ப்செட்டுகளுக்கு 80% மானியம்

Posted: 31 Aug 2016 12:33 PM PDT

தமிழகத்தில் 10 குதிரைத் திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கு 80 சதவீத மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவு இல்லை

Posted: 31 Aug 2016 12:32 PM PDT

பள்ளிக் கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அளவு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறைந்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கவலை தெரிவித்தார்.

மக்களவைத் தொகுதிகளை தத்தெடுக்க பாஜக மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு ஷா அறிவுரை

Posted: 31 Aug 2016 12:31 PM PDT

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஒவ்வொருவரும், ஒரு மக்களவைத் தொகுதியைத் தத்தெடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: வங்கதேச பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை

Posted: 31 Aug 2016 12:30 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் 12 பேரை பலி கொண்ட ஷிரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பலூச்சி மொழி செய்தி சேவையை வலுப்படுத்த அகில இந்திய வானொலி திட்டம்

Posted: 31 Aug 2016 12:30 PM PDT

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ்தானைச் சேர்ந்த மக்களால் பேசப்படும் பலூச்சி மொழியின் செய்தி சேவையை மேலும் வலுப்படுத்த அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளது.

காஷ்மீரில் மீண்டும் மோதல்: சிறுவன் பலி

Posted: 31 Aug 2016 12:30 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே புதன்கிழமை மீண்டும் ஏற்பட்ட மோதலில் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவதற்கு தீவிர முயற்சி: அமெரிக்கா உறுதி

Posted: 31 Aug 2016 12:29 PM PDT

அணு சக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

"இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தால் சீனா அச்சமடையத் தேவையில்லை'

Posted: 31 Aug 2016 12:29 PM PDT

இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தத்தால் சீனா அச்சமடையத் தேவையில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

மீண்டும் வெளியாகும் "நேஷனல் ஹெரால்டு' ஆசிரியராக நீலப் மிஸ்ரா நியமனம்

Posted: 31 Aug 2016 12:29 PM PDT

காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான "நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் மீண்டும் வெளியாகவுள்ளது.

ஜிஎஸ்டி மசோதாவுக்கு கோவா சட்டப்பேரவை ஒப்புதல்

Posted: 31 Aug 2016 12:28 PM PDT

சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பற்கு ஏதுவாக, நாட்டின் 15-ஆவது மாநிலமாக, கோவா மாநில அரசு அந்த மசோதாவுக்கு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஓபிசி கிரீமிலேயர் விவகாரம்: இந்த ஆண்டு இறுதியில் ஆய்வுக்குட்படுத்த முடிவு

Posted: 31 Aug 2016 12:28 PM PDT

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீடு முறையில் பின்பற்றப்படும் கிரீமிலேயர் விதிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் ஆய்வுக்குட்படுத்த இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஓபன்: இரண்டாவது சுற்றில் முர்ரே, செரீனா

Posted: 31 Aug 2016 12:27 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ரியோ ஒலிம்பிக்: இந்திய அணிக்கு தலா ரூ.1 லட்சம்நடிகர் சல்மான் கான் வழங்குகிறார்

Posted: 31 Aug 2016 12:25 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினருக்கு தலா ரூ.1,01,000 தொகையை பாலிவுட் நடிகர் சல்மான் கான் அன்பளிப்பாக வழங்குகிறார்.

ஐஎஸ்எல் சென்னை அணியில் தொடரும் ஜாகீர்

Posted: 31 Aug 2016 12:25 PM PDT

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் சென்னையின் எஃப்சி அணியில் விளையாடி வரும் ஜாகீர் முந்தம்பாரா, தொடர்ந்து அதே அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று தொடங்குகிறது முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி

Posted: 31 Aug 2016 12:24 PM PDT

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் முருகப்பா குழுமம் இணைந்து நடத்தும் 90-ஆவது அகில இந்திய தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வரலாற்றுச் சாதனையுடன் கைப்பற்றியது இங்கிலாந்து

Posted: 31 Aug 2016 12:23 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் வென்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சிந்து, சாக்ஷிக்கு தில்லி அரசு பாராட்டு

Posted: 31 Aug 2016 12:23 PM PDT

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி தில்லி அரசு புதன்கிழமை கெளரவித்தது.

உயிரிழந்த வீரர் குடும்பத்திடமே வெள்ளிப் பதக்கம் இருக்கட்டும்!

Posted: 31 Aug 2016 12:21 PM PDT

லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று உயிரிழந்த ரஷியரும், ஊக்கமருந்து சோதனையில் தற்போது தோல்வியடைந்தவருமான பெசிக் குடுகோவின் குடும்பத்தினரிடமே அவரது வெள்ளிப் பதக்கம் இருக்கட்டும் என்று இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் கூறியுள்ளார்.

டிஎன்பிஎல்: தூத்துக்குடியை வீழ்த்தியது கோவை கிங்ஸ்

Posted: 31 Aug 2016 12:21 PM PDT

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், லைகா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வென்றது.

பிரதமர் மோடியுடன் ஜான் கெர்ரி சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

Posted: 31 Aug 2016 12:19 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைச்சர் சந்தீப் குமாரை அதிரடியாக நீக்கினார் கேஜரிவால்

Posted: 31 Aug 2016 12:19 PM PDT

தில்லி சமூக நலத் துறை அமைச்சர் சந்தீப் குமாரை, அப்பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் கேஜரிவால் புதன்கிழமை திடீரென அறிவித்தார்.

ஹரியாணா பேரவைக்கு சைக்கிளில் வந்தார் முதல்வர் கட்டார்

Posted: 31 Aug 2016 12:18 PM PDT

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரும் (62), அவரது அமைச்சரவை சகாக்களும், எம்எல்ஏக்களும், சண்டீகரில் உள்ள மாநில சட்டப்பேரவைக்கு புதன்கிழமை சைக்கிள் ஓட்டியபடி வந்தனர்.

ஜப்பானில் கடும் புயல்: 11 பேர் பலி

Posted: 31 Aug 2016 12:17 PM PDT

ஜப்பானில் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழைக்கு 11 பேர் பலியாகினர். அந்த நாட்டின் இவாய்ஸுமி நகரில் மழை காரணமாக முதியோர் காப்பகம் இடிந்து விழுந்து 9 முதியவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிணைக் கைதிகள்: தலிபான் புதிய விடியோ

Posted: 31 Aug 2016 12:17 PM PDT

ஆப்கன் தலிபான்களால் கடந்த 2012-ஆம் ஆண்டு பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்ட, கனடா நாட்டைச் சேர்ந்த ஜோஷுவா பாய்ல் மற்றும் அமெரிக்கர் கேட்லான் காலமன் தம்பதி இடம் பெறும் புதிய விடியோவை தலிபான்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர்.

புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள்: பாகிஸ்தான் திட்டம்

Posted: 31 Aug 2016 12:16 PM PDT

சீனாவிடமிருந்து 8 அதி நவீன நீர்முழ்கிக் கப்பல்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

சிரியா: முக்கிய ஐ.எஸ். தலைவர் சாவு

Posted: 31 Aug 2016 12:15 PM PDT

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், போர் வியூக நிபுணருமான அபு முகமது அல்-அட்னானியைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மாலத்தீவு: நஷீதுக்கு பிடியாணை

Posted: 31 Aug 2016 12:15 PM PDT

பிரிட்டன் சென்றுள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், தனது சிறைத் தண்டனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மாலத்தீவு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இலங்கை: ராஜபட்ச சகோதரர் மீது குற்றச்சாட்டு பதிவு

Posted: 31 Aug 2016 12:14 PM PDT

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரது சகோதரர் கோத்தபய ராஜபட்ச மற்றும் 7 பேர் மீது கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஊழல் கண்காணிப்புக் குழு புதன்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்தது.

மலேசிய முருகன் கோயிலில் தாக்குதல் நிகழ்த்த திட்டம்: 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

Posted: 31 Aug 2016 12:13 PM PDT

மலேசிய சுதந்திர தின விழாவை (ஆக. 31) சீர்குலைக்கும் நோக்கில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயில், பொழுதுப்போக்குப் பூங்காக்கள், காவல் நிலையங்கள் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் திட்டியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழிக்க பாகிஸ்தான் தீவிரமாகச் செயல்பட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

Posted: 31 Aug 2016 12:13 PM PDT

பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழிப்பதற்கு பாகிஸ்தான் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தினார்.

திருப்பதி கோயிலுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா

Posted: 31 Aug 2016 12:12 PM PDT

திருப்பதி கோயிலுக்கு ஹெலிகாப்டரில் ஆன்மிகச் சுற்றுலா மேற்கொள்ள ஆந்திர மாநில சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான வெள்ளோட்டம் இரண்டு நாள்களில் நடக்கவுள்ளது.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

Posted: 31 Aug 2016 12:11 PM PDT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர்களின் சமோசா செலவுரூ. 9 கோடி!உத்தரப் பிரதேச பேரவையில் தகவல்

Posted: 31 Aug 2016 12:10 PM PDT

உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த 4 ஆண்டுகளில் தங்களைச் சந்திக்க வருபவர்களுக்கு சமோசா, தேநீர், குலோப்ஜாமூன் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்ததற்காக மட்டும் சுமார் ரூ.9 கோடி செலவிட்டுள்ளனர்.

உணவைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானைகள்

Posted: 31 Aug 2016 12:09 PM PDT

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் பகல் நேரத்தில் உணவைத் தேடி யானைகள் வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

Posted: 31 Aug 2016 12:09 PM PDT

திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தெலங்கானாவில் ரூ.500-க்கு ஒரு நாள் சிறைவாசம்!

Posted: 31 Aug 2016 12:08 PM PDT

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு முன்னாள் சிறைச் சாலை, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறைவாசம் என்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தைத் தர காத்திருக்கிறது. ரூ. 500 செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் இங்கு தங்கி சிறைவாசத்தை அனுபவிக்கலாம்!

நகர, ஊரகப் பகுதிகளிலும் இ-சேவையில் சான்றிதழ்கள்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Posted: 31 Aug 2016 11:33 AM PDT

நகர, ஊரகப் பகுதிகளிலும் இணையதளம் மூலமும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுமா என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்ற நடவடிக்கை: மேயர் உத்தரவு

Posted: 31 Aug 2016 11:33 AM PDT

வேலூரில் சாலையோரம் செல்லும் கால்வாய்களில் தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

"மேல்விஷாரம் புறவழிச்சாலையில் மேம்பாலம்'

Posted: 31 Aug 2016 11:33 AM PDT

மேல்விஷாரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி.அப்துல் ரஹ்மான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில கையுந்து பந்து அணிக்கு அரக்கோணம் மாணவர் தேர்வு

Posted: 31 Aug 2016 11:33 AM PDT

பள்ளி மாணவர்களுக்கிடையேயான மாநில கையுந்து பந்து அணிக்கு அரக்கோணம் ஜெயா கல்விக் குழும மேரிவிஷன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் ர.திருவர்மா  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு பாராட்டு

Posted: 31 Aug 2016 11:33 AM PDT

ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™