Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?:பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

Posted: 27 Aug 2016 06:38 AM PDT

மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகாததால், பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாடத் திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.

தமிழக பள்ளி கல்வித் துறையில், ஒவ்வொரு வகுப்பின் பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுக ளுக்கு ஒரு முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும். 20 ஆண்டு களாக, இந்த ...

ரயில்களில் தனியார் விளம்பரங்களுக்கு அனுமதி: ரூ.11,000 கோடி வருவாய் திரட்ட அரசு திட்டம்

Posted: 27 Aug 2016 06:57 AM PDT

புதுடில்லி:ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வதன் மூலம், 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, ராஜதானி, உயர் வகுப்பு பயணிகள் பயணம் செய்யும் ரயில் களில், இந்த விளம்பரங்கள் செய்யப்படவுள்ளன.

ரயில்வே துறையின் வருவாயை உயர்த்தவும், சேவையை மேம்படுத்தவும், தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ரயில் பயணிகளிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் முக்கிய வருவாயாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும், 32 ஆயிரம் கோடி ரூபாய் ...

சட்டசபை வியூகத்தை மாற்ற தி.மு.க., முடிவு

Posted: 27 Aug 2016 07:05 AM PDT

சட்டசபை நடவடிக்கையில் இருந்து, 79 எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' சம்பவத்தை தொடர்ந்து, வியூகத்தை மாற்றி, ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபையில், இதுவரை இல்லாத அளவுக்கு, தி.மு.க., 89 எம்.எல்.ஏ.,க்களுடன், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. நெருக்கடி:எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிகம் என்பதா லும், கட்சிகளின் எண்ணிக்கை குறைவு என்ப தாலும், சட்டசபையில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறும்; தி.மு.க., உறுப்பினர்கள் சட்டசபைக்கு உள்ளே, ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.ஆக., 1ல், சட்டசபை மானிய ...

ஆண் குழந்தைக்கு இரண்டு பெண்கள் போட்டி:தாய்ப்பால் கொடுக்காமல் பிடிவாதம்

Posted: 27 Aug 2016 09:19 AM PDT

ஐதராபாத்:தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அரசு மருத்துவமனையில், அடுத்தடுத்து பிறந்த இரண்டு குழந்தைகள் மாறிப் போனதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆண் குழந்தைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்களும், தாய்ப்பால் கூட கொடுக்காமல், பாசப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திர சேகர ராவ் தலைமையிலான தெலுங் கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது; இங்குள்ள மெஹபூப் நகரைச் சேர்ந்த ரஜிதா, 22, என்ற பெண்ணுக்கு, ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்திற்காக ஐதராபாத் அரசு மருத்துவமனையில், சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார்; அங்கு ...

மேகதாது, பாலாறு விவகாரத்தை அடுத்து சிறுவாணி அணை பிரச்னை விஸ்வரூபம்!:விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க விரைந்து செயல்படுமா தமிழக அரசு?

Posted: 27 Aug 2016 09:34 AM PDT

மேகதாது அணை, பாலாறு தடுப்பணை விவகாரத்தை அடுத்து, சிறுவாணி அணை பிரச்னையும், தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, தமிழக அரசு விரைந்து செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழகத்திற்கு வளம் சேர்க்கும், காவிரி, பாலாறு, சிறுவாணி போன்ற ஆறுகள், அண்டை மாநிலங்களில் இருந்து வருகின்றன. நதி நீர் ஒப்பந்தம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை கண்டுகொள்ளாமல், அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் நதிகளின் குறுக்கே, அணை கட்டுவதற்கான முயற்சிகளை துவக்கி உள்ளன.காவிரி:கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி யானது, ...

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் சோனியா, ராகுலுக்கு 'நோட்டீஸ்!':உ.பி., தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரசுக்கு நெருக்கடி

Posted: 27 Aug 2016 09:46 AM PDT

புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த புதிய மனு தொடர்பாக, பதில் அளிக்கும்படி, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்டோருக்கு, டில்லி கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

அடுத்தாண்டு துவக்கத்தில், உ.பி., சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நேஷனல் ஹெரால்டு விவகாரத்தால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தொடர்ந்துள்ள, நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்., கட்சியின், 2010 - 11ம் ஆண்டுக் கான வரவு, செலவு கணக்கு ஆவணங்களை தாக்கல் ...

'ஏழைகளுக்கு ஆதரவான நல்லாட்சி:' பா.ஜ., முதல்வர்கள் மாநாட்டில் சூளுரை

Posted: 27 Aug 2016 10:01 AM PDT

புதுடில்லி: டில்லியில் நேற்று நடந்த, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட் டில், ''ஏழைகளுக்கு ஆதரவான நல்லாட் சியை அளிப்பதே பா.ஜ.,வின் நோக்கம்,'' என, அக்கட்சி யின் தேசிய தலைவர் அமித் ஷா வலியுறுத்தினார்.

இரண்டு ஆண்டுக்கு மேல்... : மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், பா.ஜ., அரசு ஆட்சி அமைத்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தலைமை வகித்தார். அதில், பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில் செயல்படுத்தப்
பட்டுள்ள சிறப்பு திட்டங்கள், மத்திய ...

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது : மத்திய ., அமைச்சர்

Posted: 27 Aug 2016 11:06 AM PDT

பெங்களூரு: ''தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது,'' என, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின், கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு, 50 டி.எம்.சி., தண்ணீர் வழங்க, கர்நாடகாவுக்கு உத்தரவிடும்படி, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்நிலையில், காங்., மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா தலை மையில், பெங்களூருவில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. மத்திய பா.ஜ., அமைச்சர் அனந்த குமார், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், ம.ஜ.த., மாநில தலைவர் ...

போதையில் கார் ஓட்டி போலீஸ் வண்டி மீது மோதிய நடிகர்:வழக்கில் தப்பிக்க பேரம்: கைதுக்கு பயந்து ஓட்டம்

Posted: 27 Aug 2016 11:18 AM PDT

குடி போதையில் கார் ஓட்டி, போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், போலீஸ் காவலில் இருந்து, தப்பி ஓடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவர், பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், அஜித் நடித்த, என்னை அறிந்தால் படத்தில், வில்லனாக நடித்துள்ளார். சென்னை, ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள, நட்சத்திர ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு நடந்த, நடிகை ராதிகாவின் மகள் ரயானே- மற்றும் -மிதுன் ...

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவின் செல்போன் உற்பத்தி 11 கோடி!

Posted: 27 Aug 2016 11:47 AM PDT

டில்லி: கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொத்த செல்போன்களின் எண்ணிக்கை 11 கோடியை தொட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேற்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த வருடம் நாட்டில் 37 புதிய செல் கம்பெனிகள் மூலம் 40,000 புதிய நேரடி வேலை வாய்ப்புகள் மற்றும் 1,25 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய கம்பெனிகளின் வருகையால் சென்ற ஆண்டு மொத்தம் 6 கோடி செல்போன்கள் உற்பத்தியான நிலையில் இந்த ஆண்டு அது 11 கோடியை எட்ட முடிந்ததாக அவர் ...

ஒடிசாவில் சிகிச்சை அளிக்க மந்திரவாதிகளை அழைக்கும் ஆசிரியர்கள்

Posted: 27 Aug 2016 01:55 PM PDT

புவனேஸ்வர்:ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் ஜெய்பட்னா என்ற இடத்தில் மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் 110 பெண்கள் இலவசமாக தங்கி வருகின்றனர். இந்த விடுதியில் நோயுற்ற மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டருக்கு பதிலாக, மந்திரவாதிகள் தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கு சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நிலைமை மோசமடைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னரே அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் ...

பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவின் பங்கு அதிமுக்கியத்துவம்: அக்பர்

Posted: 27 Aug 2016 03:17 PM PDT

போபால்:பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவின் பங்களிப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது .ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய ஆக்கப்பூர்வ சக்தியாக இந்தியா விளங்குகிறது . நம் தேசத்தின் செயல் திறனை எந்த நாடாலும் விஞ்ச முடியாது என வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.
போபாலில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. "கிழக்கை நோக்கிய கொள்கை' அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கிழக்காசிய நாடுகளுடன் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™