Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எதிர்பார்ப்பு! ஜி.எஸ்.டி., மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறும் என... காங்கிரஸ் உட்பட, பல கட்சிகள் ஆதரவு தர சம்மதம்

Posted: 02 Aug 2016 09:45 AM PDT

புதுடில்லி,: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆதரவு தர முன் வந்துள்ளதால், மசோதா நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரிகளை ஒருங்கிணைக்கும் வகையில், ஜி.எஸ்.டி., முறையை அமல்படுத்துவதற்கான முயற்சி, 2006ல், காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசால் துவங்கப்பட்டது; இது தொடர்பான மசோதா, 2011ல் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது; ஆனால், நிறைவேறவில்லை.இதற்கிடையில், 15வது லோக்சபாவின் பதவிக்காலம் முடிந்ததால், அந்த ...

பா.ஜ., - தெலுங்கு தேசம் உறவில் விரிசல்

Posted: 02 Aug 2016 09:50 AM PDT

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததால், ஆந்திராவில், தெலுங்கு தேசம் - பா.ஜ., கட்சிகள் இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில், ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் இடம் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியும், ஆந்திராவை சேர்ந்த பிற கட்சிகளும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரக்கோரி, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
சிறப்பு அந்தஸ்து
ஆந்திராவுக்கும் பொருந்தும் : இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ...

அடுத்த குஜராத் முதல்வர் யார் என்பதில் 'மர்மம்' தேர்தலும் வருவதால் திணறுகிறது பா.ஜ.,

Posted: 02 Aug 2016 09:50 AM PDT

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், குஜராத்தின் புதிய முதல்வராக யாரை நியமிப்பது என்பது குறித்து, பா.ஜ.,வில் மிகப் பெரிய பட்டிமன்றமே நடக்கிறது.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014ல் லோக்சபா தேர்தலில் வென்று, பிரதம ரானார். அதைத் தொடர்ந்து, குஜராத்தின் முதல் பெண் முதல்வராக, ஆனந்திபென் படேல், 74, நியமிக்கப்பட்டார்.ஆனால், ஆனந்திபென் படேலின் செயல்பாடுகள் குறித்தும், குஜராத்தில் பா.ஜ.,வின் செல்வாக்கு சரிந்து வருவதும், கட்சித் தலைமைக்கும், பிரதமருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்திய ...

உ.பி.,யில் பிரசாரத்தை துவக்கினார் சோனியா

Posted: 02 Aug 2016 09:58 AM PDT

வாரணாசி: உ.பி.,யில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான, வாரணாசியில் இருந்து, காங்., தேசிய தலைவர் சோனியா, நேற்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.

முதல்வர் வேட்பாளர் : உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில், சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. காங்., சார்பில் முதல்வர் வேட்பாளராக, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரசின் தேர்தல் பணிகளை, தேர்தல் நிபுணர் பிரசாந்த் ...

அழகிரியை கட்சியில் சேர்க்க கருணாநிதி புது தந்திரம்

Posted: 02 Aug 2016 10:01 AM PDT

நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து, தி.மு.க., தலைமைக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கடிதம் எழுதி உள்ளதாக தெரிகிறது.

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அவரது கட்டுப்பாட்டுக்குள் அனைத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் செயல்பட துவங்கியுள்ளனர். கட்சியின் மொத்த நிர்வாகத்தையும், தன் கட்டுப்பாட்டின் கீழ், அவர் கொண்டு வந்து விட்டார்.இது, கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. இதனால், சட்டசபை செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக கூடும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு கூட செல்லாமல் புறக்கணித்து வருகிறார்.இதற்கிடையில், கடந்த ...

சசிகலா புஷ்பா விவகாரம்: அ.தி.மு.க.,வுக்கு இது புதுசு!

Posted: 02 Aug 2016 10:06 AM PDT

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா உத்தரவு தான் வேதவாக்கு. அதை மீறும் தைரியம் யாருக்கும் இல்லை. அமைச்சர்கள் உட்பட எத்தனையோ பேர், அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சந்தடி இல்லாமல், பதவி விலகிய வரலாறு உண்டு.

அப்படிப்பட்ட கட்சியில், அவரது உத்தரவை மதிக்காமல், அவருக்கு எதிராகவே, கட்சியில் இருந்து கொண்டே கொடி துாக்கிய முதல் சம்பவம், சசிகலா புஷ்பா விவகாரமாகத் தான் இருக்கும் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கிட்டத்தட்ட, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்து விட்டார் ஜெயலலிதா. அவர், ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வின் பொதுச் செயலரான பின், ...

சூடுபிடித்தது அமெரிக்க தேர்தல் பிரசாரம்

Posted: 02 Aug 2016 10:19 AM PDT

வாஷிங்டன்,: ''அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு, ஆதரவாக அமெரிக்க ஊடகங்கள் செயல்டுகின்றன,'' என, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல், நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் சார்பில், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70; ஜனநாயகக் கட்சியில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், 68, போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இருதரப்பின் சார்பில், கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ...

பெண் எம்.பி.,க்கே பாதுகாப்பில்லை: ஸ்டாலின்

Posted: 02 Aug 2016 10:36 AM PDT

கோவை :''தமிழகத்தில், பெண் எம்.பி.,க்கே பாதுகாப்பு இல்லாதபோது, மக்களின் நிலை பரிதாபத்துக்குரியது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க.,வில், மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.அதில், ஸ்டாலின் பேசியதாவது: கடந்த முறைஆட்சியில் இருந்த போதும், தற்போதும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து,அ.தி.மு.க., கவலைப்படவில்லை. மாணவர்களுக்கான கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.தமிழகத்தில்,சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பெண் எம்.பி., ஒருவருக்கே, தமிழகத்தில்பாதுகாப்பு இல்லை; இதை, அவரே ...

14 அவதூறு வழக்குகள் ஐகோர்ட்டில் விஜயகாந்த் மனு

Posted: 02 Aug 2016 10:45 AM PDT

சென்னை:அவதுாறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக, அவதுாறு கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, விஜயகாந்த், பிரேமலதாவுக்கு எதிராக, 14 அவதுாறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட,இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, விஜயகாந்தும், பிரேமலதாவும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக ...

சென்னையில் குடிசை பகுதிகளில் திடீர் தீ

Posted: 02 Aug 2016 12:40 PM PDT

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயால் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சர்ச் உள்ளது. இந்த சர்ச்சையொட்டி பின்புறத்தில் ஓடக்குப்பம் என்ற ஏரியாவில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. இதில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் கருகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். ...

திருநங்கையர் மசோதா லோக்சபாவில் தாக்கல்

Posted: 02 Aug 2016 01:39 PM PDT

புதுடில்லி: திருநங்கையரை மூன்றாம் பாலின மாக அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை பாதுகாக்கும் வகையிலும், புதிய மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி, நாடு முழுவதும், ஆறு லட்சம் திருநங்கையர் உள்ளனர். இவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா, ராஜ்யசபாவில், தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். கடந்த ஆண்டு, ஏப்., 24ல், ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேறியது. ராஜ்யசபாவில், 45 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறிய முதல் தனிநபர் மசோதா இது.
'இது தொடர்பாக, ...

புழக்கத்தில் ரூ.400 கோடி கள்ள நோட்டுகள்

Posted: 02 Aug 2016 03:32 PM PDT

புதுடில்லி : நாடு முழுவதும், 400 கோடி ரூபாய் மதிப்பில், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக, ராஜ்யசபாவில், நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேஹ்வால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், 'கள்ள ரூபாய் நோட்டுகள் தொடர்பாக நடந்த ஒரு ஆய்வில், 400 கோடி ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, இதே அளவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன' என, ...

இந்திய பவுலர்கள் அபாரம்; மழையால் ஆட்டம் பாதிப்பு

Posted: 02 Aug 2016 04:04 PM PDT

ஜமைக்கா : இரண்டாவது டெஸ்டில் இந்திய பவுலர்கள் மீண்டும் அசத்தினர். மழை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஜமைக்காவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 196, இந்தியா 500/9 ('டிக்ளேர்') ரன்கள் எடுத்தன.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் மழையால் அடிக்கடி தடை பட்டது. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மீண்டும் ஆட்டம் கண்டது. இஷாந்த் 'வேகத்தில்' சந்திரிகா (1) போல்டானார். அடுத்து பிராத்வைட் (23), அமித் மிஸ்ரா 'சுழலில்' சிக்கினார். முகமது ஷமியிடம், சாமுவேல்ஸ் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™