Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காங்கிரஸில் தமாகா இணையாது

Posted: 22 Aug 2016 01:29 PM PDT

தமாகா, காங்கிரஸ் கட்சியுடன் இணையாது என்றார் அதன் தலைவர் ஜி.கே.வாசன்.

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு

Posted: 22 Aug 2016 01:28 PM PDT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.23,816-க்கு விற்பனையானது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு

Posted: 22 Aug 2016 01:28 PM PDT

காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று நாள்களில் 2 அடி உயர்ந்துள்ளது.

பேரவையில் அநீதி: விரைவில் உண்ணாவிரதப் போராட்டம்: கருணாநிதி

Posted: 22 Aug 2016 01:27 PM PDT

சட்டப்பேரவையில் ஆளும்கட்சியினரால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து விரைவில் உண்ணாவிரதம் போன்ற ஆழமான போராட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

ரௌடி கொலை மிரட்டல்: நடிகை ராதா போலீஸில் புகார்

Posted: 22 Aug 2016 01:26 PM PDT

புழல் சிறையில் இருக்கும் ரௌடி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பிரபல நடிகை ராதா, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.

தினமணி செய்தி எதிரொலி: கோலியனூர் வாலீஸ்வரன் கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

Posted: 22 Aug 2016 01:25 PM PDT

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தொடர் திருட்டை தடுக்கும் வகையில், கோயிலில் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

காகித ஆலை அபகரிப்பு வழக்கு: திமுக எம்எல்ஏ ஆஜர்

Posted: 22 Aug 2016 01:24 PM PDT

தனியார் காகித ஆலை அபகரிப்பு வழக்கில் சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் அன்பழகன் உள்பட இருவர் திருப்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர்.

சசிகலா புஷ்பா எம்.பி., குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 22 Aug 2016 01:23 PM PDT

முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா எம்.பி., அவரது கணவர், மகன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 பேரின் இடைநீக்கம்: இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

Posted: 22 Aug 2016 01:23 PM PDT

சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 திமுக உறுப்பினர்களின் இடைநீக்கத்துக்கு இடைக்கால தடை விதிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

Posted: 22 Aug 2016 01:22 PM PDT

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

துணை மருத்துவப் படிப்புகள்: 4,953 காலியிடங்களுக்கு இன்று தொடர்ந்து கலந்தாய்வு

Posted: 22 Aug 2016 01:22 PM PDT

பி.எஸ்ஸி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் உள்ள 4,953 காலியிடங்களில் மாணவர்களைச் சேர்க்க செவ்வாய்க்கிழமை (ஆக.23) தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.

3000 வகை நெற்றிப் பொட்டுக்களைச் சேகரித்து இளம்பெண் கின்னஸ் சாதனை

Posted: 22 Aug 2016 01:20 PM PDT

மூவாயிரம் வகை நெற்றிப் பொட்டுக்களைச் சேகரித்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த இளம்பெண் கின்னஸில் இடம் பிடித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சியில் கப்பல் விடும் போராட்டம்: 11 பேர் கைது

Posted: 22 Aug 2016 01:19 PM PDT

வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கப்பல் விடும் போராட்டம் நடத்திய 11 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

125 வழக்குரைஞர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை வாபஸ்: இந்திய பார் கவுன்சில் உத்தரவு

Posted: 22 Aug 2016 01:19 PM PDT

வழக்குரைஞர்கள் சட்டத்தில் உள்ள விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய அதிருப்தி வழக்குரைஞர்கள் 125 பேர் மீதான இடைநீக்க உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்று இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டம் நாளை தொடக்கம்

Posted: 22 Aug 2016 01:18 PM PDT

புதுச்சேரி சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், புதன்கிழமை (ஆக.24) துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

பெரிய ‘டிமாண்ட்’ இருக்குதே..!

Posted: 22 Aug 2016 01:08 PM PDT

ரியோ முடிந்தது; இலக்கு டோக்கியோ!

Posted: 22 Aug 2016 01:01 PM PDT

ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் பந்தயம் நேற்றோடு நிறைவு பெற்றிருக்கிறது. நாம் ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் மட்டுமே வென்று திரும்பியிருக்கிறோம்.

தேசம் காக்கும் தீரர்கள்!

Posted: 22 Aug 2016 12:29 PM PDT

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல் துறை பல்வேறு உத்திகளை கையாள்கிறது. சட்ட விரோதமாகக் கூடும் கலகக்காரர்களை எவ்வாறு கட்டுப்படுத்தவது? எந்த அளவு காவல் துறை எதிர் பலம் உபயோகிக்கலாம் என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.

பெற்றோர் போற்றுவோம்

Posted: 22 Aug 2016 12:27 PM PDT

எத்தனையோ உறவுகள் இருந்தாலும் அன்னை என்ற உறவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தன் குழந்தையின் ஒவ்வொரு உணர்வுடனும் ஒன்றி விடுபவள் தாய். தான் பசியுடன் பட்டினி கிடந்தாலும் தன் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது உணவளித்து உவகை கொள்வாள்.

தீயணைப்புத் துறைக்கு 15 புதிய நீர்த்தாங்கி வண்டிகள்: முதல்வர் ஜெயலலிதா

Posted: 22 Aug 2016 12:25 PM PDT

தீயணைப்புத் துறைக்கு புதிதாக 15 நீர்த்தாங்கி வண்டிகள் வாங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பேரவை விதிகளைப் பின்பற்றுவதில் அனைவருக்கும் முதல்வர் முன்னுதாரணம்

Posted: 22 Aug 2016 12:24 PM PDT

சட்டப் பேரவை விதிகளைப் பின்பற்றுவதில், முதல்வர் ஜெயலலிதா அனைவருக்கும் உதாரணமாகத் திகழ்வதாக பேரவைத் தலைவர் பி.தனபால் புகழாரம் சூட்டினார்.

இடைநீக்க உத்தரவு மறுபரிசீலனை இல்லை: பேரவைத் தலைவர் மீண்டும் திட்டவட்டம்

Posted: 22 Aug 2016 12:23 PM PDT

திமுக உறுப்பினர்கள் மீதான இடைநீக்க உத்தரவை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று பேரவைத் தலைவர் ப.தனபால் மீண்டும் திóட்டவட்டமாகக் கூறினார்.

பேரவையில் தனியாக பேசத் துணிவிருக்கிறதா?கருணாநிதிக்கு முதல்வர் கேள்வி

Posted: 22 Aug 2016 12:20 PM PDT

பேரவைக்கு தனியாக வந்து பேசும் துணிச்சல் என்றைக்காவது திமுக தலைவருக்கு இருந்ததுண்டா என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

"கை தூக்கி விடும் ஆட்சியே தொடர மக்கள் விருப்பம்'

Posted: 22 Aug 2016 12:19 PM PDT

கை தூக்கி விடும் ஆட்சியே தொடர வேண்டுமென மக்கள் விரும்புவதாக முதல்வர் ஜெயலலிதா பேசினார். சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, திங்கள்கிழமை அவர் அளித்த பதிலுரை:

முதல்வர் ஒரு மணி நேரம் பதிலுரை

Posted: 22 Aug 2016 12:19 PM PDT

தலைமைச் செயலகத்தில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு மணி நேரம் 5 நிமிஷங்கள் பதிலளித்து உரையாற்றினார். மேலும், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மேஜையைத் தட்டி முதல்வருக்கு வரவேற்பு

Posted: 22 Aug 2016 12:19 PM PDT

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்ற பேரவைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேஜையைத் தட்டி அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

"5 ஆண்டுகளில் குற்ற வழக்குகள் குறைவு'

Posted: 22 Aug 2016 12:18 PM PDT

தமிழகத்தில் ஐந்தாண்டுகளில் குற்ற வழக்குகள் குறைந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா பேசினார். சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:

பச்சை புடவையில் அதிமுக பெண் எம்.எல்.ஏ.க்கள்

Posted: 22 Aug 2016 12:18 PM PDT

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை, காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றதையொட்டி, அதிமுக பெண் உறுப்பினர் அனைவரும் ஒரே மாதிரியாக பச்சை நிறத்தில் புடவை அணிந்து பேரவைக்கு வந்திருந்தனர்.

சாலை விபத்து: கடந்த ஓராண்டில் 15,642 பேர் உயிரிழப்பு

Posted: 22 Aug 2016 12:17 PM PDT

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட 69 ஆயிரத்து 59 சாலை விபத்துகளில் சிக்கி 15 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வாயில் கறுப்பு துணி கட்டி வந்த திமுக எம்எல்ஏ

Posted: 22 Aug 2016 12:16 PM PDT

திமுக எம்.எல்.ஏ.க்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு வந்தார்.

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மரணம்

Posted: 22 Aug 2016 12:15 PM PDT

பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன், திங்கள்கிழமை காலமானார். அவரது வயது 92.

39 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: இராக் அரசுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

Posted: 22 Aug 2016 12:15 PM PDT

இராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கித் தவித்து வரும் 39 இந்தியர்களை மீட்க உதவுமாறு அந்நாட்டு அரசுக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பஞ்சாப், அஸ்ஸாமில் புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

Posted: 22 Aug 2016 12:14 PM PDT

பஞ்சாப், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் புதிய ஆளுநர்களாக முறையே வி.பி.சிங் பத்னோரும், பன்வாரிலால் புரோஹித்தும் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு முழு உதவி: பிரதமர் உறுதி

Posted: 22 Aug 2016 12:13 PM PDT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழுமையான உதவிகளை வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு: வீரபத்ர சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகையை இறுதிசெய்தது சிபிஐ

Posted: 22 Aug 2016 12:12 PM PDT

ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை இறுதிசெய்துள்ளது. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.10 கோடி சொத்துகள் குவிக்கப்பட்டதையும் கண்டறிந்துள்ளது.

ஒடிஸா அரச குடும்ப முன்னாள் மேலாளர் தற்கொலை: விசாரணைக்கு நவீன் பட்நாயக் உத்தரவு

Posted: 22 Aug 2016 12:11 PM PDT

ஒடிஸா பரலாகேமுண்டி அரச குடும்பத்தின் முன்னாள் மேலாளர் அனங்க மஞ்சரி பாத்ரா தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துமாறு மாநில குற்றப் பிரிவு காவல்துறைக்கு முதல்வர் நவீன் பட்நாயக் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு: முகாந்திரத்தை மனுதாரர் நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 22 Aug 2016 12:11 PM PDT

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இருப்பதை மனுதாரர் நிரூபிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநங்கைகள் இடஒதுக்கீடு மசோதா: மறு ஆய்வு செய்ய வலியுறுத்தல்

Posted: 22 Aug 2016 12:10 PM PDT

திருநங்கைகள் இடஒதுக்கீடு மசோதா 2016-ஐ மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வரும் பல தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் மோடி

Posted: 22 Aug 2016 12:09 PM PDT

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்னர் கால அரண்மனையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

ஜிஎஸ்டி சட்டம் மூலம் உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரிக்கும்: பிரணாப்

Posted: 22 Aug 2016 12:08 PM PDT

சரக்கு, சேவை வரி விதிப்புச் (ஜிஎஸ்டி) சட்டம் மூலம் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் மேலும் 2 சதவீதம் அதிகரிக்கும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.

கடவுள் நம்பிக்கையாளர்களிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரிக்க சதி

Posted: 22 Aug 2016 12:08 PM PDT

கடவுள் நம்பிக்கையாளர்களிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரிக்க சதி நடப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு: குஜராத் உயர் நீதிமன்றத்தின் தடை நீடிக்கும்

Posted: 22 Aug 2016 12:07 PM PDT

இதர பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் அரசின் அவசரச் சட்டத்துக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

12 ஆண்டுகளுக்குப் பின் காஷ்மீர் பாதுகாப்பில் பிஎஸ்எஃப் வீரர்கள்

Posted: 22 Aug 2016 12:06 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத ஒழிப்புப் பணியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் அங்கீகாரம்: இனி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலனை

Posted: 22 Aug 2016 12:06 PM PDT

அரசியல் கட்சிகளுக்கு மாநில மற்றும் தேசிய அங்கீகாரங்கள் அளிப்பது தொடர்பான பரிசீலனைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்கிறார் ஜேட்லி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 22 Aug 2016 12:05 PM PDT

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அரசியல் செய்கிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்!

Posted: 22 Aug 2016 12:04 PM PDT

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் 17 நாள்கள் நடைபெற்ற 31-ஆவது ஒலிம்பிக் போட்டி திங்கள்கிழமை நிறைவடைந்தது.

தீபா கர்மாகருக்கு உற்சாக வரவேற்பு

Posted: 22 Aug 2016 12:03 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று நாடு திரும்பிய இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 22 Aug 2016 12:02 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய இந்திய வீரர்/வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்திருப்பேன்: ஓ.பி.ஜெய்ஷா வேதனை

Posted: 22 Aug 2016 12:02 PM PDT

ரியோ ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் பங்கேற்றபோது இந்திய அதிகாரிகள் தண்ணீர் வழங்கவில்லை. இதனால் உயிரிழக்கும் நிலைக்கு சென்றேன் என்று இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

தெரிந்தேதான் ஊக்கமருந்தை பயன்படுத்தியிருக்கிறார் நர்சிங் யாதவ்: சர்வதேச நடுவர் மன்றம்

Posted: 22 Aug 2016 12:01 PM PDT

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிந்தேதான் ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளார். அதை மாத்திரை வடிவில் அவர் உட்கொண்டுள்ளார் என விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முதலிடத்தை இழந்தது இந்தியா

Posted: 22 Aug 2016 12:00 PM PDT

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.

வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு பிரமாண்ட வரவேற்பு

Posted: 22 Aug 2016 12:00 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு ஹைதராபாதில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

Posted: 22 Aug 2016 11:58 AM PDT

போட்டியில் மொத்தம் 207 நாடுகள் பங்கேற்றன. 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 11,544 வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டனர். 87 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தன. 59 நாடுகள் தங்கப் பதக்கம் வென்றன.

திருமண நிகழ்ச்சியில் தற்கொலை தாக்குதல் நிகழ்த்திய சிறுவன் யார்?துருக்கி போலீஸார் தீவிர விசாரணை

Posted: 22 Aug 2016 11:57 AM PDT

துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்திய சிறுவனை அடையாளம் காண, அந்த நாட்டுப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வட கொரிய அணு ஆயுத மிரட்டலையும் மீறி அமெரிக்கா - தென் கொரியா ராணுவப் பயிற்சி

Posted: 22 Aug 2016 11:56 AM PDT

வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலையும் மீறி அமெரிக்காவும், தென் கொரியாவும் தனது வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியை திங்கள்கிழமை தொடங்கின.

தேசிய தின உரையின்போது சிங்கப்பூர் பிரதமர் மயக்கம்

Posted: 22 Aug 2016 11:56 AM PDT

தேசிய தின உரையாற்றிக் கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குக்கு (64) திடீர் மயக்கம் ஏற்பட்டது.

உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம்! சீனா சாதனை

Posted: 22 Aug 2016 11:55 AM PDT

உலகின் மிக உயரமான மற்றும் நீளமான கண்ணாடிப் பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

ராணிப்பேட்டை, பிஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை தேவேந்திர ஈஸ்வரர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாணவர் சேர்க்கை இல்லை: காமராஜர்திறந்த பள்ளி தாற்காலிகமாக மூடல்

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் தான் முன்னாள் முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தாற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வி அதிகாரி விளக்கமளித்தார்.

மின்னூரில் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

ஆம்பூர் அருகே மின்னூரில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்களின் பயன்பாட்டுக்கு வராதநிலையில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது.

விளை நிலங்களில் வளர்க்க இலவச மரக் கன்றுகள் தயார்...!

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளின் நிலங்களில் மரம் வளர்க்க உயர் ரக மரக் கன்றுகளை இலவசமாகப் பெற்று பயனடையுமாறு வனத் துறையினர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகித்தும், ஒலிப் பெருக்கி மூலமும்  பிரசாரம் செய்து வருகின்றனர்.

சோமாலிய கார் குண்டு வெடிப்புகள்: பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

சோமாலியாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரட்டைக் கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது.

தொழிற்சாலை தொடங்க முடியாமல் தவிக்கும் சிட்கோ தொழில்முனைவோர்  

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில், செப்டம்பர் இறுதிக்குள் உற்பத்தியை தொடங்காத தொழில்முனைவோருக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம்  வீதம் அபராதம் விதிக்கப்படும் என சிட்கோ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி அனுமதி கிடைக்காததால், தொழில் தொடங்க முடியாமல் தொழில் முனைவோர் அவதிப்படுகின்றனர்.

மணல் குவாரியை மூட வலியுறுத்தல்: பாலாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

ஆம்பூர் அருகே வீராங்குப்பம் பாலாற்றில் செயல்படும் மணல் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த குடும்பத்தினர்

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

பணிக்கொடை பலன்கள் வழங்கப்படாததால் தீக்குளிக்க மனைவி, மகனுடன் ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை ஊழியர் ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து வந்த மண்ணெண்ணெய் கேனை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

லீக் கால்பந்து போட்டிகள் ராணிப்பேட்டையில் தொடக்கம்

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

லீக் கால்பந்து போட்டிகள் பெல் ஊரக விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இளைஞர் சாவு: அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம்

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குடல் இறக்க அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாகக் கூறி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறைதீர் முகாமில் 703 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

வேலூரில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 703 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மதுக் கடையை அகற்றக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

ஆம்பூர் ஓ.வி.சாலை பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக்கோரி  நகர பாஜக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலவச மருத்துவ முகாமில் 350 பேருக்கு சிகிச்சை

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

குடியாத்தம் ஒன்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.கிருஷ்ணாபுரம் ஜமாத்தார்கள் சார்பில் சித்தூர்கேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 350 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 33 பேர் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரயிலில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி: ராணுவ வீரர் கைது

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக ராணுவ வீரரை ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

அடையாளம் தெரியாத ஆண் சடலம்  மீட்பு

Posted: 22 Aug 2016 11:54 AM PDT

ரத்தினகிரி அருகே விவசாய நிலத்தில் இருந்து அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் சாவு: சடலத்துடன் சாலை மறியல்

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

வாலாஜாபேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் இறந்தார். இதையடுத்து ஓட்டுநரின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சியில் கப்பல் விடும் போராட்டம்: 11 பேர் கைது

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கப்பல் விடும் போராட்டம் நடத்திய 11 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

இளம் பெண் கடத்தி கொல்லப்பட்ட வழக்கு: இருவருக்கு தூக்கு; ஒருவருக்கு ஆயுள் சிறை

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

தில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இரண்டு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனையும் விதித்து தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

"எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம்'

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது பெறும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க உத்தரவிட கோரிய ஓ.பி. சர்மா மனு மீது இன்று விசாரணை

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி பாஜக உறுப்பினர் ஓ.பி. சர்மா தாக்கல் செய்த மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 23) விசாரணை நடத்தவுள்ளது.

விமானப்படையின் வான்வழி அருங்காட்சியகம்: தில்லியில் அமைக்க பாதுகாப்புத் துறை ஒப்புதல்

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

தில்லியில் விமானப் படையின் சார்பில் வான்வழி அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்திய விமானப் படை முன்மொழிந்துள்ள இத்திட்டம் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் செயல்வடிவம் பெறும் என்று பாதுகாப்புத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

தில்லிக்கு வந்த பெண் பயணியிடம் ரூ.64 லட்சம் தங்கக் கட்டிகள் மீட்பு

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

துபையில் இருந்து தில்லிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.64 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை விமான நுண்ணறிவுப் பிரிவினர் மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் சிக்கன்குனியா பாதிப்பு திடீர் அதிகரிப்பு

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

தில்லியில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு தில்லியில் மாறிவரும் பருவ நிலை மாற்றமே காரணம் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையில் ரகசியம் காக்கும் நடைமுறை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு நியமனம்

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

வாக்கு எண்ணிக்கையில் ரகசியம் காப்பதற்கான கருவியை (டோட்டலைஸர்) நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவை பிரதமர் அலுவலகம் அமைத்துள்ளது.

சீன மாஞ்சா நூல் தடை விவகாரம்: தில்லி சட்டப்பேரவையில் காரசார விவாதம்

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

சீன மாஞ்சா நூல் தடை விவகாரம் தொடர்பாக தில்லி சட்டப் பேரவையில் திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

தலைவர்கள் வாழ்த்து

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

125 வழக்குரைஞர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை வாபஸ்: இந்திய பார் கவுன்சில் உத்தரவு

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

வழக்குரைஞர்கள் சட்டத்தில் உள்ள விதிகளில் மேற்கொள்ளப்பட்ட  திருத்தங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய அதிருப்தி வழக்குரைஞர்கள் 125 பேர் மீதான இடைநீக்க உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்று இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) உத்தரவிட்டுள்ளது.

வசுந்தரா என்கிளேவ் கணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

கிழக்கு தில்லி வசுந்தரா என்கிளேவ்வில் உள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

13 சுங்கச் சாவடிகளில் உயர்ரக தொழில்நுட்ப கருவிகள் பொருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

தில்லி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 13 சுங்கக் கட்டண சாவடிகளில் மின்காந்த அலைகளை கொண்ட உயர் ரக தொழில்நுட்பக் கருவிகள் (ஆர்எஃப்ஐடி) பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஎச்.டி. மாணவி பலாத்கார சம்பவம் எதிரொலி: மாணவர்கள், ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க ஜே.என்.யூ. நிர்வாகம் அறிவுறுத்தல்

Posted: 22 Aug 2016 11:53 AM PDT

முனைவர் ஆய்வுப்பட்ட (பிஎச்.டி.) முதலாமாண்டு மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் இதுபோன்ற விஷயங்களில் விழிப்புடன் இருக்குமாறு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தலில் முதல் முறையாக "நோட்டா' அறிமுகம்

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் முதல் முறையாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் "நோட்டா' வாக்குப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த முடிவு அண்மையில் நடைபெற்ற அந்தப் பல்கலைக்கழகத்தின் தேர்தல் பரிந்துரைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 

பாலாற்றில் தடுப்பணை விவகாரம்: ஆந்திர அரசைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

வடகால் பகுதியை தனி ஊராட்சியாக்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட வடகால் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஆத்தூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சுந்தரி சுப்பிரமணி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

பிளஸ் 2 மாணவர்களுக்கான தடகளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

"தூய்மை இந்தியா' விழிப்புணர்வு குறும்படப் போட்டிகள்

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குறும்படப் போட்டிகளை இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் நடத்துகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிராம தத்தெடுப்பு விழா

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டில் கிராம தத்தெடுப்பு விழா, மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

33 ஊராட்சிகள் சுகாதாரமானதாக அறிவிப்பு

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 33 ஊராட்சிகள் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கமில்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கார் மோதியதில் மாணவி சாவு: உறவினர்கள் சாலை மறியல்

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க முயன்ற மாணவிகள் மீது கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் காயமடைந்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ அளவீட்டு முகாம்

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் காஞ்சிபுரம் ஒன்றிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ அளவீட்டு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

உலக கொசு ஒழிப்பு தின பேரணி

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

காஞ்சிபுரத்தை அடுத்த செம்பரம்பாக்கத்தில், சோழன் கல்வியியல் கல்லூரியின் சார்பில் உலக கொசு ஒழிப்பு தின பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு நகர வங்கியின் பேரவைக் கூட்டம்

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

பெரியகாஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் சிறப்பு பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

பள்ளி மாணவிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டி

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

செங்கல்பட்டு அருகே உள்ள வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 22 Aug 2016 11:52 AM PDT

காஞ்சிபுரம் மீனாட்சி அம்மாள் தொழில் நுட்பக் கல்லூரியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™