Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விட்டுவிடாதீர்கள் !

Posted: 21 Aug 2016 06:58 AM PDT

வெள்ளியும் வெண்கலமும் போதுமென்று இருந்துவிட வேண்டாம் ! அடுத்த முறையாவது தங்கம் பெற இப்போதிருந்தே முயற்சி செய்யுங்கள் ! விட்டுவிடாதீர்கள் ! காணாமல் போன விமானம் கடத்தப்பட்டதா இல்லை கடலில் வீழ்ந்ததா ! நிலவை வெற்றிகொண்ட அறிவியல் பூமியிடம் தோற்றுவிட்டதே ! முயற்சி செய்யுங்கள் ! விட்டுவிடாதீர்கள் ! ஓடும் ரயிலில் கன்னம் வைத்துத் திருடிய கள்வர்களுக்கு உதவிய கறுப்பு ஆடுகளைக் கண்டுபிடியுங்கள் ! விட்டுவிடாதீர்கள் ! வயக்காட்டு பொம்மைகளும் வடிகட்டிய அடிமைகளும் நமக்கு வேண்டாம் ! அடுத்த ...

வெற்றிமுகம்: தொட்டதற்கெல்லாம் திட்டு அன்று; தங்க மகன் இன்று

Posted: 21 Aug 2016 06:28 AM PDT

- வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார் ஆசிரியர். ஓரிடத்தில் உட்காராமல் சிட்டுப் போல அங்கும் இங்கும் ஓடுகிறான் அந்தச் சிறுவன். குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடல் பாட, அவனோ ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். அனைவரும் ஓவியத்துக்கு வண்ணம் தீட்ட, அந்தச் சிறுவன் மற்றவர்களை முழங்கையால் இடித்தபடியும், சிரித்துக்கொ ண்டும் இருக்கிறான். உடனே அந்தச் சிறுவனின் அம்மாவுக்கு, 'உங்கள் மகன் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை' என்று குறிப்பெழுதி அனுப்புகிறார் வகுப்பு ...

அரிய புத்தகங்கள்

Posted: 21 Aug 2016 05:53 AM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

தொடத் தொடத் தொல்காப்பியம்(436)

Posted: 21 Aug 2016 05:53 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பேசுவதற்கா விஷயமில்லை!

Posted: 21 Aug 2016 05:33 AM PDT

தொணத்தொண என்று பேசும் நபர்கள், பிறரால், வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு. – 'எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்…' என்று நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும். – இவர்களை, ஆங்கிலத்தில், 'சேட்டர் பாக்ஸ்' என்று குறிப்பிடுகின்றனர். நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு. 'வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே… ஏன் அப்பவே கேட்கலை… நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டியே…' என்போர் உண்டு. – என்னை, நான் ஒரு, 'பிளாட்டிங் பேப்பர்' என்று சொல்லி கொள்வது உண்டு. ...

இயற்கை வளத்தை காத்திட ஆசை…!

Posted: 21 Aug 2016 05:32 AM PDT

- எல்லாருக்கும் ஆசையிருக்கிறது பணக்காரனாக! – எல்லாருக்கும் ஆசையிருக்கிறது காதலிக்க! – எல்லாருக்கும் ஆசையிருக்கிறது மாளிகை வீடு கட்ட! – எல்லாருக்கும் ஆசையிருக்கிறது ஆடி காரில் உலா வர! – எல்லாருக்கும் ஆசையிருக்கிறது தங்க, வைர நகைகள் வாங்கி குவித்திட! – எல்லாருக்கும் ஆசையிருக்கிறது நோய் நொடியின்றி வாழ்ந்திட! – எல்லாருக்கும் ஆசையிருக்கிறது வெளிநாடு சுற்றுலா சென்று வர! – ஆனால், எவருக்கும் ஆசையில்லை இயற்கை வளத்தை காத்திட! – ———————– — பா.சுபானு, காரைக்குடி. வாரமலர்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (174)

Posted: 21 Aug 2016 05:19 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

பொது அறிவில் புலியா? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

Posted: 21 Aug 2016 04:44 AM PDT

1.உலகில் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஒரு நாடு - A -என்ற ஆங்கிலத்தில் முடிகிறது. 2.-Y- என்ற ஆங்கில எழுத்தில் முடியும் ஒரு இந்திய மாநிலத்தின் தலைநகரம் (யூனியன் பிரதேசங்கள் உட்பட) 3.நில அளவில் பெரிய இந்திய மாநிலம். 4.கனிமங்களின் கிண்ணம்-The Bowl of Minerals- என அழைக்கப்படும் மாநிலம். 5.எந்த இந்திய ஏழு மாநிலங்கள், ஏழு சகோதரிகள்-Seven sisters- என அழைக்கப்படுகிறது? 6.உலகின் மிகப் பழமையான மரம் எது,எங்குள்ளது? 7.இதுவும் பொதுஅறிவு தான். அப்படியே ஆங்கிலத்தில் படித்து விடை கொடுங்கள்.Take 9 from ...

எனது விவசாயி…

Posted: 21 Aug 2016 03:12 AM PDT

விவசாயி… இன்று சுயவிளம்பரத்திற்கு அதிகம் பயன்படுத்தபடும் வார்த்தை…   நாம் உண்ணும் உணவு நாம் தட்டிற்க்கு வருகிறது என்ற திமிரில் இருக்கிறோம்… கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்.. ஒரு அரிசி உருவாக என்ன வேண்டும் என்று… நாற்று நட்டால் மழை கூடாது, பொதி வந்தால் காற்று ஆகாது, பால் கட்டினால் வெயில் கூடாது கதிர் அறுக்கயில் பனியோ மழையோ கூடாது…. ஒவ்வொரு பருவமும் ஒரு போராட்டம்….   போரடினாலும் தளரவில்லை… பருவம் அறிந்தான்… மண் பிரித்தான்... பயிர் விதைத்தான்… நமக்கு உயிர் வளத்தான்.. நாம் என்ன ...

‘அட்ரா சக்க’ விஜய் சேதுபதி, ‘ஆஹா’ தமன்னா..! – ‘தர்மதுரை’ விமர்சனம்

Posted: 21 Aug 2016 02:06 AM PDT

- – சீனு ராமசாமி -விஜய் சேதுபதி கூட்டணியின் மூன்றாவது படம். வெளியானதில் இரண்டாவது படம். "இடம் பொருள் ஏவல்" இன்னும் ரிலீஸுக்கு காத்திருக்க, முந்தி வந்திருக்கிறான் தர்மதுரை. – நான்கு அண்ணன் தம்பிகள். அதில் மற்ற மூவரும் தொழில், பணம் என கருத்தாய் இருக்க, பாரும் பீருமாக சுற்றுகிறார் விஜய் சேதுபதி. அம்மா ராதிகாவுக்கு விஜய் சேதுபதி மீதுதான் அக்கறை அதிகம். – அண்ணன் தம்பிகள் செய்யும் தொழிலுக்கு விஜய் சேதுபதி தொல்லை கொடுக்க, சொந்த தம்பியையே 'சம்பவம்' செய்யத் தயாராகிறார்கள். இது தெரிந்த ...

இந்த வார சினி துளிகள்

Posted: 20 Aug 2016 11:44 PM PDT



* நீண்டகாலமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாத தனுஷ்
மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும், முடிஞ்சா இவனை புடி
ஆடியோ விழாவில் கலந்து கொண்டனர்.

————————————————

-

* பிரபுதேவாவுடன், தேவி படத்தில், இரு வேடங்களில் நடிக்கிறார்,
தமன்னா.

————————————————-

ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை

Posted: 20 Aug 2016 09:42 PM PDT

- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு தில்லி வந்திருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த ஆடை (கோட்-சூட்), "அதிக தொகைக்கு ஏலத்துக்கு எடுக்கப்பட்ட ஆடை' என்ற தலைப்பில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த ஆடையை ஏலத்தில் எடுத்த குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லால்ஜிபாய் துளசிபாய் படேலின் மகன் ஹிதேஷ் படேல், சூரத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆடையை ஏலத்தில் எடுத்ததை அடுத்து, கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப்பிக்குமாறு எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் ...

அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக

Posted: 20 Aug 2016 08:59 PM PDT

நண்பர்களே!அடோப் பேஜ்மேக்கர் தமிழில்-மின்நூல் வடிவில் உங்களுக்காக. பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.நன்றி பதிவிறக்க சுட்டி இப்படிக்கு தமிழ்நேசன் நேரடி லிங்க்: http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_29.html

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 20 Aug 2016 08:01 PM PDT

‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா

Posted: 20 Aug 2016 07:59 PM PDT

- சாய்னா நேவால் | தி இந்து. ————————————— பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு மைதானத்தில் லாவகமாக பந்துகளை விளாச மட்டும் தெரிந்திருக்கவில்லை தன் மீதான கலாய்ப்புகளையும் கண்ணியமாக விளாசத் தெரிந்திருக்கிறது அவருக்கு. ரியோ ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பிருந்தே சாய்னா நிச்சயம் பதக்கம் பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். ஆனால் பி.வி.சிந்து வெள்ளி வென்றுள்ளார். சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதை ஒப்பிட்டு சாய்னாவை பழிக்கும் வகையில் ட்விட்டரில் ...

எல்லைக் கோடு: தேன்ராஜா

Posted: 20 Aug 2016 07:56 PM PDT

எல்லைக்கோடு மனிதனை தவிர மற்ற உயிரினங்களுக்கு இல்லை இக்கோடு ….. – பறவையின் வலசை கண்டம் தாண்டும் அவைகளுக்கு வானமே எல்லை….. .. – மீனினமோ கடல் விட்டு கடல் போகும் அவைகளுக்கு கரைகளே எல்லை …… – கற்பனை கோடு ஒன்றை வரைந்தான் மனிதன் தற்பெருமை அடைந்தான் அதன் மூலம் .. – கடவுள் படைத்த உலகத்தை கண்ணுக்கு தெரிந்த வரை பிரிக்கிறான் கடவுள் படைத்த மனிதன் …. … – ஆறறிவு பெற்றுவிட்டதால் அகிலத்தை ஆள நினைக்கிறான் ஆசை கொண்ட மனிதன் …. – ஐந்தறிவு விலங்குகள் கூட ஆராய்ந்து பார்ப்பதில்லை அதனதன் எல்லையை ...

அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்!

Posted: 20 Aug 2016 07:13 PM PDT

- இன்று, 'அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி' என்ற பெயருக்காக #ஹிலாரி கிளின்டன் போராடி வந்தாலும், இதற்கெல்லாம் முன்னோடி, #விக்டோரியா டவுஸ்ஹல் என்ற, 35 வயது பெண்! – பெண்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் ஓட்டு உரிமை மறுக்கப்பட்டிருந்த கால கட்டம் அது! – ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதத்தில் முதன் முதலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி கண்ட இவர், ஷேர் மார்க்கெட் எனப்படும் பங்கு சந்தையில் ஈடுபட்ட பெண் என்ற பெருமைக்கும் உரியவர். – மேலும், ...

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம்

Posted: 20 Aug 2016 04:43 PM PDT

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ?... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் தரவிறக்க சுட்டி -- தமிழ் வார்ஸ்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™