Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்-2

Posted: 25 Aug 2016 01:58 PM PDT

நிலவு..நீ தேய்த்து குளித்த மஞ்சளின் மிச்சம்…    உன் மீதுள்ள என் பாசம்வானம் தொட்டாலும்முடியாது…  நீ உயிரில் எழுதிய கல் வெட்டு அழிக்க நினைத்தால்நொறுங்கி போகும்..  நினைவுகள் எல்லாம்நினைக்கத்தான்..உன் நினைவுகள் மட்டும்நான் உயிர் வாழ…  பிரிந்து விடாதே..இறந்து விடுவேனோஎன்ற பயம் எனக்கு..  நான் தனிமையில் சிரிக்கிறேன் என்றால்உன்னை நினைக்கிறேன்என்று அர்த்தம்…  பூக்கள் பூத்தால் உன் விரல் தொடஉதிர்ந்தால் உன் பாதம் பட்டுமோட்சம் அடைய….  முகம் பார்த்தேன் மனம் மலர்ந்தேன்…சிரித்தாய் சிறைபட்டேன்..காதல் ...

இனிமே எப்படி குறை சொல்வது...

Posted: 25 Aug 2016 08:41 AM PDT


-
இனிமே எப்படி குறை சொல்வது...

-
---------------
தொடரும்...

அவதான்யா பொண்டாட்டி...!

Posted: 25 Aug 2016 08:13 AM PDT

எதிர்கால கனவு: சி. அருள் ஜோசப் ராஜ்

Posted: 25 Aug 2016 08:01 AM PDT

இலக்கின்றி செய்பயணம் முடிதல் இல்லை இழந்தழியும் நேரம்மிகுந்தே தருமே தொல்லை! கலக்கமின்றி இலக்குநோக்கி பயணம் செய்தால் களம்காட்டும் விளக்குபோல ஒளிரும் வெற்றி! புலமைகொண்டார் இலக்கடைய வழிகள் காண்பர் புரிதல் கொண்டே இலக்கதனை பிரித்தும் வைப்பார்! புலர்பொழுதில் அதன்நினைவை நித்தம் கொள்வர் புத்துணர்ச்சி பெற்றதனை முடித்தே ஓய்வார்! – முயற்சிதனில் தோற்றாலும் தளர்ச்சி கொள்ளார்! முடிவெண்ணி முகம்சுளிக்கார்! முடித்த பின்னும், ஓயமாட்டார்! எதிர்கால கனவு என்று ஓர்இலக்கை நிர்ணயிப்பார்! தொடர்வார் மீண்டும்! – நயமிக்க ...

எதிர் கால கனவு: வ. இசக்கி ராஜு

Posted: 25 Aug 2016 08:01 AM PDT

எதிர் காலம் கனவல்ல தெரியாத நிஜம் – தெரியாத நிஜத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதும் தெரிந்தது போல் ஆக்குவதும் தீர்மானமாய் நீ எடுக்கும் இலக்குகளில் உள்ளதடா – உன் இலக்கில் உயிரை வை உயிர் போகு மென்றாலும் உரமேற்றிப் போராடு இலக்கெல்லாம் இலகுவாகும் – வரலாற்றுப் புத்தகத்தில் உன் பக்கம் தேர்ந்தெடுத்து அடித்தளமிடு என்றார் அறிவு ஞானி அப்துல் கலாம் – எதிர் கால கனவை எண்ணி என்ன எண்ணம் கொண்டிருக்கிறாய் என் இளங் காளைகளே – ஏளனங்கள் தடை காட்டும் எதிர் வினைகள் புறந் தள்ளும் உடனிருந்தே உனை ...

பள்ளிக்கு காவலன் பதித்தான் விரலை!..!

Posted: 25 Aug 2016 08:00 AM PDT


பிளவுபட்டது
ஒன்று பட்ட வீடு
தடைமீறும் குருவிகள்

செல்லம்மாள் கண்ணன்

————————

குருடனின் விழியில்
தெரிந்தது
என்முகம்


பா.உதயகண்ணன்

————————-

கதிரவன் விழி திறந்தான்
நீண்ட நிழலுடன்
குள்ளன்

செந்தமிழினியன்

———————–

முதிர்கன்னி கனவில்…

Posted: 25 Aug 2016 07:58 AM PDT


அன்பான கணவன்
அறிவான குழந்தைகள்
முதிர்கன்னி கனவில்

மரியதெரஸா

———————

எமது வாழ்க்கை
இயற்கையோடு இணைந்தது
வீட்டுக்குள் மழை

அமுதபாரதி

———————–_
தொலைந்த சாலைகள்
கைதட்டும் குழந்தைகள்
வலம் வரும் படகு

புதுவை செந்தழினியன்

அரிய புத்தகங்கள்

Posted: 25 Aug 2016 07:51 AM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

நீயின்றி நானேது....

Posted: 25 Aug 2016 07:48 AM PDT

பின்னூட்டம் தந்த அனைவருக்கும் என் மனம் மலர்ந்த நன்றி.... தமிழ் நீ அழகி.. பூக்களுக்கு தெரியாது தாங்கள் அழகு என்று …அது போல்தான் உன் அழகும்… - நீ சேலை உடுத்தினாய் சேலை அழகானது… நீ பூக்கள் வைத்தாய் அவைகள் மறுபடியும் பூத்தன… - உன் சின்ன அழகும் என்னை சிறை வைத்து சிதைக்கும்… உன் காதலில்.. நெஞ்சம் இசைக்கும்… நினைவுகள் சாரல் அடிக்கும் கனவுகள் வண்ணமாகும்.. முகம் சிரிக்கும்… அங்கு உன் நினைவுகள் இருக்கும்.. - நாம் என்னதான் தப்பித்தாலும் சில மழைத்துளிகள் க்ண்டிப்பாக நம்மை நனைக்கும்… அது ...

உங்கள் எதிர்வினை ஆற்றும் நேரம் என்ன? பயிற்சி செய்ய வேண்டிய அனைவருக்குமான விளையாட்டு.

Posted: 25 Aug 2016 06:21 AM PDT

வாகனம் ஓட்டுபவர்கள், திடீரென தாக்குவது,சாலையைக் கடக்கும் போது வாகனம் குறுக்கே வருவது இப்படி பல சமயங்களில் ஒருவருடைய எதிர்வினையாற்றும் நேரம்-Reaction  Time- பெரும்பங்கு  ஆற்றுகிறது.  விரைவான எதிர்வினையாற்றும் நேரம் நம்மைக் காக்க உதவுகிறது. முதல் விளையாட்டில் எதிர்வினையாற்றும் நேரமும் ,அந்த நேரத்தின் அடிப்படையில் அவருடைய வயது என்ன என்பதையும் கணக்கிடுகிறது.வயதை ஓரளவிற்கு கணக்கிட்டாலும் ஒவ்வொருவருடைய எதிர்வினையாற்றும் நேரம் வயது சிந்தனை போன்றவற்றால் வேறுபடுகிறது.  தொடர்ந்து பயிற்சி செய்வதால் நேரத்தைக் ...

ஓவர் டூ டோக்கியோ... ஒலிம்பிக்கை நடத்தப் போகும் பெண்கள்!

Posted: 25 Aug 2016 05:59 AM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டி முடிந்து விட்டது. அடுத்த 2020ம் ஆண்டுகான ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெறவுள்ளது. - இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு டோக்கியோ, துருக்கியின் இஸ்தான்புல், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் ஆகிய நகரங்களுடன் போட்டி போட்டு வாய்ப்பை பெற்றது. டோக்கியோ நகரம்  60 சதவீத வாக்குகளைப் பெற்று வாய்ப்பை தட்டிச் சென்றது. - இதற்கு முன், கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது. அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளுமே ஆசியாவில்தான் நடைபெறவுள்ளது. 2020ம் ...

இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி

Posted: 25 Aug 2016 05:33 AM PDT

- தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திரு மணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன். அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது. தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், தங்கை மீதான பாசம் தரையில் வீழ்ந்து விட்டது. 'தன் உயிர் போனால் என்ன? தங்கையின் நலனே முக்கியம்' என்று நினைக்க கம்சன் ஒன்றும் அன்பை அடிநாதமாக கொண்டவன் அல்லவே, அரக்க குணம் படைத்தவன்தானே. தன் உயிரா? தங்கையின் ...

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தங்கக் கிரீடம், ஒட்டியாணம்

Posted: 25 Aug 2016 05:25 AM PDT

- சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்னை பக்தர் வழங்கிய தங்கக் கிரீடம், ஒட்டியாணம். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடம், தங்க ஒட்டியாணத்தை சென்னையைச் சேர்ந்த பக்தர் வழங்கினார். – சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை, அமைதி வேண்டி லட்ச ருத்ர பாராயணம், கோடி அர்ச்சனை ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. – நிறைவு நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மகாபிஷேகமும், லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது. இதையொட்டி, ...

கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன்

Posted: 25 Aug 2016 05:21 AM PDT

- கிருஷ்ணருடைய பால்ய நண்பர்களில் சுதாமர் எனப்படும் குசேலரும் ஒருவர். இருவரும் ஒன்றாக குருகுல வாசம் செய்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர். சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார். இவர்களுடைய வறுமையைக் கண்டே சுதாமரை எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவள் குசேலரைப்பார்த்து, கிருஷ்ணரைக் கண்டு கஷ்டம் நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கூறி, கிருஷ்ணருக்குக் கொடுக்க ஒரு கந்தல் மூட்டையில் வேறொன்றும் இல்லாததால் ...

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாள்...

Posted: 25 Aug 2016 05:19 AM PDT

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். கோயம்பேடு அலுவலகத்துக்குச் சென்ற மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்டோர் விஜயகாந்துக்கு பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஏராளமான தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்துக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்க கட்சி அலுவலகத்தில் குவிந்துள்ளனர். - தினமணி

நடிகை சரண்யா மோகனுக்கு ஆண் குழந்தை!

Posted: 25 Aug 2016 04:37 AM PDT

- தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகனின் திருமணம் கேரளாவின் ஆலப்புழாவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்து கொண்டார். - இந்நிலையில் சரண்யா மோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். - ---------------------------------- தினமணி

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?

Posted: 25 Aug 2016 03:15 AM PDT

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா? கருத்து சுதந்திரமா அல்லது கருத்து தந்திரமா? ஆண்களைப் போல் பெண்களும் தவறு செய்கிறார்கள். பெண்கள் முன்னரும் பின்னரும் என ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமக்கு அவர்கள் செய்யும் தவறுகள் மிக அதிகமாக தெரிகிறது. நமது பண்பாட்டில் அவர்களை அப்படியான உயர்வான இடத்தில் வைத்து விட்டது காரணமா? இப்படி சில கேள்விகள். கமலா தாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் பெயர் ரமணியன் ஐயா அவர்களால் குறிப்பிடப்பட்ட போது இந்த செய்தி நினைவுக்கு வரவே எழுந்த கேள்விகள் தான் அவை. எனக்குப் ...

நெளிவு சுளிவு – ஒரு பக்க கதை

Posted: 25 Aug 2016 02:07 AM PDT

- பசியோடு ஓட்டலுக்குள் நுழைந்தேன். ''இதோ பார்… நாளையிலிருந்து இந்த அழுக்கு பேன்ட்டெல்லாம் போட்டுட்டு வரக்கூடாது… பளிச்னு சுத்தமா இருக்கணும்'' என்று இளம் வயது சர்வரை எச்சரித்துக்கொண்டு இருந்தார் முதலாளி. தலையாட்டிவிட்டு என்னிடம் வந்தவன், ''என்ன சாப்பிடறீங்க?'' என்றான். பின்னாலேயே வந்த முதலாளி, ''வர்றவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லுடா'' என்று கோபப்பட்டார். இட்லி, சாம்பார் கொண்டுவரச் சொன்னேன். வரும் வழியில் இன்னொரு சர்வர் மேல் மோதி, சாம்பார் கிண்ணம் கீழே விழுந்தது. ''கொஞ்சமாவது ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(437)

Posted: 25 Aug 2016 01:54 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

சுயதொழில் – ஒரு பக்க கதை

Posted: 25 Aug 2016 01:41 AM PDT

பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்!

Posted: 25 Aug 2016 01:40 AM PDT

- தோல்வியைக் கொண்டாடுவது இந்தியர்களின் மன நிலைக்குப் புதிய விஷயம். ஆனால் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கு முதல்முறையாகத் தகுதி பெற்ற இந்தியப் பெண் தீபா கர்மாகர், நூலிழை வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டாலும், அவரை ஆராதித்தனர் இந்தியர்கள். – 'ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியர்கள் செல்ஃபி எடுக்கத்தான் போனார்கள். இவர்களால் பணமும் வாய்ப்பும் வேஸ்ட்' என எழுத்தாளர் ஷோபா டே விமர்சனம் செய்தபோது, அவரை பலரும் காய்ச்சி எடுத்தார்கள் - ஆனாலும் சமூக வலைத்தளங்களில் ஒலிம்பிக் வீரர்கள் மீதான ...

இந்தி(யப்) படத்தில் நடிக்கும் சீன அழகி..!

Posted: 25 Aug 2016 01:16 AM PDT

- இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவே பனிப்போர் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க…, இன்னொருபுறம் பனிப்பாறைகள் சூழ்ந்த இந்தியாவிலுள்ள லே பகுதியில் சீன நடிகை ஜு ஜு இந்திய படம் ஒன்றில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சல்மான் கான் நடிக்கும் படம் "டியூப்லைட்'. இந்தப் படத்தின் நாயகியும் இவர்தான். இந்தப் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் அல்லது தீபிகா படுகோன் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், கடைசியில் ஒப்பந்தம் ஆனது ஜு ஜு. இந்திப் படத்தில் நடிப்பதால் ஜு ஜு ...

10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'

Posted: 25 Aug 2016 01:08 AM PDT

- நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த தனிநபர் சொத்து 5,600 பில்லியன் டாலர்கள். அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது. மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கனடா (4,700 பில்.டாலர்), ஆஸ்திரேலியா (4,500பில். டாலர்), இத்தாலி (4,400 பில். டால்ர்), ஆகிய நாடுகள் முறையே 8,9, 10-வது இடத்தில் உள்ளன. மொத்த தனிநபர் சொத்து ...

தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை

Posted: 25 Aug 2016 12:32 AM PDT

தமிழகத்தில் முதல்முறையாக, கோவை மத்திய சிறையில் திருநங்கைகளுக்கு என தனி அறை அண்மையில் தொடங்கப் பட்டுள்ளது. கோவை மத்திய சிறையானது சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் 1872-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது 1,700 ஆண் கைதிகளும், 60-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் உள்ளனர். இந்தச் சிறை வளாகத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள விசைத்தறிக் கூடத்தில், ஆண்டுக்கு 5 லட்சம் காவலர் சீருடைகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல, புத்தக பைண்டிங், ...

ரமணியின் கவிதைகள்

Posted: 24 Aug 2016 10:30 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

Posted: 24 Aug 2016 10:05 PM PDT

- நண்பர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. நட்பு வேற, பழக்கம் வேற. நட்பில்லாத பழக்க வழக்கங்கள் நண்பர்கள் அல்ல, செல்போனில் வெறும் நம்பர்கள்தான். இப்பல்லாம் நெருங்கிய நண்பர்கள்னு சொல்லக்கூடிய பாதி பேரு, நக்கல் பண்ணியே நம்ம நீள அகல நெஞ்சத்தை நொறுங்கிய நெஞ்சமாக்குற நண்பர்கள்தான். இப்ப ஈஸியா புரிய வைக்கிறோம் இருங்க... - * யாரைப் பார்க்கப் போறப்ப, பாக்கெட்டுல எவ்வளவு பணமிருக்குனு தெரியாம கூட போறோமோ, அவங்க நண்பர்கள்; யாரைப் பார்க்கப் போறப்ப ...

14 விநாடியா...பத்து விநாடி உற்றுப் பார்த்தாலே குற்றம்தான்...! பெண்கள் ஆணையம் அதிரடி

Posted: 24 Aug 2016 07:43 PM PDT

- பெண்களை 14 விநாடிகள் அல்ல, 10 விநாடிகள் உற்றுப்பார்த்தாலே குற்றம்தான் என்று தேசிய மகளிர் நல ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறினார். கேரள மாநிலத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைப் பிரிவு ஆணையராக உள்ள ரிஷிராஜ் சிங், கல்லூரி ஒன்றில் மாணவிகளிடையே பேசிய போது, ஒரு பெண்ணை, தொடர்ந்து 14 விநாடிகள் வெறித்துப் பார்த்தாலே சம்பந்தப்பட்ட ஆண் மீது வழக்குத் தொடர முடியும் என்று அண்மையில் பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நிகழ்ச்சி ...

இரோம் ஷர்மிளாவுக்கு அடையாள அட்டை இல்லை

Posted: 24 Aug 2016 06:10 PM PDT

- கோல்கட்டா : இரும்புப் பெண்மணி என்று உலகமே அறியும் இரோம் ஷர்மிளாவிடம் தான் ஒரு இந்தியர்தான் என்பதை உறுதி செய்ய எந்த அடையாள அட்டையும் இல்லை. - வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மணிப்பூரில், முதல்வர் இபோபி சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. வடக்கு கிழக்கு மாநிலங்களில், சீனாவின் துாண்டுதலுடன், அவ்வப் போது, போராட்டங்கள் வெடித்து வந்ததால், பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப் பட்டது. - பாதுகாப்பு படை ...

தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா

Posted: 24 Aug 2016 06:03 PM PDT

- நியூயார்க் : தீபாவளியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிடப்படவுள்ளது. அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், தீபாவளிப் பண்டிகையைச் கவுரவிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையை  அமெரிக்க அரசு வெளியிடவுள்ளது. வாணவேடிக்கை பின்னணியில், எரியும் அகல் விளக்கும், அதன் கீழே ‛அமெரிக்காவுக்கு என்றென்றும் தீபாவளி 2016' என்ற வாசகமும் அந்த தபால் தலையில் இடம் பெற்றுள்ளது. இச்சிறப்பு தபால் தலை வரும் அக்., ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™