Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேர்தல் முடிவுகளே முக்கிய ஆதாரம்..!

Posted: 29 Aug 2016 12:51 PM PDT

எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது!

Posted: 29 Aug 2016 12:36 PM PDT

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர்பாக சரியான வழிகாட்டுதலை முன்வைத்து, அதில் காணப்படும் குறைகளை அகற்ற இந்தக் குழு முற்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்திருக்கிறது.

கடலைக் காப்போம்

Posted: 29 Aug 2016 12:35 PM PDT

கடல் தொழில் விவசாயம் போன்றது, கடல் தொழிலாளர்கள் விவசாயிகள் போன்றவர்கள். கடல் என்பது திறந்து கிடக்கிற பொக்கிஷ அறை அல்ல, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய வயல்வெளி.

அவர்களும் மனிதர்களே...

Posted: 29 Aug 2016 12:32 PM PDT

உலக வரலாற்றில் உயிர்த்தியாகம் புரிந்த நிகழ்வுகள் ஏராளமாக இருக்கின்றன. தத்தமது இனம், மொழி, மண், சுயாட்சி உரிமை ஆகிய எத்தனையோ உயர்ந்த நோக்கங்களுக்காக உயிர்ப்பலிகள் அரங்கேறியதை நாமெல்லாரும் அறிவோம்.

இரண்டு வழித் தடங்களில் ரூ.6,402 கோடியில் மோனோ ரயில்

Posted: 29 Aug 2016 12:28 PM PDT

சென்னையில் மோனோ ரயில் திட்டம் 43.48 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரண்டு வழித் தடங்களில் ரூ.6,402 கோடியில் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் பாலிதீன் பிலிம் தயாரிக்கும் தொழிற்சாலை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 29 Aug 2016 12:27 PM PDT

உளுந்தூர்பேட்டையில் பாலிதீன் பிலிம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.83 கோடியில் நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை: நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அமல்

Posted: 29 Aug 2016 12:26 PM PDT

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நிகழாண்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முதல் மாநிலம் என்ற பெருமையும் தமிழகத்துக்குக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் உதவி

Posted: 29 Aug 2016 12:25 PM PDT

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிகழாண்டில் ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

நோயாளிகளின் உறவினர்களுக்காக: 14 மாவட்டங்களில் 23 குறுகிய கால தங்கும் விடுதிகள்

Posted: 29 Aug 2016 12:25 PM PDT

அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக 14 மாவட்டங்களில் 23 குறுகிய தங்கும் விடுதிகள் ரூ.11.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஓட்டுநர் உரிமத்துக்கு கல்வித்தகுதியை நீக்க மத்திய அரசு நடவடிக்கை: பேரவையில் தமிழக அரசு தகவல்

Posted: 29 Aug 2016 12:23 PM PDT

ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதியை அறவே நீக்கம் செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு இரங்கல்

Posted: 29 Aug 2016 12:22 PM PDT

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. தண்டாயுதபாணிக்கு சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் இன்று பங்கேற்பு

Posted: 29 Aug 2016 12:22 PM PDT

ஒரு வார இடைநீக்கத்துக்குப் பிறகு திமுக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

காங்கிரஸ் புறக்கணிப்பு

Posted: 29 Aug 2016 12:21 PM PDT

சட்டப் பேரவைக் கூட்டத்தை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை புறக்கணித்தனர்.

பேரவையில் இன்று...

Posted: 29 Aug 2016 12:21 PM PDT

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆக.30) கேள்வி நேரத்துக்குப் பிறகு, ஆதிதிராவிடர்-பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர்

சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணியக் கூடாது: மத்திய அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

Posted: 29 Aug 2016 12:20 PM PDT

""இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண் பயணிகள், குட்டைப் பாவாடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறிய கருத்தால் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பனாமா ரகசிய ஆவணங்கள்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

Posted: 29 Aug 2016 12:19 PM PDT

பனாமா ரகசிய ஆவணங்கள் கசிவு விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

ம.பி. முன்னாள் ஆளுநர் குரேஷி காலமானார்

Posted: 29 Aug 2016 12:19 PM PDT

மத்தியப் பிரதேச மாநில முன்னாள் ஆளுநர் முகமது ஷஃபி குரேஷி, உடல்நலக் குறைவால், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 87.

"வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் திடீர் அதிகரிப்பு

Posted: 29 Aug 2016 12:18 PM PDT

தமிழகத்தின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு கோவாவில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காஷ்மீர் மக்களுக்கு உதவி என்ற பெயரில் நன்கொடை திரட்டும் ஹஃபீஸின் அமைப்பு

Posted: 29 Aug 2016 12:18 PM PDT

இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவி என்ற பெயரில் பாகிஸ்தானில் நன்கொடைகளைத் திரட்ட மும்பை தாக்குதல் குற்றவாளி ஹஃபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பு பல்வேறு முகாம்களை அமைத்துள்ளது.

காஷ்மீரில் ஊரடங்கு வாபஸ்: 51 நாள்களுக்குப் பிறகு இயல்பு நிலை

Posted: 29 Aug 2016 12:17 PM PDT

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக திங்கள்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஸ்ரீநகரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்

Posted: 29 Aug 2016 12:17 PM PDT

"இலங்கைத் தமிழர்கள் அதிகாரப்பகிர்வையே விரும்புகின்றனர்; தனி நாட்டை விரும்பவில்லை'' என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி மசோதா: மகாராஷ்டிரசட்டப்பேரவை ஒப்புதல்

Posted: 29 Aug 2016 12:16 PM PDT

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (அரசமைப்பு) சட்டத் திருத்த மசோதாவுக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவை திங்கள்கிழமை தனது ஒப்புதலை அளித்தது.

மேற்கு வங்க மாநிலப் பெயர் மாற்றம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

Posted: 29 Aug 2016 12:16 PM PDT

மேற்கு வங்கத்தின் பெயரை வங்க மொழியில் "பங்க்ளா' (வங்கம்) என்றும் ஆங்கிலத்தில் பெங்கால் என்றும் மாற்றுவதற்கான தீர்மானத்தை அந்த மாநில சட்டப் பேரவை திங்கள்கிழமை நிறைவேற்றியது. எனினும், இத்தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இடதுசாரி முன்னணி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன.

திட்டமிட்டே முழுச் சொத்து விவரங்களையும் விஜய் மல்லையா மறைத்துவிட்டார்: உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் குற்றச்சாட்டு

Posted: 29 Aug 2016 12:15 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையா, திட்டமிட்டே தனது முழு சொத்து விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார் என்று உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு கடன் அளித்த வங்கிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சிந்து, சாக்ஷி, தீபாவுக்கு கேல் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

Posted: 29 Aug 2016 12:14 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், இறுதிச்சுற்றுவரை முன்னேறிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கெளரவித்தார்.

டிஎன்பிஎல்: திருவள்ளூர் வீரன்ஸ் வெற்றி

Posted: 29 Aug 2016 12:13 PM PDT

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது திருவள்ளூர் வீரன்ஸ் அணி.

கேப்டனாக இருந்தபோது சக வீரர்கள் ஆதரவளிக்கவில்லை

Posted: 29 Aug 2016 12:12 PM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக தான் இருந்தபோது, அணியின் சக வீரர்கள் தனக்கு உரிய ஆதரவளிக்கவில்லை என்று அந்த அணியின் திலகரத்னே தில்ஷன் தெரிவித்துள்ளார்.

"டெஸ்ட் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும்

Posted: 29 Aug 2016 12:12 PM PDT

நடப்பு சீசனின் இறுதிக்குள்ளாக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வங்கதேசம்-ஆப்கன் மோதும் ஒருநாள் தொடர்

Posted: 29 Aug 2016 12:11 PM PDT

வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் நடைபெற உள்ளது.

தெற்கு ரயில்வே சாம்பியன்

Posted: 29 Aug 2016 12:11 PM PDT

அகில இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், தெற்கு ரயில்வே மண்டலம் சாம்பியன் பட்டம் வென்றது.

இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெற்றி

Posted: 29 Aug 2016 12:11 PM PDT

இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துளிகள்

Posted: 29 Aug 2016 12:10 PM PDT

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ரோஹன் போபண்ணா ஜோடி ஒன்றிணைந்து பயிற்சியே செய்யாமல் போனதுதான் தோல்விக்கு காரணம் என்று டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி கூறியுள்ளார்.

யேமன் ராணுவ ஆள்சேர்ப்பு மையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 60 பேர் பலி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

Posted: 29 Aug 2016 12:09 PM PDT

யேமனில் அரசுப் படையினருக்கான ஆள் சேர்ப்பு மையத்தில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.

பெல்ஜியம் தடயவியல் மையத்துக்குத் தீ வைப்பு

Posted: 29 Aug 2016 12:08 PM PDT

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெஸ்ல்அமைந்துள்ள தடய அறிவியல் மையத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நிகழ்த்தி, அந்த மையத்தைத் தீவைத்துக் கொளுத்த முயன்றனர்.

பிரிட்டனில் சீனத் தூதரகம் முன்பு பலூச் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Aug 2016 12:06 PM PDT

சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து பொருளாதார மண்டலத்தை பலூசிஸ்தானில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் வாழ் பலூச் மற்றும் சிந்தி அமைப்பினர் அங்குள்ள சீனத் தூதரகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச் சூடு பீதி: அமெரிக்க விமான நிலையம் தாற்காலிக மூடல்லாஸ்

Posted: 29 Aug 2016 12:06 PM PDT

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகர விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதால் எழுந்த பதற்றத்தையடுத்து அந்த விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டது.

கொலம்பியாஅரசுடன் போர் நிறுத்தம்:கிளர்ச்சியாளர்கள் முடிவு

Posted: 29 Aug 2016 12:05 PM PDT

கொலம்பியாவில் 52 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அந்த நாட்டு அரசுடன் மேற்கொண்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துமாறு தனது அமைப்பினருக்கு "கொலம்பியா புரட்சி ஆயுதப் படை' அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

லிபியா: ஐ.எஸ். வசமுள்ள நகரை ராணுவம் சுற்றி வளைப்பு

Posted: 29 Aug 2016 12:04 PM PDT

லிபியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான சிர்டேவை, அந்த நாட்டு ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக்: தற்கொலைப் படையினர் தாக்குதல்: 18 பேர் பலி

Posted: 29 Aug 2016 12:04 PM PDT

இராக்கில் தற்கொலைப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசம்: முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை

Posted: 29 Aug 2016 12:04 PM PDT

வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட ஜமாதுல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தளபதி காலித் ஹஸனை அந்த நாட்டுப் போலீஸார் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றனர்.

இந்தியன் ஆயில் லாபம் 25% அதிகரிப்பு

Posted: 29 Aug 2016 12:03 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) முதல் காலாண்டு லாபம் 25 சதவீதம் அதிகரித்தது.

பங்குச் சந்தைகளில் திடீர் ஏற்றம்

Posted: 29 Aug 2016 12:03 PM PDT

இரண்டு வர்த்தக தினங்களாக சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை திடீர் ஏற்றம் கண்டன.

தேனா வங்கி: ரூ.1,100 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட திட்டம்

Posted: 29 Aug 2016 12:02 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த தேனா வங்கி ரூ.1,100 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஒரு கோடி மரங்களை நட என்.டி.பி.சி. திட்டம்

Posted: 29 Aug 2016 12:02 PM PDT

பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி. நடப்பு நிதி ஆண்டில் 1 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது.

கார்பரண்டம் யூனிவர்ஸல்: ஓசூரில் புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம்

Posted: 29 Aug 2016 12:01 PM PDT

முருகப்பா குழுமத்தின் ஓர் அங்கமான கார்பரண்டம் யூனிவர்ஸல் நிறுவனம் ஓசூரில் உள்ள அதன் செராமிக் ஆலையில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Posted: 29 Aug 2016 12:00 PM PDT

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா: சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி வீதி உலா: நாளை தேரோட்டம்

Posted: 29 Aug 2016 12:00 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா எட்டாம் நாளான திங்கள்கிழமை காலையில் சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை (ஆக. 31) நடைபெறுகிறது.

மியான்மருக்கு முழுவீச்சில் ஆதரவு: பிரதமர் உறுதி

Posted: 29 Aug 2016 11:59 AM PDT

ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ள மியான்மர் நாட்டுக்கு, வளர்ச்சிக்கான அதன் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியா முழுவீச்சில் ஆதரவு அளிக்கும் என்று அந்நாட்டு அதிபர் யு டின் கியாவ்விடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு முன்னேற்றமடையும்: தமிழக ஊராட்சித் தலைவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் பேச்சு

Posted: 29 Aug 2016 11:57 AM PDT

"கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடும் முன்னேற்றமடையும்' என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார்.

இசைக் கலைஞர் திருவுடையான் சாலை விபத்தில் பலி

Posted: 29 Aug 2016 11:57 AM PDT

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த தமிழிசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான ப.திருவுடையான் சாலை விபத்தில் இறந்தார்.

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 31

Posted: 29 Aug 2016 11:30 AM PDT

எங்களுடைய கொடிய வினைகளைத் தீர்க்கும் வழியை நாங்கள் கண்டுகொண்டோம்!

30.08.1978 - டில்லியில் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது: 377 பேர் உயிர் தப்பினர்

Posted: 29 Aug 2016 11:30 AM PDT

டில்லியில் பாரிசுக்கு கிளம்ப இருந்த ஏர் இந்தியா போயிங் விமானம் ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பியது. விமானத்தில் 4 என்ஜின்களில் ஒன்றில் கோளாறு இருந்ததை விமானம் உயரக் கிளம்ப இருந்த நேரத்தில் விமானத்தின் காப்டன் சி.எஸ்.ஆர். ராவ் கண்டுபிடித்து விமானத்தை

46. வாழ்வை நிறைவு செய்

Posted: 29 Aug 2016 11:30 AM PDT

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது தமிழ் மூதுரை. மாதா பிதா குரு தெய்வம் என்பது சம்ஸ்கிருத

பகுதி - 348

Posted: 29 Aug 2016 11:30 AM PDT

இப்பாடல் காஞ்சீபுரம் தலத்துக்கானது. இதற்கு முன்னால் இந்த வரிசையில் 'உற்பாதப்பூ' (19ம் தவணை), 'எற்றா வற்றா' (148ம் தவணை), 'செட்டா கத்தே' (256ம் தவணை) ஆகிய பாடல்களைப் பார்த்திருக்கிறோம்.

35. செஞ்சடைக் கற்றை - பாடல் 6

Posted: 29 Aug 2016 11:30 AM PDT

ஆணும் பெண்ணுமாய் ஒரே உடம்பினில் இருவராய் கலந்துநிற்கும் எம்பெருமான்,

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி பாராட்டு

Posted: 29 Aug 2016 09:32 AM PDT

'ஸ்கிரோம்ஜெட்' சோதனை வெற்றிகரமாக செய்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நவாஸ்ஷெரீபும் நரேந்திரமோடியும் உறவினர்களா? நடிகை ரம்யாவின் கருத்துக்கு ஆதரவாக சித்தராமையா கேள்வி

Posted: 29 Aug 2016 09:31 AM PDT

நரேந்திரமோடி பாகிஸ்தான் சென்றால் தவறில்லை, பாகிஸ்தான் குறித்து நடிகை ரம்யா கூறினால் மட்டும் தவறா? நரேந்திரமோடிக்கு ஒரு

2 நாள்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம்: கே.ஆர்.ராமசாமி

Posted: 29 Aug 2016 08:48 AM PDT

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் இன்னும் 2 நாள்களில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கிறோம் என்று அக் கட்சியின்

12 துறைகளில் செயலாளர்கள் இல்லாததால் பணிகள் நடக்கவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

Posted: 29 Aug 2016 08:04 AM PDT

தமிழகத்தில் 12 துறைகளில் செயலாளர் பதவி காலியாக இருப்பதால் பணிகள் நடைபெறவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பசுவதை தடைச்சட்டம் அவசியமற்றது என பேசிய முன்னாள் அமைச்சருக்கு கொலைமிரட்டல்

Posted: 29 Aug 2016 07:32 AM PDT

பசுவதை தடைச்சட்டம் அவசியமற்றது என்று பேசியதற்காக தன்னை கொலைசெய்யப் போவதாக உடுப்பியை

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: மாஃபா கே. பாண்டியராஜன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமனம்!

Posted: 29 Aug 2016 06:57 AM PDT

பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி. சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். சண்முகநாதன் வகித்து வந்த இலாக்கா கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாஃபா. பாண்டியராஜன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமனம்

Posted: 29 Aug 2016 06:46 AM PDT

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாஃபா. கா. பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாயும், மகளும் கூட்டு பாலியல் பலாத்கார விவகாரத்தில் சர்ச்சை கருத்து: அசம் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 29 Aug 2016 06:28 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹரில் தாயும், மகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்தை

பணத்துக்காக வாலிபரை கடத்தி சித்ரவதை செய்த 5 பேர் கைது

Posted: 29 Aug 2016 06:05 AM PDT

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சித்த மருத்துவரிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டு வாலிபரை கடத்திச் சென்று சித்ரவதை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: முன்னாள் அமைச்சர் கண்ணன் வலியுறுத்தல்

Posted: 29 Aug 2016 05:48 AM PDT

பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பு பட்ஜெட் விவரங்கள் இணையதளத்தில் வெளியானதால், காங்கிரஸ் அரசை துணைநிலை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என முன்னாள்

'டிவிட்டர்' கெடுபிடியால் டெலிக்ராமுக்கு மாறிய 'ஐஎஸ்' அமைப்பினர்!

Posted: 29 Aug 2016 05:27 AM PDT

பிரபல சமுக வலை தளமான டிவிட்டர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையோரின் கணக்குகளை வேகமாக முடக்கி வருகிறது.

மத்திய பிரதேச முன்னாள் ஆளுநர் முகமது ஷாபி குரேஷி காலமானார்

Posted: 29 Aug 2016 05:17 AM PDT

மத்திய பிரதேச மாநில முன்னாள் ஆளுநர் முகமது ஷாபி குரேஷி(87) இன்று தில்லியில் காலமானார். இதனை ராஜ்பவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

Posted: 29 Aug 2016 05:15 AM PDT

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தாதது ஏன்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

Posted: 29 Aug 2016 04:56 AM PDT

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டாதது ஏன்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சுந்தர்.சி.-யின் ‘சங்கமித்ரா’வில் ஜெயம் ரவி?

Posted: 29 Aug 2016 04:56 AM PDT

இயக்குநர் சுந்தர்.சி அடுத்ததாக இயக்க உள்ள மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வில் ஜெயம் ரவி நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் குட்டைப்பாவாடை அணிய தடை கோரவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

Posted: 29 Aug 2016 04:49 AM PDT

இந்தியாவுக்குவருகை தரும் பெண் சுற்றுலாப்பயணிகள் குட்டைப்பாவாடை அணியத் தடை கோரவில்லை என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

NLC-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 29 Aug 2016 04:24 AM PDT

சென்னையில் உள்ள NLC India Limited நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 15 அதிகாரி பணியிடங்களுக்கான

விண்வெளித்துறையில் ஆராய்ச்சியாளர் பணி

Posted: 29 Aug 2016 04:13 AM PDT

விண்வெளித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் North Eastern Space Applications Centre-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி: வேளாண்மைக்கு ரூ.73.27 கோடி, கால்நடை பராமரிப்புக்கு ரூ.22.85 கோடி ஒதுக்கீடு

Posted: 29 Aug 2016 04:04 AM PDT

புதுச்சேரி பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.73.27 கோடியும், கால்நடை பராமரிப்புக்கு ரூ.22.85 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

Posted: 29 Aug 2016 04:02 AM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் "Indira Gandhi National Tribal University"-இல் நிரப்பப்பட உள்ள 99 பேராசிரியர்

மதுக்கூரில் அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி

Posted: 29 Aug 2016 04:01 AM PDT

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் திங்கள்கிழமை காலை அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஐ.நா. பெண்கள் அமைப்பின் நல்லெண்ணத் தூதர் - ஐஸ்வர்யா தனுஷ்!

Posted: 29 Aug 2016 03:54 AM PDT

3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், ஐ.நா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கல்குவாரியை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 29 Aug 2016 03:52 AM PDT

காஞ்சிபுரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் கல்குவாரியை மூட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஈராக்கில் திருமண விழாவில் தற்கொலை படை தாக்குதல்: 15 பேர் சாவு

Posted: 29 Aug 2016 03:52 AM PDT

ஈராக்கின் கர்பலா மாகாணத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.

புதுச்சேரி பட்ஜெட்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியாக உயர்வு: முதல்வர்

Posted: 29 Aug 2016 03:45 AM PDT

புதுச்சேரி பட்ஜெட்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை!

Posted: 29 Aug 2016 03:38 AM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத்

ரஜினியின் '2.0' பட வில்லன் அக்ஷய் குமார் அளித்த பார்ட்டியில் கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகர்!

Posted: 29 Aug 2016 03:28 AM PDT

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அளித்த இரவு விருந்தில் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் கலந்து கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

அடையாறில் சூழலை மாசுபடுத்தாத பிள்ளையார் பொம்மைகள் : செப்டம்பர் 3 - 4

Posted: 29 Aug 2016 03:24 AM PDT

தொடர்புக்கு - 9840053133

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

Posted: 29 Aug 2016 03:21 AM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித்திருவிழா எட்டாம்

இலங்கைத் தமிழர்கள் குறித்து சேரன் பேசியது தேவையற்றது: விஷால்

Posted: 29 Aug 2016 03:21 AM PDT

இலங்கைத் தமிழர்கள்மீது குற்றச்சாட்டுகளை வைப்பதைத் தவிர்ப்போம்...

அச்சரப்பாக்கம் அருகே மதுபானக் கடை ஊழியரிடம் ரூ.2,39,000 கொள்ளை

Posted: 29 Aug 2016 02:45 AM PDT

அச்சரப்பாக்கம் அருகே ராமாவரம் மதுபானக் கடை ஊழியரிடம் ரூ.2,39,000 பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் பிறந்தநாள்: வாழ்த்து கூறிய பி.வி. சிந்து!

Posted: 29 Aug 2016 02:44 AM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65-ஆவது பிறந்த தினம் சமீபத்தில் அவரது கட்சித் தொண்டர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சமூகவலைத்தளத்திலும் அவருக்குப் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

கூடங்குளம் இரண்டாவது அணு உலை: தேசிய மின் தொகுப்பில் இணைப்பு!

Posted: 29 Aug 2016 02:38 AM PDT

ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள கூடங்குளம் இரண்டாவது அணு உலை, இன்று காலை தேசிய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது கார் மோதி விபத்து : ஒருவர் பலி

Posted: 29 Aug 2016 02:10 AM PDT

சென்னையில் மெட்ரேர் ரயில் பாலத்தின் தூண் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கார் ஒட்டுநர் பலியானார்.

திரைப்படக் கல்லூரியில் பல்வேறு பணி

Posted: 29 Aug 2016 02:09 AM PDT

புனேயில் செயல்பட்டு வரும் "Film and Television Institute of India" -இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை

பட்டதாரிகளுக்கு தேனி மாவட்ட விவசாய அபிவிருத்தி மையத்தில் பணி

Posted: 29 Aug 2016 02:07 AM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள "Krish Vigyan Kendra(ICAR)"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுங்குவார்சத்திரம் அருகே 15 வருடங்களாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

Posted: 29 Aug 2016 02:05 AM PDT

சுங்குவார்சத்திரம் அடுத்த ஒ.எம்.மங்களம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை சுங்குவார்சத்திரம் போலீஸார் இன்று கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநில பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றம்

Posted: 29 Aug 2016 02:04 AM PDT

மேற்கு வங்க மாநில பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர்த் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 29 Aug 2016 01:47 AM PDT

திருநெல்வேலி அருகேயுள்ள பாலாமடை பகுதியில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட்-ஒருநாள் தொடர்கள்!

Posted: 29 Aug 2016 01:44 AM PDT

இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணி செப்டம்பரில் இந்தியா வருகிறது.

கூடங்குளம் 2வது அணு உலையில் உற்பத்தியான மின்சாரம் மத்திய மின்தொகுப்பில் இணைப்பு

Posted: 29 Aug 2016 01:33 AM PDT

கூடங்குளம் 2வது அணு உலையில் இன்று 170 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து

கடைசியில் இவ்வளவு தானா? - பிரபு சங்கர்

Posted: 29 Aug 2016 01:31 AM PDT

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வேலைக்காக அந்தர் பல்டி அடித்து கொண்டிருக்கும் ராகவனுக்கு, பொன்னம்மா மீது சமீப காலமாகத்தான் லயிப்பு விழுந்தது.

புதிய மதுபான பார்கள் திறக்க அனுமதிக்க திட்டம்: முதல்வர் நாராயணசாமி

Posted: 29 Aug 2016 01:10 AM PDT

சாராயக் கடைகள் மூடப்படும் இடங்களில் புதிய மதுபான பார்கள் திறக்க அனுமதிக்கும் திட்டம் உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்! அன்புமணி ராமதாஸ்

Posted: 29 Aug 2016 12:59 AM PDT

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சசிகலா புஷ்பா ஆஜர்: பிற்பகலில் உத்தரவு

Posted: 29 Aug 2016 12:43 AM PDT

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா முன் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™