Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஸ்டாலின் மன்னிப்பு: கருணாநிதி கடுப்பு

Posted: 20 Aug 2016 06:33 AM PDT

சட்டசபையில், மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தால், தி.மு.க., தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

சட்டசபையில், கைத்தறித் துறை மானிய கோரிக்கை விவாதத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியபோது, குறுக்கிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.கோபம் அடைந்த சபாநாயகர், 'என்னை, தி.மு.க., உறுப்பினர்கள் கேலியும், கிண்டலும் செய்கின்றனர். இதற்கு, ...

தமிழகத்தின் அடுத்த கவர்னர் யார்?ஜெ., எதிர்ப்பால் மோடி 'சைலன்ட்'

Posted: 20 Aug 2016 06:36 AM PDT

தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு பதிலாக, கர்நாடகாவைச் சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்கப் போவதாக, தகவல்கள் வெளியா கின. ஆனால், முதல்வர் ஜெ., எதிர்ப்பால், ரோசய்யாவே தொடர இருப்பதாக கூறப் படுகிறது.

கடந்த, 2011 ஆகஸ்டில், தமிழக கவர்னராக, ரோசய்யா நியமிக்கப்பட்டார்; அவரது பதவிக் காலம், இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், புதிய கவர்னரை நியமிப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கர்நாடக மாநில பா.ஜ., மூத்த தலைவரான சங்கரமூர்த்தியை, தமிழக கவர்னராக நியமிக்க, பா.ஜ., மேலிடத்தில் சிலர் காய் நகர்த்தினர்.விருப்பம்:இந்த தகவல் வெளியானதும், ...

தஞ்சை உட்பட மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்...எப்போது?: கட்சிகள் ஆர்வம் காட்டாததால் தேர்தல் ஆணையம் அமைதி

Posted: 20 Aug 2016 07:07 AM PDT

தமிழகத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி களில் எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விஷயத்தில் அரசியல் கட்சி கள் ஆர்வம் காட்டாததால், தேர்தல் ஆணை யமும் அமைதியாக உள்ளது.

தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது. அப்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக, வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருட் கள் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.மேலும், தேர்தலில் போட்டி யிட்ட சில ...

ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்றுவதில் மாநிலங்கள்... ஆர்வம: குறித்த நாளில் அமலாகும் என மத்திய அரசு நம்பிக்கை

Posted: 20 Aug 2016 07:23 AM PDT

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசு, பார்லிமென்டில் நிறை வேற்றியுள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாகவே, தேவைப்படும், 16 மாநிலங்களின் ஆதரவு கிடைக்கும் நிலை உள்ளதால் ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும், 2017 ஏப்ரலில், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., அமலாகும் என, மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் ஒரே சீரான வரி ...

ஜம்மு - காஷ்மீர் வங்கிகளில் குவியும் பணம் குறித்து... சந்தேகம்:பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமானதா என விசாரணை

Posted: 20 Aug 2016 09:26 AM PDT

புதுடில்லி:கடந்த சில மாதங்களில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பல்வேறு வங்கிகளில், வழக்கத்துக்கு மாறாக, அதிகளவில் செய்யப் பட்டுள்ள, 'டிபாசிட்கள்' குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை துவக்கி உள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் பர்ஹான் வானி, சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான்.அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வன் முறை சம்பவங்கள் நடக்கின்றன; இதுவரை, 67 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000க்கும் ...

'வெள்ளி வீராங்கனை' சிந்து என்ன ஜாதி : சமூக வலைதளங்களில் தேடிய மக்கள்

Posted: 20 Aug 2016 09:47 AM PDT

பி.டி.உஷாவுக்கு அடுத்ததாக, பல ஆண்டுக்கு பிறகு, வீராங்கனை ஒருவரின் வெற்றிக்காக, ஒட்டுமொத்த இந்தியாவும், ஒரே நேரத்தில் பிரார்த்தித்தது, ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கும், பாட்மின்டன் வீராங்கனை சிந்துவுக்காகத்தான் இருக்கும்.

அவரது வெற்றிக்காக கோடிக்கணக்கானோர், தவிப்புடன் காத்திருந்த வேளையில், சிந்துவை உரிமை கொண்டாடுவதற்காக, 'அவர் எந்த ஜாதிக்காரர்' என்ற விபரத்தை அறிய, லட்சகணக்கான இந்தியர்கள் ஆர்வம் காட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இணைய உலகில், பிரபலமாக விளங்கும் தேடுபொறியான, 'கூகுள்' மூலம், லட்சக்கணக் கானோர் அதை ...

சலுகை அறிவிப்புகளை ஜெ., வெளியிடுவார் என போலீசார்...எதிர்பார்ப்பு! * சட்டசபையில் நாளை காவல் துறை மானிய கோரிக்கை தாக்கல்

Posted: 20 Aug 2016 10:28 AM PDT

சட்டசபையில், நாளை காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை, தாக் கல் செய்யப்பட உள்ளது. அப்போது, முதல்வர் ஜெயலலிதா, ஏராளமான சலுகை அறிவிப்பு களை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு, போலீசாரிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், காவல் துறையானது, முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. 'முதல்வரின் செல்லப் பிள்ளை' என்றே காவல் துறை வர்ணிக்கப்படுகிறது; எனவே, போலீசாரின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.தொடர்ந்து இரண்டாவது முறை, முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, நாளை நடை பெற உள்ள காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கையின் ...

வாய்ப்பை தவற விட்டு வாலை பிடிக்கும் தி.மு.க.,

Posted: 20 Aug 2016 11:46 AM PDT

சட்டசபையில், இதுவரை நடந்த மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்களில், 40க்கும் மேற்பட்ட தி.மு.க., உறுப்பினர்கள் பேசியுள்ளனர். மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள் பற்றியும், ஒவ்வொரு நாளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் துறைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்தும், முன்னதாகவே நன்கு தயார் செய்து வந்து, சபையில் பேசிய தி.மு.க.,வினர் வெகு சிலரே.

சட்டசபைக்குள் முதல் முறையாக நுழைந்தி ருக்கும் ரவிச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில்குமார் உள்ளிட்ட சிலர், செறிவான விபரங்களுடன் பேசினர்; ஆனால், மூத்த உறுப்பினரான பொன்முடி போன்றவர்கள் சரிவர பேசாததை, ...

தலைமை நீதிபதிக்கு 'அட்வைஸ்'

Posted: 20 Aug 2016 12:06 PM PDT

'சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மோடி, நீதிபதிகள் நியமனம் குறித்து எதுவுமே பேசாதது ஏமாற்றமளிக்கிறது' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சாடியிருந்தார்; இதை நீதிபதி, ஒரு விழாவில் பேசும்போது, அந்த மேடையில், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் அமர்ந்திருந்தார்; அவர், இதற்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தார்.

சுதந்திர தினத்தன்று மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர், அமைச்சர்கள்,நீதிபதிகள் மற்றும் வி.ஐ.பி.,க்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து, தேநீர்விருந்து அளித்தார்; அதில் தலைமை நீதிபதியும் பங்கேற்றார். இதில் பங்கேற்ற மத்திய ...

'ஆன்லைன்' மது 'புக்கிங்' கைவிட்டது கேரள அரசு

Posted: 20 Aug 2016 01:46 PM PDT

திருவனந்தபுரம்: ஆன்லைனில் மது வகைகளை முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டத்தை, கேரள அரசு கைவிட்டது.

கேரளாவில், மார்க் சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; அங்கு, முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 700க்கும் மேற்பட்ட, 'பார்'கள் மூடப்பட்டன.
நட்சத்திர ஓட்டல்கள் மற்றும், 'கன்ஸ்யூமர்பெட்' எனப்படும், கேரள அரசு, கூட்டுறவு நிறுவனம் நடத்தும் கடைகளில் மட்டுமே, தற்போது, மது விற்கப்படுகிறது. ...

காஷ்மீர் மக்களிடம் பேனா, கணினிகளை பார்க்க விருப்பம்: ராஜ்நாத்சிங்

Posted: 20 Aug 2016 04:03 PM PDT

ஷாஜஹான்பூர்:"உங்களின் கைகளில் கற்களையும், ஆயுதங்களையும் இருப்பதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. மாறாக உங்கள் கரங்களில் பேனா, கணினிகள், வேலைவாய்ப்புகள் ஆகியவை இருப்பதையே பார்க்க விரும்புகிறோம்' இதை காஷ்மீர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் பேசினார்.

இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் நேற்று நடைபெற்ற மூவர்ணக்கொடி பேரணியில் கலந்து கொண்டு பேசியதாவது: சமீபத்தில் நான் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தேன். அந்த அண்டை நாட்டின் தவறுகள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். அங்கு என்ன நடந்தது என்பதை நான் மீண்டும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™