Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சிறுவாணியின் குறுக்கே அணை: கேரளத்துக்கு திமுக, தமாகா கண்டனம்

Posted: 27 Aug 2016 02:15 PM PDT

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய அட்வகேட் ஜெனரல் பொறுப்பேற்பு

Posted: 27 Aug 2016 02:14 PM PDT

தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட ஆர்.முத்துகுமாரசாமி சனிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

எய்ம்ஸ் தமிழக மாணவர் மர்ம சாவு: தில்லி உயர் நீதிமன்றத்தில் தந்தை மனு

Posted: 27 Aug 2016 02:12 PM PDT

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் (26) மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடக் கோரி அவரது தந்தை கணேசன் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

Posted: 27 Aug 2016 02:09 PM PDT

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகளுடன் வந்த பெண்ணுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நிறைவு: 1,745 இளைஞர்கள் எழுத்துத் தேர்வுக்கு தேர்வு

Posted: 27 Aug 2016 02:09 PM PDT

திருவண்ணாமலையில் நடைபெற்று வந்த ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

வேலூரில் ஒரே நாளில் இரு ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை

Posted: 27 Aug 2016 02:08 PM PDT

வேலூரில் வெள்ளிக்கிழமை இரவு ஒரே நாளில் இரண்டு ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை உலக அரங்கில் கொண்டு செல்ல 22 தூதர்கள்

Posted: 27 Aug 2016 01:31 PM PDT

காஷ்மீர் விவகாரத்தை உலக அரங்கில் கொண்டு செல்ல 22 தூதர்களை நியமித்து, இந்தியாவின் கோபத்தை தூண்டும் செயலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்

Posted: 27 Aug 2016 01:30 PM PDT

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார். அரக்கோணத்தை அடுத்த ராஜபாளையம் கிராமத்தில்

புதிய பள்ளிக் கட்டடம்: அமைச்சர் திறந்து வைத்தார்

Posted: 27 Aug 2016 01:30 PM PDT

நாட்டறம்பள்ளி அருகே ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தை அமைச்சர் வீரமணி சனிக்கிழமை திறந்து வைத்தார்.

ஆளுநர் ரோசய்யாவுக்கு 2 ஆண்டு பதவி நீட்டிப்பு?

Posted: 27 Aug 2016 01:29 PM PDT

தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் மத்திய அரசின் உத்தரவு ஓரிரு நாள்களில் வெளியிடப்படலாம் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை 5 நாள் முழு சுகாதாரப் பணி தொடக்கம்

Posted: 27 Aug 2016 01:28 PM PDT

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் அனைத்து ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை (ஆக. 29) முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை 5 நாள்கள் முழு சுகாதாரப் பணிகள் நடைபெறவுள்ளன.

தேசிய தர மதிப்பீட்டுக் குழு நாளை முதல் ஆக்ஸீலியம் கல்லூரியில் ஆய்வு

Posted: 27 Aug 2016 01:28 PM PDT

காட்பாடி ஆக்ஸீலியம் கல்லூரியில் தேசிய தரமதிப்பீட்டுக் குழு (நாக் கமிட்டி) திங்கள்கிழமை (ஆக. 29) முதல் மூன்று நாள்கள் சுழற்சி முறையில் ஆய்வு நடத்துகிறது.

மழைநீர் வடிகால் அமைக்கக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 27 Aug 2016 01:27 PM PDT

பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை அணுகுச் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கக் கோரி திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனீக்கள் கொட்டியதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் காயம்

Posted: 27 Aug 2016 01:27 PM PDT

வாணியம்பாடி அருகே இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

சோனியா, ராகுல் காந்திக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 27 Aug 2016 01:27 PM PDT

"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புதிதாக தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதில் தாக்கல் செய்யக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

ராமதாஸ் நாளை நெமிலி வருகை

Posted: 27 Aug 2016 01:27 PM PDT

பாமக நிறுவனர் ராமதாஸ், திங்கள்கிழமை நெமிலி வருகிறார். வேலூர் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன குப்பைத் தொட்டிகள்

Posted: 27 Aug 2016 01:26 PM PDT

ஆற்காடு நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன குப்பை தொட்டிகள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ரத்த தான விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 27 Aug 2016 01:26 PM PDT

ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் 3-இல் செயல்பட்டுவரும் குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமும், லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம், விழிப்புணர்வு ஊர்வலம் லாலாப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அம்மா' திட்ட சிறப்பு முகாம்கள்

Posted: 27 Aug 2016 01:26 PM PDT

வாலாஜாபேட்டை வட்டம், வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் பிரியா தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார்.

பேச்சுரிமை, விவாதத்துக்கான களங்களாக பல்கலைக்கழகங்களும் விளங்க வேண்டும்

Posted: 27 Aug 2016 01:25 PM PDT

பேச்சுரிமை, விவாதத்துக்கான களங்களாக பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிறுவனங்களும் விளங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

இந்திய - மலேசிய தமிழ் உறவு மிகவும் பழைமையானது: பினாங்கு துணை முதல்வர் பி. ராமசாமி பெருமிதம்

Posted: 27 Aug 2016 01:24 PM PDT

இந்தியாவுக்கும் மலேசிய தமிழர்களுக்குமான உறவு மிகவும் பழைமையானது என்று மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பி. ராமசாமி தெரிவித்தார்.

எய்ம்ஸ் தமிழக மாணவர் மர்ம சாவு: தில்லி உயர் நீதிமன்றத்தில் தந்தை மனு

Posted: 27 Aug 2016 01:24 PM PDT

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் (26) மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடக் கோரி அவரது தந்தை கணேசன் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வாக்குறுதியை மீறி மதுக்கடைகள் திறப்பு: தில்லி அரசு மீது ஸ்வராஜ் அபியான் புகார்

Posted: 27 Aug 2016 01:24 PM PDT

தில்லியில் மதுவை படிப்படியாக ஒழிப்போம் என்று அளித்த வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு மீறிவிட்டது என்று ஸ்வராஜ் அபியான் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

குர்கானில் "ஆபரேஷன் ரோமியோ': பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் கைது

Posted: 27 Aug 2016 01:23 PM PDT

குர்கானில் பெண்களை கேலி, கிண்டல் செய்யும் நபர்களை பிடிப்பதற்காக, "ஆபரேஷன் ரோமியோ' என்ற அதிரடி நடவடிக்கையை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மேற்கொண்டனர். இதில், 50 இளைஞர்கள் சிக்கினர்.

பாலின வள மையங்களை மீண்டும் திறக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 27 Aug 2016 01:23 PM PDT

தில்லியில் ஆண்- பெண் பாலினத்தவர்களின் எண்ணிக்கையை சமன்படுத்தும் வகையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செயல்பட்டு வந்த பாலின வள மையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது.

நொய்டாவில் வைரஸ் காய்ச்சலால் இரண்டு மாதங்களில் 10 பேர் சாவு

Posted: 27 Aug 2016 01:23 PM PDT

தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் உள்ள சர்ஃபாபாத் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதாரத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிஏஜி அறிக்கை விவகாரம்: மக்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்துவோம்: பாஜக

Posted: 27 Aug 2016 01:22 PM PDT

தில்லி அரசு விளம்பரங்கள் வெளியிட்ட நடவடிக்கைகள் தொடர்பான சிஏஜி அறிக்கை மீது சட்டப்பேரவையில் விவாதம் நடத்தத் தாமதமானால் ஜந்தர் மந்தரில் மக்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று தில்லி பாஜக அறிவித்துள்ளது.

காவலர் கொலையில் மூவர் கைது

Posted: 27 Aug 2016 01:21 PM PDT

தில்லியில் காவலர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒருவரின் வாழ்வை மாற்றக்கூடியவை புத்தகங்கள்! தில்லி புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேச்சு

Posted: 27 Aug 2016 01:21 PM PDT

ஒருவரின் வாழ்வை மாற்றக்கூடிய ஆற்றல் புத்தகங்களுக்கு உள்ளன என மத்திய அறிவியல், தொழில்நுட்ப, புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

தில்லி மகளிர் ஆணையத் தலைவரை கைது செய்ய சதி: தில்லி முதல்வர் கேஜரிவால் குற்றச்சாட்டு

Posted: 27 Aug 2016 01:21 PM PDT

தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவாலை கைது செய்ய சதி நடப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஜேஎன் பல்கலை. ஏபிவிபி துணைத் தலைவர் ராஜிநாமா

Posted: 27 Aug 2016 01:20 PM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) செயல்பட்டு வரும் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) துணைத் தலைவர் ஜதீன் கோரயா, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கன்னையா உள்பட மூவருக்கு ஜாமீன்

Posted: 27 Aug 2016 01:20 PM PDT

தேச விரோத வழக்கில், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்பட மூவருக்கு நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது.

மின் கம்பம் சாய்ந்ததில் பெண் சாவு

Posted: 27 Aug 2016 01:19 PM PDT

தில்லி அமன் விஹார் பகுதியில் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த பெண்ணின் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவர் தூக்கி வீசப்பட்டு சாவு

Posted: 27 Aug 2016 01:19 PM PDT

தில்லியில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவர், தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது: தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதைச் சேர்ந்தவர் சுபம் (16). லஹோரி கேட் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்

தில்லியில் கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை 7 மணி நேரத்தில் மீட்பு

Posted: 27 Aug 2016 01:19 PM PDT

வடக்கு தில்லி மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலையில் கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட 7 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

புதுவை பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய திட்டங்களுக்கு வாய்ப்பு

Posted: 27 Aug 2016 01:19 PM PDT

புதுவை சட்டப் பேரவையில், மாநில நிதிநிலை அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் அனுமதி: மணீஷ் திவாரி வரவேற்பு

Posted: 27 Aug 2016 01:18 PM PDT

மும்பையின் ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளதை காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி வரவேற்றுள்ளார்.

இளைஞர் நாடாளுமன்றப் போட்டியில் அசத்திய டிடிஇஏ பள்ளி மாணவர்கள்

Posted: 27 Aug 2016 01:18 PM PDT

இளைஞர் நாடாளுமன்றப் போட்டியில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 92 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 27 Aug 2016 01:18 PM PDT

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 92 லட்சம் மதிப்பிலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணத்தாள்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நூதன முறையில் லாரி திருடிய இளைஞர் கைது: 2 லாரிகள் மீட்பு

Posted: 27 Aug 2016 01:17 PM PDT

காஞ்சிபுரம் அருகே நூதன முறையில் லாரிகளை திருடி விற்பனை செய்த இளைஞரை, போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 2 லாரிகளை மீட்டனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 27 Aug 2016 01:17 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

Posted: 27 Aug 2016 01:16 PM PDT

காஞ்சிபுரம் அதிமுக மேற்கு மாவட்ட மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் உத்தரமேரூரில் அண்மையில் நடைபெற்றது.

குப்பை கொட்டுவதற்கு இடம் தேர்வு: பொதுமக்கள் போராட்டத்தால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்

Posted: 27 Aug 2016 01:16 PM PDT

கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு கூட்டம்

Posted: 27 Aug 2016 01:16 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞர் சாவு

Posted: 27 Aug 2016 01:15 PM PDT

செங்கல்பட்டை அடுத்த வேதநாராயணபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 5 தொழிலாளர்கள் மீட்பு

Posted: 27 Aug 2016 01:15 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த செங்காட்டூரில் அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 5 பேர், 3 குழந்தைகளை செய்யூர் வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனர்.

வடமாநில இளைஞர் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை

Posted: 27 Aug 2016 01:15 PM PDT

காஞ்சிபுரம் அருகே தொழிற்சாலையில் பணியின்போது மயங்கி விழுந்த வடமாநில இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20: போராடித் தோற்றது இந்தியா

Posted: 27 Aug 2016 01:14 PM PDT

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச டென்னிஸ்: இறுதிச்சுற்றில் பயஸ்-பெஜிமான் ஜோடி

Posted: 27 Aug 2016 01:10 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஏடிபி வின்ஸ்டன் - சலேம் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

ஊழல்: கென்ய ஒலிம்பிக் கமிட்டி செயலர் கைது

Posted: 27 Aug 2016 01:06 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளில் ஊழல் செய்ததாக, கென்ய ஒலிம்பிக் கமிட்டி செயலர் பிரான்சிஸ் பால் அந்நாட்டு போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க ஓபன்: முக்கியச்சுற்றுக்கு முன்னேறினார் மைனேனி

Posted: 27 Aug 2016 01:04 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முக்கியச்சுற்றுக்கு இந்தியாவின் சாகேத் மைனேனி முன்னேறினார்.

சோதனைக்குள்ளாகிறது ஹஃபீஸ் பந்துவீச்சு

Posted: 27 Aug 2016 01:01 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹஃபீஸ் தனது பந்துவீச்சு முறையை ஐசிசி சோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

விருது பெறும் வீரர்கள் பிரதமருடன் இன்று சந்திப்பு

Posted: 27 Aug 2016 12:58 PM PDT

இந்த ஆண்டுக்கான தேசிய விருது பெறும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க உள்ளனர்.

டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்

Posted: 27 Aug 2016 12:52 PM PDT

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வென்றது.

ரியோ தோல்விக்கு நிர்வாகக் குறைபாடுகளும் காரணம்: குருபாக்ஸ் சிங் சாந்து

Posted: 27 Aug 2016 12:49 PM PDT

"ரியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை அணி பதக்கம் வெல்லாததற்கு தார்மீக பொறுப்பேற்கிறேன். இருப்பினும், நிர்வாகக் குறைபாடுகளும் அதற்குக் காரணம்' என்று தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளர் குருபாக்ஸ் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா- 283/3

Posted: 27 Aug 2016 12:46 PM PDT

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா.

சர்ஃப்ராஸ் சதம்: பாகிஸ்தான்- 251

Posted: 27 Aug 2016 12:44 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஓருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் எடுத்தது.

சோமாலியா கடற்கரை உணவகத்தில் அல்-ஷபாப் தாக்குதல்: 7 பேர் பலி

Posted: 27 Aug 2016 12:36 PM PDT

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள கடற்கரை உணவகத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

உணவகத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் வங்கதேச போலீஸாரால் சுட்டுக் கொலை

Posted: 27 Aug 2016 12:35 PM PDT

வங்கதேசத்தில் இந்திய மாணவி உள்பட 22 பேரது உயிர்களை பலி வாங்கிய டாக்கா உணவகத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி தமீம் அகமது செளத்ரி (30) போலீஸாருடன் நிகழ்ந்த மோதலில் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

Posted: 27 Aug 2016 12:34 PM PDT

ஆர்.கே.பேட்டை அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் சனிக்கிழமை கொள்ளை முயற்சி நடைபெற்றது.

ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

Posted: 27 Aug 2016 12:34 PM PDT

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரியைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை, மணவாளநகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொற்றுநோய் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

Posted: 27 Aug 2016 12:34 PM PDT

திருவள்ளூரில் தொற்றுநோய் தடுப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.

மனைவியைக் கொலை செய்ய முயன்றதாக கணவர் கைது

Posted: 27 Aug 2016 12:34 PM PDT

திருவள்ளூர் அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக கணவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 போலி மருத்துவர்கள் கைது

Posted: 27 Aug 2016 12:33 PM PDT

பொன்னேரி அருகே 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை: தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

Posted: 27 Aug 2016 12:33 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால், அது குறித்து புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு: 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி இல்லை

Posted: 27 Aug 2016 12:33 PM PDT

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 117 அடியாக சரிந்துள்ளதால், தேனி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

Posted: 27 Aug 2016 12:32 PM PDT

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.

ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை

Posted: 27 Aug 2016 12:32 PM PDT

பழனி முத்துமாரியம்மன் கோயிலில், ஐயப்பன் சன்னதி கும்பாபிஷேக மண்டல பூஜையையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றன.

ரஷிய தீ விபத்தில் 16 பேர் பலி

Posted: 27 Aug 2016 12:32 PM PDT

ரஷியாவில் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

விருதுநகர் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

Posted: 27 Aug 2016 12:32 PM PDT

விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் பயிலும் 126 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள் மற்றும் மூடு காலணிகளை அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, நிலோபர் கபில் ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.

வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

Posted: 27 Aug 2016 12:31 PM PDT

ராஜபாளையம் ஸ்ரீருக்குமணி சத்தியபாமா சமேத ஸ்ரீசந்தான வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு சதி: முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கைது

Posted: 27 Aug 2016 12:31 PM PDT

துருக்கி அரசைக் கவிழ்க்க முயன்ற சதி தொடர்பாக, முன்னாள் அதிபரின் ஆலோசகர் உள்ளிட்ட மூன்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கூலி உயர்வு வழங்க சிறு விசைத்தறி உற்பத்தியாளர்சங்கத்தினர் கோரிக்கை

Posted: 27 Aug 2016 12:31 PM PDT

ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க, ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வட்டார சிறு விசைத்தறி உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிரியா விவகாரம்: ரஷியா-அமெரிக்கா பேச்சு

Posted: 27 Aug 2016 12:31 PM PDT

சிரியா விவகாரம் குறித்து ரஷிய - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

ராஜபாளையத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 27 Aug 2016 12:30 PM PDT

ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடியில் ஆக. 30 இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 27 Aug 2016 12:30 PM PDT

காரைக்குடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) நடைபெறவுள்ளது.

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக மழை

Posted: 27 Aug 2016 12:30 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

மீனவ இளைஞர்களை கடலோர காவல் படையில் சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்

Posted: 27 Aug 2016 12:29 PM PDT

கல்லூரியில் பயிலும் மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியளித்து கடலோரக் காவல்படையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் முரு.மணிகண்டன் தெரிவித்தார்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காகித குவளை பயன்படுத்த தடை: ஆட்சியர்

Posted: 27 Aug 2016 12:29 PM PDT

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காகித மற்றும் பிளாஸ்டிக் குவளைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை: ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வலியுறுத்தல்

Posted: 27 Aug 2016 12:29 PM PDT

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்காலால் தொற்று நோய் பரவும் அபாயம்

Posted: 27 Aug 2016 12:28 PM PDT

உத்தமபாளையம் அருகே கோம்பையில் நெடுஞ்சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்காலால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேளாண்மை வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 27 Aug 2016 12:28 PM PDT

தேனி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.

மாணவி தீக்குளித்து தற்கொலை

Posted: 27 Aug 2016 12:28 PM PDT

தேனி மாவட்டம் குச்சனூரில், பெற்றோர் கண்டித்ததால் 10-ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை

Posted: 27 Aug 2016 12:28 PM PDT

விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி உள்ளதாகக் கூறி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.

768 மதுபாட்டில்கள் திருட்டு: லாரி ஓட்டுநர் மீது வழக்கு

Posted: 27 Aug 2016 12:27 PM PDT

கோவையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற லாரியில் 768 மதுபாட்டில்கள் திருடப்பட்டதை அடுத்து, அதன் ஓட்டுநர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மூலம் கைதிகள் படுகொலை

Posted: 27 Aug 2016 12:27 PM PDT

சிரியாவில் சிறுவர்கள் மூலம் கைதிகளை படுகொலை செய்து, அதன் விடியோ காட்சியை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

விருதுநகரில் பெண் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

Posted: 27 Aug 2016 12:26 PM PDT

விருதுநகரில் காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு செல்லிடப்பேசியில் மிரட்டல் விடுத்த இருவரை, சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கான பிரசாரம்

Posted: 27 Aug 2016 12:26 PM PDT

மத்திய அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, பொதுத் துறைகளை தனியாரிடம் விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 2 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக சிஐடியூ சனிக்கிழமை பிரசாரம் செய்தது.

கோவிலூர் மடாலயம் சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி

Posted: 27 Aug 2016 12:26 PM PDT

காரைக்குடி அருகே கோவிலூர் மடாலயம் சார்பில் சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன.

திருப்பத்தூர் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி

Posted: 27 Aug 2016 12:25 PM PDT

திருப்பத்தூர் அருகேயுள்ள மெளன்ட் சியோன் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.

காரைக்குடி பகுதியில் பலத்த மழை

Posted: 27 Aug 2016 12:25 PM PDT

காரைக்குடியில் 2-வது நாளாக சனிக்கிழமை மாலையில் தொடர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

Posted: 27 Aug 2016 12:25 PM PDT

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான திறன் ஆக்க பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

Posted: 27 Aug 2016 12:25 PM PDT

தேவகோட்டையில் சனிக்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் பரமக்குடி இளைஞர் கைது

Posted: 27 Aug 2016 12:24 PM PDT

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பரமக்குடி இளைஞர் சனிக்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி

Posted: 27 Aug 2016 12:24 PM PDT

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் 11,14,17,19 வயதிற்குள்பட்ட மாணவ,மாணவிகளுக்கு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்

Posted: 27 Aug 2016 12:23 PM PDT

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காப்புக்கட்டு உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழனி பெருமாள் கோயில்களில் உறியடி திருவிழா

Posted: 27 Aug 2016 12:23 PM PDT

பழனி பெருமாள் கோயில்களில் கோகுலாஷ்டமியையொட்டி சனிக்கிழமை உறியடி திருவிழா நடைபெற்றது.

தடகள போட்டிகள்: குருவப்பா மேல்நிலைப் பள்ளி முதலிடம்

Posted: 27 Aug 2016 12:23 PM PDT

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி சி குறுவட்ட தடகளப் போட்டிகளில் 16 ஆவது ஆண்டாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

கொடைக்கானல் மலையில் வாகனம் உருண்டு விழுந்ததா? தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீஸார்

Posted: 27 Aug 2016 12:22 PM PDT

கொடைக்கானல் மலையில் இருந்து பள்ளத்தில் சனிக்கிழமை இரவு வாகனம் விழுந்ததாக வந்த தகவலையடுத்து அங்கு சென்று தேடுதல் பணியில் போலீஸாரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர்.

ஒரே நாளில் 3 தேர்வுகள்: விண்ணப்பித்தவர்கள் தவிப்பு

Posted: 27 Aug 2016 12:22 PM PDT

தட்டச்சு தேர்வு, நீதிமன்ற தட்டச்சாளர் பணி தேர்வு, மின்வாரிய உதவியாளர் தேர்வு ஆகிய 3 தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவதால் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அவதியடைந்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™