Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஓய்வு பெற்றும் பணப்பலன் கிடைக்காமல் 10 ஆயிரம் பேர் தவிப்பு:போக்குவரத்து கழகங்களின் ரூ.1,200 கோடி நஷ்டம் சீராகுமா?

Posted: 28 Aug 2016 10:42 AM PDT

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணி யாற்றி, ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகி யும், பணப்பலன் கிடைக்காமல், 10 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர்.அத்துடன்,பல சிக்கல் களால், போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 1,200 கோடி நஷ்டம் ஏற்படுவதை தடுக்க, தமிழக அரசு சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழகத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உட்பட, எட்டு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. 23 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின் றன. 1.4 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். தினமும், 2.5 கோடி பேருக்கு மேல் பயன் பெறுகின்றனர். இந்த போக்குவரத்து ...

உ.பி., உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு ஆணையம் தயார் பண பலத்தை ஒடுக்கவும் அதிரடி வியூகம்

Posted: 28 Aug 2016 10:55 AM PDT

புதுடில்லி: உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு, குறைந்த அவகாசமே இருப்பதால், அரசியல் கட்சிகள் ஒருபுறம் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன; மற்றொரு பக்கம், தேர்தல் ஆணையமும், பணிகளை விரைவு படுத்தி, முழுவீச்சில் தயாராகி வருகிறது. குறிப்பாக, தேர்தலில் பண பலத்தை முற்றிலும் ஒடுக்க, அதிரடி வியூகங்களை வகுத்துள்ளது.

உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள், ...

காஷ்மீரில் பலியாகும் ஒவ்வொரு உயிரும் நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பு: மோடி

Posted: 28 Aug 2016 11:02 AM PDT

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீரில், பலியாகும் ஒவ்வொரு உயிரும், அது இளைஞர்களாக இருந்தாலும், பாதுகாப்புப் படையினராக இருந்தாலும், நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பு,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

'மன் கீ பாத்' எனப்படும், பிரதமர் மோடியின் ரேடியோ உரை நேற்று ஒலிபரப்பானது. 23வது முறையாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பலியாகும் ஒவ்வொரு உயிரும் நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பு; அது இளைஞர்களாக இருந்தாலும், பாதுகாப்புப் படையினராக இருந்தாலும், நாட்டுக்கு இழப்பு தான்.
காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலையை ...

திட்ட மதிப்பை விட நிறுவனங்களுக்கு அதிக கடன் அளித்த வங்கிகள் பார்லி., குழு அதிர்ச்சி

Posted: 28 Aug 2016 10:57 AM PDT

புதுடில்லி: 'ஒரு குறிப்பிட்ட பணிக்கான திட்ட மதிப்பைவிட அதிகமான தொகையை, அந்த திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனத்துக்கு வங்கிகள் கடன் அளித்துள்ள வினோதம் நடந் துள்ளது' என, பார்லி மென்ட் குழு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

மொத்த வாராக்கடன்: வங்கிகளின் வாராக் கடன்கள் குறித்து, போக்குவரத்து துறைக்கான, கன்வர் தீப் சிங் தலைமையிலான, 33 உறுப் பினர்கள் அடங்கிய பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு செய்தது; இந்தக் குழு, சமீபத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
வங்கிகளின் மொத்த வாராக் கடன், 2.6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, ...

மைசூரு தங்க அரியாசனம் உரிமை யாருக்கு? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

Posted: 28 Aug 2016 11:03 AM PDT

புதுடில்லி: மைசூரு அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம், தங்க அம்பாரி ஆகியவற் றின் மீதான உரிமை தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

தசரா பண்டிகை: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மைசூரு அரண் மனை சொத்துக்கள், மறைந்த இளவரசர் ஸ்ரீகண்டதத்தா நரசிம்மராஜா வாடியாரின் மனைவி பிரமோத தேவி வாடியார் வசம் உள்ளன.
தசரா பண்டிகை நடக்கும்போது, அரண்மனையில்
உள்ள தங்க அரியாசனம், தங்க அம்பாரி உள் ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற் காக, கர்நாடக அரசு, ஆண்டு ...

உள்ளாட்சி தேர்தலுக்கு ஜாதி பலம் தி.மு.க., போடும் புது கணக்கு

Posted: 28 Aug 2016 10:53 AM PDT

'கேரள அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து, செப்டம்பர் 3-ம் தேதி, கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., அறிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கொங்கு மண்டலத் தில், ஓட்டு வங்கி பலம் கொண்ட ஜாதி கட்சி களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, அக்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலில், ௧௦௦ நகராட்சிகளையும், குறைந்தபட்சமாக, எட்டு மாநகராட்சிகளையும் கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என, தி.மு.க., தலைமை வியூகம் வகுத்துள்ளது.இந்ததேர்தலிலும், அ.தி.மு.க., தனித்து போட்டியிட ...

சிந்துவுக்கு குவியும் பரிசுகள்:தமிழக அரசு மவுனம் ஏன்?

Posted: 28 Aug 2016 10:45 AM PDT

விஜயகாந்த் மகன் அணியில் விளையாடிய தால், ஒலிம்பிக் வெற்றி வீராங்கனை சிந்துவு க்கு, தமிழக அரசு பரிசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக விளையாட்டுத் துறை பிரபலங்கள் கூறியதாவது:பக்கத்து மாநில மான, தெலுங்கானாவின் செல்லப் பெண்ணாகி இருக்கும் பி.வி.சிந்து, ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். சிந்துவின் வெற்றியை பாராட்டி, அந்த மாநிலம், ஐந்து கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. ஆந்திரா மூன்று கோடிையும், டில்லி, இரண்டு கோடி யும் அறிவித்துள்ளன. மத்திய பிரதேசம், ஹரியானா என, எல்லா ...

'வாழ்த்து போதும்; கூட்டணி வேண்டாம்' விஜயகாந்திடம் வலியுறுத்திய நிர்வாகிகள்

Posted: 28 Aug 2016 12:31 PM PDT

'பிறந்த நாள் வாழ்த்து போதும்; கூட்டணி வேண்டாம்' என, மக்கள் நலக் கூட்டணி குறித்து, விஜயகாந்திடம், அவரது கட்சியினர் வலியுறுத்திஉள்ளனர்.

சமீபத்தில், விஜயகாந்தின் பிறந்த நாள் வந்தது. வழக்கமாக, விமரிசையாக பிறந்த நாளை கொண்டாடும் அவர், இம்முறை எளிமையாகக் கொண்டாடினார். இதற்காக, அவருக்கு வாழ்த்து சொல்ல, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் வந்தனர்.பிடி கொடுக்கவில்லை: அப்போது அவர்கள், விஜயகாந்திடம், அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தனர். 'விரைவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், மக்கள் ...

கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்

Posted: 28 Aug 2016 10:50 AM PDT

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.

அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்ட தாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது. இவர்களை, பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு, கட்டாய இடம் மாற்றம் செய்யும் பணி நிரவல் கலந்தாய்வு,நேற்று முன் தினம் துவங் கியது. ஆசிரியர்கள் எதிர்ப்பை சமாளிக்க, மாவட்டத் திற்குள் ...

சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக வருகிறது ரயில் கார்டு

Posted: 28 Aug 2016 09:20 AM PDT

புதுடில்லி: புறநகர் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையில், சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக, ரயில் கார்டு வழங்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும், ஒவ்வொரு நாளும், 1.1 கோடி பேர் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். புறநகர் ரயில்களில் தினசரி பயணம் செய்பவர்களுக்கு, மாதாந்திர, மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஓராண்டுக்கு என, சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 'இ - டிக்கெட்' எனப்படும், 'மொபைல் ஆப்' மூலமாக டிக்கெட் வாங்கும் வசதி, புறநகர் ரயில்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ...

காலிபோர்னியாவை ஆட்டிப்படைக்கும் காட்டுத்தீ

Posted: 28 Aug 2016 12:05 PM PDT

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ப்ளூ கட் என்று பெயரிடப்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸின் தென்கிழக்கு பகுதியில் பற்றத் தொடங்கிய காட்டுத்தீ 75 மைல்கள் தூரத்திற்கு தொடர்ந்து எரிந்ததால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த அமெரிக்கர்களின் குடியிருப்புகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை எரித்து சாம்பலாகியது. 37000 ஏ்க்கர் பரப்பளவில் ஓங்கி வளர்ந்திருந்த லட்சக் கணக்கான மரங்கள் ...

தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து

Posted: 28 Aug 2016 01:00 PM PDT

லாடர்ஹில்: இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனையடுத்து 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 0-1 என பரிதாபமாக இழந்தது.
அமெரிக்கா சென்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றன. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. நேற்று, 2வது போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது.
மிஸ்ரா வாய்ப்பு:
இந்திய அணியில் 'ஆல்-ரவுண்டர்' ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் ...

ராஜினாமா செய்யப்போவது இல்லை: சசிகலா புஷ்பா திட்டவட்டம்

Posted: 28 Aug 2016 01:36 PM PDT

சென்னை : தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்யப்போவது இல்லை என சசிகலா புஷ்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டில்லி விமான நிலையத்தில் தி.மு.க., எம்.பி., திருச்சி சிவாவை தாக்கிய விவகாரம் தொடர்பாக கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தன்னை ஜெயலலிதா அடித்ததாகவும் சசிகலா புஷ்பா பார்லி.,யில் தெரிவித்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அதிருப்திக்கு ஆளாகி, பலரும் கட்சியில் ...

கடலில் மூழ்கியது இந்திய சரக்கு கப்பல்

Posted: 28 Aug 2016 02:36 PM PDT

மஸ்கட் : ஓமன் நாட்டு கடல் பகுதியில், இந்திய சரக்கு கப்பல், அதிக சுமையை தாங்காமல் கடலில் மூழ்கியது; அதில் இருந்த ஊழியர்கள், 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து, இந்தியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல், சரக்குகளை ஏற்றிக் கொண்டு, ஏமன் நாட்டின் அல் முக்காலா துறைமுகத்திற்கு சென்றது; அதில், 69 வாகனங்கள், டயர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்தன.
ஓமன் நாட்டு கடல் பகுதியில் நேற்று முன்தினம் சென்ற போது, அதிக சுமை இருந்ததால், பாரம் தாங்காமல், அந்த கப்பல் மூழ்கத் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™