Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR

Posted: 26 Aug 2016 10:54 AM PDT

கட்டுன பொண்டாட்டி ஒடம்புக்கு முடியாம கட்டிலோட படுத்துட்டா பக்கத்து வீட்டம்மாவ ஓரக்கண்ணால பாக்குற சபல புத்தி ஆணுங்க கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்றாங்க!! ஒடிஷாவுல ஒரு கூத்து பொண்டாட்டி செத்த பின்னும் பொணத்த கொண்டுபோக எலவச வண்டி கூட உனக்கில்ல போடான்னு அனுப்பி விட்டானுங்க இரண்டாம் கடவுள்ங்கற மருத்துவனுங்க!! ஆனா, போனவ என் பொஞ்சாதின்னு பத்து மைல் தூரம் தூக்கி சொமந்துகிட்டே வந்தான் பாரு, அவன் கால்களை கழுவி மரியாதை செய்து - கழுவிய தண்ணீர குடிக்கத் தரணும் அந்த, மருத்துவமனையில ...

மூளைக்குணவு

Posted: 26 Aug 2016 08:57 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

நானின்றி நீயேது ?

Posted: 26 Aug 2016 08:31 AM PDT


நானின்றி நீயேது ?
...நடவின்றி பயிரேது ?
ஊனின்றி உயிரேது ?
...உறவின்றி சுகமேது ?

வானின்றி மழையேது ?
...வரவின்றி செலவேது ?
தேனின்றி சுவையேது ?
...தெய்வத்தின் திருவுருவே !

நாவின்றி சொல்லேது ?
...நகமின்றி விரலேது ?
பூவின்றி காயேது ?
...புதனின்றி நாளேது ?

நீரின்றி உலகேது ?
...நிலவின்றி வானேது ?
தேரின்றி வருகின்ற
...தெய்வம் நீதானே !


கிடைக்குமா சுதந்திரம்?

Posted: 26 Aug 2016 08:25 AM PDT

கிடைக்குமா சுதந்திரம்? கல்வி இலவசமாய் கற்றிடச் சுதந்திரம் காற்றை மாசின்றி சுவாசிக்கச் சுதந்திரம் கிழடுகள் வாரிசோடு வாழ்ந்திடச் சுதந்திரம் கீழ்த்தட்டு மனிதனுக்கும் சமநீதிச் சுதந்திரம் குமரிப்பெண் குதூகலமாய் சுற்றிவரச் சுதந்திரம் கூடப்பிறந்தவளைக் கொண்டாடச் சுதந்திரம் கூடி மகிழ்ந்தவளைக் கூப்பிடும் சுதந்திரம் கெடுபிடி ஏதுமின்றி நீதி கேட்கச் சுதந்திரம் கேள்விகள் பல கேட்டு தேர்வில் வெல்லச் சுதந்திரம் கையூட்டு பெறுவோரை காட்டிக் கொடுக்கச் சுதந்திரம் கொலைகாரனை ...

மனுஷன் சாப்பிடுவானா ?

Posted: 26 Aug 2016 07:23 AM PDT

இந்த சாப்பாட்டை மனுஷன் சாப்பிடுவானா ? ரசத்துல உப்பில்ல ; உறப்பில்ல . மோரு ஒரே தண்ணியா இருக்கு ; சுரக்கா கூட்டு ; ஏன் கூட்டு வைக்க வேற காய் கிடைக்கலையா ? ஒரு அப்பளம் பொரிச்சு வைக்கக்கலாமில்ல ! காலையில அரக்க பரக்க ஆபீசுக்குப் போறதால சரியா சாப்பிட முடியறதில்ல ; மத்தியானம் ஆபீஸ் கேன்டீன்ல ஏதோ கோழி கொத்தற மாதிரி கொஞ்சம் சாப்பிடறேன் . நிம்மதியா ராத்திரி சாப்பாடு ஒண்ணுதான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன் ; அதுவும் இப்படி செஞ்சா எப்படி சாப்பிடறது ?  உன்னைக் கட்டிகிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் ; இன்னமும் ...

தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!

Posted: 26 Aug 2016 01:35 AM PDT

- சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகளின் போராட்டம் ஒரு புறம்... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள அவசரகால வழக்கு ஒரு புறம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடகா முதல்வரை சந்தித்து திரும்பியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழு ஒன்று. "காவிரியில் தண்ணீர் குறைவாக இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது" என அவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் ...

காதல் அற்பமா? அற்புதமா?

Posted: 26 Aug 2016 01:11 AM PDT

காதல் என்றாலே மனப்புண்ணை ஏற்படுத்துவது என்பது ஒரு எண்ணம். இந்த ஒரு காதலுக்கு இப்படி வேதனைப்பட்டு வாழ்வை வீணாக்குவதா? அப்படி என்ன இது ஒரு பொல்லாத ஐஸ்வரியம் என்பதாகவும் ஒரு எண்ணம் இருக்கின்றது. - மனப்புண்ணை ஏற்படுத்தும் ஒரு வியாதிதான் காதல் என்கினறனர் விஞ்ஞானிகள். Drug மாதிரி மயக்கம் என்கின்றனர். ஏற்கெனவே வரலாற்றில் லுக்ரட்யஸ், ஓவிட் ஷேக்ஸ்பியர் ஆகியவர்கள் காதலுக்கு மருந்து கண்டு எழுதியிருக்கின்றனர் என்பதாகவும் சொல்லப்படுகின்றது. - இப்படிப்பட்ட நிலைமையில் காதல் என்பது ஒரு அற்பமான ...

காதல் சேரவில்லை ...!

Posted: 26 Aug 2016 12:43 AM PDT

உன் குரல்
கேட்க வேண்டும்
என்ற
ஏமாற்றமே என்னை
கொஞ்சம் கொஞ்சமாக
கூட்டியது
உயிரின் ஆசையை
இன்று ஆயுளோடு
காத்திருக்கிறேன்
ஆனால்
காதல் சேரவில்லை ...!

பேயாக திரிகிறேன் ...!

Posted: 26 Aug 2016 12:06 AM PDT

காற்றை விடவும்
உயர்ந்த ஸ்தவனம்
உன்
இதய துடிப்பு என்றவுடன்
இதயத்தை அடைத்துவிட்டு
காற்றை திறந்து விட்டாள்
இப்போது
பேயாக திரிகிறேன்
காற்றில் ...!

அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக

Posted: 25 Aug 2016 11:44 PM PDT

நண்பர்களே!அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக. பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.நன்றி பதிவிறக்க சுட்டி இப்படிக்கு தமிழ்நேசன் நேரடி லிங்க்: http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_29.html

தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்

Posted: 25 Aug 2016 05:56 PM PDT

சென்னை, மத்திய வங்கக்கடல் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலடுக்கு சுழற்சி தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ...

ஆக. 31 முதல் முன்பதிவு ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு

Posted: 25 Aug 2016 05:52 PM PDT

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆக. 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்கள் விபத்துக்குள்ளாகும்போது, பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விருப்பத் தேர்வாக பயணக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது ரயில்வே ...

உலக வங்கித் தலைவராக ஜிம் யோங் கிம் மீண்டும் நியமனம்

Posted: 25 Aug 2016 05:48 PM PDT

- உலக வங்கி தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக ஜிம் யோங் கிம்மை அமெரிக்கா மீண்டும் நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதி அமைச்சர் ஜேக்கப் ஜே லியூ தெரிவித்துள்ளதாவது: உலக வங்கித் தலைவர் பதவிக்கு ஜிம் யோங் கிம்மை மீண்டும் நியமனம் செய்வது பெருமை அளிப்பதாக உள்ளது. சவாலான சூழ்நிலையிலும் சர்வதேச நாடுகளின் மேம்பாட்டிற்காக அறிவுப்பூர்வமான வழிமுறையில் தீர்வுகளைக் கண்டவர் ஜிம் யோங் கிம். குறிப்பாக, வறுமை ஒழிப்பு, சமத்துவமின்மை பிரச்னைகளை திறம்படக் கையாண்டது, பருவநிலை மாறுபாடு விவகாரங்களில் ...

கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம்

Posted: 25 Aug 2016 05:42 PM PDT

- மும்பை:மஹாராஷ்டிராவில், 'தஹி ஹண்டி' என்ற பெயரில் கொண்டாடப்படும், உறியடித் திருவிழா, கிருஷ்ண ஜெயந்தியான நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. - சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி, பல இடங்களில், 20 அடி உயரத்திற்கும் மேலான மனித பிரமிடுகள் அமைக்கப்பட்டன. - மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமை யிலான, பா.ஜ., -சிவசேனா ஆட்சி நடக்கிறது கிருஷ்ணர் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி திருநாள், ஆண்டு தோறும் இங்கு வெகு விமரி சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இளைஞர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™