Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சமாதான்' திட்டம் அறிவிக்காததால் பதிவுத்துறைக்கு இழப்பு ரூ.7,000 கோடி!:அரசின் மெத்தனத்தால் மூன்று லட்சம் ஆவணங்கள் தேக்கம்

Posted: 21 Aug 2016 10:28 AM PDT

பத்திரப் பதிவுத் துறையில், 'சமாதான்' திட்டம் அறிவிக்கப்படாததால், அரசுக்கு, 7,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசின்மெத்தனத்தால், மூன்று லட்சத்திற்கு மேல் முறையீட்டு ஆவணங்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், பதிவுத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வீடு, மனை விற்பனையில் ஈடுபடுவோர், அது தொடர்பான ஆவணங்களை பதிவு செய்யும் போது, நடைமுறையில் உள்ள வழிகாட்டி மதிப்புகளை கடைபிடிக்க வேண்டும். பதிவுக்கு வரும் ஆவணங்களில் குறிப்பிடப்படும் மதிப்புகள், வழிகாட்டி மதிப்பு படியோ அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் போதோ பிரச்னை இல்லை.வழிகாட்டி ...

'வரதட்சணை கொடுமை வழக்கில் கணவரை இயந்திரத்தனமாக கைது செய்யக்கூடாது'

Posted: 21 Aug 2016 10:29 AM PDT

'வரதட்சணை கொடுமை வழக்குகளில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை, இயந்திரத் தனமாக கைது செய்யக்கூடாது' என, 2014ல், பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், மீண்டும் உறுதி செய்துள்ளது.

கடந்த, 2014ல், வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'குற்றச் சாட்டுக்கு ஆளாகும், கணவர், அவரது குடும்பத்தினரை, போலீசார், இயந்திரத் தனமாக, தேவையின்றி கைது செய்யக் கூடாது' என, உத்தரவிட்டது.
வரதட்சணை ஒழிப்பு சட்டம் தவறாக பயன் படுத்தப்படுவதாக கருத்து கூறிய சுப்ரீம் கோர்ட், குற்றம் சாட்டப்படும் கணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றது. ...

திறந்தவெளி அசிங்கமில்லா முதல் மாநிலமாகிறது கேரளா

Posted: 21 Aug 2016 10:30 AM PDT

திருவனந்தபுரம்: திறந்தவெளியில் அசிங்கம் செய்யாத, முதல் மாநிலமாகிறது கேரளா. அதன்படி, வரும் நவம்பர் மாதத்துக்குள், 941 கிராம பஞ்சாயத்துகளில், 1.90 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.

கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசின் முதல்வராக, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் உள்ளார். நாட்டில், 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற முதல்
மாநிலமாக திகழும் கேரளா, மற்றொரு பெருமையையும் பெற உள்ளது; திறந்தவெளியில் அசிங்கம் செய்யப்படாத, முதல் மாநிலமாகிறது.
இதற்காக துவங்கப்பட்ட, 'சுசித்வா மிஷன்' எனப்படும் துாய்மை இயக்கத்தின் செயல் இயக்குனர் வாசுகி ...

கொசு உற்பத்தி கூடமாக திகழும் ஜனாதிபதி மாளிகை வளாகம்

Posted: 21 Aug 2016 10:33 AM PDT

புதுடில்லி: தலைநகர் டில்லியில், ஜனாதிபதி மாளிகை வளாகத்தில், ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, டில்லி மாநகராட்சி கவுன்சில், 52, 'நோட்டீஸ்'களை அனுப்பி உள்ளது.

ஜனாதிபதி மாளிகை, 320 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது. க்
இதன் பல பகுதிகள், கொசுக்களின் உற்பத்திகூடமாக திகழ்கின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி மாநகராட்சி கவுன்சில், கடந்த ஜனவரிமுதல், 52 நோட்டீஸ்களை ஜனாதிபதி மாளிகை நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகராட்சி கவுன்சில் மூத்த ...

ராஜ்யசபா தேர்தலில் பிரத்யேக பேனா; 'மை' சர்ச்சையால் ஆணையம் திட்டம்

Posted: 21 Aug 2016 10:36 AM PDT

புதுடில்லி: ராஜ்யசபா தேர்தலின் போது, சமீபத்தில் ஹரியானாவில், பேனா மையால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், 'எதிர்காலத்தில், தேர்தலில், இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, பேனாவை பயன்படுத்த வேண்டும்' என, ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,க்கள், 57 பேர், ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், 30 பேர் போட்டியின்றி, எம்.பி.,க்களாக தேர்வாகினர். உத்தர பிரதேசம், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், 27 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
ஹரியானாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 12 பேர் ஓட்டளித்த ...

மீண்டும் பழைய 'பார்முலா': விஜயகாந்த் திடீர் மாற்றம்

Posted: 21 Aug 2016 10:38 AM PDT

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கட்சியை பலப்படுத்த, மீண்டும் தன் பழைய, 'பார்முலா' வை கையில் எடுத்துள்ளார்.

கடந்த, 2005ல் தே.மு.தி.க., துவங்கப்பட்டது. 2011ல், அக்கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகள், கூட்டணி வியூகம், இதற்கு காரணமாக அமைந்தது.
மேலும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியினரை அவர் அடிக்கடி சந்தித்தார்; கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்றார். இதுமட்டுமின்றி,
பொது மக்கள் பிரச்னைகளுக்காக, களத்தில் இறங்கி போராடினார்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவரான பின், ...

சட்டசபைக்கு செல்ல கருணாநிதி விருப்பம் கோபாலபுரத்தில் அவசர ஆலோசனை

Posted: 21 Aug 2016 10:39 AM PDT

சட்டசபையில், இன்று நடைபெறவுள்ள போலீஸ் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பது குறித்தும், பொருளாளர் ஸ்டாலின் உட்பட, 60எம்.எல்.ஏ.,க்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை எதிர்கொள்வது குறித்தும், சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று தி.மு.க.,வினர் அவசர ஆலோசனை நடத்தினர்.

சட்டசபையில், 17-ம் தேதி, வீட்டுவசதி, தகவல் தொழில்நுட்ப துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குணசேகரன் தெரிவித்த கருத்தை நீக்க
வேண்டும் என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் போர்க் கொடி ...

ஸ்டாலின் உட்பட 60 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு கோட்டைக்குள் நுழைய முடியாதபடி போலீஸ் குவிப்பு

Posted: 21 Aug 2016 10:42 AM PDT

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 60 பேர் மீது, போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; அவர்கள் இன்று, தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

கடந்த, 17ம் தேதி, சட்டசபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 79 பேர், குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்; சபையில் கலந்து கொள்ள முடியாதபடி, ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில், 18ல், தலைமைச் செயலகம் வந்த, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., - ...

நடிகர் கமலுக்கு செவாலியர் விருது

Posted: 21 Aug 2016 10:57 AM PDT

நடிகர் கமல் ஹாசனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான, 'செவாலியர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில், சிறந்து விளங்குபவர் களை பெருமைப்படுத்தும் வகையில், பிரான்ஸ் அரசு, 1957 முதல், ஆண்டுதோறும் செவாலியர் விருது வழங்கி, கவுரவித்து வருகிறது. 'இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது, நடிகர் கமல் ஹாசனுக்கு வழங்கப்படும்' என, பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்ச கம், சிறந்த நடிப்பாற்றலுக்காக, இந்த விருதை கமலுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, 1995ல், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டு ...

மத்திய பட்ஜெட் தாக்கலை ஜனவரி 31க்கு மாற்ற மோடி அரசு ஆலோசனை!:2017 ஏப்ரலில் ஜி.எஸ்.டி., அமலாவதால் வருகிறது புதிய முறை

Posted: 21 Aug 2016 11:08 AM PDT

புதுடில்லி:அடுத்த ஆண்டு ஏப்ரலில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்த, முழு மூச்சில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொது பட்ஜெட்டை, பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக, அடுத்த ஆண்டு ஜனவரி, 31ம் தேதியே தாக்கல் செய்ய ஆலோசித்து வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த, 2014 மே மாதம் அமைந்த பின், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக இருந்த மத்திய திட்ட கமிஷனை மாற்றி, திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க, 'நிடி ஆயோக்' என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.மண்டல ...

புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு

Posted: 21 Aug 2016 11:54 AM PDT

புதுச்சேரி : புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக முன்னார் முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் நராயணசாமி தலைமையிலான காங்., அரசு பதவி வகித்து வருகிறது. இந்நிலையில் வரும் 24ம் தேதி கூடும் சட்டசபை கூட்டத்தில், புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அக்கூட்டத்தில் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் நடந்த என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ...

இலங்கை அதிபர் திருமலையில் வழிபாடு

Posted: 21 Aug 2016 01:16 PM PDT

திருப்பதி : திருமலை ஏழுமலையானை, இலங்கை அதிபர் சிறிசேன, நேற்று வழிபட்டார்.
திருமலை ஏழுமலையானை வழிபட, விமானம் மூலம் பெங்களூரு வந்த, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, அங்கிருந்து, தன் குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு காரில் வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, தன் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பி வந்த அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள், ரங்கநாயகர் மண்டபத்தில் பட்டுவஸ்திரம் அணிவித்து, பிரசாதம் வழங்கினர். ...

கின்னசில் மோடியின் ‛சூட்'; ராகுல் கிண்டல்

Posted: 21 Aug 2016 02:18 PM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ‛சூட்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை, காங்., துணை தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டு, அமெரிக்க அதிபர் வருகையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, விலை உயர்ந்த, 'சூட்' அணிந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த ஆடையின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் என கூறப்பட்டது. அந்த ஆடை, ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த லால்ஜிபாய் துளசிபாய் படேல், 4.31 கோடி ரூபாய்க்கு, மோடியின், 'சூட்'டை வாங்கினார். இந்த 'சூட்' மிக அதிக விலைக்கு ஏலம் போன ஆடையாக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் ...

தென்மேற்கு பருவ மழை சராசரி தான்!

Posted: 21 Aug 2016 03:10 PM PDT

புதுடில்லி : 'தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு கூடுதலாக பெய்யும்' என, கணிக்கப்பட்ட நிலையில், சராசரி அளவில் மட்டுமே மழை பெய்துள்ளது.
ஒருவார தாமதத்திற்கு பின், ஜூன் 8ல் தென்மேற்கு பருவ மழை துவங்கியது. இந்த ஆண்டு பருவ மழை திருப்திகரமாக இருக்கும் என்றும், சராசரிக்கும் அதிகமாக பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், சராசரி அளவுக்கு மட்டுமே தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளதாக, தனியார் வானிலை ஆய்வு மையமான, 'ஸ்கைமெட்' தெரிவித்துள்ளது.
அதிலும், தென் மாநிலங்களில் மிகவும் குறைவாகவே மழை பெய்துள்ளதாகவும், அந்த ஆய்வு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™