Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமன்னாவுக்காக பாடப்போகும் ஸ்ருதிஹாசன்!

Posted: 28 Aug 2016 04:31 PM PDT

- நடிகர் விஷால் ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கும் புதிய படமொன்றில் அவருக்காக நடிகை ஸ்ருதிதிஹாசன் பாடல் ஒன்று பாடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஷால் தனது சொந்த கம்பெனியான விஷால் பிலிம் பேக்டரி மூலம் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் புதிய படம் 'கத்திசண்டை'. இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் காமெடி நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி ஆகிறார். மேலும், ...

ஒரே நாளில் ஆறு தமிழ்ப்படங்கள் வெளியீடு! காரணம் என்ன?

Posted: 28 Aug 2016 04:30 PM PDT

- இன்று 6 படங்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக ஒவ்வொரு வெள்ளியன்றும் அதிகமாக இரண்டு, மூன்று படங்கள்தான் வெளியாகும். ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக ஆறு படங்கள்! பயம் ஒரு பயணம், மீண்டும் ஒரு காதல் கதை, எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது, 54321, அந்த குயில் நீதானா, வென்று வருவான் என ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியாகவேண்டிய காரணம் என்ன? தீபாவளிக்கு முன்பு வெளியாகிவிடவேண்டும் என்று கிட்டத்தட்ட 10 படங்கள் தயாராக உள்ளன. கிடாரி, தொடரி, இருமுகன், குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, அச்சம் என்பது மடமையடா ...

தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து

Posted: 28 Aug 2016 04:10 PM PDT

- லாடர்ஹில்: - இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனையடுத்து 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 0-1 என பரிதாபமாக இழந்தது. அமெரிக்கா சென்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றன. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. நேற்று, 2வது போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. மிஸ்ரா வாய்ப்பு: ------------- இந்திய அணியில் 'ஆல்-ரவுண்டர்' ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளர் ...

சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக வருகிறது ரயில் கார்டு

Posted: 28 Aug 2016 04:08 PM PDT

புதுடில்லி: புறநகர் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையில், சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக, ரயில் கார்டு வழங்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும், ஒவ்வொரு நாளும், 1.1 கோடி பேர் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். புறநகர் ரயில்களில் தினசரி பயணம் செய்பவர்களுக்கு, மாதாந்திர, மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஓராண்டுக்கு என, சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 'இ - டிக்கெட்' எனப்படும், 'மொபைல் ஆப்' மூலமாக டிக்கெட் ...

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 28 Aug 2016 11:12 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

ஜஸ்டிஸ் கோதண்டராமன்

Posted: 28 Aug 2016 09:05 AM PDT

வீட்டிற்கு வெள்ளை அடிப்பதற்காகப் பரண் மீது வைத்திருந்த சாமான்களை ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருந்தாள் அகிலாண்டம் . அப்போது தேள் ஒன்று பரண் மீதிருந்து " சொத்தென்று " தரையில் விழுந்தது. பயந்துபோன அகிலாண்டம் தன் கணவனிடம் " அய்யயோ ! இங்க வாங்க ! இந்தத் தேளை அடிங்க ! பசங்களைக் கொட்டிடப் போவுது ! 'என்று பதை பதைத்தாள் . மனைவியின் அபயக் குரல் கேட்டு திடுதிடுவென்று ஓடிவந்தார் ஜஸ்டிஸ் கோதண்டராமன் . " அங்க பாருங்க ! எவ்வளவு பெருசா இருக்கு அந்தத் தேள் ! அதை அடிச்சுக் கொல்லுங்க ! " என்று சொல்லித் ...

காதலில் உதிரும் கவிதை பூக்கள்…

Posted: 28 Aug 2016 08:53 AM PDT

கவிதைக்கு கவிதைஎழுதுகிறேன் முதன் முறையாக… நான் பார்த்த முதல்கவிதை நீ    மறுசென்மம் கேட்டு வாங்குவேன்…உன் காதல் கிடைக்கும்…என்றால்…  சாகாவரம் வேண்டாம்உன் மடியில் சாகும் வரம் போதும்…  உன்னை செதுக்கியவன்சிற்பிக்கு கற்று கொடுத்தவன்    ஒவ்வொரு நொடிப்பொழுதும்ஒவ்வொரு நாளாய் கழிகிறதுஉன்னை பார்க்காமல்….  உதிரமெல்லாம் உதிரி பூக்கள்உன் நினைவுகள்… 

முத்திரையால் குணமாகும் நோய்கள்...!

Posted: 28 Aug 2016 08:32 AM PDT

கொழுப்பை குறைக்கும் சூரியமுத்ரா பயிற்சி - - இந்த பயிற்சி செய்வதால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பை கொஞ்ச கொஞ்சமாக குறைக்கலாம். – செய்யும் முறை: விரிப்பில் அமர்ந்து கொண்டு மோதிர விரலை மடக்கி வையுங்கள் அதன்மீது பெருவிரலை வையுங்கள். மற்ற மூன்று விரல்களையும் நிமிர்ந்த நிலையில் செங்குத்தாக வைத்துக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து 10-15 நிமிடங்கள் தினமும் செய்யலாம். அதிக குளிர் தாங்க முடியாத நிலை மற்றும் அடிக்கடி நடுக்கம் ஏற்படுபவர்களுக்கு இந்த முத்ரா உதவியாக இருக்கும். வலுமான வளர்சிதை ...

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு கார் பரிசளித்தார் சச்சின்

Posted: 28 Aug 2016 05:44 AM PDT

ஐதராபாத்: - - --- ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவுக்கு பி.எம்.டபூள்யூ காரை சச்சின் பரிசளித்தார். ஐதராபாத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாக்கருக்கு மரியாதை செலுத்தினார். அனைவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். – தினகரன்

அழகிகள் கண்டும் பிறழாத மனம்…!!

Posted: 28 Aug 2016 05:18 AM PDT

- – பாதையோர அழகிகள் கண்டும் பிறழாத மனம் கையில் திருக்குறள் – சுடர்முருகையன் – ——————- – சதங்கையில் மயங்கிய மனத்திற்கு தெரிவதில்லை லாடத்தின் வலி – கன்னிக்கோயில் ராஜா – ————————- – காவலாளி உறக்கம் தாலாட்டும் சுவர்க்கடிகாரம் பிண   அறைக்குள் – புதுவை செந்தமிழினியன் – ————————-

நடனம் பயிலும் ஊதுபத்தியின் நறுமணம்

Posted: 28 Aug 2016 01:49 AM PDT

– குடிசையில் நிசப்தம் சலசலத்தன கூரை ஓலைகள் – எஸ்.விஜ'ன் – ———————– – அமைதியாய் உட்கார்ந்திருந்தது பூனை மீசையெல்லாம் இரத்தக் கறை – பா.உதயகண்ணன் – ———————– – காயும் மிளகாய் கால்களால் நிண்டினாள் மல்லிகை நெடி – மு.மங்களேஸ்வரன் – ———————- – வான் தொடும் தூரத்தில் நிலவின் பயணம் நீர் முழுவதும் பிம்பம் – ஆரிசன் – ———————- - ஊதுபத்தி --------------- யாருமற்ற தனிமையில் அறைக்குள் நடனம் பயிலும் ஊதுபத்தியின் நறுமணம் – அன்பாதவன் – ————————- – தீப்பிடித்து எரிகிறது ...

இறந்தகாலத்தில் நிகழ்காலம் – ஹைகூ

Posted: 28 Aug 2016 01:46 AM PDT

– புதைபொருள் ஆராய்ச்சி முதுமக்கள் தாழி : உள்ளே சிதைந்த சிம்கார்டு – ——————————— கூடா நட்பு – பத்தில் ஒன்றுக்கே விசம் அடிபட்டுச் சாகின்றன மற்ற ஒன்பதும் – ————————————– – மின் தடையால் : – நகரஇரவில் மின்தடையில் தெளிவாகத் தெரிகின்றன : நட்சத்திரங்கள் – ————————————- – சரியாகாத வியாதி – இரவில் நடக்கும் வியாதி இன்னும் சரியாகவில்லை நிலாவுக்கு – —————————————- – திட்டமிடு – நிதானமாய்த் திட்டமிட்டால் நடக்காமல் தடுக்கலாம் கடைசி நேர ஓட்டத்தை – ————————————–

புத்தக மூட்டையை சுமக்கும் தாய்…!

Posted: 28 Aug 2016 01:37 AM PDT

– பள்ளிக்குச் சிறுமி பாடப்புத்தக மூட்டை சுமக்கிறாள் தாய் – ———————— – ஊசித் துளைக்குள் நுழைய மறுக்கும் நூல் கூர்மையிழந்த விழிகள் – ———————– – புதிய வீடு சிநேகதூதன் குழந்தை – வானவன் – ———————— – ஊசித் துளைக்குள் நுழையமறுக்கும் நூல் கூர்மையிழந்த விழிகள் – செ.தமிழ்ராசா – ———————– – மின்னலின் தாக்குதல் கண்ணீர் சிந்தும் மேகம் குதூகலத்தில் மக்கள் – பூபதிபாலு – ————————— – எரியும் சிதை நெருப்பில் குளிர்காயும் இடுகாடு கல்லறைகள் – அன்பாதவன் – ————————— படித்ததில் ...

குஜராத்தில் 11 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் அனுமனுக்கு அலங்காரம்

Posted: 28 Aug 2016 01:32 AM PDT

வதோதரா: - குஜராத் மாநிலம் வதோதராவில் ஆவணி மாத சனிக்கிழமையை முன்னிட்டு அனுமன் ஆலயங்களில், அனுமனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு செய்து வழக்கம். அதே போன்று நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அனுமன் ஆலயத்தில் ரூ.11 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால், பக்தர்கள் அனுமனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ரூபாய் நோட்டுக்களாலேயே சன்னதிக்கு வெளியில் தோரணமும் கட்டப்பட்டிருந்தது. இது ஏராளமான பக்தர்களை வியப்பு அடைய செய்துள்ளது. – ——————– தினகரன்

மனைவியின் அனுமதி!

Posted: 28 Aug 2016 01:28 AM PDT

- வாரணாசியில், கிரிகலா – சுகலா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். வியாபாரியான கிரிகலாவுக்கு, திடீரென்று, தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று தோன்றியது. அதை, தன் மனைவியிடம் கூறினார். உடனே அவள், 'நானும் உடன் வருவேன்…' என்றாள். 'வழியில், ஏதாவது இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது…' என நினைத்து, 'இவளை அழைத்துச் செல்லக் கூடாது…' என்று முடிவு செய்தார், கிரிகலா. ஒருநாள், மனைவியிடம் சொல்லாமல், தனியே தீர்த்த யாத்திரைக்கு சென்று விட்டார், கிரிகலா. கணவரை காணோம் என்றவுடன், நடந்ததை புரிந்து கொண்டாள் ...

குறள் 916

Posted: 28 Aug 2016 01:24 AM PDT

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... http://www.panguvarthagaulagam.blogspot.in/ குறள் 916 தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். உரை: புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார். Translation: From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would their own true good maintain will turn ...

கை கால் அமுக்கி விடுதல்...!!

Posted: 28 Aug 2016 01:18 AM PDT

‘தூய்மை பாரதம்’ திட்டப் பணி மதுரை கூடுதல் கலெக்டருக்கு விருது

Posted: 28 Aug 2016 01:13 AM PDT

- மதுரை:' துாய்மை பாரதம்' திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த, மதுரை கூடுதல் கலெக்டர் ரோகிணிக்கு, மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை விருது வழங்கப்பட்டது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாக, 'துாய்மை பாரதம்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். இதில், தேசிய அளவில் சிறப்பாக பணிபுரிந்த 16 அதிகாரிகளை தேர்வு செய்த மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, டில்லியில் விருது வழங்கியது. தமிழகத்தில் இந்த விருதுக்கு தேர்வான ஒரே அதிகாரி ரோகிணி. மதுரை ...

ஏடிஎம் இயந்திரம் உடைத்து ரூ.6.08 லட்சம் திருட்டு

Posted: 28 Aug 2016 12:23 AM PDT

வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6.08 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது. வேலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேல்மொணவூர் பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. காவலாளி இல்லாத இந்த மையத்தினுள் புகுந்த மர்ம கும்பல் கியாஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த ரூ.6.08 லட்சத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.பகலவன், காவல் துணைக் கண்காணிப்பாளர் ...

கல்கூரையில் 12 ராசிகள்

Posted: 28 Aug 2016 12:12 AM PDT

- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலில் சிவபெருமான் தெற்கு நோக்கி காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். மேலும் இவ்வாலயத்தின் கல் கூரையில் 12 ராசிகள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. அதன் நடுவில் தாமரையும் சிட்டுக்குருவியும் செதுக்கப்பட்டுள்ளதுடன் சுற்றிலும் சங்கிலி வளையம் போன்றும் அமைக்கப் பட்டுள்ளது. பிரதான கிரகங்களான, சனி, குரு மற்றும் ராகு -கேது பெயர்ச்சியின்போது இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட, கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், ...

மனைவிக்குப் பயம்...!!

Posted: 28 Aug 2016 12:10 AM PDT

– இனிமையும் கடுமையும் – இனிமையாகப் பாடுபவன் கழுதையாய் கத்தினான் கூலி கேட்டு – ——————— – சுத்த பயம் – காது குடைய சோம்பல் பட்டவன் வீட்டையே சுத்தம் செய்தான் மனைவிக்குப் பயம் – ———————— – வாழ்த்துப் புதுமை – கல்யாணத்துக்குச் சென்றவன் வாழ்த்திவிட்டு வந்தான் புதுச்செருப்பு விட்டவனை! – ———————

திருவாசகம்!

Posted: 27 Aug 2016 09:31 PM PDT

- – உழி தரும் காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் இழி தரு காலம் எக்காலம் வருவது வந்ததற்பின் உழி தரு காலத்த உன் அடியேன் செய்த வல்வினையைக் கழி தரு காலமும் ஆய் அவை காத்து எம்மைக் காப்பவனே! – விளக்கம்: - காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற காலமானது, எப்போது வரும்… அந்த இறுதிக் காலம் உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு தலைவனே… சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க வல்ல காலத்தை ஆளும் இறைவா… என் கொடிய வினையை நீக்கி, அருளுக! – ———————-

3 மாதங்களுக்கு பகல் நேரத்தில் கொழும்பு விமான நிலையம் மூடப்படுகிறது; சென்னை, திருச்சிக்கு விமானங்கள் ரத்து

Posted: 27 Aug 2016 06:58 PM PDT

கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்பில் பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து தினசரி 185 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள ஓடுபாதையை பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதிவரை நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையம் மூடப்படுகிறது. இத்தகவலை இலங்கை விமான போக்குவரத்து மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா நேற்று தெரிவித்தார். விமான சேவை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும்வகையில், அனைத்து ...

மரண ஜாதகம்!

Posted: 27 Aug 2016 05:39 PM PDT

- * சிந்தும் மழைத்துளிக்கு தெரிவதில்லை விழப் போவது ஆற்றிலா இல்லை சேற்றிலா என்று… விழுந்த பின்பே அதன் விதி தெரிகிறது! – * ஆற்றில் விழும் துளியோ நீராய் பெருக்கெடுத்து அனைவரின் தேவையை தீர்க்கிறது! – * சேற்றில் விழும் துளியோ சிதைந்து சாக்கடையாய் நாறி சிறிதும் பயனற்று போகிறது! – * பூக்கும் மலர்களுக்கு தெரிவதில்லை சேரப் போவது மணமாலையிலா இல்லை மரண மாலையிலா என்று… விற்பனை ஆகும்போது தான் அதன் விதி தெரிகிறது! – * மணமாலையில் சேரும் மலரோ எல்லாராலும் ஆசிர்வதிக்கப்பட்டு மங்கல பொருளாய் ...

துணிச்சல்கார திருநங்கை!

Posted: 27 Aug 2016 05:37 PM PDT

- கேரள மாநிலத்தில் உள்ள எடமுட்டத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர், சுஜித்குமார்; காலிகட் பல்கலையில் பி.எஸ்சி., செவிலியர் பட்டம் பெற்ற திருநங்கையான இவர், இந்தியா முழுவதும் வேலை தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில், சவுதி ராணுவ மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். சில ஆண்டுகள் கடந்தபின், புதிதாக வந்திருந்த கர்னல் ஒருவர், இவருடைய சான்றிதழ்களை பார்த்த போது, திருநங்கை என்று அறிந்து, இவரை பணி நீக்கம் செய்தார். தாயகம் திரும்பியவர், தன்னுடைய பெரிய வீட்டில், துணைக்கு யாரும் இல்லாத ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™