Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கோவா : தேர்தல் பொறுப்பாளராக நிதின் கட்காரி நியமனம்

Posted: 24 Aug 2016 08:00 AM PDT

புதுடில்லி: கோவா மாநில சட்டசபைக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநில பா.ஜ., தலைவராக லக்ஷ்மன் கில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பா.ஜ., தலைவர் அமித்ஷா ...

நீர்மூழ்கி கப்பல் ரகசியங்கள் கசிந்ததால் அரசு அதிர்ச்சி! விசாரணை நடத்த ராணுவ அமைச்சர் உத்தரவு

Posted: 24 Aug 2016 09:51 AM PDT

புதுடில்லி:பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, டி.சி.என்.எஸ்., என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன்,இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும், 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள்கசிந்துள்ளது, மத்திய அரசுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இது தொடர்பாகமுழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, டி.சி.என்.எஸ்., என்ற நிறுவனம், நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்திய கடற்படைக்கு, ஆறு நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க, இந்த நிறுவனத்துடன், 2005ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது. 23 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் ...

ஆபத்து காலத்தில் உதவும் பெண்களுக்கான 'ஆப்' அறிமுகம்

Posted: 24 Aug 2016 09:57 AM PDT

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மொபைல் போன், 'ஆப்' தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் நேற்று, 'மனித சமுதாயத்துக்கு
பயன்படும் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்' என்ற பெயரில், சர்வதேச மாநாடு நடந்தது; இதில், 2012ல், டில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுஉயிரிழந்த, மருத்துவ மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ...

வாடகை தாய் மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை:மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted: 24 Aug 2016 10:11 AM PDT

வாடகை தாய் என்ற பெயரில், பெண்களை ஏமாற்றி மோசடி செய்வதை தடுக்கும் விதமாக, கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், சட்ட விரோத, வர்த்தக ரீதியிலான வாடகை தாய் முறை, முழுமையாக தடை செய்யப்படும்.

குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதிக்கு, வாடகை தாய் மூலம் குழந்தை பெற, நவீன மருத்துவத்தில் வாய்ப்புள்ளது. ஆனால், குழந்தை பெற உடல்ரீதியாக தகுதி இருந்தும், பிரசவ வேதனைக்கு பயந்து, சிலர் வாடகை தாயை நாடுகின்றனர். அது போலவே, குழந்தை பாக்கியம் இல்லாத வெளிநாட்டவர் கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இந்தியாவில் வாடகை ...

சரமாரியாக அவதூறு வழக்குகள் தொடரும் தமிழக அரசுக்கு நெத்தியடி!: விமர்சனங்களை சகிக்கும்படி ஜெ.,வுக்கு நீதிபதிகள் 'அட்வைஸ்'

Posted: 24 Aug 2016 10:41 AM PDT

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட மீடியாக்கள் மீது, சரமாரியாக அவதுாறு வழக்குகளை தொடர்ந்துள்ள தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நெத்தியடி கொடுத்துள்ளது.

'பொது வாழ்க்கையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும்' என்றும், நீதிபதிகள் அறிவுரை கூறியுள்ளனர்.தமிழக அரசு தொடர்ந்துள்ள பல்வேறு அவதுாறு வழக்குகளை எதிர்த்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு ...

அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்: கோர்ட்டில் அரசு தகவல்

Posted: 24 Aug 2016 10:44 AM PDT

சென்னை:'அரசியல் சட்டப்படி, வரும் அக்டோபரில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்; தவிர்க்க முடியாத காரணங்களால், தற்போதுள்ள தொகுதி வரை யறையின்படியே தேர்தல் நடக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - பா.ம.க., சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.கடந்த, 2011ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி வரை யறை செய்து, உரிய இடஒதுக்கீடு வழங்கி, தேர்தல் நடத்த வேண்டும்; மின்னணு இயந் திரங்களை பயன்படுத்த வேண்டும்; வெளி மாநில அதிகாரிகளை ...

அ.தி.மு.க.,வில் களையெடுப்பு பின்னணியில் சசிகலா புஷ்பா

Posted: 24 Aug 2016 10:57 AM PDT

அ.தி.மு.க., அமைப்பு செயலர் பொறுப்பில் இருந்து, நாராயணபெருமாள் நீக்கப்பட்டதற்கு, சசிகலா புஷ்பா பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், திருநெல் வேலி புறநகர் மாவட்ட செயலராக இருந்த முருகையா பாண்டியன் நீக்கப்பட்டு, நாராயண பெருமாள், அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார்; அவருக்கு, கட்சியின் அமைப்பு செயலர் பதவியும் அளிக்கப்பட்டது. பதவி பறிப்பு:
இந்நிலையில், அவரிடம் இருந்த மாவட்ட செயலர் பொறுப்பு பறிக்கப்பட்டு, அப்பதவி, திருநெல்வேலி எம்.பி., பிரபாகரன் வசம் அளிக்கப்பட்டது.
இதன் பின்னணியில், ...

தமிழக காங்., தலைவர் ஓரிரு நாளில் அறிவிப்பு

Posted: 24 Aug 2016 11:04 AM PDT

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து, இளங்கோவன் விலகினார்.

அப்பதவியை பிடிக்க, கட்சியின் அனைத்து கோஷ்டி தலைவர்களும், துணைத் தலைவர் ராகுலை சந்தித்தனர். ஒருவர் மீது மற்றவர் புகார் கூறியதை அடுத்து, தலைவர் நியமனம் கிடப்பில் போடப்பட்டது. விரைவில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய தலைவரை உடனடியாக நியமிக்க, கோரிக்கை எழுந்துள்ளது. இதைஅடுத்து, நேற்று முன்தினம் டில்லியில், ராகுல், முகுல் வாஸ்னிக், சின்னா ரெட்டி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில், பீட்டர் அல்போன்ஸ், ...

'எய்ம்ஸ்' வாய்ப்பு கைநழுவி போகும் அபாயம்: எம்.பி.,க்களின் கூட்டு முயற்சி தேவை

Posted: 24 Aug 2016 11:13 AM PDT

மதுரை:தமிழகத்துடன் எய்ம்ஸ் மருத்துவ மனை திட்டம் அறிவிக்கப்பட்ட, மற்ற மாநிலங் களில் அதற்கான பணிகள் துவங்கிவிட்ட நிலையில், இங்கு இடம் தேர்வு செய்வதில் தொடர் தாமதம் ஏற்படுகிறது.

டில்லியில் மட்டுமே இருந்த, உலக தரத்திலான எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக, 'எய்ம்ஸ் சட்டம் 1956' திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, 2012ல் மத்திய பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கப்பட்டன.கடந்த பிப்., 2015ல் தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் எய்ம்ஸ் ...

5 இடங்களில் மீன் இறங்கு தளம்: முதல்வர் ஜெ., அறிவிப்பு

Posted: 24 Aug 2016 12:09 PM PDT

சென்னை:''ஐந்து இடங்களில், 10 கோடி ரூபாய் மதிப்பில், மீன் இறங்கு தளம் அமைக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில், 110 விதியில், அவர் வெளி யிட்டுள்ள அறிவிப்புகள்:* தமிழகத்தில், உள்நாட்டு மீன் உற்பத்தி, 2010 - 11ல், 1.71 லட்சம் டன்னாக இருந்தது. தற்போது, 2.4 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதை, 4.5 லட்சம் டன்னாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்கு தேவையான, மீன் குஞ்சு உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில், மீன்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஈரோடு மாவட்டம், பவானிசாகர்; தஞ்சாவூர் மாவட்டம், அகரப்பேட்டை மற்றும் திருமங்கல ...

உ.பி.,யில் பாத யாத்திரை: ராகுல் முடிவு

Posted: 24 Aug 2016 12:12 PM PDT

புதுடில்லி : உ.பி.,யில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், காங்., துணை தலைவர் ராகுல் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார்.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி, ஷீலா தீட்சித் முதல்வர் வேட்பாளராகவும், நடிகர் ராஜ் பப்பர், அம்மாநில காங்., தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், மாநிலம் முழுவதும் பாத யாத்திரையாகவும், திறந்த ஜீப்பிலும் பயணம் செய்ய, ...

நாய்களை கொல்லும் திட்டம்; கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

Posted: 24 Aug 2016 12:51 PM PDT

திருவனந்தபுரம்: ஆபத்தான தெரு நாய்களை கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு, விலங்குகள் நல அமைப்பு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில்...
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; இங்கு, தெரு நாய் தொல்லை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது; கடந்தாண்டில் மட்டும், ஒரு லட்சம் பேர், நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நடக்கின்றன.
இந்நிலையில், திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான, புல்லுவிலா கடற்கரை அருகே வசித்து வந்த, 65 ...

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கான கோர்ட் துவக்கம்

Posted: 24 Aug 2016 01:44 PM PDT

ஐதராபாத் : ஐதராபாத்தில் குழந்தைகளுக்கான கோர்ட் துவக்கப்பட்டது. இது தென்னிந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் தனி கோர்ட் ஆகும்.
தென்னிந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் தனி கோர்ட் ஐதராபாத்தில் நேற்று(24-08-16) துவக்கப்பட்டது. குழந்தைகள் கோர்ட்டை, நம்பல்லி குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ரமேஷ் ரங்கநாதன், தெலுங்கானா டி.ஜி.பி., அனுராக் சர்மா ஆகியோர் துவக்கி வைத்தனர். கோவா மற்றும் டில்லிக்கு அடுத்தபடியாக ஐதராபாத்தில் குழந்தைகளுக்கான கோர்ட் துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோர்ட்டில் குழந்தைகள் காத்திருக்க தனி ...

தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா

Posted: 24 Aug 2016 02:48 PM PDT

நியூயார்க் : தீபாவளியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிடப்படவுள்ளது.
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், தீபாவளிப் பண்டிகையைச் கவுரவிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையை அமெரிக்க அரசு வெளியிடவுள்ளது. வாணவேடிக்கை பின்னணியில், எரியும் அகல் விளக்கும், அதன் கீழே ‛அமெரிக்காவுக்கு என்றென்றும் தீபாவளி 2016' என்ற வாசகமும் அந்த தபால் தலையில் இடம் பெற்றுள்ளது.
இச்சிறப்பு தபால் தலை வரும் அக்., 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படம் எனவும், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™