Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சட்டக் கல்லூரி விடுதியில் மாணவர்கள் மோதல்

Posted: 25 Aug 2016 02:42 PM PDT

சட்டக் கல்லூரி விடுதியில் மாணவர்கள் மோதிக் கொண்டனர்.

ஆசிட் வீச்சு வழக்கில் இளைஞர் கைது

Posted: 25 Aug 2016 02:42 PM PDT

வருமான வரித் துறை ஊழியர் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில், இளைஞர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர் மோஹித், சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஓராண்டாக பணியாற்றிவருகிறார்.

வளசரவாக்கத்தில் சமுதாய நல மைய மருத்துவமனை

Posted: 25 Aug 2016 02:23 PM PDT

வளசரவாக்கம் மருத்துவமனை சாலையில் 100 படுக்கைகள் கொண்ட சமுதாய நல மைய மருத்துவமனை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருத்தணி அருகே மேலும் 19 பேருக்கு மர்மக் காய்ச்சல்

Posted: 25 Aug 2016 02:21 PM PDT

திருத்தணி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 31-இல் கட்டணக் குழு ஆய்வு

Posted: 25 Aug 2016 02:20 PM PDT

புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறித்து வரும் 31ஆம் தேதி ஆய்வு நடத்த கட்டணக் குழு தீர்மானித்துள்ளது.

உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலம்: வேளாண்மை துறை அமைச்சர் பேச்சு

Posted: 25 Aug 2016 02:19 PM PDT

உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.

எரிசாராயம் கடத்தல்: 6 பேர் கைது

Posted: 25 Aug 2016 02:18 PM PDT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கார், வேனில் கடத்தப்பட்ட எரிசாராயத்தை மதுவிலக்கு போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

Posted: 25 Aug 2016 02:18 PM PDT

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

போலி ஆவணங்கள் மூலமாக கடவுச் சீட்டு: இலங்கை தம்பதி கைது

Posted: 25 Aug 2016 02:17 PM PDT

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச் சீட்டு பெற்றதாக திருப்பூரில் வசித்து வந்த இலங்கை தம்பதியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

மூளைச்சாவு அடைந்த அகதியின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு

Posted: 25 Aug 2016 02:17 PM PDT

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

ஜனநாயக மரபுப்படியே திமுக வெளிநடப்பு: மு.க.ஸ்டாலின்

Posted: 25 Aug 2016 02:16 PM PDT

தமிழக சட்டப் பேரவையில் ஜனநாயக மரபுப்படியே திமுக வெளிநடப்பு செய்கிறது என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

"க்ரீமி லேயர்' முறையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 02:15 PM PDT

நாட்டில் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

உள்ளாட்சிக் பிரதிநிதிகள் மோதல்: கார் உடைப்பு, 8 பேர் படுகாயம்

Posted: 25 Aug 2016 02:14 PM PDT

தொடக்க கூட்டுறவு வங்கித் தேர்தலின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வியாழக்கிழமை மோதிக் கொண்டனர். இதில், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மின்சாரம் பாய்ந்ததில் தேமுதிக நிர்வாகிகள் 5 பேர் காயம்

Posted: 25 Aug 2016 02:14 PM PDT

செங்கல்பட்டை அடுத்த ஊரப்பாக்கத்தில் கட்சியின் கொடிக்கம்பம் நட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் தேமுதிக நிர்வாகிகள் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

பிரதமரின் தொகுதியில் வெள்ளம்: நிவாரண உதவிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

Posted: 25 Aug 2016 02:13 PM PDT

கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தமிழக முதல்வரைச் சந்திக்க விரும்புகிறோம்: கர்நாடக விவசாயிகள் சங்கம்

Posted: 25 Aug 2016 02:13 PM PDT

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 02:12 PM PDT

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று அந்த மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மெளரியா வலியுறுத்தியுள்ளார்.

சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

Posted: 25 Aug 2016 02:12 PM PDT

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த போலி பெண் மருத்துவர் வீட்டில் புதன், வியாழக்கிழமைகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகம் உயர்கல்வித் துறையில் 44% வளர்ச்சி அடைந்துள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

Posted: 25 Aug 2016 02:12 PM PDT

தமிழகம் உயர்கல்வித் துறையில் 44 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக அத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்துக்காக வைகோ போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

Posted: 25 Aug 2016 02:11 PM PDT

அரசியல் ஆதாயத்துக்காக புதிய வரைவுக் கல்விக் கொள்கையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ஆவணங்கள் கசிவு விவகாரம்: விசாரணையை விரைவுபடுத்த இந்திய கடற்படை வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 02:10 PM PDT

இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ள விவகாரம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு பிரான்ஸ் அரசை இந்தியக் கடற்படை வலியுறுத்தியுள்ளது.

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி பாண்டியன் விடுவிப்பு

Posted: 25 Aug 2016 02:09 PM PDT

சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியனை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.

"ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக புதிய ரகசிய ஆவணங்கள் கசிவு

Posted: 25 Aug 2016 02:09 PM PDT

இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக புதிதாக சில ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.

ஆக. 31 முதல் முன்பதிவு ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு

Posted: 25 Aug 2016 02:08 PM PDT

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆக. 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

முதல் ஒருநாள் போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் வென்றது இங்கிலாந்து

Posted: 25 Aug 2016 02:07 PM PDT

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிட்டதை அடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆலங்குடி குருபகவான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22 லட்சம்

Posted: 25 Aug 2016 02:06 PM PDT

நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக சுமார் ரூ.22 லட்சம் கிடைத்துள்ளது.

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் சார்பில் நெல்லையில் "ட்ரீம் ஹோம்' கண்காட்சி இன்று தொடக்கம்: 3 நாள்கள் நடைபெறுகிறது

Posted: 25 Aug 2016 02:06 PM PDT

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் "ட்ரீம் ஹோம்' என்ற தலைப்பில் வீடு மற்றும் வீட்டுமனைகள் கண்காட்சி பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) தொடங்குகிறது.

நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் பிரான்ஸிலிருந்தே வெளியாகியிருக்க வாய்ப்பு: பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 25 Aug 2016 01:23 PM PDT

நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஆவணங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்துதான் வெளியாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தீப்பொறி ஆறுமுகத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: மு.க. ஸ்டாலின் வழங்கினார்

Posted: 25 Aug 2016 01:22 PM PDT

மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை அக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.

ஜாதி ஆணவக் கொலைகளை நீதிமன்றத்தால் தடுக்க இயலாது: நீதிபதி ராமசுப்பிரமணியன்

Posted: 25 Aug 2016 01:22 PM PDT

ஜாதி ஆணவக் கொலைகளை சட்டம் மற்றும் நீதி மன்றத்தால் தடுக்க இயலாது என, ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

காவிரிப் பிரச்னை: தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்

Posted: 25 Aug 2016 01:21 PM PDT

காவிரிப் பிரச்னை தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவதூறு வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 01:21 PM PDT

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அனைத்துக் கட்சி ஆதரவுடன் காவிரி நீருக்காக ஆக. 30-இல் பந்த்: விவசாயிகள் சங்கம் தகவல்

Posted: 25 Aug 2016 01:20 PM PDT

காவிரித் தண்ணீர் கேட்டு காரைக்காலில் ஆக.30-ஆம் தேதி நடக்கவுள்ள பந்த் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

விறகு வியாபாரியைத் தாக்கி கார் கடத்தல்: 5 பேர் தலைமறைவு

Posted: 25 Aug 2016 01:20 PM PDT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வியாழக்கிழமை விறகு வியாபாரியை தாக்கிவிட்டு காரை கடத்திச் சென்ற 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸ் கடிதம்

Posted: 25 Aug 2016 01:20 PM PDT

தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

நாமக்கல் நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்

Posted: 25 Aug 2016 01:19 PM PDT

நாமக்கல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜை செப்.8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.

ராணுவத்தில் சேர போலிச் சான்றிதழ்களை வழங்கிய: இடைத்தரகர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

Posted: 25 Aug 2016 01:19 PM PDT

இளைஞர்கள் ராணுவத்தில் சேர போலிச் சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்த திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 12 இடைத்தரகர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா: இன்று குடவருவாயில் தீபாராதனை

Posted: 25 Aug 2016 12:35 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 4-ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு, சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குடவருவாயில் தீபாராதனை வெள்ளிக்கிழமை (ஆக.26) இரவு நடைபெறுகிறது.

எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம் சார்..!

Posted: 25 Aug 2016 12:34 PM PDT

மக்கள் காத்திருக்கிறார்கள்...

Posted: 25 Aug 2016 12:23 PM PDT

இந்திய அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான வெங்கய்ய நாயுடு "காவிரிப் பிரச்னையில் சட்ட முறையிலான தீர்வு காண வேண்டும்' என கூறியுள்ளார்.

குறைப்பிரசவம்!

Posted: 25 Aug 2016 12:22 PM PDT

வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் நவீன முறைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் வாடகைத் தாய் முறைப்படுத்தல் சட்ட வரைவை வருகிற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகளையுடைய இந்த சட்ட வரைவு அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்பது இகழ்ச்சி

Posted: 25 Aug 2016 12:20 PM PDT

அவனும் அவளும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே பழக்கம். பின்பு கல்லூரியில் தொடர்ந்தது.. வேறு வேறு பணிக்கு சென்றாலும், காதல் பயணம் தடைபடாமல் சென்று... இறுதியில் ஒரு வழியாய் வீட்டிற்கு யார் மூலமோ தெரிந்து இரு குடும்பங்களும் அரைகுறை மனதுடன் சம்மதம்

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் நாடார் சங்கம் வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 12:16 PM PDT

மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றுள்ள நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வரிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

பேரவை: வெளிநடப்பு செய்தாலும் கடமையைத் தட்டிக்கழிக்கவில்லை

Posted: 25 Aug 2016 12:15 PM PDT

பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தாலும், தங்கள் கடமையை அவர்கள் தட்டிக் கழிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்

Posted: 25 Aug 2016 12:14 PM PDT

இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார்.

காயல்பட்டினம் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

Posted: 25 Aug 2016 12:14 PM PDT

காயல்பட்டினம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் தற்கால கணினி பயன்பாட்டு உத்திகள்  என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு  நடைபெற்றது.

காவிரி பிரச்னையை விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 12:14 PM PDT

காவிரி பிரச்னை தொடர்பாக விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இறால் வளர்ப்பு குறித்த பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

Posted: 25 Aug 2016 12:13 PM PDT

தூத்துக்குடி தருவைக்குளத்தில் ஆக.29 ஆம் தேதி நடைபெறும் இறால் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? திருமாவளவன் பதில்

Posted: 25 Aug 2016 12:11 PM PDT

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

தூத்துக்குடியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

Posted: 25 Aug 2016 12:11 PM PDT

செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த  ஆயத்த மாநாடு தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசியல் ஆதாயத்துக்காக வைகோ போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

Posted: 25 Aug 2016 12:10 PM PDT

அரசியல் ஆதாயத்துக்காக புதிய வரைவுக் கல்விக் கொள்கையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

மாநில யோகா போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் முதலிடம்

Posted: 25 Aug 2016 12:10 PM PDT

மாநில அளவிலான யோகா போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

செப்.2-இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 25 Aug 2016 12:10 PM PDT

வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை மூடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) சார்பில் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ஆவணங்கள் கசிவு விவகாரம்: விசாரணையை விரைவுபடுத்த இந்திய கடற்படை வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 12:10 PM PDT

இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த "ஸ்கார்பின்' நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ள விவகாரம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு பிரான்ஸ் அரசை இந்தியக் கடற்படை வலியுறுத்தியுள்ளது.

வட்டார விளையாட்டு போட்டிகள்: சாகுபுரம் பள்ளி மாணவ, மாணவியர் சாதனை

Posted: 25 Aug 2016 12:10 PM PDT

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் வட்டார அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

அழகியபாண்டியபுரம் குடிநீர் திட்டப் பிரச்னை: இன்று கடையடைப்புப் போராட்டம்

Posted: 25 Aug 2016 12:09 PM PDT

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கோதையாற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை (ஆக. 26) கடையடைப்பு போராட்டம் நடத்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? திருமாவளவன் பதில்

Posted: 25 Aug 2016 12:09 PM PDT

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்றாக மிளகாய்ப் பொடி குண்டுகள்?

Posted: 25 Aug 2016 12:09 PM PDT

காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த காற்றழுத்தத் துப்பாக்கிகளை (பெல்லட் கன்) பயன்படுத்துவதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக மிளகாய்ப் பொடி குண்டுகளை (பாவா ஷெல்) உபயோகிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

பேச்சிப்பாறை அணையை மூங்கில் தெப்பத்தில் கடக்க முயன்ற தொழிலாளி மாயம்

Posted: 25 Aug 2016 12:08 PM PDT

பேச்சிப்பாறை அணையை மூங்கில் தெப்பத்தில் கடக்க முயன்று மாயமானதாகக் கூறப்படும் தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Posted: 25 Aug 2016 12:08 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தேங்காய்க்கு கூடுதல் விலை வழங்க வலியுறுத்தி நாகர்கோவிலில் 30இல் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Aug 2016 12:08 PM PDT

தேங்காய்க்கு கூடுதல் விலை வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன் இம்மாதம் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, கன்னியாகுமரி மாவட்ட தென்னை உற்பத்தியாளர் சங்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பத்மதாஸ் தெரிவித்தார்.

கணபதிபுரம் பேரூராட்சியில் கபடி உள்விளையாட்டு அரங்கப் பணி தீவிரம்

Posted: 25 Aug 2016 12:08 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரத்தில் கபடி உள் விளையாட்டு அரங்கம் அமைக்கத் தேர்வான இடத்தை விஜயகுமார் எம்.பி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல்: 4 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காயம்

Posted: 25 Aug 2016 12:08 PM PDT

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 4 பேர் காயமடைந்தனர்.

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர்கள்: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

Posted: 25 Aug 2016 12:07 PM PDT

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோர் அமெரிக்காவால் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டவர்கள் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த ஆவணங்கள் இல்லை: பாதுகாப்பு அமைச்சகம் கைவிரிப்பு

Posted: 25 Aug 2016 12:07 PM PDT

முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வற்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகமும், இந்திய விமானப் படையும் தெரிவித்துள்ளன.

அழகியபாண்டியபுரம் குடிநீர் திட்டப் பிரச்னை: இன்று கடையடைப்புப் போராட்டம்

Posted: 25 Aug 2016 12:06 PM PDT

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கோதையாற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை (ஆக. 26) கடையடைப்பு போராட்டம் நடத்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

5 மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி

Posted: 25 Aug 2016 12:05 PM PDT

மாற்றுத் திறன் குழந்தைகள் 5 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார்.

மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல்: 4 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காயம்

Posted: 25 Aug 2016 12:05 PM PDT

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 4 பேர் காயமடைந்தனர்.

நீதிபதிகள் நியமன விவகாரம்: மோடியும், டி.எஸ்.தாக்குரும் நேரடியாக விவாதிக்க வலியுறுத்தல்

Posted: 25 Aug 2016 12:04 PM PDT

உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரும் நேரடியாக விவாதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞருமான சந்தோஷ் ஹெக்டே வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்ற நாட்டை பிளவுபடுத்தியது காங்கிரஸ்: பாஜக

Posted: 25 Aug 2016 12:04 PM PDT

""ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையில் நாட்டைப் பிளவுபடுத்தியது காங்கிரஸ் கட்சிதான்'' என்று அக்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

ஆசிரியர்களுக்கான அடிப்படை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: 29இல் தொடக்கம்

Posted: 25 Aug 2016 12:04 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாகர்கோவிலில் திங்கள்கிழமை (ஆக. 29) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது.

அரசுக் குடியிருப்புகளில் காலம் கடந்தும் குடியிருந்தால் 55 மடங்கு வாடகை: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 25 Aug 2016 12:04 PM PDT

அரசு ஒதுக்கும் இல்லங்களில் குறிப்பிட்ட காலத்தைத் தாண்டியும் தங்கியிருக்கும் ஊழியர்களும், அதிகாரிகளும் இனி வழக்கமான வாடகையைக் காட்டிலும் 40 முதல் 55 மடங்கு அதிகம் செலுத்த வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுக்கடை  அருகே மாயமான இளைஞர் மீட்பு

Posted: 25 Aug 2016 12:04 PM PDT

புதுக்கடை அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இளைஞர் கேரளத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டார்.

"தொலைக்காட்சி, செல்லிடப்பேசி விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு அதிகரிப்பு'

Posted: 25 Aug 2016 12:03 PM PDT

தொலைக்காட்சி (விடியோ கேம்), செல்லிடப்பேசி விளையாட்டுகளால் குழந்தைகளின் கண் பாதிப்பு அதிகரித்து வருவதாக கண்தான இருவார விழாவில் தெரிவிக்கப்பட்டது.

களியக்காவிளையில் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் பரிசளிப்பு

Posted: 25 Aug 2016 12:03 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமா-அத் கூட்டமைப்பு கல்விக் குழு சார்பில் மதரசா மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மகாராஷ்டிரம்: நீதிமன்றக் கட்டுப்பாட்டை மீறி உறியடி திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்

Posted: 25 Aug 2016 12:03 PM PDT

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையையொட்டி, மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளிலும் உறியடி திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

மணலிக்கரை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 25 Aug 2016 12:02 PM PDT

மணலிக்கரை மேல்நிலைப் பள்ளி சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கண்டுகளித்தனர்.

ராகுல் காந்திக்கு ஞானம் கிடைத்துவிட்டது: வெங்கய்ய நாயுடு கிண்டல்

Posted: 25 Aug 2016 12:02 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஞானம் கிடைத்துவிட்டதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு கிண்டலாக தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்ப்பேன்

Posted: 25 Aug 2016 11:59 AM PDT

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரிவினைவாதக் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்ப்பேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொது சபை புதிய தலைவர் அடுத்த வாரம் இந்தியா வருகை

Posted: 25 Aug 2016 11:59 AM PDT

ஐ.நா. பொது சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீட்டர் தாம்ஸன், வரும் திங்கள்கிழமை (ஆக. 29) இந்தியா வருகிறார்.

திஹார் சிறையில் "நிர்பயா' குற்றவாளி தற்கொலை முயற்சி

Posted: 25 Aug 2016 11:58 AM PDT

தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி "நிர்பயா' பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி வினய் சர்மா, திஹார் சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

உறியடி திருவிழாவை வீர விளையாட்டாக அறிவிக்க குஜராத் அரசு பரிசீலனை

Posted: 25 Aug 2016 11:58 AM PDT

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கொண்டாடப்படும் பாரம்பரிய உறியடி திருவிழாவை வீர விளையாட்டு அந்தஸ்து அளிப்பது குறித்து குஜராத் அரசு பரிசீலித்து வருகிறது.

ஆக. 31 முதல் முன்பதிவு ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு

Posted: 25 Aug 2016 11:57 AM PDT

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆக. 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பாட்மிண்டன் தரவரிசை: சாய்னா பின்னடைவு

Posted: 25 Aug 2016 11:57 AM PDT

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், உலக பாட்மிண்டன் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளார்.

டிஎன்பிஎல்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வெற்றி

Posted: 25 Aug 2016 11:55 AM PDT

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஜெய்ஷா தான் ஆற்றல் பானத்தை மறுத்தார்: பயிற்சியாளர்

Posted: 25 Aug 2016 11:55 AM PDT

ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்ற ஓ.பி.ஜெய்ஷாவிடம் ஆற்றல் பானங்களின் தேவை குறித்து கேட்டதாகவும், அவை வேண்டாமென அவரே மறுத்ததாகவும் அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜயந்தி விழா கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 25 Aug 2016 11:55 AM PDT

கிருஷ்ண ஜயந்தியையொட்டி பெருமாள் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீபுரம் நாராயணி பீடம் 9-ஆம் ஆண்டு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 25 Aug 2016 11:55 AM PDT

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோயில் 9-ஆம் ஆண்டு விழாவையொட்டி, நாராயணி அம்மனுக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நவல்பூர் நாகசக்தி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

Posted: 25 Aug 2016 11:55 AM PDT

நவல்பூர் சுயம்பு நாகசக்தி அம்மன் கோயிலில் ஆடி மாத 6-ஆம் வெள்ளியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் அருகே மர்மக் காய்ச்சல்: பெண், 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Posted: 25 Aug 2016 11:55 AM PDT

அரக்கோணத்தை அடுத்த ராஜபாளையம் கிராமத்தில் மர்மக் காய்ச்சல் பரவுவதால், ஒரு பெண், 4 சிறுவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகொண்டா பகுதியில் மழைநீர் வடிகால்: அதிகாரிகள் ஆய்வு

Posted: 25 Aug 2016 11:55 AM PDT

பள்ளிகொண்டா பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

பள்ளியில் திருட்டு: 3 பேர் கைது, நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

அரக்கோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

"மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை உடனே அமல்படுத்த வேண்டும்'

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

மத்திய அரசு கொண்டு வர திட்டமிடும் புதிய கல்விக் கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனர் தி.தேவநாதன் கூறினார்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

அரக்கோணத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பகுதி நேர நியாயவிலைக் கடைகளை அதிகம் உருவாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா: எம்.பி.  கோ.அரி

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்கள் அதிக தொலைவு செல்லக்கூடாது எனும் நோக்கில், பகுதிநேர நியாய விலைக் கடைகளை அதிகமாக உருவாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா என அரக்கோணம் எம்.பி. கோ.அரி கூறினார்.

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளைஞர் சாவு

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

ஆற்காடு புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

ரூ.8 ஆயிரம் லஞ்சம்: வனவர் கைது

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த சந்தவாசல் பகுதியில் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வனவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

Posted: 25 Aug 2016 11:54 AM PDT

குத்துச்சண்டை உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் அண்மையில் வழங்கப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™