Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்… ஒவ்வொரு நாளும் இனிய நாளே!

Posted: 20 Aug 2016 09:44 AM PDT

- நாம் மாற வேண்டும். . இந்த மூன்று வார்த்தைகளை கொண்ட வாக்கியத்தை படித்தவுடன் நாம என்னடா தப்பு பண்ணுனோம், நம்மள எதுக்கு மாற சொல்றாங்க, நாம ஜாம் ஜாம்னு நல்லாதானே இருக்கோம்னு உங்கள் மனசுல தோன்றியதா? - கையக் குடுங்க பாஸ்! நீங்க இந்த கட்டுரையை அவசியம் படிச்சே ஆகணும். சரி என்னதான் சொல்றானுங்கனு பாப்போம்னு படிக்க ஆரம்பிச்ச குரூப்பா நீங்க? உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ், நீங்க கட்டுரையை படிச்சு முடிச்சதும் நல்லா இருந்ததுன்னு ஃபீல் பண்ணுனீங்கனா கண்டிப்பா ஷேர் பண்ண மறந்துடாதீங்க. - சரி ...

உறுப்பினர் அறிமுகம் --மு.கீதா

Posted: 20 Aug 2016 09:43 AM PDT

பெயர்:மு.கீதா சொந்த ஊர்:அரியலூர் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:இணையம் மூலமாக பொழுதுபோக்கு:கவிதை,சமூக ஈடுபாடு தொழில்:ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி:நான் புதுக்கோட்டை அரசுப்பள்ளியில் ஆசிரியராகப்பணிபுரிகின்றேன். முகநூலில் தேவதாதமிழ் என்ற பெயரில் எழுதி வருகின்றேன். வேலுநாச்சியார் என்ற முகவரியில் வலைப்பூவில் எழுதுகின்றேன். இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். 1]வேலுநாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனை ஆய்வு நூல் 2]விழிதூவிய விதைகள் கவிதை நூல்[வளரி சிற்றிதழின் கவிப்பேராசான் மீரா விருது ...

அறிமுகம் - தமிழ் ஐயப்பன்

Posted: 20 Aug 2016 09:42 AM PDT

பெயர்:வே.தமிழ்ஐயப்பன்
சொந்த ஊர்:பைம்பொழில்(பண்பொழி) கிராமம்,திருநெல்வேலி..
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:முன்னாடியே தெரியும்
பொழுதுபோக்கு:கவிதையும் காதலும்
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

எனது கவிஞன்...நா.முத்துகுமார்..

Posted: 20 Aug 2016 09:34 AM PDT

இறைவா... உனக்கு கருணை இல்லை என்பது இன்னொரு முறை நிருபணம் ஆகி உள்ளது... எங்கள் இனிய கவிஞன்  நா.முத்துகுமார் மறைவில்... உனக்கு கவி பாட  கம்பன், கண்ணதாசன் போதவில்லை -என எடுத்து கொண்டாயா..? இல்லை அவன் கவிதையை நாங்கள் கேட்க தகுதியில்லாதவர்கள் என்று நினைத்தாயா...? நிகழ்காலத்தில்.. கவிஞர்கள் பல இருக்கிறார்கள்.. மாபெரும் கவிஞர்கள்  சில இருக்கிறாரகள்.. ஆனால் மாசற்ற கவிஞன்  அவன் ஒருவன் தானே இருந்தான்..எங்கள் தமிழுக்கு... எளிய தமிழில் இத்தனை வார்த்தைகளா என வியந்து போய் பார்தோம்  அவன் ...

தேசியச் செய்திகள்

Posted: 20 Aug 2016 09:33 AM PDT

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ...

விட்டுவிடுங்கள்

Posted: 20 Aug 2016 09:15 AM PDT

நொடிப்பொழுதும் சுமந்தே திரிந்து நொந்து போன பெண்களுக்கு ஒலிம்பிக்கில் எடை பெரிதல்ல... துன்பங்களைச் சிறகுகளாக்கி பறக்கத் துடிக்கின்றவர்களுக்கு சிறகுப்பந்து எட்டாக்கனியல்ல.. விட்டுவிடுங்கள் அவர்களை எல்லோரும் சாதனையாளர்களாவார்கள்.. பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த சாக்‌ஷி ,சிந்துவை பாராட்டி மகிழ்கின்றோம்.. உடலை மறந்து திறமையைப்பாராட்டிக்கொண்டே இருக்கும் ஆண்களை வணங்குகின்றோம்..

உலகச் செய்திகள்!

Posted: 20 Aug 2016 08:51 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஜோக்கர் திரைப்படம் காலத்தின் தேவை

Posted: 20 Aug 2016 08:51 AM PDT

ஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். வாழ்த்துகள் ராஜூ முருகன் சார். இத்தனை பச்சையாக நாட்டை தோலுரித்துக்காட்ட முடியுமா?கைதட்டிக்கொண்டே இருக்க வைத்த நச் வசனங்கள். கதாநாயகன் என்று யாராவது வருவார்களே என பொதுப்புத்தியோடு இருந்த எனக்கு, ஜனாதிபதியாக தன்னை எண்ணி வாழ்கின்ற சோமசுந்தரத்தின் வாழ்க்கையோடு நானும் இணைந்தேன்.... சமூக அக்கறை உள்ளவர்கள் காசு கொடுத்து திரையரங்கில் பார்த்தால் அதில் வரும் பணத்தைக்கொண்டு கழிப்பறை கட்டித்தரப்போகிறோம் என்று இப்படத்தை தயாரித்தவர்களால் மட்டுமே கூற ...

ஏடிஎம்- இல் பணம் எடுக்க ஆதார் அட்டை!

Posted: 20 Aug 2016 08:47 AM PDT

வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வேண்டுமானால் அந்த ஏடிஎம் அட்டையை தேய்த்து, ரகசிய குறியீட்டு எண்ணை அந்த இயந்திரத்தில் உள்ளீடு செய்தால் மட்டுமே எடுக்க முடியும். சில நேரங்களில் ரகசிய எண்ணை மறக்க நேரிட்டால், பணத்தை எடுக்க வங்கியைத் தேடி அலைய வேண்டியதுதான். ஆனால் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிசிபி (DCB) தனியார் வங்கி ஆதார் அட்டை மூலமாக பணம் எடுக்கத்தக்க வகையிலான ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மும்பையிலும், கடந்த வாரம் பெங்களூருவிலும் இந்த ஆதார் அட்டை ...

இன்று உலக கொசு ஒழிப்பு தினம் –

Posted: 20 Aug 2016 07:36 AM PDT

- இந்த கொசு தொல்லை தாங்க முடியலேப்பா… இப்படித் தான் கவுண்டமணி ஒரு 'காமெடியில்' சொல்வார். உண்மையிலேயே கொசு மிகவும் கொடியது. மனித உயிர்களை சர்வ சாதாரணமாக அழித்து விடுகிறது. – ஆண்டுக்கு 10 லட்சம் பேர் கொசு பரப்பும் நோயால் மரணம் அடைவதாக ஐ.நா., தெரிவிக்கிறது. மலேரியா தாக்கி ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை பலியாகிறதாம். – 'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடித்தவர் டாக்டர் ரொனால்டு ரோஸ். இவரது இந்த கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக ...

காலி பாட்டிலுக்கு தள்ளுபடி ‘கூப்பன்’ : ஐ.ஆர்.சி.டி.சி., அதிரடி திட்டம்

Posted: 20 Aug 2016 07:18 AM PDT

புதுடில்லி: காலியான, 'ரயில் குடிநீர்' பாட்டில்கள், சட்டவிரோதமாக மீண்டும் பயன்படுத்தப்படுவதை தடுக்க, காலி பாட்டில்களுக்கு தள்ளுபடி அளிக்க, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில், 15 ரூபாய் விலையில், 1 லிட்டர், ரயில் நீர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றை வாங்கும் பயணிகள், காலியான பாட்டில்களை வெளியில் போட்டு விடுகின்றனர். ரயில் நிலையங்கள் ...

கண்ணே…,நலமா?

Posted: 20 Aug 2016 06:03 AM PDT

- உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தைஈர்ப்பதற்க்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்க்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைவரும் தேதியை உலக கண்யிழப்பு தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை விழிப்புணர்வினை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பில் பார்வையிழப்பு பற்றிய சில புள்ளிவிவரங்கள்: உலக அளவில் 285 மில்லியன் பேருக்கு ...

போய் விடாத அம்மாக்கள்

Posted: 20 Aug 2016 05:47 AM PDT


-

சறுக்கு மரத்தையும்
ஊஞ்சலையும்
சீ சா -வையும்
விட்டு வர விரும்பாத குழந்தைகளை
வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போக
நினைக்கும் அம்மாக்கள் எல்லோரும்
'போய் விடுவேன், போய் விடுவேன்'
என்று மிரட்டிக் கொண்டிருக்கிறாரகள்
போய் விடாமல்…!

——————————
-அகி-முகுந்த் நாகராஜன்
படம் - இணையம்

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Posted: 20 Aug 2016 05:42 AM PDT

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்? சாமியார்களிடம் மனதைப் பறிகொடுக்கிறார்கள்? நித்தியானந்தர் ஆச்சிரமத்தில் இன்னமும் குறையாத பெண்கள் கூட்டம். காற்றில் (யோக ஆற்றல் மூலம்) -jumping yoga-மிதக்கச் செய்தல்- தோல்வியில் முடிந்த நித்தியானந்தரின் முயற்சி . உடலை இலகுவாக்கி திரிசங்கு சொர்க்கம் போல் காற்றில் மிதக்கும்-levitation technique-தோல்வி. மவுண்ட் சியொன் தேவாலயத்தில் தோல்வி அடைந்த பாதிரியாரின் அதிசயம் நடத்தும் முயற்சி. மிகப் பாரமான ஒலிபெருக்கி பெண்ணின் உடல் மேல் வைக்கப்பட்டது. ...

சிறகடித்து சிரிக்கும் இமைகள்…!

Posted: 20 Aug 2016 05:39 AM PDT

- பனிக்குளத்தில் இறங்கினேன் சூடானது தண்ணீர் எனக்குள் அவள் – —————————- – பூமிக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்து சிரித்தது அவள் இமைகள் – —————————– – ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் ஓயாமல் கட்டினார் கொத்தனார் ஓலைக்குடிசை வாசம்! – —————————– – மௌஸைப் பிடித்து படித்ததால் கல்யாண மார்க்கெட்டில் மௌஸ் கம்ப்யூட்டர் இஞ்சினியர்! – —————————– – கால்மேல் கால் போட்டு வாசம் கைமேல்பலன் கிடைத்து கைரேகை ஜோசியருக்கு..! – —————————– – அரசியல்வாதியின் பின்னால் பூனைப்படை பின்னால் ஊழல் பெருச்சாளி – —————————– டி.என்.இமாஜான் நகைச்சுவை ...

என்ன என்ன வார்த்தைகளோ…

Posted: 20 Aug 2016 05:36 AM PDT

படம்: வெண்ணிற ஆடை இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடல்: கண்ணதாசன் பாடியவர்: பி.சுசீலா – என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் சொன்ன கதை புரியவில்லை – உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன் என்னைத்தான் எண்ணி துடித்தேன் எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன் பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா இது தேனோடு பாலாகுமா – நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஓர் நாள் வருவேன் மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல நானும் மறைவேன் இன்னும் நான் ...

காம்பவுண்டு-க்காய் வெட்டிய புளியமரம்

Posted: 20 Aug 2016 05:33 AM PDT

– பத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு டேப்-பால் அளந்து எல்லை பிரித்த போது கண்டு கொண்டார்கள் புளியமரம் இருவருக்கும் இல்லாமல் நடுவில் இருந்ததை – வெட்ட மனம் வரவில்லைதான் ஆனால் காம்பவுண்டு கட்டி விட்டால்தானே பின்னால் பிரச்சனை வராமல் இருக்கும்? – வேர்கள் ரொம்ப ஆழம் போயிருப்பதாக வெட்டியவர்கள் அலுத்துக் கொண்டார்கள் காம்பவுண்டு சுவரின் வேர்கள் அதைவிட ஆழம் போகும் அல்லவோ? – ——————————— -அகி-முகுந்த் நாகராஜன்

விளையாட்டுப் பிள்ளைகள்

Posted: 20 Aug 2016 05:32 AM PDT

இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன, அந்த பூங்காவில்
ஒன்று
ஊஞ்சலில் நின்றும் உட்கார்ந்தும்
ஒற்றைக் காலைத் தூக்கியும்
வேகமாக வீசி ஆடியும்
ஓ-வென்று கத்திக் கொண்டும் இருந்தது

மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக் கொண்டும்
ஓ-வென்று கத்திக் கொண்டும் இருந்தது
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்…?

———————————
-அகி-முகுந்த் நாகராஜன்

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

Posted: 20 Aug 2016 05:30 AM PDT

- திரைப்படம்: ஆனந்த ஜோதி பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: : பி. சுசீலா ஆண்டு: 1963 – நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? உயிரே விலகத் தெரியாதா? – மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா? மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா? அன்பே மறையத் தெரியாதா? – நினைக்கத் தெரிந்த ...

யார் வீடு?

Posted: 20 Aug 2016 05:19 AM PDT


-

அறுபது மாடிக் குடியிருப்பின்
ஏணிகளாகவே மாறி வாழ்ந்து
கொண்டிருக்கும் காலத்திலும்
என் சொந்த ஊர்ப்பக்கம்
வீட்டு நம்பர் சொல்லி வழிகேட்டால்
"யார் வீட்டுக்குப் போகணும்?
என்று கேட்கிறார்கள் என் மக்கள்

—————————-
-அகி-முகுந்த் நாகராஜன்

தொலைந்த பந்துகள்

Posted: 20 Aug 2016 05:18 AM PDT




அடித்த பந்தை
எடுக்க வந்தார்கள் அவர்கள்
சத்தம் போட்டு
பந்தை தேடினார்கள்
நானும் இணைந்து தேடினேன்
என் சின்ன வயசை!

கிடைத்தபின்
நன்றி சொல்லிப் போகிறார்கள்
கேட் டை சரியாக மூடி விட்டு!

—————————-
-அகி-முகுந்த் நாகராஜன்

விழுங்குற மாதிரி பார்வை…!!

Posted: 20 Aug 2016 05:16 AM PDT

- எங்கே உன் கணவரைக் காணோம்…? – உள்ளே…ஆபிஸ் வேலையா இருக்கார்! – ஓ தூங்கறாரோ….சரி! – எஸ்.சக்தி – ——————————- – ஆபிஸ்ல ஏன் எல்லோரும் மானேஜர் முன்னால நின்று கொட்டாவி விடுகிறார்கள்? – தூங்கறதுக்கு முன்அனுமதி கேட்கிறார்கள்…! – தமிழ்நாயகி – ————————————— – டாக்டர், என்னால மாத்திரையை விழுங்க முடியவில்லை…! – ஆனா, நர்ஸை மட்டும் விழுங்குற மாதிரி பார்க்க முடியுதாக்கும்..! – வைகை ஆறுமுகம் – —————————————– – என்ன தலைப்புல வேணும்னாலும் பேசலாம்னு தலைவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா? – ஆமா, ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 20 Aug 2016 05:06 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

இதனால்தான் இவர்கள் ஜெயிக்கிறார்கள்! #கரோலினா-சிந்து நட்புத் தருணங்கள்!

Posted: 20 Aug 2016 01:11 AM PDT

உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து என பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும் ஒலிம்பிக் என்ற சொல்தான் விளையாட்டு உலகின் மந்திரச் சொல். உலகக் கோப்பை கால்பந்தில் 32 அணிகள்தான் விளையாடும். கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் அதிகபட்சம் 10 அணிகள். ஆனால் ஒலிம்பிக் அப்படியல்ல.. 206 நாடுகள் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான விளையாட்டுப் போட்டி. இங்கே செல்வத்தில் கொழிக்கும் அமெரிக்காவும், சாப்பாட்டுக்கே வழியில்லாத எத்தியோப்பியாவும் சரிசமம்தான். யாரும் ஹோட்டலில் போய் தங்கிக் கொள்ள முடியாது. ...

சிவப்பு மல்லியும் ஜோக்கரும் !

Posted: 19 Aug 2016 11:11 PM PDT

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இவ்விரு திரைப்படங்களும் வெளிப்படுத்துகின்றன. அடுத்தடுத்த நாட்களில் இத்திரைப்படங்களை பார்க்க நேர்ந்ததால் ஒப்பிட்டு எழுதவேண்டியதாகி விட்டது. கம்யூனிச கோட்பாடுகள் நிறைந்த மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தான் சிவப்பு மல்லியிலும் ஜோக்கரிலும் முன்னிலை வகிக்கிறது. தலைவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் இரண்டு திரைப்படங்களிலும் இமிடேட் செய்யப்படுகின்றனர். இரண்டு திரைப்படங்களின் இறுதிக்காட்சியிலும் மல்லிகை வாங்கி வரும் கதாபாத்திரம் கொல்லப்படுகிறது. ஆச்சரிய ஒற்றுமையாக ...

மனைவிதான் குரு…!!

Posted: 19 Aug 2016 09:50 PM PDT

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Posted: 19 Aug 2016 05:53 PM PDT

- ஏறக்குறைய எல்லா நடிகைகளுமே இன்று 'ஆபாசமாக நடிக்க மாட்டேன். ஆனால் கவர்ச்சியாக நடிக்க ஆட்சேபணை எதுவும் இல்லை' என்று தான் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் இந்தக் கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் எல்லைக்கோடுதான் எது என்று சில நடிகைகளைக் கேட்ட போது : ரத்தி ஜவர்ச்சி என்பது கலை நுணுக்கம் கலந்த ஒன்றாகும். அதாவது உடலை அங்கும் இங்குமாகத் தெரிந்தும், தெரியாமலும் காட்டும் போது அது கவர்ச்சியாகும். அப்படி இல்லாமல் உடலைக் கலைநயம் இல்லாமல் திறந்து போட்டு, வெளிச்சம் கூட்டிக் காட்டும்போது அது ஆபாசமாகிறது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™