Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கொதிப்பு! நகராட்சி தலைவர்கள் நேரடி தேர்வை ரத்து செய்வதா என கட்சிகள்... கவுன்சிலர்கள் கடத்தல், குதிரை பேரம் அதிகரிக்கும் என குற்றச்சாட்டு

Posted: 29 Aug 2016 09:45 AM PDT

நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், நேரடி தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு, சட்டசபையில் நேற்று புதிய சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே, நேரடி மேயர் தேர்தலை ரத்து செய்த அரசு, இப்போது, நகராட்சி, பேரூராட்சிகள் தலைவர்களையும், கவுன்சிலர்கள் மூலமே தேர்வு செய்ய முன்வந்திருப்பது, எதிர்க்கட்சிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற மறைமுக தேர்தலால், கவுன்சிலர்கள் கடத்தல், குதிரை பேரம் போன்ற செயல்கள் அதிகரிக்கும் என, கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.தமிழகத்தில், 1996 மற்றும், 2001ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மேயர், நகராட்சி ...

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சந்திரபாபுவுக்கு...சிக்கல் ! போலீஸ் விசாரிக்க ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு

Posted: 29 Aug 2016 09:52 AM PDT

ஐதராபாத், :தெலுங்கானா மேல்சபை தேர்தலில், எம்.எல்.ஏ.,வுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபுவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, போலீசாருக்கு, ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இது, அரசியல் ரீதியாக, சந்திரபாபுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலம், 2014ல் உருவாக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சி அரசு ஆந்திராவில் உள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., தலைமையிலான ...

செப்., 4ல் காஷ்மீர் செல்கிறது அனைத்து கட்சி குழு

Posted: 29 Aug 2016 09:58 AM PDT

புதுடில்லி, :தொடர்ந்து, 50 நாட்களுக்கும் மேலாக, பதற்றமான சூழ்நிலையில் உள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், அனைத்து கட்சிக் குழு, செப்., 4ல் அங்கு செல்கிறது.

முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதியான பர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்பிரச்னைக்கு தீர்வுஇதை தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் அங்கு, ...

அமைச்சர் சண்முகநாதன் நீக்கம் பாண்டியராஜன் புதிய அமைச்சர்

Posted: 29 Aug 2016 10:27 AM PDT

தமிழக அமைச்சரவையில் இருந்து, பால்வளத் துறை அமைச்சர் சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார்; ஆவடி எம்.எல்.ஏ., பாண்டியராஜன், புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக அமைச்சரவை, நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. பால்வளத் துறை அமைச்சர் சண்முகநாதன், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்; அவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.அதே சமூகத்தைச் சேர்ந்தவருக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த பெஞ்சமின், ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஊரக தொழில் துறைஅமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதற்காக, தே.மு.தி.க.,வில் இருந்து, ...

'கையெழுத்து நான் தான் போட்டேன்': நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஒப்புதல்: தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 29 Aug 2016 10:36 AM PDT

மதுரை,:பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில், போலியாக முன்ஜாமின் மனு தாக்கல் செய்ததாக அரசுத் தரப்பு சந்தேகம் எழுப்பியது தொடர்பாக சசிகலா புஷ்பா எம்.பி., உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று ஆஜரானார். அவர்,'கையெழுத்து என்னுடையதுதான்,' என ஒப்புதல் அளித்தார். முன்ஜாமின் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

ராஜ்யசபா தி.மு.க.,- எம்.பி., திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா எம்.பி.,இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.ஒரு பெண்,'சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்தேன். அவரது கணவர், மகன் பாலியல் ...

டில்லியில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்; தவிப்புக்குள்ளான அமெரிக்க அமைச்சர்

Posted: 29 Aug 2016 10:41 AM PDT

புதுடில்லி: டில்லியில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
டில்லியில் இன்று(29ம் தேதி) காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டில்லியில் பல முக்கிய இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லி போக்குவரத்து போலீசார் அறித்துள்ள தகவலின் படி கைலாஷ்-2 பெருநகர பகுதி, சாவித்ரி சினிமா, சி.ஆர். பார்க், வயுசென்பாத், எம்.பி. ரோடு, உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கனமழையால் 50 இடங்களில் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ...

சுற்றுலா பயணிகள் 'ஸ்கர்ட்' அணிய தடையா? சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் புது விளக்கம்

Posted: 29 Aug 2016 10:43 AM PDT

புதுடில்லி,:'இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 'ஸ்கர்ட்' எனப்படும், குட்டை பாவாடை அணியக் கூடாது; இரவில் தனியாக போகக் கூடாது' எனக்கூறி, சர்ச்சையில் சிக்கிய, மத்திய கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, ''அக்கறையினால் தான் இவ்வாறு கூறினேன்,'' என, புது விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய கலாசார துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மகேஷ் சர்மா, நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசும் போது, 'இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, ஒரு விளக்கக் கையேடு தரப்படுகிறது. எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என, அதில் ...

ரூ.3,229 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் : சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு

Posted: 29 Aug 2016 10:53 AM PDT

சென்னை,: ''ஏழு மாநகராட்சி மற்றும் நான்கு நகராட்சிகளில், 3,229 கோடி ரூபாய் செலவில், குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:* மின் கட்டண செலவை குறைக்க, தெரு விளக்குகள் அனைத்தையும், எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, 10 மாநகராட்சிகள்; திருப்பூர் மண்டலத்தில், 19 நகராட்சிகள்; தஞ்சாவூர் மண்டலம், 18 நகராட்சிகளில், பாதரச குழல் விளக்குகள், எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படுகின்றன. இந்த ஆண்டு, திண்டுக்கல் ...

மாட்டிறைச்சி சாப்பிட்டதால் தான் உசேன் போல்ட் பதக்கம் வென்றாராம்

Posted: 29 Aug 2016 10:59 AM PDT

புதுடில்லி, : ''ஜமைக்கா நாட்டு வீரர் உசேன் போல்ட், மாட்டிறைச்சி சாப்பிட்டதால் தான், ஒலிம்பிக் போட்டிகளில், ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றார்,'' என, பா.ஜ., - எம்.பி., உதித் ராஜ் கூறியது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடமேற்கு டில்லி லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்றவர், உதித் ராஜ்; தலித் தலைவர்.இவர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:கரீபியன் கடலில்உள்ள, தீவு நாடான ஜமைக்காவைச் சேர்ந்த, உசேன் போல்ட், ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்; இருப்பினும், அவரது பயிற்சியாளர் அறிவுரைப்படி, தினசரி இரு வேளை மாட்டிறைச்சி சாப்பிட்டார். ...

'ரிவர்ஸ் கியரில்' அரசு போக்குவரத்து கழகம்: இயந்திரங்கள் போய் காகித டிக்கெட் வந்தது

Posted: 29 Aug 2016 11:09 AM PDT

கரூர்,: அரசு பஸ்களில், பயண டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதாகி விட்டதால், மீண்டும் காகித டிக்கெட்டுகளை கண்டக்டர்கள் கையில், அதிகாரிகள் திணித்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், காகித பயணச்சீட்டு முறை அமலில் இருந்த நிலையில், 2008ல், தி.மு.க., ஆட்சியில், நவீன டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன், 31.66 கோடி ரூபாய் செலவில், 16,127 டிக்கெட் வழங்கும் கருவிகள் வாங்கப்பட்டன. இவை, முறையாக பராமரிக்கப்படாததால், தற்போது செயலிழந்துவிட்டன. இதனால், மீண்டும் பழைய ...

'நீர்மூழ்கி கப்பல் ஆவண கசிவு கவலைப்பட வேண்டியதில்லை'

Posted: 29 Aug 2016 12:25 PM PDT

புதுடில்லி: ''ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ஆவணங்கள் கசிந்த பிரச்னையை, மத்திய அரசு முக்கியமான பிரச்னையாக கருதுகிறது. அதேநேரத்தில், இந்த ஆவண கசிவு குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை,'' என, கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின், டி.சி.என்.எஸ்., நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், இந்தியாவில், ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் நீர்மூழ்கிக் கப்பல், இந்த ஆண்டு இறுதிக்குள், கடற்படையில் சேர்க்கப்பட உள்ள நிலையில், இந்த கப்பல் தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் ...

வியாழனை நெருங்கியது நாசாவின் ஜூனோ விண்கலம்

Posted: 29 Aug 2016 01:23 PM PDT

வாஷிங்டன்: வியாழன் கிரகத்தை ஆராய நாசாவால் அனுப்பப்பட்ட ஜூனோ என்ற விண்கலம் வியாழனுக்கு மிக அருகே நெருங்கி விட்டதாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க விண்வௌி ஆய்வுமையம் நாசா கடந்த கடந்த 2011ம் வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஜூனோ என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அனுப்பியது. அது நேற்று வியாழனை அதிக பட்சமாக நெருங்கி விட்டது. இந்த விண்கலம் வியாழன் குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்புவதற்கு கிட்டதட்ட தயாராகி விட்டது.
வாயுக்களால் ஆன சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கோளான வியாழனுக்கு மேலே சுமார் 4500 கி.மீ., தூரத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™