Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


25.08.1972 - கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை காலமானார்

Posted: 25 Aug 2016 03:42 AM PDT

தமிழக முன்னாள் ஆஸ்தான கவியும், மேலவையில் உறுப்பினராக இருந்தவருமான நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை இன்று விடியற்காலையில் சென்னை நகரில் சீதம்மா காலனியில் உள்ள தமது மகளுடைய இல்லத்தில் திடீரெனக் காலமானார். அவருக்கு வயது 85.

ஓஎன்ஜிசியை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்

Posted: 24 Aug 2016 01:19 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பைங்காட்டூர் ஊராட்சி கடைதெரு கிராமத்தில் ஓஎன்ஜிசி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

ஆண்டிபட்டி வனத் துறை அலுவலகத்தில் வனக் காவலர்களை கட்டிப் போட்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

Posted: 24 Aug 2016 01:18 PM PDT

ஆண்டிபட்டி வனத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை, வனக் காவலர்கள் இருவரை கட்டிப் போட்டு 2 சந்தன மரங்களை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கடத்திச் சென்றது.

ஆண்டுக்கு 2 ஆயிரம் சட்ட விரோத கருக்கலைப்பு: திருவண்ணாமலையில் கைதான போலி பெண் மருத்துவர் தகவல்

Posted: 24 Aug 2016 01:18 PM PDT

திருவண்ணாமலையில் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் பேருக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து பல லட்சங்களை சம்பாதித்ததாக, கைது செய்யப்பட்ட போலி பெண் மருத்துவர், மருத்துவத் துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை:தமிழகத்தில் வெப்பம் தணியும்

Posted: 24 Aug 2016 01:17 PM PDT

வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளதால், தமிழகத்தில் வெப்பம் குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சென்னையில் இருந்து சுவிதா சிறப்பு ரயில்

Posted: 24 Aug 2016 01:17 PM PDT

சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கும், விழுப்புரத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கூர்நோக்கு இல்லத்தில் மோதல்: 6 சிறுவர்கள் செங்கல்பட்டுக்கு மாற்றம்

Posted: 24 Aug 2016 01:16 PM PDT

சென்னை கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஏற்பட்ட மோதலின் விளைவாக, 6 சிறுவர்கள் செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்.

ரயிலில் பணம் கொள்ளை வழக்கு: துப்புத் துலக்க அனுபவமுள்ள போலீஸார் தனிப்படையில் சேர்ப்பு

Posted: 24 Aug 2016 01:15 PM PDT

சென்னை வந்த ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், துப்புத் துலக்குவதில் அதிகம் அனுபவமுள்ள போலீஸார் தனிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

பாரதியின் மாந்தோப்பு: "குயில் தோப்பு' எனப் பெயரிட குமரி அனந்தன் வேண்டுகோள்

Posted: 24 Aug 2016 01:15 PM PDT

புதுச்சேரியில் பாரதியார் அவ்வப்போது சென்று பாடல்கள் இயற்றிய ஒரு மாந்தோப்புக்கு, "பாரதி குயில் தோப்பு' என்று பெயரிடக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் மனு அளிக்க உள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் தகவல்

Posted: 24 Aug 2016 01:15 PM PDT

சுற்றுலாப் பயணிகள் வருகையில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அறிவித்துள்ளார்.

துணை மருத்துவப் படிப்புகளில் 3,503 காலியிடங்கள்

Posted: 24 Aug 2016 01:14 PM PDT

துணை மருத்துவப் படிப்புகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், 3,503 காலியிடங்கள் உள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

Posted: 24 Aug 2016 01:09 PM PDT

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது.

பிணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு: யுவராஜ் மீண்டும் கைது

Posted: 24 Aug 2016 01:09 PM PDT

பிணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு யுவராஜை நாமக்கல் சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை இரவு மீண்டும் கைது செய்தனர்.

சாரதா நிதி நிறுவன மோசடி: நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்

Posted: 24 Aug 2016 01:08 PM PDT

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வழக்குரைஞருமான நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தங்கம் பவுனுக்கு ரூ.8 குறைவு

Posted: 24 Aug 2016 01:07 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து, 23,864-க்கு விற்பனயானது.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து சென்ற மீன்பிடி படகுகள்

Posted: 24 Aug 2016 12:52 PM PDT

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை புதுச்சேரி, கன்னியாகுமரி, பாம்பன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் புதன்கிழமை கடந்து சென்றன.

விருதுநகர் அருகே போலி தங்கக் காசு கொடுத்து ரூ. 2.10 லட்சம் மோசடி

Posted: 24 Aug 2016 12:52 PM PDT

விருதுநகர் அருகே போலி தங்கக் காசுகள் கொடுத்து ரூ.2.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

காதலியை பதிவு திருமணம் செய்துவிட்டு வெளிநாடு சென்ற கணவர் மீது வழக்கு

Posted: 24 Aug 2016 12:50 PM PDT

காதலியை பதிவு திருமணம் செய்துவிட்டு வெளிநாடு சென்ற கணவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தெரு நாய்களை பிடித்துச் செல்ல பொது மக்கள் கோரிக்கை

Posted: 24 Aug 2016 12:50 PM PDT

விருதுநகரில் பொதுமக்கள் கடித்துவரும் தெரு நாய்களை பிடித்துச் செல்ல கசாப்புக்காரர் தெரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பணை அருகே கால்வாய் தோண்டும் பணி நிறுத்தம்: ஆட்சியர் அறிவுறுத்தலால் பிரச்னைக்கு  தீர்வு

Posted: 24 Aug 2016 12:49 PM PDT

விருதுநகர் மாவட்டம் ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்தின் அருகே தடுப்பணையின் ஓரத்தில்  மீண்டும் கால்வாய் தோண்டும் பணியை பொதுப் பணித் துறையினர் தொடங்கியதை விருதநகர் நகராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்படி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. 

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Posted: 24 Aug 2016 12:49 PM PDT

ராஜபாளையம் வேளாண்மை விற்பனை மையம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகளை ஆபாசமாகப் பேசி, தாக்கிய வழக்கு: தந்தைக்கு ஓராண்டு சிறை தண்டனை

Posted: 24 Aug 2016 12:48 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது மகளை ஆபாசமாக பேசி, தாக்கிய வழக்கில் தந்தைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 24 Aug 2016 12:48 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

கொடைக்கானல் பள்ளங்கி மலைச் சாலையை அகலப்படுத்துவதில் தாமதம்: பொதுமக்கள் அவதி

Posted: 24 Aug 2016 12:47 PM PDT

கொடைக்கானல்-பள்ளங்கி சாலையிலுள்ள வெட்டுவரை பகுதியை அகலப்படுத்தி பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

போடியில் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Aug 2016 12:47 PM PDT

போடியில் உள்ள தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிப்பதை கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓடும் ரயிலில் மாரடைப்பால் திண்டுக்கல் முதியவர் சாவு

Posted: 24 Aug 2016 12:46 PM PDT

சாத்தூர் அருகே ஓடும் ரயிலில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

போதைப் பொருள்கள் ஊடுருவலை தடுக்க தமிழக-கேரள போலீஸார் ஆலோசனை

Posted: 24 Aug 2016 12:46 PM PDT

கேரள மாநிலம் தேக்கடியில், போதைப் பொருள்கள் ஊடுருவலைத் தடுப்பது குறித்து புதன்கிழமை தமிழக-கேரள போலீஸார் ஆலோசனை நடத்தினர்.

வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மணல் திருட்டு தடுக்கப்படுமா?

Posted: 24 Aug 2016 12:45 PM PDT

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இயந்திரங்களை பயன்படுத்தி மணல் திருடப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் தமிழக பாதரச எதிர்ப்பு கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Aug 2016 12:44 PM PDT

கொடைக்கானலில் தமிழக பாதரச எதிர்ப்பு கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

Posted: 24 Aug 2016 12:44 PM PDT

தேவாரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

காவல் சார்பு-ஆய்வாளர் வீட்டில் கார் திருட்டு

Posted: 24 Aug 2016 12:43 PM PDT

தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு சார்பு- ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரேசன் (51). இவர், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தனது வீட்டு வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு, பணிக்குச் சென்றிருந்தாராம். வீட்டுக்கு திரும்பவும் வந்து பார்த்த போது, கார் திருடு போனது தெரியவந்துள்ளது.

கேரளத்தில் தமிழக அரசுப் பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம்: 3 பேர் கைது

Posted: 24 Aug 2016 12:43 PM PDT

கேரளத்தில் தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் தேசியத் தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு

Posted: 24 Aug 2016 12:42 PM PDT

திண்டுக்கல் அடுத்துள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில், தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினர், திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கார்த்திகை திருநாள்: பழனிக் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

Posted: 24 Aug 2016 12:42 PM PDT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை திருநாளையொட்டி புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப்கார் மற்றும் விஞ்ச் நிலையங்கள், மலைக்கோயில் கட்டண தரிசன வாயில் மற்றும் இலவச தரிசன வாயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோயில் சார்பில் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தங்கமயில் புறப்பாடு மற்றும் தங்கரத புறப்பாட்டை பக்தர்கள் கண்டு தரிசித்தனர். அடிப்படை வசதிகளை பழனிக்கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் (பொறுப்பு) மங்கையர்க்கரசி தலைமையில் கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

தமுஎகச கலை இரவு

Posted: 24 Aug 2016 12:41 PM PDT

பழனியை அடுத்த கணக்கன்பட்டி கலையரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டிபட்டியில் விஏஓ.க்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட பதிவேடு

Posted: 24 Aug 2016 12:40 PM PDT

ஆண்டிபட்டி வட்டாரத்தில் கணினிமயமாக்கப்பட்ட பதிவேடுகளை,  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

கொலை மிரட்டல்: பால் வியாபாரி கைது

Posted: 24 Aug 2016 12:39 PM PDT

போடி அருகே புதன்கிழமை பால் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு பால் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீராகவேந்திரர் மடத்தில் ஆராதனை விழா

Posted: 24 Aug 2016 12:39 PM PDT

வத்தலகுண்டு அக்ரஹாரம் சிவன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில், சுவாமியின் 345 ஆம் ஆண்டு ஆராதனை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை சுவாமி ரதத்தில் திருவீதி உலா எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அழகர்கோயில் வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படுமா?

Posted: 24 Aug 2016 12:38 PM PDT

அழகர்கோயில் வனப் பகுதியில் மண் மற்றும் நீர் வளத்தை பாதுக்கும் வகையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரம் நொடிச்சுப் போனதுக்கு கூட இதே காரணம் தான்..!

Posted: 24 Aug 2016 12:37 PM PDT

அரசியல்மயமாக்கல்!

Posted: 24 Aug 2016 12:32 PM PDT

திட்டக் கமிஷனைக் கலைத்து விட்டு "நீதி ஆயோக்' என்கிற அமைப்பை ஏற்படுத்தியதுபோல இப்போது இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்கிற அமைப்பை ஏற்படுத்தும் முனைப்பில் இருக்கிறது நரேந்திர மோடி அரசு.

இழப்பதற்கல்ல காஷ்மீரம்!

Posted: 24 Aug 2016 12:30 PM PDT

நம் தாய்த்திருநாட்டின் மணி மகுடம் காஷ்மீர். ரிஷி கஷ்யப முனிவரின் பெயரில் காஷ்மீரம் என அழைக்கப்பட்டது. சரஸ்வதி தேவியின் அருளாட்சி காஷ்மீர் பள்ளத்தாக்கில் எப்போதும் கோலோச்சி வருகின்றது. இமயமலைச் சாரலில் பனிமலை சிகரங்கள் அழகு சேர்க்க பூலோக சொர்க்கமாக திகழ்வது ஸ்ரீநகர்.

மானம் காத்த மும்மணிகள்

Posted: 24 Aug 2016 12:28 PM PDT

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியினர் தோல்வியடைந்து வெறும் கையுடன்தான் திரும்புவார்களோ என்ற அவநம்பிக்கை வியாபித்திருந்த நிலையில், அதைத் தகர்த்தெறிந்து இரு பதக்கங்களை வென்று நமது நாட்டின் மானத்தைக் காத்துள்ளனர் பி.வி. சிந்துவும், சாக்ஷி மாலிக்கும்.

6 மீன்குஞ்சு உற்பத்திப் பண்ணைகள் ரூ.13.65 கோடியில் மேம்படுத்தப்படும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 24 Aug 2016 12:25 PM PDT

தமிழகத்தில் 6 இடங்களில் உள்ள மீன்குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணைகள் ரூ.13.65 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

படகுக் குழாம்களில் மிதவை உணவகங்கள்

Posted: 24 Aug 2016 12:23 PM PDT

உதகை உள்பட இரண்டு படகுக் குழாம்களில் மிதவை உணவகங்கள் அமைக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அறிவித்தார்.

50 திருநங்கைகளுக்கு தொழில் பயிற்சி

Posted: 24 Aug 2016 12:22 PM PDT

50 திருநங்கைகளுக்கு நடப்பாண்டில் வாழைநார் கைத்திறத் தொழில் பயிற்சி அளிக்கப்படும் என்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.

வடலூரில் கைமுறை காகித அலகு

Posted: 24 Aug 2016 12:22 PM PDT

கடலூர் மாவட்டம் வடலூரில் கைமுறை காகித அலகு நிறுவப்படும் என்று கதர்-கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் க.பாஸ்கரன் அறிவித்தார். சட்டப் பேரவையில் அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிப்புகள்:-

இசைக் கல்லூரிகளில் பகுதி நேர ஆசிரியர் பணியாளருக்கு தொகுப்பூதியம் உயர்வு

Posted: 24 Aug 2016 12:21 PM PDT

மாலை நேர அரசு இசைக் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள்-பணியாளர்களின் தொகுப்பூதியம் உயர்த்தி அளிக்கப்படும் என்று இந்து சமயம்-அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

அரசு காட்சியகத்தில் கூடுதல் வசதிகள்

Posted: 24 Aug 2016 12:21 PM PDT

சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வி, கலை-பண்பாட்டுத் துறை அமைச்சர் பா.பென்ஜமின் அறிவித்தார்.

ஆகஸ்ட் 29-இல் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம்

Posted: 24 Aug 2016 12:20 PM PDT

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும்.

மெரீனாவில் பாய்மரப் படகு அகாதெமி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 24 Aug 2016 12:20 PM PDT

மெரீனா கடற்கரையில் பாய்மரப் படகு அகாதெமி, படகு போட்டிகளுக்கான திறன்மிகு பயிற்சி மையம் ஆகியன ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பூம்புகார் விற்பனை உயர்வு

Posted: 24 Aug 2016 12:19 PM PDT

தமிழக அரசின் பூம்புகார் விற்பனையின் மதிப்பு ரூ.34.68 கோடியை எட்டியுள்ளது.

தமிழக முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: அவதூறு வழக்குகள் விவகாரம்

Posted: 24 Aug 2016 12:18 PM PDT

தனக்கு எதிராக தமிழகத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காணுங்கள்: அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு

Posted: 24 Aug 2016 12:17 PM PDT

மாணவர்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீர் நிலவரம்: ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு

Posted: 24 Aug 2016 12:16 PM PDT

ஜம்மு - காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

பலூசிஸ்தான் தலைவர்களைக் காப்பாற்ற ராணுவத்தை அனுப்புவீர்களா?மோடிக்கு சிவசேனை கேள்வி

Posted: 24 Aug 2016 12:16 PM PDT

பலூசிஸ்தான் மாகாண விடுதலைக்கு ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை, அங்குள்ள தலைவர்கள் வரவேற்றதற்காக அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தலைவர்களைக் காப்பாற்ற ராணுவம் அனுப்பப்படுமா என்று சிவசேனைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத் நிருபர் கொலை: மூவர் கைது

Posted: 24 Aug 2016 12:15 PM PDT

குஜராத்தில் நிருபர் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அன்னை தெரஸாவுக்கு அஞ்சலி செலுத்த லண்டனில் இருந்து வரும் மாற்றுத்திறனாளி பைலட்

Posted: 24 Aug 2016 12:14 PM PDT

மறைந்த அன்னை தெராஸாவுக்கு அடுத்த மாதம் புனிதர் பட்டம் வழங்கப்படுவதை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லண்டனில் இருந்து மாற்றுத்திறனாளி பைலட் கெளதம் லீவிஸ் கொல்கத்தாவுக்கு வர இருக்கிறார்.

மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பு கொலை செய்ததாக தெரிவிக்கவில்லை: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி விளக்கம்

Posted: 24 Aug 2016 12:13 PM PDT

""மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பு கொலை செய்ததாக தெரிவிக்கவில்லை; அந்த அமைப்புடன் தொடர்புடைய நபர்கள்தான் காந்தியின் கொலைக்கு காரணம் என தெரிவித்தேன்'' என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி: குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted: 24 Aug 2016 12:13 PM PDT

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில் பாதை விரிவாக்கத் திட்டத்துக்கு ஒப்புதல்

Posted: 24 Aug 2016 12:12 PM PDT

ரயில்வே துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான இருப்புப் பாதை விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எல்லை மோதல்களில் உயிரிழப்போர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 24 Aug 2016 12:12 PM PDT

நாட்டிலேயே முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெறும் பயங்கரவாத மோதல்களில் உயிரிழக்கும் அப்பாவி பொதுமக்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தொடங்கியது டிஎன்பில்: முதல் ஆட்டத்தில் பேட்ரியாட்ஸ் வெற்றி

Posted: 24 Aug 2016 12:11 PM PDT

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வென்றது.

சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் பயஸ் ஜோடி

Posted: 24 Aug 2016 12:09 PM PDT

வின்ஸ்டன்-சலேம் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வெண்கலம் வென்ற சாக்ஷிக்கு உற்சாக வரவேற்பு: ரூ.2.5 கோடி பரிசுத் தொகையை வழங்கினார் ஹரியாணா முதல்வர்

Posted: 24 Aug 2016 12:08 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சிந்துவுக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் சாதிக்க இனி என்ன செய்ய வேண்டும்?

Posted: 24 Aug 2016 12:08 PM PDT

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தவுடன் இந்தியாவின் நிலையைப் பார்த்து பரிதாபப்படுவோம். அடுத்த 10 நாள்களுக்கு இந்திய வீரர்கள் குறித்து வாய்க்கு வந்தபடி வசைபாடுவோம். அதோடு மறந்துவிடுவோம். இதுதான் காலம் காலமாக தொடர்கிறது.

ஆக.28-ல் லோதா கமிட்டி அவசரக் கூட்டம்

Posted: 24 Aug 2016 12:06 PM PDT

பிசிசிஐக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோதா கமிட்டியின் அவசரக் கூட்டம் வரும் 28-ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ளது.

வெள்ளி வென்ற எத்தியோப்பிய வீரர் மாயம்

Posted: 24 Aug 2016 12:06 PM PDT

ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்று வெள்ளி வென்ற பிறகு தனது நாட்டு அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த எத்தியோபிய வீரர் ஃபெயிஸா லிலேஸா நாடு திரும்பாமல் மாயமாகியுள்ளார்.

அமெரிக்க ஓபன்: முதல் சுற்றில் மைனேனி வெற்றி

Posted: 24 Aug 2016 12:05 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சாகேத் மைனேனி வெற்றி பெற்றுள்ளார்.

டோக்கியோ வந்தது ஒலிம்பிக் கொடி

Posted: 24 Aug 2016 12:05 PM PDT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஒலிம்பிக் கொடி புதன்கிழமை டோக்கியோ வந்தது.

தேவையின்றி வாடகைத் தாய் முறையைப் பயன்படுத்துவதா?

Posted: 24 Aug 2016 12:04 PM PDT

தேவையைக் கருதி உருவான வாடகைத் தாய் முறையை "ஃபேஷனுக்காக'ப் பயன்படுத்தக் கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டிப்புடன் தெரிவித்தார்.

பள்ளி விளையாட்டு விழா

Posted: 24 Aug 2016 12:02 PM PDT

செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியின் 9-ஆவது ஆண்டு விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

Posted: 24 Aug 2016 12:02 PM PDT

மதுராந்தகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 38 பேர் பலி

Posted: 24 Aug 2016 12:02 PM PDT

இத்தாலியின் மையப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.

இடி தாக்கி 45 செம்மறி ஆடுகள் சாவு

Posted: 24 Aug 2016 12:01 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே இடி தாக்கியதில் 45 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

ரோஹின்கயா முஸ்லிம் பிரச்னை: கோபி அன்னான் தலைமையில் கவுன்சில்

Posted: 24 Aug 2016 12:01 PM PDT

மியான்மரில் சிறுபான்மை ரோஹின்கயா முஸ்லிம்களுக்கும், புத்தமத தேசியவாதிகளுக்கும் இடையிலான பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் தலைமையில் 9 நபர் கொண்ட கவுன்சிலை அமைக்க மியான்மர் அரசு முடிவு செய்துள்ளது.

படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கோரி உண்ணாவிரதம்

Posted: 24 Aug 2016 12:01 PM PDT

படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.

அமெரிக்கா: காட்டுத் தீ: அவசரநிலை பிரகடனம்

Posted: 24 Aug 2016 12:01 PM PDT

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, அந்த நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

குடும்ப நல அறுவை சிகிச்சை: ஆட்சியர் தலைமையில் பணியரங்கம்

Posted: 24 Aug 2016 12:01 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான, குடும்பநல அறுவை சிகிச்சைகளில் தர நிர்ணயம் உறுதி செய்வது குறித்து, மருத்துவர்களுக்கான பணியரங்கம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

சவூதி அரேபியா: ஹஜ்: கல்லெறிதல் நேரம் குறைப்பு

Posted: 24 Aug 2016 12:00 PM PDT

சவூதி அரேபியாவில், ஹஜ் பயணத்தின்போது மெக்கா அருகே உள்ள மினா பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்

கூட்டுறவு விற்பனை சங்கங்களில் விலை குறைப்பு ரசாயன உரங்கள்

Posted: 24 Aug 2016 12:00 PM PDT

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் குறைந்த விலைக்கு ரசாயன உரங்கள் விற்கப்படுகின்றன.

தீபாவளி சிறப்பு தபால்தலை: வெளியிடுகிறது அமெரிக்கா

Posted: 24 Aug 2016 12:00 PM PDT

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பிக்கும் தபால் தலையை அமெரிக்க அரசு வெளியிடவுள்ளது.

மாடம்பாக்கத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: மருத்துவக் குழுவினர் முகாம்

Posted: 24 Aug 2016 12:00 PM PDT

கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போர்: சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி அதிரடிப்படை

Posted: 24 Aug 2016 11:59 AM PDT

சிரியாவில் துருக்கி எல்லையையொட்டி அமைந்துள்ள ஜராபுலஸ் நகரிலிருந்து இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை விரட்டும் நோக்கத்துடன் துருக்கி ராணுவம் புதன்கிழமை அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது.

30-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 24 Aug 2016 11:59 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 30-ஆம் தேதி எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் மார்க்சிஸ்ட்! காங்கிரஸ் விமர்சனம்

Posted: 24 Aug 2016 11:59 AM PDT

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுப்படுவதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கொள்கைகள் அற்ற நிலையில் மார்க்சிஸ்ட் இருப்பதையே இது உணர்த்துவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வெளிநடப்புப் போராட்டம்

Posted: 24 Aug 2016 11:59 AM PDT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஒருமணிநேரம் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜிஎஸ்டி மசோதா: ம.பி., தில்லி பேரவைகளில் ஒப்புதல்

Posted: 24 Aug 2016 11:58 AM PDT

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) சட்டத் திருத்த மசோதாவுக்கு, மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய மாநில சட்டப்பேரவைகள் புதன்கிழமை ஒப்புதல் அளித்தன.

சாலையை சீரமைக்கக் கோரி நாற்றுநடும் போராட்டம்

Posted: 24 Aug 2016 11:58 AM PDT

மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தண்டலம் கிராமச் சாலையை சீரமைக்க கோரி, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதன்கிழமை நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

காஷ்மீரில் மீண்டும் மோதல்: இளைஞர் பலி

Posted: 24 Aug 2016 11:58 AM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் பலியானார்.

சைப்ரஸ் நாட்டுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்

Posted: 24 Aug 2016 11:58 AM PDT

வரி ஏய்ப்பைத் தவிர்க்கும் விதமாக, சைப்ரஸ் நாட்டுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

காஷ்மீரில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை: காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 24 Aug 2016 11:58 AM PDT

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், அரசியல் கட்சிகள் மட்டுமன்றி அனைத்து தரப்பினருடனும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத் வலியுறுத்தியுள்ளார்.

தலித்துகளும், பிற்பட்டோரும் தேசியவாதிகள் இல்லையா? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

Posted: 24 Aug 2016 11:57 AM PDT

தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் தே;ச்யவாதிகள் இல்லையா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளத்தில் பராமரிப்பின்றி வாடும் ஜெயலலிதா பரிசளித்த "கிருஷ்ணா' யானை

Posted: 24 Aug 2016 11:57 AM PDT

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசாக அளித்த "கிருஷ்ணா' என்கிற யானை, மதம் பிடித்த நிலையில் உரிய பராமரிப்பின்றி அருகில் உள்ள புன்னத்தூர் கோட்டையில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை இணைப்புத் திட்டம் ரூ.6,461 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted: 24 Aug 2016 11:57 AM PDT

தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ், ஐந்து மாநிலங்கள் வழியாகச் செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கதேசம்: 6 ஜேஎம்பி பயங்கரவாதிகள் கைது

Posted: 24 Aug 2016 11:56 AM PDT

வங்கதேசத்தில் இரு இடங்களில் காவல்துறையினர் புதன்கிழமை நிகழ்த்திய தேடுதல் வேட்டையில் வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜேஎம்பி) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியா: கத்திக் குத்து: பிரிட்டன் பெண் பலி

Posted: 24 Aug 2016 11:56 AM PDT

ஆஸ்திரேலிய விடுதியொன்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்த்திய கத்திக் குத்துத் தாக்குதலில் பிரிட்டன் பெண் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.

அரசுப் பேருந்து மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்து: 15 பேர் பலத்த காயம்

Posted: 24 Aug 2016 11:56 AM PDT

ஆம்பூர் அருகே புதன்கிழமை அதிகாலை  அரசுப் பேருந்து மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

நகராட்சி இடம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

Posted: 24 Aug 2016 11:56 AM PDT

ஆம்பூரில் நகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, வேலி அமைக்கப்பட்டுள்ளதை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் புதன்கிழமை தெரிவித்தார். 

ஆந்திர பேருந்தை சிறை பிடித்து போராட்டம்: 82 பேர் கைது

Posted: 24 Aug 2016 11:56 AM PDT

செம்மரம் வெட்டச் சென்றதாக கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுவிக்கக் கோரி வேலூரில் ஆந்திர மாநில அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியினர் 82 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™