Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்களுக்கு அனுமதி:ஐகோர்ட் வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பு

Posted: 26 Aug 2016 09:33 AM PDT

மும்பை:மும்பையில் பிரபலமான, ஹாஜி அலி தர்காவின் உள்பகுதிக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மும்பை ஐகோர்ட் வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. இம்மாநிலத் தலைநகர் மும்பையின் வொர்லி பகுதியில், கடலோரத்தில் அமைந்துள்ளது, 15ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, ஹாஜி அலி தர்கா.கடந்த, 2012ம் ஆண்டு வரை, தர்காவின் உள்பகுதிக்குள் செல்ல பெண்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது. தர்கா நிர்வாகத்தின் இந்த ...

அதிவேக முன்னேற்றத்துக்கு நரேந்திர மோடி இலக்கு

Posted: 26 Aug 2016 09:35 AM PDT

புதுடில்லி:''படிப்படியாக பெறும் முன்னேற்றம் போதாது; மிக வேகமாக நாம் மிகப்பெரிய மாறுதல்களுக்கு தயாராக வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

'நிடி ஆயோக்' அமைப்பின் சார்பில், இந்தியாவின் வளர்ச்சிக்கான முயற்சிகள் என்ற பெயரில், கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், சிங்கப்பூர் துணை பிரதமர் சண்முகரத்தினம் பங்கேற்று, சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து பேசினார்.முன்னதாக நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசிய தாவது:முப்பது ஆண்டுகளுக்குமுன்பு, ஒரு நாட்டின் வளர்ச்சியை, அந்த நாடே திட்டமிட்டது. ...

சசிகலா புஷ்பாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

Posted: 26 Aug 2016 09:40 AM PDT

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையின் உத்தரவின்படி, வரும், 29ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், அவரை கைது செய்வதற்கு, ஆறு வாரங்கள் தடை விதித்தது.

தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவை, டில்லி விமான நிலையத்தில் தாக்கிய சம்பவம் தொடர் பாக, ராஜ்யசபா எம்.பி.,யான சசிகலா புஷ்பா, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தன்னை தாக்கியதாக, ராஜ்யசபாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா.இதற்கிடையே, ...

நாடு முழுவதும் 15 கோடி எல்.இ.டி., பல்பு வழங்கி சாதனை : தினந்தோறும் 21 கோடி ரூபாய் மிச்சமாகிறது

Posted: 26 Aug 2016 09:56 AM PDT

புதுடில்லி: மின்சாரத்தை சேமிக்கும் இலக்கு டன், 2015 முதல், மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் திட்டத்தின் கீழ், 15 கோடி எல்.இ.டி., மின் பல்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம், 5.37 கோடி யூனிட் மின்சாரம் நாள்தோறும் சேமிக்கப்படுகிறது; தினந்தோறும், 21.49 கோடி ரூபாய் மிச்சமாகி வருகிறது.
மின்சாரம் சேமிப்பு :
குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி, அதிக ஒளியை நீண்ட காலத்திற்கு வழங்கும் திறன் கொண்ட எல்.இ.டி., மின் விளக்குகள், தற்போது அதிகளவில் பயன் படுத்தப்படுகின்றன. பெருமளவு மின்சாரத்தை சேமிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால், இவற்றை ...

40 ஆயிரம் போலி டாக்டர்கள் மீது தமிழக அரசின் நடவடிக்கை பாயுமா?: களையெடுப்பை துவக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Posted: 26 Aug 2016 10:16 AM PDT

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறப்புகள் தொடரும் நிலையில், நோய் தாக்கம் அதிகரிக்க, போலி டாக்டர்களே முக்கிய காரணம் என, தெரியவந்துள்ளது.

அதனால், மாநிலம் முழுவதும், கொசுக்கள் போல் பெருகி விட்ட, 40 ஆயிரம் போலி டாக்டர்களையும் கண்டறிந்து, தமிழக அரசு களையெடுப்பை துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவ துவங்கி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம், ஆதி ஆந்திரா வாடா கிராமத்தில், ஒன்பது மாத குழந்தை உட்பட, ஐந்து சிறுவர்கள் அடுத்தடுத்து இறந்தது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், ...

கை கொடுத்தது சட்டத்திருத்தம்; தப்பியது தே.மு.தி.க., அங்கீகாரம்

Posted: 26 Aug 2016 10:19 AM PDT

தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் அளித்துள்ள அங்கீகாரம், ஐந்து ஆண்டுகளுக்கு ரத்தாகாது.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கட்சி, பதிவாகும் மொத்த ஓட்டுகளில், ஆறு சதவீதம் அல்லது, 25 தொகுதிக்கு ஒருவர் வீதம், 234க்கு, ஒன்பது எம்.எல்.ஏ.,க்களை பெற்றால் தான், தேர்தல் கமிஷனால் அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.தேர்தல் கமிஷன் நடத்தும் கூட்டங்களுக்கு, அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே அழைக்கப்படுவர். கடந்த சட்டசபை தேர்தலில், தமிழக கட்சிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., மட்டுமே அங்கீகாரம் பெற்றவையாக ...

அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் 'டாப் 20' பட்டியலில் 4 இந்தியர்கள்

Posted: 26 Aug 2016 10:22 AM PDT

லண்டன்:உலகின் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில், 'டாப் 20' இடங்களில், இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகர்கள், நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், 220 கோடி ரூபாய் வருமானத்துடன், நடிகர் ஷாருக் கான், எட்டாம் இடம் பிடித்துள்ளார்.

'ஹாலிவுட்' முதல் 'பாலிவுட்' வரை, உலகின் அனைத்து தரப்பு நடிகர்களின் வருமானத்தின் அடிப்படையில், அதிக வருமானம் ஈட்டும் நடிகர்களின் பட்டியலை, 'போர்ப்ஸ்' நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2016ம் ஆண்டுக்கான, அதிக வருமானம் ஈட்டும் நடிகர் கள் பட்டியல், தற்போது வெளியாகி யுள்ளது.இந்த பட்டியலில்,முதல், 20 ...

ஸ்டாலின் பி.ஏ., திடீர் நீக்கம்: அரசு நடவடிக்கையால் பரபரப்பு

Posted: 26 Aug 2016 10:26 AM PDT

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் நேர்முக உதவியாளர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது, சட்டசபை செயலகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவருக்கு, அரசு தரப்பில், ஒரு நேர்முக உதவியாளர், ஒரு உதவி யாளர், ஒரு கார், ஒரு ஓட்டுனர் வழங்கப்படு வது வழக்கம்.அதன்படி ஸ்டாலினுக்கு, நேர்முக உதவியாளராக, சட்டசபை செயலகத் தில், துணைச் செயலராக பணிபுரிந்த ஆதி சேஷன் நியமிக்கப்பட்டார். அவரும் அப் பொறுப்பை ஏற்று, தன் பணிகளை கவனித்து வந்தார்.'இந்நிலையில், தி.மு.க., உறுப்பினர்கள், சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதனால், ...

டி.என்.பி.எல்., கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் காஞ்சி அணி வெற்றி

Posted: 26 Aug 2016 10:36 AM PDT

சென்னை: டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் கோவை , காஞ்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது. சூப்பர் ஓவரில் காஞ்சி அணி ‛த்ரில்' வெற்றி பெற்றது.
தமிழக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லய்கா கோவை கிங்ஸ் அணியும் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற காஞ்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது. கோவை அணியின் அனிருத் சீத்தாராமன் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய காஞ்சி அணி 20 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 126 ...

தமிழக மின் உற்பத்தி இலக்கு அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

Posted: 26 Aug 2016 12:26 PM PDT

தமிழகத்தில் வரும், 2017 - 18ம் ஆண்டில், மின் உற்பத்தி, கொள்முதல் அளவு விபரத்தை வழங்குமாறு, தமிழ்நாடு மின் வாரியத்திடம், மத்திய அரசு கேட்டுள்ளது.

மத்திய அரசுக்கு, தமிழகத்தில், நெய்வேலி - என்.எல்.சி., வல்லுார், கூடங்குளம், துாத்துக்குடி - என்.எல்.சி., மற்றும் கல்பாக்கம் ஆகிய இடங் களில், அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின் சாரத்தில், தமிழகத்திற்கு, 5,429 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், மத்தியஅரசு, 2017 - 18ல், நாடு முழுவதும், மின் உற்பத்தி இலக்கை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகம் உள்ளிட்ட மாநில ...

'தலாக்'கை எதிர்த்து மனு: அரசுக்கு 'நோட்டீஸ்'

Posted: 26 Aug 2016 12:26 PM PDT

புதுடில்லி: மூன்று முறை 'தலாக்' என்று கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறையை எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தாக்கல் செய்துள்ள வழக்கில், பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மூன்று முறை, 'தலாக்' எனக் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுகுறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பி ...

அதிக எடை உள்ளவர்களுக்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம்

Posted: 26 Aug 2016 01:42 PM PDT

வாஷிங்டன்: அதிக உடல் எடை உடையவர்களுக்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கேன்சர் நோயால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அதிக உடல் பருமன் உள்ளவர்களாக இருப்பதாக அப்பல்கலை தெரிவித்துள்ளது,
நொறுக்குத் தீனி பழக்கம், அடிக்கடி கொழுப்பு அதிகமான உணவு உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் உலகில் பெரும்பாலானவர்கள் தங்கள் உடல் எடையை அதிகாமாக்கி கொள்கின்றனர். உணவுப்பழக்கம் ஒரு புறம் இருக்க முறையான உடல் பயிற்சி இல்லாமல் இருப்பதும் நம்மில் பலருக்கு அதிக உடல் பருமன் ஏற்பட ...

நேபாள அமைச்சரவை விரிவாக்கம்; 13 பேருக்கு அமைச்சர் பதவி

Posted: 26 Aug 2016 02:39 PM PDT

காத்மண்ட் : நேபாள அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சி.பி.என் - மாவோயிஸ்டு மையத்தின் தலைவரான, பிரசண்டா(61), நேபாள பிரதமராக கடந்த ஆக., 4-ம் தேதி பதவியேற்றார். அப்போது அவருடன் இரு துணைப் பிரதமர்கள் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். பின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார்.
இந்நிலையில் நேற்று(26-08-16) நேபாளி காங்., கட்சியைச் சேர்ந்த 13 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். பொறுப்பேற்ற பிரகாஷ் சரண் ...

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை

Posted: 26 Aug 2016 03:22 PM PDT

பியோங்யாங்: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களை சுரங்க ஆலையில் கூலி வேலை செய்ய அனுப்ப அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியா அணி ரியோ ஒலிம்பிக்கில் 2 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றது. ஆனால் அந்நாட்டின் பரம எதிரி நாடான தென் கொரியா 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வென்றது. இது அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூலி வேலைக்கு..
இதனையடுத்து நாடு திரும்பிய பதக்கம் வெல்லாத வீரர்களை சுரங்க ஆலையில் கூலி வேலைக்கு அனுப்ப அதிபர் கிம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™