Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும் நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள்

Posted: 22 Aug 2016 11:23 AM PDT

தமிழையும் தமிழ் நாட்டுக் கலைகளையும் அடிக்கடி நினைவு கூரும் அமெரிக்கத் தமிழர்கள், பறை -வில்லுப்பாட்டு, கும்மியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், காவடியாட்டம், கோலாட்டம்-பரதம்-வில்லுப்பாட்டு-கவியரங்கம் என பல கலைகளை தமிழ் விழாவில் அரங்கேற்றினர். அமெரிக்க தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒன்று கூடி விழாவை சிறப்பாக்கினர். திரு. கேரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர், கனடா;சோனதன் ரிப்லே;அமெரிக்க அதிபர் தேர்தலில் சனநாயகக் கட்சி சார்பாக பேராய உறுப்பினராக போட்டியிடும் முதல் அமெரிக்கத் தமிழரான திரு. ...

பெண்கள் மது அருந்தினால் என்ன தப்பிருக்கிறது?

Posted: 22 Aug 2016 11:11 AM PDT

இது குடிமகளின் கருத்துரை. ஆண்களுக்குப் பயந்து (அரசு) மதுக்கடைகளுக்கு செல்லமுடியாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி பயந்துகொண்டே இருப்பது! ஆண்-பெண் சமம்  என்பது விவாதங்களில் மட்டும் இருந்தால் போதுமா? இதை நடைமுறைப்படுத்தி நிஜவாழ்வில் சாத்தியமக்க வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு - இதோ ஒரு உதாரணம், பெண்களின் குடி/மதுப்பழக்கம் – ஆணுக்குப் பெண் நிகரென்று நிரூபிக்க! ஆண்கள் மதுவருந்துவதை ஏற்கும் இச்சமுதாயம் பெண்களின் குடிப்பழக்கத்தை ஏன் இழிவாகச் சித்தரிக்கின்றது? ...

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்

Posted: 22 Aug 2016 09:00 AM PDT

- சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவர் சிங்கப்பூரின் நீண்ட நாள் அதிபராக பதவி வகித்த பெருமை உடையவர். 92 வயதான நாதன் கடந்த ஜூலை 31 ம் தேதி பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், அதிபர் டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் பிரதமர் ...

எனது அம்மா

Posted: 22 Aug 2016 08:35 AM PDT

சுக பிரசவத்தில் பெற்றெடுத்தாள்… பெயருதான் சுக பிரசவம்…. அவளுக்கு வலி மிகுந்த பிரசவம்தான்,,,,, வலி முடிந்தது.. வறுமை தொடர்ந்தது…. உதிரத்தில் உருக்குடுத்தாள் என்னை வறுமையில் உதிராமல் பார்த்து கொண்டாள்….   நெய் சோறு ஊட்டியது இல்லை ஆனாலும் தித்திக்கும்.. அவள் வியர்வை பட்டிருக்கும்…. சோள சோறு அவளுக்கு அதனால் நெற்சோறு எனக்கு…அவளுக்கு ஆசை புதுசேலை அல்லஎனக்கு புது துணிகளே…இலவச அரிசி…பொங்கல் சேலைகள்..அடுப்பெரிக்க விறகு…நாலைந்து பாத்திரங்கள்இதுவே அவளுக்கு போதுமானாதாக இருந்தது….  வறுமை ...

மலர்கள் ராஜம் கிருஷ்ணண்

Posted: 22 Aug 2016 08:29 AM PDT

ராஜம் கிருஷ்ணண் எழுதிய மலர்கள் நாவலை மின்னூலாக்க எனக்கு தெரிந்தவரை முயன்றிருக்கிறேன்

தரவிறக்கம் செய்ய

http://www.mediafire.com/download/ou9l2o0nm45fuw3/malargal_rajam_krishnan.பிடிஎ

ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்

Posted: 22 Aug 2016 08:29 AM PDT

- ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்னர் கால அரண்மனையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் திங்கள் கிழமை திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மலை உச்சியில் ஸ்டோர் பேலஸ் என்ற அரண்மனையை ஆப்கன் மன்னர் அமானுல்லா கான் கடந்த 1920ஆம் ஆண்டுகளில் கட்டினார். மிகவும் சிதிலமடைந்திருந்த அந்த அரண்மனை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அந்த அரண்மனையை பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து காணொலி முறையில் திங்கள்கிழமை ...

கிடைக்குமா சுதந்திரம்?

Posted: 22 Aug 2016 08:25 AM PDT

கிடைக்குமா சுதந்திரம்? கல்வி இலவசமாய் கற்றிடச் சுதந்திரம் காற்றை மாசின்றி சுவாசிக்கச் சுதந்திரம் கிழடுகள் வாரிசோடு வாழ்ந்திடச் சுதந்திரம் கீழ்த்தட்டு மனிதனுக்கும் சமநீதிச் சுதந்திரம் குமரிப்பெண் குதூகலமாய் சுற்றிவரச் சுதந்திரம் கூடப்பிறந்தவளைக் கொண்டாடச் சுதந்திரம் கூடி மகிழ்ந்தவளைக் கூப்பிடும் சுதந்திரம் கெடுபிடி ஏதுமின்றி நீதி கேட்கச் சுதந்திரம் கேள்விகள் பல கேட்டு தேர்வில் வெல்லச் சுதந்திரம் கையூட்டு பெறுவோரை காட்டிக் கொடுக்கச் சுதந்திரம் கொலைகாரனை ...

ஹைக்கூ கவிதைகள் - நாகசுந்தரம்

Posted: 22 Aug 2016 08:14 AM PDT

அன்பு உறவுகளே ! நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திக்கிறேன். பலவிதமான புதிய பொறுப்புகள், இணையதள சேவை தடுப்பு மற்றும் அலுவலக வேலை பளு காரணமாக பதிவுகள் இட இயலாமைக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். இனி அடிக்கடி வருவேன். முன்பெல்லாம் நீண்ட கவிதைகள் எழுதி வந்தேன். தற்போது ஹைகூக்கள் எழுத் தலைப்பட்டுளேன். குற்றம் பொறுத்து குணம் கொள்க. ஹைக்கூ கவிதைகள் – ஆக்கம் : நாகசுந்தரம் தலைப்பு : வயலும் வாழ்வும் வயலுக்கும் வாழ்வு வந்தது சதுர அடி 1000 ரூபாயாம் தலைப்பு : புதிய ரயில் வயலை அழித்த ...

கட்டுக்கொடி மாயஜல மருத்துவம்

Posted: 22 Aug 2016 07:52 AM PDT

கட்டுக் கொடி (Coceolus hirsustus Diels) குழந்தை அழகாக, ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோர்களுக்கும் உண்டு... அவற்றிற்கான சிறந்த மருந்து கட்டுகொடியின் இலை சாற்றை எடுத்து சுத்தமான நீர் உள்ள பாத்திரத்திலிட்டு அவற்றில் சிறிதளவு குங்குமப்பூ நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு கலந்து கிளறி வைத்து விட்டால் அல்வா போல் கெட்டியாகிவிடும் அவற்றை காலை மாலை உண்டுவந்தால் சிவப்பாகவும் ஆரோகியமாகவும் இருக்கும் குறிப்பாக புத்தி கூர்மை யிருக்கும் இந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ...

சங்கு சுப்ரமணியம்

Posted: 22 Aug 2016 07:50 AM PDT

- சுதந்திரச்சங்கு" என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன. அம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், ...

வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்)

Posted: 22 Aug 2016 07:46 AM PDT

- வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின் வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்) - பிறருடைத் துன்பம் தனதென எண்ணும் பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ; உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான் உண்மை வைஷ்ணவன் அவனாகும் ; - உறவென மனிதர்கள் உலகுள யாரையும் வணங்குவன் உடல் மனம் சொல் இவற்றால் அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன் அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்) - விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை விளங்கிட ஆசைகள் விட்டவனாய் ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால் - உரைப்பதிற் ...

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Posted: 22 Aug 2016 07:39 AM PDT

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..) உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் ...

வர்மம் பற்றிய விவரங்கள்

Posted: 22 Aug 2016 07:28 AM PDT

வர்மம் - ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று --------------------------------------------------------------------------------------------------- இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழீழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது, இக்கலை சித்தமருத்துவத்தை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் ...

வைட்ரைசிடி WiTricity என்ன தெரியுமா?

Posted: 22 Aug 2016 07:18 AM PDT

WiTricity – Wireless Electricity -Goodbye to wires இந்த கம்பியில்லா மின்சாரம் என்பது கம்பி இல்லாமல் மின்சாரத்தை அனுப்பும் முறை (Wireless power , wireless energy transmission )ஆகும். அதாவது வைபை இணையத்தில் பாவிக்கப்படுவது போல்,மின்சாரத்தை அருகில் அல்லது வெகு தூரத்தில் உள்ள இடத்துக்கு,மின் அலைகள் மூலம் அனுப்பும் தொழில் நுட்பம் ஆகும்.  Dave Gerding என்பவர்  2005 ல் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பம், பின்னர் Prof. Marin Soljacic (Massachusetts Institute of Technology (MIT)  இனால் நிரூபிக்கப்பட்டது. ...

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

Posted: 22 Aug 2016 06:53 AM PDT

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். * போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே * பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா * சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது. * எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல * தன் காயம் காக்க வெங்காயம் போதும் * வாழை வாழ வைக்கும் * அவசர சோறு ஆபத்து * ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும் * இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு * ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை *இருமலை போக்கும் வெந்தயக் கீரை * உண்ணா நோன்பு ...

சீதாப்பழம்!

Posted: 22 Aug 2016 06:40 AM PDT

  அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஏனோ இந்தப் பழமொழி, பெரும்பாலும் பழங்களுக்குப் பொருந்தாது போலும். அதனால்தான், பலாப்பழம், சீதாப்பழம் இரண்டையும் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கின்றனர்.  ''அனைவரும் வெறுத்து ஒதுக்கும் சீதாப்பழத்தில், அபார சுவையும் அருமையான சத்தும் இருக்கிறது'' என்கிறார் திண்டுக்கல் சித்த மருத்துவர் ஆர்.எம்.அழகர்சாமி.   '' 'அனோனோ டுமாஸ்ஸா' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், ...

படமொழி சொல்லும் பழமொழி என்ன?

Posted: 22 Aug 2016 06:18 AM PDTநன்றி - கீதா அக்கா, அமெரிக்கா.

நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் ...

Posted: 22 Aug 2016 06:13 AM PDT

நல்லவனுக்கு மட்டுமே இங்கே ஆயிரம் கேள்விகள் உண்டு. கெட்டவனுக்கு 'அவன் கெட்டவன்', அவ்வளவே! - - ஆர் ஜே யோகேஷ் - ------------------------------------- கரன்ட் இல்லாத நேரத்த தவிர மற்ற நேரங்களில் தடையில்லா மின்சாரம் தரும் அரசுக்கு நன்றி!! - - கிராமத்து கிருஷ்ணா - --------------------------------------- பக்கத்துல ஒருத்தர் சுகர் மாத்திரை வாங்கறாரு. பாக்கி 5 ரூபாய்க்கு சாக்லெட் குடுக்கறான்... ‪#‎ அடேய் வியாபாரிகளா‬!‬ - - நாஸிர் மொஹமத் - ---------------------------------------

பளீர் டீப்ஸ் – மங்கையர் மலர்

Posted: 22 Aug 2016 06:12 AM PDT

* பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, பாலில் வேகவைத்து, சிறிது சிறிதாகப் பாலைச் சேர்த்து சர்க்கரை போட்டால் ருசி அதிகமாகும். – * எப்பொழுது அடை செய்தாலும், பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்தாலும் எந்தக் கெடுதலும் வராது. வாயுவிற்கு ஏற்றது. – * பயத்தம் பருப்பு லட்டு செய்யும் போது, 100 கிராம் குலோப்ஜாமுன் மிக்ஸ் சேர்த்துச் செய்தால் சுவையும்கூடும். – – ப்ரியா கிஷோர், சென்னை – ———————————————-

சிறந்த பொண்டாட்டி...!!

Posted: 22 Aug 2016 06:01 AM PDT

எதுடா அந்த நல்ல மருந்து??? - பாரபட்சம் இல்லாம எல்லா பேஷன்ட்டும் கேக்குறது 'ந‌ல்ல மருந்து' குடுங்கன்னு! அது எப்படி இருக்கும், எங்க கிடைக்கும்னு தெரிஞ்சிட்டா போதும்... எல்லோரையும் சரி பண்ணிடலாம்! - - சரவ் யுவர்ஸ் - ------------------------------------------ ஒபாமாவோட மகள் ரெஸ்டாரன்ட்டில் வேலை பார்ப்பது அரசியல்வாதிகளுக்கான பாடம் இல்லை மக்களே, நமக்கான பாடம் அது! நம்மில் எத்தனை பேர் கெளரவம் பார்த்து எத்தனை வருமான வாய்ப்புகளை இழந்திருப்போம்? - - அனந்த பிரகாஷ் - ----------------------------------------------- தன் ...

பி.வி.சிந்துவை பாராட்டும் பட்நாயக்கின் மணல் ஓவியம்

Posted: 22 Aug 2016 05:18 AM PDT

- ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை பாராட்டும்விதமாக ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞரான சுதர்ஸன் பட்நாயக் மணல் ஓவியத்தை செதுக்கியுள்ளார். - ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். அவரையும், அவரது பயிற்சியாளரான கோபிசந்தையும் பாராட்டும் விதத்தில் ஒடிஸா மாநில கடற்கரையில் மணல் சிற்பத்தை பட்நாயக் சனிக்கிழமை உருவாக்கியுள்ளார். - இதற்காக அவர் 4 டன் அளவிலான மணலைப் பயன் படுத்தியுள்ளார். - இதுகுறித்து பட்நாயக் ...

இவர் போலிச்சாமியார் இல்லை!

Posted: 22 Aug 2016 04:41 AM PDT


-

விரும்பத் தாகாத முறையில் நடந்து கொள்ளும்
ஆண்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு
ஆலோசனை தரும் நல்ல சாமியார்...!!
-
காணொளியை - குறும்படத்தை பாருங்கள்
--

சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Posted: 22 Aug 2016 04:17 AM PDT

- சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கலாம் என்று நினைப்பதே சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... - - ரகுவரன் நாகநாதன் - ------------------------------------------------------------------------ - சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் ஓர் ஒற்றுமை... சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்! - -------------------------------------------- - சிம்பு, பிரபுதேவா, ஆர்யா, விக்னேஷ் சிவன் எல்லாரும் தனித்தனியா படிச்சாலும் மொத்தமா சேந்து படிச்சாலும் அர்த்தம் தரக் கூடிய ...

நாடக வேஷம் இன்று மட்டும்...!

Posted: 22 Aug 2016 04:04 AM PDT


கையில் பணம் தங்குவதில்லை
ரொம்பவும் சந்தோஷஃபட்டான்
வட்டிக் கடைக்காரன்
-
--------------------------
-
நாளைய சோகத்துக்கு என்ன வழி
ராஜா ராணியின் கண்ணீர் கவலை
நாடக வேஷம் இன்று மட்டும்!

-
-----------------------------
-
கண்கொள்ளாக் காட்சியை
மறைவிலிருந்து ரசித்தான்
சூரியன் மறைவு!
-
------------------------------

அவனது பொறுப்பாம் . ​

Posted: 22 Aug 2016 03:44 AM PDT

அவனது பொறுப்பாம் .

​ரசாயன உரத்தில்
காய்கறிகள் பயிரிட்டு
கோடிகள் சம்பாதித்த வியாபாரி
கட்டிய வீட்டின், தோட்டத்தில்
வெட்டிய காய்கறிகள் யாவும்
கொட்டிய இயற்கை உரத்தால் .
அவன் குடும்ப நலன்
அவனது பொறுப்பாம் .

ரமணியன்

இன்று சென்னைக்கு 378 வது பிறந்தநாள்

Posted: 22 Aug 2016 03:23 AM PDT

- சென்னை : இன்று தலைநகர் சென்னையின் 378வது பிறந்த தினம். இன்று சென்னை என அழைக்கப்படும் மதராஸ் நகரம் 1639 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் தேதி உருவாக்கப்பட்டது. பின்னர் அது மெட்ராஸ் என மாற்றப்பட்டு, தற்போது சென்னை என பெயர் மாற்றம் அடைந்துள்ளது. சென்னை உருவாக்கப்பட்ட தினம் 2004 ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக பல போட்டிகள், நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தின கொண்டாட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், சென்னை தின கொண்டாட்டங்கள் ...

அனைவருக்கும் வணக்கம் ....

Posted: 22 Aug 2016 03:17 AM PDT

வெகு நாள் கழித்து ஈகரையில் இணைகிறேன் .....
பழைய நண்பர்கள் அனைவரும் நலம் என்றே நம்புகிறேன்....

ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு

Posted: 22 Aug 2016 02:36 AM PDT

- ஆந்திராவில் பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். ஹைதராபாத்திலிருந்து காக்கிநாடா நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்து கம்மம் அருகே நாயக்கன்கூடம் எனும் இடத்தில் மேம் பாலத்தின் மீது சென்ற போது நிலைதடுமாறி கீழே இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 11 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த ...

கமல்ஹாசனுக்கு 'செவாலியே' விருது: பிரான்ஸ் அரசு அறிவிப்பு

Posted: 22 Aug 2016 02:33 AM PDT

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவித்திருக்கிறது பிரான்ஸ் அரசு. கலை - இலக்கியத் துறையில் தொடர் பங்காற்றி வருபவர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் செவாலியே விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். இதில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் முதல் இந்திய நடிகராக சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்தாண்டு செவாலியே விருதை கமல்ஹாசனுக்கு அறிவித்திருக்கிறது பிரான்ஸ் அரசு. ...

துணிவு இருந்தால் கருணாநிதி விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே? ஜெயலலிதா கேள்வி

Posted: 22 Aug 2016 02:01 AM PDT

- சென்னை : துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும், விவாதத்தில் பங்கேற்று பேசியிருக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். திமுக உறுப்பினர்கள் ஒரு வார காலத்துக்கு அவைக்கு வரக் கூடாது என்று இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுகவினர் நாள் தோறும் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வழியாக நாட்டு மக்கள் நன்கு அறிவர். திமுக ஆட்சியை காட்டிலும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ...

சின்னஞ்சிறு கிளியே…-மகளிர் கட்டுரை

Posted: 22 Aug 2016 12:31 AM PDT

- தன் பதினொரு வயதுப் பெண்ணின் உடல் மாற்றங்கள் குறித்த சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறுவதற்காக வந்திருந்தாள் விஜி. என் பெண்ணுக்குப் பத்து வயது முடிந்து இப்பதான் பதினொண்ணு ஆரம்பமாகிறது டாக்டர். அதற்குள் மார்புப் பக்கம் லேசாக பெரிதாகிறது. கூச்சப்பட்டு கூன் போட ஆரம்பிக்கிறாள். சீக்கிரமே பெரியவளாகிடுவா போல இருக்கே. இந்த வயசிலேயேவா ப்யூபெர்ட்டி வந்துடும்? நான் பதிமூணு முடிஞ்ச பிறகுதான் பெரியவளானேன். என்னை கொள்ளலையே டாக்டர்? படபடவெனக் கேட்டாள். அவள் மட்டுமல்ல, நிறைய பெண்களுக்கு, ...

ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது?

Posted: 21 Aug 2016 11:59 PM PDT

Roller Coasters எனப்படும் உருளும் ராட்டினம் பற்றிக் தெரிந்திருப்பீர்கள். இது எப்படிச் செயல்படுகிறது? (காணொளியை தமிழிலும் காண முடியும்.) நாம் பள்ளியில் இயற்பியல்-பௌதீக பாடத்தில், நிலை ஆற்றல் (potential energy) , இயக்க ஆற்றல் (kinetic energy ) எனப் படித்திருப்போம். இதன் அடிப்படையிலும்,புவிஈர்ப்பு முறையிலும் இந்த பொழுதுபோக்கு விளையாட்டு செயல்படுகிறது.நிலை ஆற்றல்- potential energy -முறையில் மேலே உச்சிக்கும்,புவிஈர்ப்பு,இயக்க ஆற்றல்- kinetic energy மூலம் தொடர்ந்து முழுச் சுற்றையும் கொண்டு ...

செவாலியே விருது ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பு

Posted: 21 Aug 2016 10:45 PM PDT

- செவாலியே விருதை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். செவாலியே விருது பெற்றது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது: பிரான்ஸ் அரசு கலை இலக்கியத்துக்காக செவாலியே விருதை எனக்கு அளிக்க முன்வந்துள்ளது. பெருமிதத்துடன் நன்றியுடன் பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன். அந்த விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகர் சிவாஜிகணேசனையும், வட நாட்டு பாமரரும் அறியச் செய்த சத்யஜித்ரேயும் என் கரம் கூப்பி வணங்குகிறேன். இந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்த இந்தியாவில் ...

2 பதக்கங்களோடு ஒலிம்பிக்கை நிறைவு செய்தது இந்தியா

Posted: 21 Aug 2016 09:33 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியை ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களோடு நிறைவு செய்தது இந்தியா. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மல்யுத்தம், மாரத்தான் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கலந்து கொண்டனர். இந்த முறை அதிகமானோர் பதக்கம் வெல்வார்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதனால் கடந்த ஒலிம்பிக்கோடு (6 பதக்கம்) ஒப்பிடுகையில், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™