Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க நிபுணர் குழு : மத்திய அரசு அதிரடி திட்டம்

Posted: 19 Aug 2016 09:33 AM PDT

புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசையில், 66வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில்,

இந்தியாவை மேலும் உயர்த்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, மத்திய அரசு, நிபுணர் குழுவை அமைக்க திட்டமிட்டுள் ளது.
தரவரிசை வெளியீடு : சர்வதேச புதிய கண்டு பிடிப்புகளுக்கான, 2016ம் ஆண்டுக்கான தரவரிசையை, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று வெளியிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு, 81வது இடத்தில் இருந்த
இந்தியா, 15 படிகள் முன்னேறி, 66வது இடத்தில் உள்ளது. கடந்த, 2013ல், இந்த தரவரிசையில் இந்தியா, 66வது இடத்தில் ...

ராஜ்யசபா கூட்டுக்குழு உறுப்பினர் வாய்ப்பை பறிகொடுத்த அ.தி.மு.க.,

Posted: 19 Aug 2016 10:01 AM PDT

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து, ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, ஜே.பி.சி., எனப்படும், பார்லிமென்ட் கூட்டுக்குழுவில், உறுப்பினராகும் வாய்ப்பை, அ.தி.மு.க., தவற விட்டுள்ளது.

பார்லிமென்டின் இரு சபைகளிலும் அறிமுகமாகும் மசோதாக்கள் குறித்து அலசி ஆராய்ந்து, அதுகுறித்து, தகுந்த சந்தேகங்கள், கேள்விகள், பரிந்துரைகள், திருத்தங்கள் ஆகியவற்றை செய்ய, எம்.பி.,க்களுக்கு உரிமை வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக, நிலைக்குழு, தேர்வுக்குழு, கூட்டுக்குழு என, பல்வேறு வகையான ஆய்வுக்குழுக்களை, சபாநாயகர் அமைப்பது வழக்கம்.
இந்திய குடியுரிமை : இவற்றில், ...

குறுவைக்கு ரூ.4,000; சம்பாவுக்கு ரூ.2 ஆயிரமா என விவசாயிகள்... கொந்தளிப்பு!:முதல்வர் அறிவித்த மானிய திட்டத்தில் குளறுபடி என புலம்பல்

Posted: 19 Aug 2016 10:08 AM PDT

முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள, சம்பா சாகுபடி மானிய திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக, டெல்டா மாவட்ட விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும், குறுவை சாகுபடியில் ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மானியம் அளித்த நிலையில், சம்பா சாகுபடிக்கு வெறும், 2,000 ஆயிரம் ரூபாயா என, அவர்கள் கொந்தளித்துள்ளனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா என, இரு போக நெல் சாகுபடி முக்கியமானது. இந்த சாகுபடி மூலமே, மாநிலத்தின் அரிசி தேவை, பெருமளவு பூர்த்தியாகும். டெல்டா மாவட்டங்களில், நெல் உற்பத்தி குறைந்தால், வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் விலையில், ...

ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை : சட்டசபையில் அரசு தகவல்

Posted: 19 Aug 2016 10:13 AM PDT

சென்னை: ''ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்துவதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதற்காக, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, சட்டசபை யில், கால்நடை துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர் கூறியதாவது: தமிழக கிராமங்களில், 5,000 ஆண்டுகளாக நடத்தப்படும், பாரம்பரிய விளையாட்டான
ஜல்லிக்கட்டுக்கு, மே, 2014ல், சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
அதை மறுபரிசீலனை செய்ய, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. காட்சி விலங்குகள் பட்டிய லில் இருந்து, காளைகளை நீக்க, அரசு இடை விடாத முயற்சிகளை எடுத்தது. பிரதமர் ...

காஷ்மீரில் 13 லட்சம் 'பெல்லட்' குண்டுகள் பயன்படுத்தியதாக ராணுவம் ஒப்புதல்

Posted: 19 Aug 2016 10:13 AM PDT

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த, 32 நாட்களில், கலவரத்தை கட்டுப்படுத்த, 13 லட்சம், 'பெல்லட்' குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக, ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பயங்கரவாதி பர்ஹான் வானி, கடந்த மாதம், 8ல், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து, அம்மாநிலத்தில், பயங்கர கலவரம் வெடித்தது. கடந்த, 42 நாட்களாக, மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது; வன்முறை மற்றும் கலவரத்துக்கு, இதுவரை, 64 பேர் பலியாகி உள்ளனர். ...

ரிசர்வ் வங்கி கவர்னர் யார்? அடுத்த வாரத்தில் அறிவிப்பு

Posted: 19 Aug 2016 10:19 AM PDT

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பெயரை, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இறுதி செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்த வாரத்தில், புதிய

கவர்னர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக்காலம், அடுத்த மாதம், 4ம் தேதியுடன் முடிகிறது. பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதால், 'பணி நீட்டிப்பை விரும்பவில்லை' என்று, ரகுராம் ராஜன் அறிவித்தார்.
அதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரை தேர்ந்தெடுக்கும் பணி, ...

கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பலன்... பூஜ்ஜியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமை தீர்ப்பாயம் சூடு

Posted: 19 Aug 2016 10:22 AM PDT

புதுடில்லி:''கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கங்கையில், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க எடுத்துள்ளதாக கூறப்படும் நடவடிக்கைகளின் பலன் பூஜ்ஜியமே; மத்திய, மாநில அரசுகளும், தொடர்புடைய அமைச்சகங்களும், கங்கை துாய்மையை முக்கியமான பிரச்னையாக எடுத்துக் கொள்ளவில்லை,'' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடுமையாக சாடியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மத்தியில் அமைந்த பின், கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்திற்கு, முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டம் ...

தி.மு.க., நடத்திய போட்டி சட்டசபை கூட்டம் * சபாநாயகரை கலாய்த்த துரைமுருகன்

Posted: 19 Aug 2016 10:58 AM PDT

சென்னை:சட்டசபை வளாகத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், போட்டி சட்டசபை கூட்டம் நடத்தி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினரை கலாய்த்தனர்.

சட்டசபையிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், இரண்டாவது நாளாக நேற்று, தலைமை செயலகம் வந்தனர்; சட்டசபை காவலர்கள், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. காலை, 10:15 மணிக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் வந்தனர். பின், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே, மாதிரி சட்டசபை கூட்டத்தை துவக்கினர்.துரைமுருகன், சபாநாயகராக செயல்பட்டார். அவரின் இரு புறத்திலும் ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு பலூசிஸ்தான் பெண் வாழ்த்து

Posted: 19 Aug 2016 12:14 PM PDT

புதுடில்லி:பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறலுக்கு எதிரான, பலுாசிஸ்தான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரதமர் நரேந் திர மோடிக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், அங்குள்ள பெண் ஒருவர், 'ரக் ஷா பந்தன்' வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள, பலுாசிஸ்தான் பகுதி மக்கள், விடுதலை கோரி, பலுாச் தேசிய இயக்கத்தின் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தின்போது ஆற்றிய உரையில், ''பலுாசிஸ்தான் மற்றும் ஆக்கிர மிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதி ...

சிறப்பாக விளையாட எனது பயிற்சியாளரே காரணம்:சிந்து பேட்டி

Posted: 19 Aug 2016 01:45 PM PDT

ரியோடி ஜெனிரோ: நான் சிறப்பாக விளையாட எனது பயிற்சியாளர் தான் காரணம் என வெள்ளி பதக்கம் வென்ற சிந்து பேட்டியளித்தார்.இது தொடர்பாக சிந்து அளித்த பேட்டி, ஒலிம்பிக் பாட்மின்டன் பைனலில் வெள்ளிப்பதக்கம் வென்றது சிந்து, மகிழ்ச்சி . இப்பதக்கத்தை எனது பயிற்சியாளர் கோபிசந்த்திற்கும் எனது பெற்றோருக்கும் சமர்ப்பிப்பக்கிறனே். நான் சிறப்பாக விளையாடியதற்கு எனது பயிற்சியாளர் கோபிசந்த் தான் காரணம். இறுதிபோட்டியில் என்னுடன் மோதிய கரோலினா சிறப்பாக விளையாடி தங்கம் வென்றார் . இப்போட்டியில் தங்கம் வெல்ல இருவரும் கடுமையாக போராடினோம். எனக்காக பிராத்தனை ...

விதிமுறை மீறல்:3.6 லட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

Posted: 19 Aug 2016 02:09 PM PDT

சான்பிரான்சிஸ்கோ: கடந்த 2015- ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் விதி முறைகளை மீறி செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த ஆண்டு முதல் 3.60 லட்சம் டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.
விதி முறைகளை மீறி செயல்பட்டு வந்தது உறுதிப்பட்டதையடுத்து சென்ற பிப்ரவரியில் 1.25 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டது. இந்த நிலையில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™