Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சிகளின் அந்தஸ்து நிர்ணயம்

Posted: 22 Aug 2016 10:12 AM PDT

புதுடில்லி: தேசிய, மாநில கட்சிகளின் அந்தஸ்தை, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு பரிசீலனை செய்யும் வகையில், விதி முறைகளில், தேர்தல் கமிஷன் திருத்தம் செய்துள்ளது.

தேர்தல் கமிஷன் விதி : முறைப்படி, தேசிய, மாநில கட்சிகளின் அங்கீகாரம், ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை தற்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 2014ல் நடந்த லோக் சபா தேர்தலில், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூ னிஸ்ட், தேசியவாத காங்., கட்சி ஆகியவற் றால் சிறப்பான வெற்றிகளை பெற முடிய வில்லை. இதனால், இவற்றுக்கு தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகும் நிலை உருவானது; இது தொடர் பாக, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி ...

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு: மோடி

Posted: 22 Aug 2016 10:20 AM PDT

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தற்போதைய மோசமான நிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த துயரத்தையும், கவலையையும் தெரிவித்துள்ளார்.

''காஷ்மீர் பிரச்னைக்கு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வகையிலான தீர்வை, பேச்சு நடத்தி அடைய வேண்டும்,'' என, அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், ஹிஸ்புல் முஜா கிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி பர்ஹான் வானி, சமீபத்தில் கொல்லப்பட்டான்; அதையடுத்து, 50 நாட்களாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி ...

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' உத்தரவுக்கு தடையில்லை:* சபாநாயகருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவு

Posted: 22 Aug 2016 10:29 AM PDT

சென்னை:சட்டசபையில் இருந்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 79 பேரை, 'சஸ்பெண்ட்' செய்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தி.மு.க., உறுப்பினர் தியாகராஜன் தாக்கல் செய்த மனுக்க ளுக்கு பதிலளிக்கும்படி, சபாநாயகர், சட்டசபை செயலர், தலைமைச் செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டது.சட்டசபையில், இம்மாதம், 17ம் தேதி நடந்த அமளியை தொடர்ந்து, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 79 பேரை, ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து, தீர்மானம் நிறைவேற்றப் ...

பலத்த மழை, வெள்ளத்தால் ஐந்து மாநிலங்கள் தத்தளிப்பு: மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரம்

Posted: 22 Aug 2016 10:42 AM PDT

புதுடில்லி:பலத்த மழை காரணமாக, கங்கை, யமுனை மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; மழை வெள்ளத்துக்கு, 40 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களம் இறங்கியுள்ளனர்.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மத்திய பிர தேசம், பீஹார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கங்கை, யமுனை நதிகளிலும், அதன் துணை நதிகளிலும் அபாய அளவைத் ...

தலைவர் சோனியா; செயல் தலைவர் ராகுல் காங்கிரசுக்குள் தீவிரமாகும் புதிய கோரிக்கை

Posted: 22 Aug 2016 10:48 AM PDT

சோனியாவின் உடல்நலக் குறைவு காரண மாக, ராகுலை தலைவராக்க வேண்டுமென்ற குரல்கள், பலமாக மீண்டும் ஒலிக்கத் துவங்கி னாலும், அவ்வளவு எளிதாக அது நடக்குமா என்ற சந்தேகம், அக்கட்சிக்குள் எழுந்து உள்ளது.

அவசரமாக...:
கடந்த ஓராண்டாகவே, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள் ளது. சமீபத்தில், உ.பி.,யில், தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்க சென்ற போது மயக்க மடைந்தார். அவசரமாக டில்லிக்கு அழைத்து
வரப்பட்ட அவருக்கு, தனியார் மருத்துவமனை யிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில் அவரது உடல்நலக் குறைவு ...

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு!:சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது தமிழக அரசு

Posted: 22 Aug 2016 10:59 AM PDT

காவிரியில் தண்ணீர் திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி, காவிரி யிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் கடிதம் எழுதியிருந் தார். இதற்கு, கர்நாடகா தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதையடுத்து, 'தமிழகத்துக்கு உரிய பங்கை பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்' என, சட்ட சபையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக ...

'சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சட்டசபை பாதுகாப்பே உதாரணம்'

Posted: 22 Aug 2016 11:33 AM PDT

சென்னை: ''சட்டம் -- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு, சட்டசபையில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரும், பந்தோபஸ்துமே உதாரணம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில், ஸ்டாலின் அளித்த பேட்டி:
'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்யும்படி, தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டும், சபாநாயகர் ஏற்காத நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?
இது, நாங்கள் எதிர்பார்த்த ஒன்றே; அதனால் தான், நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம்.
போலீஸ் துறை மானியக் கோரிக்கையில் நீங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கா கவே, இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள் ...

பாதுகாப்பு கெடுபிடிகளால் திணறிய கோட்டை வளாகம்

Posted: 22 Aug 2016 11:36 AM PDT

சட்டசபை அமைந்துள்ள, சென்னை கோட்டைக்குள், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நுழைவதைத் தடுக்கும் வகையில், கோட்டையை சுற்றிலும் நேற்று பாதுகாப்பு அரண் போடப்பட்டு இருந்தது. போலீசாரின் கடும் கெடுபிடிகளை கடந்த பிறகே, கோட்டை வளாகத்திற்குள் ஊழியர்களும், பொதுமக்களும் நுழைய முடிந்தது.

சட்டசபையில், இம்மாதம், 17ம் தேதி நடந்த அமளி காரணமாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 79 பேர், ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பொறுப்பு வகிக்கும் உள்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், தி.மு.க.,வினர் பேசுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் ...

கருணாநிதி, ஸ்டாலினுக்கு துணிவு இல்லை முதல்வர் ஜெயலலிதா ஆவேசம்

Posted: 22 Aug 2016 11:42 AM PDT

சென்னை: ''தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு துணிவு இருந்தால், சட்டசபைக்கு வந்திருக்க லாம்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 16ம் தேதி சட்டசபையில் பேசும் போது, 'சில நேரங்களில் எங்களுடைய உறுப்பினர்கள், தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தக் கூடிய வகையில், சில வேண்டத்தகாத வார்த்தைகளை சொல்லக் கூடிய வாய்ப்புகள் வருகின்றன; அது, மைக் கில் வரவில்லை. இருந்தாலும், அதற்காக நான் வேதனைப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்; உங்களிடம் மன்னிப்பு கேட்க காத்திருக்கிறேன்' என, தெரிவித்தார்.
தி.மு.க., - ...

மாவட்ட அளவில் உர வினியோகம்; மத்திய அரசு அதிரடி திட்டம்

Posted: 22 Aug 2016 12:10 PM PDT

புதுடில்லி: நாடு முழுவதும், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை, மாவட்ட அளவில் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு தயாரித்து வருகிறது.

தற்போது, மாநிலங்கள் அளவில், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வினியோகிக்கும் திட்டத்தை, மத்திய உரத்துறை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும், ஒரு அலகாக கருதப்பட்டு, அதற்கு தேவையான உரங்கள், மாதந்தோறும், பருவநிலைக்கு ஏற்ப வினியோகிக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, நாடு முழுவதும், மாவட்ட அளவில், உரங்களை வினியோகிக்கும் திட்டத்தை, மத்திய உரத்துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது; இத்திட்டம், மாநில அரசுகளை கலந்தாலோசித்த ...

'ஒருதலைப்பட்சமான அறிக்கை'; திருவாங்கூர் அரச குடும்பம் ஆவேசம்

Posted: 22 Aug 2016 01:20 PM PDT

திருவனந்தபுரம் : 'திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் மாயமானதாக, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை, நம்ப முடிய வில்லை' என, அரச குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்த, 186 கோடி ரூபாய் மதிப்புள்ள, 769 தங்க குடங்கள் காணாமல் போய்விட்டதாக, சுப்ரீம் கோர்ட்டில், சமீபத்தில், முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் ...

பாக்கெட் உணவுகளில் போலிகளை தடுக்க மத்திய அரசு புது திட்டம்

Posted: 22 Aug 2016 02:23 PM PDT

புதுடில்லி: பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களில், போலிகளை தடுக்க, 'பார்கோடு' எனப்படும் குறியீட்டு எண்ணை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாக்கெட் உணவுப் பொருட்களில் போலிகளை தடுக்கவும், மற்ற நாடுகளில் இருந்து தரம் குறைந்த உணவுப் பொருட்கள் சந்தையில் விற்பதை தடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, பாக்கெட் உணவுப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து, மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
உணவுப் பொருட்கள் குறித்து, பாக்கெட்களில் அச்சடிக்கப்படும் விபரங்கள் மிகவும் ...

12 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீர் பணியில் எல்லை பாதுகாப்பு படை

Posted: 22 Aug 2016 03:11 PM PDT

ஸ்ரீநகர் : 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லைப் பாதுகாப்பு படை, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 2004ம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சி.ஆர்.பி.எப்., படை ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன் 1991-ம் ஆண்டிலிருந்து 2004 வரை, சுமார் 13 ஆண்டுகள் எல்லை பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் நோக்கிலும், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™