Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என சித்தராமையா... திட்டவட்டம்!: மழை பெய்தால் தரப்படும் என தமிழக விவசாயிகளிடம் கண்டிப்பு

Posted: 25 Aug 2016 09:12 AM PDT

பெங்களூரு:''காவிரியில் இருந்து தமிழகத் துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்பே இல்லை; கர்நாடகாவில் அதிக மழை பெய்தால், தண்ணீர் திறந்து விடுவோம்,'' என, தமிழக விவசாயிகளிடம், கர்நாடக முதல்வர் சித்த ராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், 'போதிய மழை பெய்யவில்லை' எனக் கூறி, கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால், தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு ...

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த ராஜ்நாத் சிங் உறுதி!முதல் முயற்சியாக அனைத்து கட்சி குழு பயணம்

Posted: 25 Aug 2016 10:23 AM PDT

ஸ்ரீநகர்:''இந்தியாவின் எதிர்காலத்தை வடிவ மைத்து வருகிறோம்; காஷ்மீர் இல்லாமல் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை. காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த, அனைத்துக் கட்சி குழு விரைவில் அங்கு பயணம் மேற்கொள்ளும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் பர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, 48 நாட்களாக, ஜம்மு - காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவிவருகிறது.இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து நேரில் ஆய்வு செய்யவும், அமைதியை ஏற்படுத்தவும், இரண்டு நாள் பயணமாக, ஜம்மு - ...

அமைச்சர்களுக்கு 'லீவு' போச்சு

Posted: 25 Aug 2016 10:26 AM PDT

புதுடில்லி:'வெள்ளிக்கிழமை ஒருநாள் லீவு போட்டால், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு லீவு கிடைக்கும்' என, அரசு ஊழியர்கள் பலர் விடு முறையில் சென்றுள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் லீவு போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய அரசு அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை; சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால், இன்று ஒரு நாள் லீவு எடுத்தால், தொடர்ந்து நான்கு நாட்கள் கிடைக்கும் என்பதால், அரசு ஊழியர்கள் பலர்விடுமுறையில்சென்றுள்ளனர்.அதே நேரத்தில், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு இன்று பல்வேறு ...

ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்சாவிற்கு பன்றி காய்ச்சல்

Posted: 25 Aug 2016 10:30 AM PDT

புதுடில்லி: ஒலிம்பிக் மாரத்தான் வீராங்கனை ஜெய்சாவிற்கு பன்றிகாய்ச்சல் வந்துள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் பிரேசில் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டியில் பங்கு பெற்று 89வது இடத்தை பிடித்திருந்தார். இதற்கிடையில் ஒலிம்பிக் மராத்தான் போட்டியின் போது இந்தியா சார்பில் தண்ணீர் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தான் உயிருக்கே போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் ...

நீர்மூழ்கி கப்பல் ஆவண கசிவு: விசாரிக்க பிரான்சுக்கு வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 10:32 AM PDT

புதுடில்லி:பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படும், 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கிக் கப்பல் ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக, விசாரணை நடத்தும்படி, பிரான்ஸ் நாட்டிடம், மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

ஆலோசனை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, டி.சி.என்.எஸ்., என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், இந்திய கடற்படைக்கு, ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன; முதல் நீர்மூழ்கிக் கப்பல், இந்த ஆண்டு இறுதியில் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வெளியாகும், 'தி ஆஸ்திரேலியன்' என்ற ...

கோர்ட் உத்தரவை மீறி உறியடி விழாவில் மனித பிரமிடு அமைத்ததால் பதற்றம்

Posted: 25 Aug 2016 10:36 AM PDT

மும்பை:மஹாராஷ்டிராவில், 'தஹி ஹண்டி' என்ற பெயரில் கொண்டாடப்படும், உறியடித் திருவிழா, கிருஷ்ண ஜெயந்தியான நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி, பல இடங்களில், 20 அடி உயரத்திற்கும் மேலான மனித பிரமிடுகள் அமைக்கப்பட்டன.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல் வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமை யிலான, பா.ஜ., -சிவசேனா ஆட்சி நடக்கிறது கிருஷ்ணர் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி திருநாள், ஆண்டு தோறும் இங்கு வெகு விமரி சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இளைஞர்கள் பலர் சேர்ந்து, மனிதப் பிரமிடுகள் அமைத்து, உயரத்தில் தொங்கவிடப்படும் தயிர் ...

காவிரி பிரச்னையில் ஜெ., மீது ஸ்டாலின் புகார்

Posted: 25 Aug 2016 10:39 AM PDT

சென்னை,:''பிரதமருக்கு கடிதம் எழுதினால் மட்டும், காவிரி பிரச்னை தீர்ந்து விடும் என, முதல்வர் நம்பி கொண்டிருக்கிறார்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: காவிரி நதி நீர் விவகாரம், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக விவசாயிகள், போதிய தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி,பிரதமரை சந்திக்க வேண்டும் என, சட்டசபையில் கோரிக்கை வைத்தோம்.ஆனால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காவிரி பிரச்னையை தீர்ப்பதில் அக்கறை இல்லை. அதனால், நாங்கள் பேசியதை, அவர் பெரிதாக ...

இளங்கோவன் மீது புகார் விவகாரம்: குழப்பத்தில் இளைஞர் காங்கிரசார்

Posted: 25 Aug 2016 10:44 AM PDT

தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங் கோவன் உள்ளிட்ட, ஏழு பேர் மீது, இளைஞர் காங்., தலைவர் விஜய் இளஞ் செழியன், போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற, அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சின்னா ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த, தமிழக இளைஞர் காங்., பொறுப்பு தலைவர் விஜய் இளஞ்செழியன், மாநில நிர்வாகிகளுடன் சென்று, அங்கிருந்த, ஊடகப் பிரிவு தலைவர் அறையின் பூட்டை உடைக்க முயன்றார்.தகவல் கிடைத்ததும், முன்னாள் தலைவர் இளங்கோவன் விரைந்து வந்து, பூட்டு உடைக் கும் முயற்சியை தடுத்தார். இதனால், இளைஞர் காங்கிரசாருக்கும், இளங்கோவனின் ஆதர ...

ஆக்கிரமிப்பு வழக்குகள் நிலை என்ன? அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted: 25 Aug 2016 10:46 AM PDT

சென்னை:அரசு நிலங்களில், ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்த வழக்குகளின் நிலை பற்றி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவைச் சேர்ந்த சேகர் தாக்கல் செய்த மனு: ராசிபுரம் தாலுகா, சிங்கலந்தபுரம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். அரசு நிலங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான பிரச்னையை தீர்க்க, ஒரு வழி முறையை வகுக்கும்படி, அரசுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது.அதன் படி, தாலுகா அளவில் ஒரு ...

ரயில் கொள்ளையில் துப்பு துலங்கியது வட மாநிலங்களுக்கு போலீஸ் படை விரைவு

Posted: 25 Aug 2016 10:53 AM PDT

ரயில் கொள்ளையில் துப்பு துலங்கி இருப்பதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறினர்.

கடந்த, 8ம் தேதி, சேலம் - சென்னை விரைவு ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, மர்ம நபர்கள், ஆறு கோடி ரூபாய் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து, 12 ஐ.பி.எஸ்., அதிகாரி கள் உட்பட, 200 போலீசார் விசாரித்து வருகின் றனர்.இந்நிலையில், 2015ல், கிருஷ்ணகிரி அருகே, 'பாங்க் ஆப் பரோடா'வில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரயிலில் சேகரிக்கப் பட்ட கைரேகைகளுடன், வங்கி கைரேகையை ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ...

இந்திய புகையிலை துறையில் அன்னிய முதலீடு கிடையாது

Posted: 25 Aug 2016 12:28 PM PDT

புதுடில்லி : இந்திய புகையிலை துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதியில்லை என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை துறையில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியில்லை. அவ்வாறு அனுமதி வழங்கினால், ஏராளமான சிகரெட் நிறுவனங்கள் தோன்றும். விவசாயிகளுக்கு, புகையிலை சாகுபடியில் ஆர்வம் அதிகரிக்கும். உலக வர்த்தக அமைப்பில், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் புகையிலை உற்பத்தியை படிபடியாக குறைப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது. அதை மீற ...

இத்தாலி நிலநடுக்க மீட்பு பணியில் வாடிகன் வீரர்கள்

Posted: 25 Aug 2016 01:26 PM PDT

வாடிகன் : இத்தாலி நாட்டின் நிலநடுக்க மீட்பு பணிகளுக்காக வாடிகனை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்களை போப் பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.
இத்தாலியில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை சுமார் 250 பேர் பலியாகி உள்ளதாக இத்தாலி மக்கள் பாதுகாப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 368க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இத்தாலியில் நிலநடுக்க மீட்ப்புப்பணிக்காக வாடிகனின் 6ல் ஒரு பங்கு தீயணைப்பு படை ...

ஆந்திராவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை

Posted: 25 Aug 2016 02:15 PM PDT

விசாகப்பட்டினம் : ஆந்திர அரசு, வரும் அக்., மாதம் முதல், விசாகப்பட்டினத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை துவக்க உள்ளது.
ஆந்திர அரசு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஸ்கை சாப்பர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு இடையே நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, விசாகப்பட்டினத்தில் உள்ள மூன்று இடங்களில், வரும் அக்., மாதம் முதல் ஹெலிகாப்டர் சுற்றுலா துவங்க உள்ளது.
இதுகுறித்து, ஆந்திர சுற்றுலா துறை அதிகாரி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™