Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


புத்தகங்கள் விலை???

Posted: 02 Aug 2016 11:08 AM PDT

நான் 2013 இல் 70 ரூபாய்க்கு வாங்கிய பார்த்திபன் கனவு புத்தகம் இன்று 230 ரூ
உண்மையில் புத்தகங்களின் விலை இன்று வாங்கு படி இருக்கிறதா?  இது சரியான விலையை தானா?  இல்லை எனக்கு மட்டும் புத்தகங்கள் விலை அதிகமாக தெரிகிறதா??? அனைத்து புத்தகங்களும் விலை இப்படி தான் இருக்கிறது விலையை பார்த்தாலே கண்ணை சுழற்றிகொண்டு வருகிறது..
உண்மை தெரிந்தவர்கள் கூறவும்... :வணக்கம்:

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பெங்கால் என மாற்ற மாநில அரசு முடிவு

Posted: 02 Aug 2016 08:05 AM PDT

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை வங்கம் (பெங்கால்) என்று மாற்றம் செய்வதென அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கொல்கத்தாவில் அந்த மாநில அமைச்சர் பார்த்த சட்டர்ஜி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மேற்கு வங்க மாநில அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில் வங்கம் (பெங்கால்) என்றும், வங்க மொழியில் பங்கோ அல்லது பங்க்ளா என்று மாற்றம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. வங்கம் என்ற சொல், மாநில கலாசாரம், ...

குறுங்கவிதைகள் - தொடர் பதிவு

Posted: 02 Aug 2016 08:01 AM PDT

கனவில் பட்டாம்பூச்சி
-

-

பகலெல்லாம்
தன்னைத் துரத்திய சிறுவனை
இரவெல்லாம் துரத்துகிறது
பட்டாம்பூச்சி கனவில்!
–
———————————————

– நா.திங்களன், ஜோலார்பேட்டை.
குங்குமம்
படம்- இணையம்

திரியில் உறங்கும் வெளிச்சம்…

Posted: 02 Aug 2016 07:43 AM PDT

- – நதியின் அமைதி மிதக்கும் நிலவு மேலேவிழும் கொன்றைப்பூ – ———————– – எழுப்பிவிட்டது யார் திரியில் உறங்கும் வெளிச்சம் – ——————– – நீண்ட அங்கிப்பாதிரி கையுயர்ந்த ஆசி கோவணச் சிறுவன் – —————— – நள்ளிரவு தாமரை இலை இடையே உறங்கும் ஆமைகள் – ———————- – புல்லில விழும் பனித்துளி உறக்கம் கலையும் எறும்பு – ———————— ஷங்கரநாராயணன்

பௌர்ணமி இரவில் புகைக்காதே…

Posted: 02 Aug 2016 07:41 AM PDT

– மரமில்லாமல் வெள்ளைத் தேன்கூடு வீதி விளக்கு – ——————— – பகலுமில்லை இரவுமில்லை பருவமும் இல்லை பட்டணம் – ——————- – நீண்ட குளிரான ரஸ்தா தளர்ந்து நடையிடும் மாடுகள் ஒளிரும் பீடிகங்கு – ——————— – பௌர்ணமி இரவில் புகைக்காதே பாலில் வேண்டாம் விஷம் – ———————– – அந்தி வந்ததும் சிறகதிரக் கரையேறும் கருப்பு நாரைகள் – ——————— ஷங்கரநாராயணன் (கடவுளின் காலடிச்சத்தம்)

பறவையில் குரல்…

Posted: 02 Aug 2016 07:37 AM PDT

- மேலேறும் பறவை எறிந்தது கீழே குரலை – ——————- – டெலஸ்கோப் பார்த்தபடி கடந்து வந்ததில் காலில் ஆ…முள்! – ———————- – கான்கிரீட் காடு இரும்புக்கூடு கிளிகள் – ——————– – மூட்டுவலிப் பேச்சாளர் வாழ்வே சுகம் தலையாட்டும் பேச்சாளர் – ——————- – பறந்து கொண்டிருந்தது பறவை காணாமல் போனதும் திரும்பினேன் பூமிக்கு – ———————— – ஷங்கரநாராயணன் (கடவுளின் காலடிச்சத்தம்)

தொடத் தொடத் தொல்காப்பியம்(433)

Posted: 02 Aug 2016 06:05 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

வீடு விற்பனைக்கு…

Posted: 02 Aug 2016 06:03 AM PDT

- பணி ஓய்வு பெற்ற பின், செய்தித்தாளை வரி விடாமல் படித்து முடிப்பதே, பரமசிவத்தின் பொழுதுபோக்கு! அப்படித்தான் ஒருநாள், செய்தித்தாளுடன் அளிக்கப்பட்ட, வீட்டு வசதி பற்றிய இணைப்பில் வந்த ரியல் எஸ்டேட் விளம்பரத்தை பார்த்தார். அத்துடன், சீரியல் மற்றும் சினிமா கதாநாயகிகள், 'டிவி' சேனல்களில் தோன்றி, 'முந்துங்கள்… சொர்க்கத்தின் சொந்தக்காரராக, ஓர் அரிய வாய்ப்பு. நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ள, அரசு தொழிற்பேட்டைக்கு மிக அருகில் உள்ளது, வில்லா. – 'விரைவில் வரவிருக்கும் விமான நிலையத்திலிருந்து, 5 ...

சொல் விளையாட்டு – கவிதை

Posted: 02 Aug 2016 05:59 AM PDT

- "கவிதை' என்றால் பாட்டென்பார்! செய்யுளென்பார்! "கவி'யாலே ஆனதுதான் தமிழ்மொழி என்பார்! "கவிதை' என்னும் சொல்லை எடு; "தை'யை நீக்கு;-தம்பி "கவி' மழையில் நீ நனைவாய்; கவிஞன் ஆவாய்! முதல் எழுத்து "க'வை நீ நீக்கிப் பார்த்தால் முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை' கிடைக்கும்;-அங்கே விதவிதமாய் சொல் விதைகள் குவியல் ஆகும்! "கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால் ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்! அந்தத் தை பிறந்தால் அனைவருக்கும் வழி பிறக்கும்! "வி' என்னும் எழுத்ததனை விரட்டி ...

சொல் விளையாட்டு – தாமரை

Posted: 02 Aug 2016 05:58 AM PDT

- தாமரை' தாமரைதான் பூக்களிலே பெரியதென்பார்;-தம்பி தாமரைப்பூ ஊர்க்குளங்கள் அழகாய்த் தோன்றும்! "தாமரை'யில் "தா' என்னும் எழுத்தை நீக்கு;-அங்கே "மரை' என்ற மானின் பெயர் துள்ளி ஓடும்! 'மரை'என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்? "தா' என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும்-அது 'கொடு' என்றே உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்! தாமரையில் நடு "ம'வை நீக்கிப் பார்த்தால்-அழுவோர் கண்களிலே கண்ணீர்தான் "தாரை' வார்க்கும்! – சிறுவர் மணி

பாலய்யா டா!

Posted: 02 Aug 2016 05:50 AM PDT

- கபாலி' திரைப்படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் முதல் காட்சியில் அவர் சிறையில் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பார். அதன் தலைப்பு 'மை ஃபாதர் பாலய்யா'. அந்தப் புத்தகம், தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒய்.பி.சத்யநாராயணா என்ற தலித் பேராசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுயசரிதை. 'ஹார்ப்பர் காலின்ஸ்' பதிப்பகத்தால் கடந்த 2011-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. மடிகா சாதியைச் சேர்ந்த நரசய்யா, அவரது மகனின் பெயரும் நரசய்யா, (தந்தையின் பெயரை மகனுக்கும் வைக்கின்ற வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது) ...

நான் ரசித்தவை - மீம்ஸ்கள்

Posted: 02 Aug 2016 05:47 AM PDT

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மீம்ஸ்கள் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மீம்ஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மீம்ஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

சொல் விளையாட்டு – குதிரை

Posted: 02 Aug 2016 05:34 AM PDT

- குதிரை "குதிரை' என்றால் விலங்கென்றே அறிவாய்;- தம்பி குதிரையெல்லாம் "கொள்' என்றால் வாய் திறக்கும்! "குதிரை'யிலே "ரை'யை நீ எடுத்தால் போதும்;-அங்கே "குதி!' என்றே குதித்தெழும்பும் விளையாட்டாகும்! குதிரையிலே முதலெழுத்தை மறைப்பாயானால்;-உன்முன் "திரை'யொன்று விழுந்தங்கே கண்ணை மறைக்கும்! நடு எழுத்து "தி' தன்னை எடுத்து விட்டால்;-தெரு நாய் குரைத்துத் தெருவில் வரும், வாலை ஆட்டும்! – சிறுவர் மணி

சொல் விளையாட்டு – மதுரை

Posted: 02 Aug 2016 05:25 AM PDT

- மதுரை மதுரை எனில் கோயில் நகர் என்பதை அறிவோம்!-அது நான்மாடக் கூடல் நகர் என்பதும் அறிவோம்! வைகை நதி மற்றும் தமிழ்ச் சங்கத்தாலே மேம்பட்ட புகழள்ளிக் கொண்ட ஊர்தான்! "மதுரை'யிலே முதலெழுத்தை நீக்கிப் பார்த்தால்-வெள்ளை "துரை' வந்து நம் எதிரே வணக்கம் சொல்வார்! "ரை' என்ற சொல்லிறுதி எடுத்தால் போதும்-உடனே "மது' என்ற கேடு தரும் திரவம் குறிக்கும்! சொல் நடுவில் "து' எழுத்தை மறைப்பாயானால்-மனதில் "ம' என்ற தாவும் மான் குறுக்கே ஓடும்! -பொன்னியின் செல்வன் சிறுவர் மணி

மாற்றம் & விரக்தி

Posted: 02 Aug 2016 05:24 AM PDT

மாற்றம்
–

-
வார்த்தைகளில்
நேர் காணல்
உறவையும் – உபசரிப்பையும்
சுருக்கியது
கைபேசி உலகம்!
–
--------------------
சை.ஞானமுத்து
–

காகிதங்கள்: லட்சுமிபாலா

Posted: 02 Aug 2016 05:18 AM PDT

- காகிதங்கள் கதை சொல்லும். காகிதங்கள் கவிதை பாடும். ஓவியனின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும். வீரனுக்கு தீரத்தை தரும். – துறவிக்கு அமைதியை தரும். காதலர்களுக்கு காதலை சொல்லும். பிரிந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லும். முன்னோர்களின் பெருமை சொல்லும். – இறந்தகால வரலாறு சொல்லும். எதிர்கால அறிவியலை எடுத்து இயம்பும் நிகழ்கால நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடியாய் நிற்கும். மனிதனின் மன உணர்வுகளை காட்டும் வெள்ளைத் திரை. – இத்தனையும் தன்னகத்தே கொண்டு கோலச்சிய செல்வச் சீமாட்டி. தொடுதிரை முன் சற்றே ...

ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இளம் வீராங்கனை யார்?

Posted: 02 Aug 2016 03:56 AM PDT

- நேபாளத்தை கடந்த 2015 ஏப்ரல் மாதத்தின்போது பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துபோனார்கள். நேபாளத்தைச் சேர்ந்த 13 வயது நீச்சல் வீராங்கனை கெளரிகா சிங், ரியோ ஒலிம்பிக் போட்டியின் இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். நேபாளத்தில் பிறந்த கெளரிகா சிங், 2 வயதில் லண்டனுக்குச் சென்றார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம், நேபாளத்தில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்காக ...

ஆடிப்பெருக்கு, அமாவாசை, குருபெயர்ச்சி: பண்ருட்டியை புரட்டிப்போட்ட புரளி

Posted: 02 Aug 2016 03:52 AM PDT

- பண்ருட்டி: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என மூன்று விசேஷங்களும் ஒரே நாளில் வந்திருப்பதால் இன்று ஏராளமான கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஆடிப்பெருக்கை கொண்டாட வந்த புதுமணத் தம்பதிகளும், ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களும், குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரப் பூஜை செய்ய வந்தவர்களும் என தமிழகத்தில் அனைத்துக் கோயில்களிலுமே இன்று அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஏராளமான ...

காகிதங்கள்: மா.செந்தில்வேலன்

Posted: 02 Aug 2016 02:32 AM PDT

- மனதின் எண்ண அலைகளை வண்ண கோலங்களாக வடிவமைக்க காலச்சுவடுகளை எழுத்தோவியமாக்க பசுமையான நினைவுகளை பதிவு செய்ய காலத்தின் கன்னாடியாய் காண்பவர் – கண்ணுக்கு விருந்தாய் நினைத்ததையெல்லாம் நினைவில் கொண்டு வர பரிதவிப்போடு காகிதம் நம்மை அழைத்தது அட காலம் கடந்து விட்டது – மணித்துளி மறைந்து விட்டது ஏன் இன்னும் உன் வாழ்க்கையின் லட்சிய கனவுகளை காகிதத்தில் கூட பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துகிறாய் என்று! – ————————————– கவிதைமணி

காகிதங்கள்:- பிரபாவதி வீரமுத்து

Posted: 02 Aug 2016 02:28 AM PDT

- காகிதங்களில் காந்தம் வைத்து வித்தை காட்டிய ஞாபகம் – பூவை மொய்க்கும் வண்டுபோல் எண்ணெய் தலைகளை விரட்டி பிடித்து காகிதங்களில் தோய்த்து எடுத்து அறிவியல் தவளையை அப்படியே பிரதி எடுத்து பிரமிக்க வைத்து நன்று வாங்கிய ஞாபகம் – காகிதங்களில் மையை ஊற்றி அதை மூடி கையால் குத்து குத்தென்றி குத்தி பின் மரம் செடி யானை எருமை புல் பாம்பு மேகம் என்று ஒரே நேரத்தில் வரைந்து நான் ரவிவர்மா ஆனது யாருக்குத் தெரியும் – சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள் நீயாவது நம்புவாயா?! என் காகிதமே – என் ...

நிலா உலகம் – கவிஞர் பூம்புகார் வெ. சோமு

Posted: 02 Aug 2016 02:24 AM PDT

- நிலவில் பாட்டி என்றனர் நினைத்த தெல்லாம் கூறினர் பாம்பு விழுங்கும் என்றனர் பார்த்த உண்மைக் கேட்போமே! – அறிஞர் பலரும் கூடியே ஆய்வு செய்ய நிலவினை அரிய ஓடம் செய்தனர் அதிலே பயணம் செய்தனர்! – நிலவில் காலை வைத்தனர் நீண்ட நேரம் ஆய்ந்தனர் மற்றோர் உலகைக் கண்டனர் மண்ணை எடுத்து வந்தனர்! – உலகம் வியந்து பார்த்தது உண்மைக் கண்டு மகிழ்ந்தது அறிவை நம்பி வாழுவோம் அறியா மையை விரட்டுவோம்!" – ——————————– கவிஞர் பூம்புகார் வெ. சோமு

ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர்

Posted: 02 Aug 2016 12:31 AM PDT

- ஜமைக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் லோகேஷ் ராகுல், ரகானேவின் அசத்தல் சதம் கை கொடுக்க இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. இன்றைய நாள் ஆட்டத்தின் பெரும் பகுதி மழையால் பாதிக்கப்பட, முன்னதாகவே ஆட்டம் முடிக்கப்பட்டது. ரஹானே சதம் : மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சகா 47 ரன்னில் அவுட்டாகி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே அசத்தல் சதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த மிஸ்ரா(21) ...

நரசிங் யாதவுக்கு 'கிரீன் சிக்னல்': ரியோ ஒலிம்பிக்கில் வாய்ப்பு

Posted: 01 Aug 2016 11:39 PM PDT

- புதுடில்லி,: ஊக்க மருந்து சோதனையில் இருந்து மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் விடுவிக்கப்பட்டார். இவர், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், 26. டில்லி காமன்வெல்த்தில் (2010) தங்கம், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றவர். 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கி.கி., பிரிவு) வெண்கலம் வென்று, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு (ஆக.,5-21) நேரடியாக தகுதி பெற்றார். கடந்த ஜூன் 25ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' ...

புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Posted: 01 Aug 2016 11:37 PM PDT

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபரை துணை ஆய்வாளர் தன் கால்களுக்கு மசாஜ் செய்ய வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதனை அடுத்து துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் மோகன்லால்கஞ்ச் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றிய ராம் யக்ய யாதவினை மூத்த போலீஸ் சூப்பிரெண்டு மஞ்சில் சைனி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகம் ஒன்றில் வெளியான வீடியோவில், காவல் நிலையத்திற்குள் வைத்து துணை ஆய்வாளர் ராமிற்கு ஒரு ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 01 Aug 2016 06:37 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™